//நான் ஒரு மேடைப்பாடகன் என்று மிக ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்; போட்டோ ஃப்ரேம் தொழில் செய்பவன் என்றும் சொல்லிவிட்டேன்;எனக்கு சபை கிடையாது என்றும் சொல்லிவிட்டேன்;இத்தனை மறுப்பும் விளக்கமும் கொடுத்தபிறகும் என்னைத் தொடர்ந்து கீழ்த்தரமாக எழுதிவரும் உன்னிடம் அதற்கான நிரூபணத்தை தரச்சொல்லியும் அதிகபட்சமாக என்னைக் குறித்து நீ கேள்விபட்ட தகவல்களையெல்லாம் எனக்கு மெயில் அனுப்பி சரிபார்த்துக்கொள்ளச்சொல்லியும் பகிரங்கமாக அறிவித்துவிட்டேன்;இதற்கு மேலும் நான் சபை நடத்துவதாகவும் காணிக்கை வாங்கி பிழைப்பதாகவும் நீ குற்றஞ்சாட்டினால் அதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு உன்னையே சாரும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்//
நண்பர் சில்சாமுக்கு,
நீர் சொல்லிய விளக்கங்கள் உண்மையாக இருக்கும்பட்சம் உலகிலேயே அதிக சந்தோஷப்படுப்வன் நானாகத்தான் இருக்கமுடியும். நண்பர் அறிய வேண்டியது, இதுவரை நான் பதித்த எந்த பதிவுகளுக்கும் நீங்கள் சுயமாக சம்பாதித்துக்கொண்டிருப்பதாக எனக்கு பதிலளித்ததாகத் தெரியவில்லை. உண்மையிலேயே. மேலும் ஊழியக்காரர்களுக்கு நீர் வக்காலத்துவாங்கியதால் நானும் நீங்கள் அடுத்தவர் பணத்தில்தான் வாழ்கிறீர்கள் என்று எண்ணிவிட்டேன். உண்மையிலேயே தவறுக்கு வருந்துகிறேன்.
நீர் காணிக்கை என்று யாரிடமும் ஒரு சல்லிக்காசு கூட வாங்கியது இல்லையென்றால். நான் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஆதங்கமெல்லாம் கடவுள் பேரைச் சொல்லி வயிறுவளர்க்கும் கூட்டத்தின் பேரில்தான். நீங்கள் தொழில் செய்தே ஜீவிக்கிறீர்கள் என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அதே சமயம் தங்கள் தள அன்பர் திருவாளர் கொல்வின் எந்த விதமான முகாந்தரமும் இல்லாமல் நான் சபை நடத்தி பிழைப்பதாக குற்றம் சாட்டியதால் வந்த விவாதங்களே நடந்தவைகள்.
தவறு இருப்பின் திருத்திக்கொள்ளுவதற்கு யோசிப்பதில்லை நான். அதே போல மல்டி லெவல் மார்க்கெட்டிங் மீது உங்களுக்குள்ள அபிப்ராயம் நியாயமானதே. ஏனென்றால் எப்படி சத்தியத்தை தெளிவாக அறியவில்லையோ அதே போலத்தான் இந்த விஷயத்திலும்.
திறந்த மனதுடன் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடனும் இருந்ததால்தான் நான் உண்மையை, சத்தியத்தை புரிந்துகொள்ள நேர்ந்தது. நானும் உங்களைவிட ஒரு வைராக்கியமான ரெகுலர் கிறிஸ்தவனாகத்தான் (அறியாமையில்) 2007 வரை இருந்தேன்.
அதுகுறித்து நான் குறையாகக் கூறவில்லை. ஏனென்றால் உளையான சேற்றிலிருந்துதான் தேவன் என்னைத் தூக்கியெடுத்தார். உண்மையில் ஒரு சில ஊழியர்களைக் குறித்து நீர் பகிரங்கமாக விமர்சிப்பதை நான் ரசித்தேன். இது என் உள்ளத்தின் வெளிப்பாடு. யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. வசனத்துக்கு எதிரான உபதேசத்துக்கு எதிராகவே இந்தக் கோபம். தனிப்பட்ட நபர்களைத் தாக்கியல்ல....
நீங்கள் உண்மையில் உழைத்துதான் வருமானமீட்டுகிறீர்கள் என்றால் என் குற்றச்சாட்டு உமக்குச் செல்லாது...
-- Edited by soulsolution on Saturday 4th of June 2011 10:14:39 PM
அதனால் நீர் கவலைப்பட வேண்டியதேயில்லை. தேவனுக்கு முன்பாக நாம் நிர்வாணிகளாய் இருக்கிறோம்.
MLM குறித்த உம்முடைய கண்ணோட்டம் எனக்குப் புதிதல்ல. எப்படி பெருவாரிக்கிறிஸ்தவம் நரகம், திரித்துவம், போன்ற கோட்பாடுகளில் ஒற்றுமையாக இருக்கிறதோ அதே போலத்தான் மல்டி லெவல் மார்கெட்டிங் மீதும் ஒரு துர் அபிப்ராயம் இருக்கிறது.
என் மூலமாய் யாராவது ஒரு பைசா கூட இழந்திருந்தால் அதை நூறத்தனையாய் திருப்பிச் செலுத்த நான் தயார்...
ஆனால் உண்மையென்ன தெரியுமா நண்பரே, இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக அநேகர் என்னை தங்கள் சொந்த சகோதரராக பாராட்டுகிறார்கள். எங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் (with money back guarantee) மூலமாக யாரும் எந்தவித நஷ்டப்படாதவண்ணமே நான் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். என் மூலமாய் யாராவது நஷ்டப்பட்டிருதால் அது குறித்து தெரிவிக்க நீர் கடமைப்பட்டுள்ளீர்.
இது போல அனேகருக்கு இந்தப் பொருட்கள் உபயோகமாக இருக்கின்றது முழுக்க முழுக்க சத்தியம். பிரச்சனை வந்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்... இது போல அனேகம் சாட்சிகள் உலகமெங்கும் உண்டு.... ஏற்றுக்கொள்வது ஏற்காததும் உம் இஷ்டம்...
உண்மை உண்மையே!
-- Edited by soulsolution on Saturday 4th of June 2011 10:20:14 PM