பிதாவாகிய உம்மைத் தொழுதுகொள்கிறோம். துதிக்கிறோம்.பிதாவாகிய நீர் எங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தீர். உம்மை நீரே எழுப்பிக்கொண்டீர். இயேசுகிறிஸ்துவின் தேவனாகிய நீர் உமக்கு நீரே பிரதான ஆசாரியராக இருக்கிறீர். உமது வலதுபாரிசத்தில் நீரே உட்கார்ந்து கொண்டு எங்களுக்காக உம்மிடத்தில் நீரே பரிந்து பேசுகிறீர். உமக்கு நீரே கீழ்ப்படிந்துகொண்டிருக்கிறீர். பரிசுத்த ஆவியானவராகவும் நீர் இருந்துகொண்டு எங்களுக்குள்ளேயே வாசம் செய்து நீரே உம்மிடத்தில் எங்களுக்காக வேண்டுதலும் செய்கிறீர். உம்மை நீரே அனுப்பிவிட்டு அனுப்பினவரே பெரியவர் என்று கூறுகிறீர். என் நாமத்தில் எதைக் கேட்டாலும் பிதாவாகிய நான் தருவேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறீர். உம்முடைய குமாரனாகிய நீர் உம்மையே ஜீவபலியாக கொடுத்தீர். நான் தேவனுடைய குமாரனாகிய பிதா என்று எங்கள் குழப்பங்களையெல்லாம் நீக்கிவிட்டீர். "நான் பிதாவாகிய என்னை வேண்டிக்கொள்வேன் அப்பபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படியாக சத்திய ஆவியாகிய வேறொரு(?) தேற்றரவாளனை அவர்(நான்) உங்களுக்குத் தந்தருவார் என்று யோவான்14:16ல் தெளிவாக சொல்லியிருக்கிறீர். "நாம் ஒன்றாயிருப்பது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி....யோவான் 17:20,21. ல் எல்லாருமே பிதாதான் என்றும் சொல்லியிருக்கிறீர்.
இத்தனை தெளிவான ஆவியைக் கொடுத்ததற்காக நன்றி செலுத்தி உம்முடைய பிதாவாகிய உம்மையும், உம்முடைய குமாரனாகிய உம்மையும், பரிசுத்த ஆவியாகிய உம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் குமாரனாகிய பிதாவே ஆமென்.
//நாம் பிதாவை நோக்கி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறை. ஆனாலும் அன்பின் மிகுதியாலோ/அறியாமையாலோ நாம் இயேசுவை நோக்கி ஜெபித்தாலும், ஆவியானவரை நோக்கி ஜெபித்தாலும் பிதாவாகிய தேவன் ஜெபத்தைக் கேட்கிறார்.இக்காலங்களில் அனேக ஜெபங்கள் (பாடல்களும் கூட) ஆவியானரை நோக்கித்தான் இருக்கிறது//.
அடேங்கப்பா! இரட்சிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி இப்பதான் எப்படி யாரை நோக்கி ஜெபிப்பது என்று ஒரு உருப்படியான விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். திரித்துவக் குழப்பத்தில் சிக்கி ஜெபத்தையே காமெடியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாவம். ஆனாலும் அன்பின் மிகுதியாலோ/அறியாமையாலோ நாம் இயேசுவை(கிறிஸ்து அல்ல) நோக்கி ஜெபித்தாலும், ஆவியானவரை(?) நோக்கி ஜெபித்தாலும் பிதாவாகிய தேவன் ஜெபத்தைக் கேட்கிறாராம். ஏன் அறியாமையால் முருகனை, விநாயகரை, ஆதிபராசக்தியை நோக்கி ஜெபித்தாலும் கேட்பாரோ?
இதில் ஏன் இத்தனை குழப்பம்? இவர்கள் நம்பும் குழப்பத்தில்கூட தெளிவில்லாமல் இருக்கிறார்கள். அதுதான் திரியேக தேவன், த்ரீ இன் ஒன் தானே. மூவரும் சமம் என்றால் மூவரும் ஒன்று என்றால் யாரிடம் ஜெபித்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே வாய்கிழிய வாதம் செய்யமுடிகிறது, ஜெபம் என்று வரும்போது முட்டிக்கிது. உங்களுக்கு வசதியாகத்தான் இப்படியும் ஜெபிக்கலாமோ என்ற ஒரு குழப்பமே இல்லாத ஜெபத்தை பதித்திருக்கிறேன். அதையே பின்பற்றலாமே.
இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கலாம் என்றால் அவரை நோக்கி ஜெபிப்பதில் என்ன தவறு. ஆராதிப்பதில் தயக்கமே இல்லை என்றால் ஜெபிப்பதில் தயக்கம் ஏன்? எங்கோ உருத்துகிறதோ? இயேசுகிறிஸ்து யாரை நோக்கி எப்படி ஜெபித்தார் என்று கூடவா தெரியாது? அதுவும் நீங்கள் ஜெபிக்கவேண்டிய விதமாவது... என்று ஒரு சிறுபிள்ளைக்குச் சொன்னது போல சொல்லிக்கொடுத்திருந்தாலும் இவர்கள் ஜெபிப்பது
'அன்புள்ள இயேசு சுவாமி என்று ஆரம்பித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல 'பிதாவே' என்று முடிக்கிறார்கள்.
சிலுவையில் அரையப்படுவதற்கு முன் கெத்சமெனே தோட்டத்திற்கு சென்ற இயேசு, ‘இந்தப் பாத்திரம் தம்மை விட்டு அகல வேண்டும்’ என்று பிதாவினிடத்தில் ஜெபித்தார். (மத்தேயு 26.36-39, 42,44)
இயேசுவின் நாமத்தில் பிதாவை நோக்கி ஜெபிக்க வேண்டும்.
இயேசுவானவர் நமது மத்தியஸ்தரும் வாதாடுபவருமாய் இருப்பதால், அவர் (இயேசுவானவர்) மூலமே பிதாவினிடத்தில் ஜெபிக்க வேண்டும். (1தீமத்தேயு 2.5, 1யோவான் 2.1)
நாம் எதைச் செய்தாலும் அதை இயேசுவின் அதிகாரத்திற்குட்பட்டு செய்ய வேண்டும். (கொலோசேயர் 3.17)
இயேசுவோடு பங்காளித்துவ உறவோடு அவர் நாமத்தில் பிதாவிடத்தில் ஜெபிப்போமாக (யோவான் 15.14-16)//
மூவரும் ஒன்று என்கிறீர்கள். இவரே பிதாவை நோக்கித்தான் ஜெபித்தார் என்கிறீர்கள். இவர் நமது மத்தியஸ்தர் என்கிறீர்கள் ஏன் 'பங்காளித்துவ உறவு' என்கிறீர்கள். இவர் பங்காளி என்றால் பிதாவும் பங்காளிதானே ஏன் அவரைப் பங்காளி என்று சொல்லவே ஒருவித நடுக்கம் பிடிக்கிறது. இவரும் அவரும் இன்னொருவரும் ஒன்று என்றால் யாரிடம் ஜெபித்தால் என்ன?
//பிதா என்றாலே குமாரனையுடையவராக இருக்க - அவரும் என்னுடைய நாமத்தினால் நீங்கள் கேட்பதை குமாரனில் பிதா மகிமையடையும் வண்ணமாக தானே செய்து தருவேன் அவரும் வாக்களித்திருக்க - மேலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் இயேசுவானவரை மையப்படுத்தியே இருக்க - அவரை நோக்கி ஜெபிக்கக் கூடாது என்றும் ஆவியானவரை ஆராதிக்கக் கூடாது என்றும் அறிவிக்கும் நண்பர்களை விட்டு விட்டு நான் ஏதோ தடாலடி பேர்வழி என்று பழிகூறலாமா..?//
ஆயிரக்கணக்கான பாடல்கள் என்னமோ வேதத்தில் இருப்பதுபோல எண்ணமா? ஆயிரக்கணக்கான முருகன், அய்யப்பன் பாடல்கள் கூடத்தான் உண்டு. அய்யா உங்களுக்கு விருப்பமிருந்தால் இயேசுவை நோக்கியோ, ஆவியானவரை நோக்கியோ எப்படி வேண்டுமானாலும் ஜெபியுங்கள்... உங்கள் ஜெபங்கள் உங்கள் வீட்டுக்கூரையைக் கூட தாண்டாது.
யார் என்ன ஜெபித்தாலும் பிதாவின் சித்தம் மட்டுமே நடக்கும். குமாரனின் ஜெபமான இப்பாத்திரம் நீங்கும்படி செய்யும் என்ற விண்ணப்பமே பிதாவின் சித்தமான
'நோ மை சன் நீ இன்னவிதமாக மரிக்க வேண்டும் என்பதே என் சித்தம்' என்ற பதிலில்தான் முடிந்தது....
