மனம் திறந்து... என்ற மாடரேட்டர் பக்கத்தில் சகோதரர் எழுதிய விஷயங்கள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
தினமும் 200க்கும் மேல் பார்வையாளர்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் பெரும்பான்மையான பதிவுகளிலுமே வசனம் சார்ந்த விவாதங்களே இருப்பதை நடுநிலையாய் இத்தளத்தைப் பார்வையிடுபவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
நாங்கள் யெகோவா சாட்சிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குக்கூட நாங்கள் சத்தியத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நாங்கள் வேத மாணாக்கர்கள் என்ற அமைப்பையும் சார்ந்திருக்கவில்லை.
வேத வசனங்களை மாத்திரமே சார்ந்திருக்கிறோம். வசனத்தை வசனத்தோடு ஒப்பிட்டு நோக்கும் யாருடைய விளக்கங்களையும் திறந்த மனதுடன் பரிசீலிக்கின்றோம் அது வசனத்திலும், தேவ திட்டத்துக்கு இசைவாகவும் இருக்கும்பட்சம் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதன் விளைவுதான் இயேசுவைத் தொழுதுகொள்வது முறையல்ல, அது வேதத்துக்கு புறம்பானது என்ற விஷயம். ஆரம்பத்தில் நானும்கூட சகோ.அன்பு அவர்களிடம் விவாதித்திருப்பது இன்னும் இதே தளத்தில் உள்ளது.
அன்பர்களே,
அவருடைய பிரசன்னமாகுதலின் வெளிச்சம் மேலும் வளர, வளர இன்னும் அதிகமான விபரங்கள் வெளியே வரலாம். வரும். ஏற்றகால சத்தியங்களுக்கு தேவன் எங்களைப் பாத்திரவான்களாக எண்ணியதை நினைத்து களிகூருகிறோம், இதயத்தின் ஆழத்திலிருந்து நனறி செலுத்துகிறோம்.
இத சொன்னா யாரு பஞ்சாயத்து........ நம்பப்போறது , இப்ப பாருங்க அவன் தளத்துல அவன் இதற்கும் ஒரு பதில் வைச்சிருப்பான்,. காலக்கொடுமைன்னு சொல்றங்களே அதுதானோ இது ?????