தளத்தில் புதிதாக வருகை தந்திருக்கும் அனைவரையும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்!! கிறிஸ்துவின் பிதாவும், நம் பிதாவுமாகிய யெகோவா தேவன் தாமே அவரின் ஆவியை கொண்டு நம்மை நடத்தட்டும்!!
பதிவுகளை தந்திருக்கும் சகோ விஷால், சகோ ஆமோஸ் அவர்களை இன்னும் அதிகமாக பதிவுகளை தந்து சத்தியத்தின் வழியில் நாம் ஒன்று சேர வாழ்த்துகிறேன்!!
நேற்று இரவு தூக்கம் வராதபோது எனக்கு வந்த மகா சிந்தனை இது
அதாவது நாம் கிறிஸ்தவர்கள் ( சும்மா ) நமது நோக்கம் பரலோகம் போவது !!( அப்படியா?)
பக்கத்தில இருக்கும் பாண்டிசேரி எப்படி இருக்கும் நு தெரியும் தூரமா இருக்கும் அமரிக்கா எப்படி இருக்கும் நு தெரியும் ஆனா இந்த பரலோகம் எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்
சகோ ஆத்துமா சொல்லியிருக்கிறது போல், இந்த கேள்வி இந்த தளத்திற்குரியது அல்ல!! நீங்கள் அனுக வேண்டிய சில இடங்கள், ஜெப கோபுரங்கள், ஆசிர்வாதம் தொலைக்காட்சி, பன்னைகள், வாசல்கள் இன்னும் பல ஜாம்பாவான் ஊழியர்கள்(!!)!! இவர்கள் தான் பவுலை போல் மூன்றாம் வானம் என்கிற பரதீசுக்கு, என்கிற பரலோகத்திற்கு தைரியமாக துனிச்சலாக போய் வருபவர்கள்!! அங்கே போக வழி வேதத்தில் இருக்கிறது, அது எப்படி இருக்கிறது என்பது...............???????
1 கொரிந்தியர் 2:9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
எப்படி தான் பரலோகத்தை பார்த்தோமென்றும் அதுவும் இயேசு கிறிஸ்துவே கரத்தை பிடித்து கூட்டி சென்றதாக ரீல் விடுகிறார்களோ!!
ஆனால் நமக்கோ,
II கொரிந்தியர் 5:6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
பரலோகத்தை விசுவாசிக்கிறோம், அது எப்படி என்பதை கிறிஸ்து தமது இரண்டாம் வருகையில் கூட்டி செல்லும் போது பார்த்துக்கொள்ளலாம்!! அவர் என்ன அடிக்கடி வந்து போவரா? அவர் வரும் போது அங்கே போகலாம்!! சரிதானே!!