இயேசுகிறிஸ்துவைத் தொழுதுகொள்வதில் எந்தவிதத் தயக்கமும் காட்டாதவர்கள், இயேசுகிறிஸ்துவிடம் ஜெபிக்கலாம், அதில் எந்தவிதத் தவறும் இல்லை, அது வேதத்துக்கு இசைவானதே என்று சொல்லி இந்த வாதத்துக்கே முற்றுப்புள்ளி வைக்கலாமே...
கோல்டா: //அவர் பக்தியுள்ளவனை தமக்கென தெரிந்து கொள்கிறார் என்ற வசனத்தின்படி உண்மையாய் கடவுளைத் தேடும் ஆத்துமாவை தன் பக்கம் இழுத்துக் கொள்வார்.
உங்க வேதத்தின்படி யாரை நோக்கி ஜெபித்தாலும் பரலோகம் தானே??//
நீங்கள் வேதம் வாசிப்பீர்களா அல்லது சாது சொல்லுவது, ஸ்டான்லி சொல்லுவது, வின்செண்ட் செல்வகுமார் சொல்லுவது அல்லது வேறு ஒரு ஊழியக்காரர் சொல்லுவதை கேட்டு பொழுது போக்குவீர்களா!!
கடவுளை தேடும் இருதயத்தை தருபவரே அவர் தான், என்னமோ தன் சொந்த முயற்சியில் இவர் தேவனை தேட ஆரம்பித்தது போல் நினைத்திருக்கிறார்!!
யோவான் 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
என்னமோ உங்கள் சொந்த தேடுதலினால் நீங்கள் அறிந்துவிட்டீர் என்று என்ன வேண்டாம், வசனம் என்ன சொல்லுகிறது என்பதை வாசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்!!
எபே 2:8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
உங்களிடத்தில் விசுவாசம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அதையுமே ஈவாக பெற்றது தானே அன்றி உங்களின் முயற்சி என்கிற மமதையில் இருக்க வேண்டாம்!!
யார் வேதத்தின்படியும் ஜெபிப்பவர்கள் எல்லாம் பரலோகம் சென்று விட முடியாது, ஏனென்றால் நீங்கள் வாசிக்கும் வேதம் மாத்திரம் அல்ல, அது போன்ற 50க்கும் மேற்பட்ட வேதத்திலிருந்து வசனத்தை பார்க்கிறோம்!! ஜெபிப்பதினால் பரலோகம் போய் விடலாம் என்கிற பொய்யை கிளப்பி விட்டு அதில் குளிர்காயும் கூட்டத்தார் சொல்லுவதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவேண்டாம்!! பரலோகம் யார் போவார்கள் என்பது நம் ஜெபத்தில் இல்லை, அவரின் தீர்மானத்தில் தான் இருக்கிறது!!
மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
இந்த வசனங்கள் எல்லாம் உங்கள் வேதத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன்!! ஆனால் இந்த வசனங்களை நீங்களோ உங்களுக்கு போதிக்கும் ஊழியர்கள் விளக்காமலே வேத பாடங்களை முடித்திருப்பார்கள்!!
ஸ்டான்லி ஒரு திரித்துவ போதனையாளராக இருந்தாலும் பிதாவை நோக்கியே ஜெபிக்க வேண்டும் என்றுதான் போதிக்கிறார்.
கிறிஸ்துவைக் கேள்விப்படாதவர்களின் கதி என்னவாகும் என்று கேட்டால் நேரடி பதில் இவரிடமிருந்தும் கிடைக்காது... திரித்துவக் கோட்பாடில் குழம்பியிருக்கும் யாரும் இக்கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள். அது தேவன் பார்த்துக்கொள்வார் என்பதைத் தவிர...
//இந்த பாட்டெல்லாம் பாட மாட்டீங்களா?//
இயேசுவின்நாமம்இனிதானநாமம்
இணையில்லாநாமம்இன்பநாமம்
5. முழங்கால்யாவும்முடக்கிடும்நாமம்
மூன்றில்ஒன்றாகஜொலிப்பவர்நாமம் --- இயேசுவின் (மூன்றில் ஒன்று என்பது வேதத்திலில்லை)
6. சாத்தானின்சேனையைஜெயித்திட்டநாமம்
சாபப்பிசாசைதுரத்திட்டநாமம் --- இயேசுவின் (சாத்தானின் சேனையை ஜெயித்து என்ன பயன்? மெஜாரிட்டி நரகத்துக்குத்தானே!)
தேன்இனிமையிலும்இயேசுவின்நாமம்
திவ்வியமதுரமாமே - அதைத்
தேடியேநாடிஓடியேவருவாய், தினமும்நீமனமே
1. காசினிதனிலேநேசமதாகக்
கஷ்டத்தைஉத்தரித்தே - பாவக்
கசடதைஅறுத்துச்சாபத்தைத்தொலைத்தார்(ஒரு சிலர் சாபத்தை மட்டுமா?)
