ஊழியர்களைத் தரம்பிரிக்கும் ஊழியம் ஒன்று இருக்கிறது. யவ்வன ஜனமாம். இவர்களுக்குப்பிடிக்காத ஊழியர்களுக்கு ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். ஆல்வின் தாமஸ் முதல் பி சி ஜியஃப்ரி வரை. புதிதாகப்பட்டியலில் யார் யார் சேரப்போகிறார்களோ என்பது சஸ்பென்ஸ்...
யார் யார் ஃப்ராடு, யார் யார் பரவாயில்லை, யார் யார் தேவலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டினால் ஜனங்களை அந்தக் 'கள்ளத் தீர்ககதரிசி' களிடமிருந்து காப்பாற்றலாமே...
ஆனால் நமக்குத்தெரிந்ததெல்லாம் சத்தியத்தை அறியாத எந்த சபையும் போலிசபை. பிதா யார்? குமாரன் யார்? பரிசுத்த ஆவி என்றால் என்னவென்று தெரியாத, மரணம் பற்றி அறியாத, உயிர்த்தெழுதல் பற்றி போதிக்காத, தேவனை கோடாகோடி ஜனங்களை நரகத்துக்கு அனுப்பும் ஒரு கையாலாகாதவராகக் காண்பிக்கும் எந்த ஒரு அமைப்பும் கிறிஸ்துவுக்கு விரோதமானது.
வசனத்தை ஆராய்ந்தறியாத எவரும் சத்தியத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட உணரமுடியாது.
சில்சாம்: //அதுமாத்திரமல்லாமல் நான் எழுதியதை எப்போது மறுத்தேன்,மாற்றி எழுதினேன் என்றே தெரியவில்லை;அப்படியானால் என்னை கையும் களவுமாகப் பிடிக்கும் வாய்ப்பு இணையத்தில் அதிகம் உண்டே;இதோ என்னுடைய எழுத்தை கொஞ்சமும் வெட்கமில்லாமல் காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றான்;அவனுடைய தளத்துக்குள் நுழைய முடியாத எனக்கு இதுபோன்ற மாபெரும் வாய்ப்பை அவனே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்; //
நீர் சொல்லாட்டியும் உன் சகாக்கள் சொல்லுவார்களே, சில்சாம் இப்படி எல்லாம் எழுதுவதே கிடையாது என்று!! இந்த தளத்தில் இருப்பதை தான் எல்லாவற்றையும் நீக்கி விட்டாகிவிட்டது, அதை நீக்கியவர் நான் அல்ல, நீரே!! மேலும் இந்த தளத்தில் நுழைய முடியாத அளவிற்கு நான் ஒன்றையும் செய்யவில்லையே, இவர் இன்னும் இந்த தளத்தில் உறுப்பினராக தான் இருக்கிறார்! இவர் எழுதிய இதுவே ஒரு பொய் பிரச்சாரம் தான்!! ஊழியர்களை குறித்து உம் தளம் குற்றம் சொல்லுவதில்லை என்று கொல்வின் சொல்லுகிறார், ஆனால் உம் தளம் அப்படியாக இருக்கிறதா!!
பால் தங்கையா, சாம் செல்லதுரை, ஆல்வின் தாமஸ், ஜெர்சன் எடின்பரோ, Joel Thomasraj, PC ஜியாஃப்ரி, சாது சுந்தர் செல்வராஜ், வி ஜி பி குழுமம், எசேக்கியா ஃப்ரான்ஸிஸ்.... இவர்களெல்லாம் மோசடி ஊழியர்கள்.
அகஸ்டின் ஜெபகுமார்? அவர் அண்ணாச்சியாச்சே... அதான் அண்ணன்...
மற்றபடி நாங்கள் எந்த ஊழியர்களைக் குறித்தும் விமர்சித்ததேயில்லையே...