2. (ஒரு சில) பாவியைமீட்கத்தாவியேஉயிரைத்
தாமேஈந்தவராம் - பின்னும்
நேமியாம்கருணைநிலைவரமுண்டு
நிதம்துதிமனமே
3. காலையில்பனிபோல்மாயமாய்உலகம்
உபாயமாய்நீங்கிவிடும் - என்றும் (என்றும் நிலைக்கும்படி பூமியை அஸ்திபாரப்படுத்தியிருக்கிறார்)
5. பூலோகத்தாரும்மேலோகத்தாரும்
புகழ்ந்துபோற்றுநாமம் (எப்போது?)- அதைப்
பூண்டுகொண்டால்தான்பொன்னகர்வாழ்வில்
புகுவாய்நீமனமே
இந்தப்பாடல்களை ஒரு காலத்தில் விளங்காமல் பாடிக்கொண்டுதான் இருந்தோம்.இது இயேசுவின் நாமத்தைப் பற்றிய ஒரு செய்தியாகத்தான் இருக்கிறதே தவிர வேறென்ன? ஜெபத்துக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?
-- Edited by soulsolution on Monday 4th of July 2011 11:02:55 PM
கோல்டா//உங்க வேதத்தின்படி யாரை நோக்கி ஜெபித்தாலும் பரலோகம் தானே??//
இதைத்தான் அரைகுறை என்பது. எல்லாருக்கும் பரலோகம் என்று நாங்களும் சொல்லவில்லை, வேதமும் சொல்லவில்லை. 'உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக' என்பதை தெளிவாக விளங்கிக்கொண்டிருக்கிறோம். வருவதாக என்றால் பூமிக்கு வருவதாக என்றுதான் அர்த்தம். பூமிக்கு வரும் அவரது ராஜ்ஜியத்துக்கு முடிவிராது. மனிதன் பூமியில் வாழும் வண்ணமே படைக்கப்பட்டுள்ளான். அவரது ராஜ்ஜியத்தில் பூமி முழுவதும் ஏதேன் தோட்டமாக 'பரதீஸாக' மாறும். உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பரலோகம், மற்றும் நரகம்தான் இடையில் ஆபிரகாம் மடி, பரதீசு என்றெல்லாம் ஒரு குழப்பம் வேறு. ராஜ்ஜியம் என்றால் என்னவென்று தெரிந்தால்தானே ராஜ்ஜியத்தின் இந்த சுவிசேஷம் புரியும்....
யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
யோவான் 14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்//
இந்த வசனங்களுக்கு சொந்தக்காரர்கள், இப்படி இருந்தார்கள்,
மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்
மாற்கு 8:34 பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
இன்றைய கிறிஸ்தவர்கள் இப்படி இருக்கிறார்களா? எல்லா கிறிஸ்தவர்களும் பரலோகம் போவார்களா!! இயேசு கிறிஸ்து யோவான் 14:2,3ல் அப்போஸ்தலர்களிடம் சொன்னாரே, இன்று கிறிஸ்தவர்கள், அல்லது தங்களை ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அந்த அப்போஸ்தலர்கள் போல் இருக்கிறார்களா!!??
அதற்காக அன்பான தேவன் பரலோகத்தை தவிர கொடிய "நரக"த்திற்கு தான் அனைவரையும் அனுப்புவார் என்று சொல்லி பிரசங்கிப்பவர்கள் இன்னும் கொடியவர்கள்!! பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் தான் தேவனின் அன்பை புரிந்துக்கொள்ளாதவர்களாக இருக்க முடியும்!!
யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
யோவான் 14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்//
நான் மறுபடியும் வந்து என்றால் இரண்டாம் வருகையில் என்றுதான் அர்த்தம். ஆனால் மரித்தவுடனேயே நான் 'இயேசப்பாட்ட' போயிருவேன் என்று முட்டாள்தனமாக எண்ணிக்கொண்டிருக்கிறது இந்தக் கிறிஸ்தவம். கேட்டால் அதுவந்து... நம்ம ஆத்துமா மொதல்ல போயிரும் அப்புறம் அவர் வருகையில் சரீரத்தோட அவரோட இருப்போம் என்பார்கள் குழப்பவாதிகள்.
கிறிஸ்துவின் சபை பரலோகத்துக்கும், மற்றவர்கள் பூமியில் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற வேத சத்தியம் இவர்களுக்கு புரியாது