kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சூப்பர் காமெடி!


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சூப்பர் காமெடி!



 

ஒரு காமெடி தளத்திலிருந்த பதிவு. இது சிரிக்கலாமே!


//மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி.

இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும். நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்

1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.

2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.

3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.

4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.//

//இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.//
பிசாசு சொன்ன "நீங்கள் சாகவே சாவதில்லை"

 //ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே.//

அட மூடர்களே இதற்கடுத்த வசனம்தான் யார் இந்த 'ஆவிகள்' என்று தெள்ளத்தெளிவாக சொல்கிறதே. 20 வசனத்தில் "அந்த ஆவிகள் (மனிதர்கள் அல்ல) பூர்வத்தில் நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்..."  கொஞ்சம் விட்டால் சுத்து சுத்துன்னு சுத்தீருவீங்களே.. யார் இந்த கைலாஷ மகரிஷி நாயோ?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கொஞ்சம் விட்டால் சுத்து சுத்துன்னு சுத்தீருவீங்களே.. யார் இந்த கைலாஷ மகரிஷி நாயோ?//


வேதத்தின்படி இது யார் என்றால்,

ஆதி 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

அது நாயாக இருக்க முடியாது, அது சர்ப்பமாக தான் இருக்க முடியும்!! ஆகவே தான் சாவதில்லை என்கிறது புது அனுபவமாம்!! இதை தானே கிறிஸ்தவ மண்டலமும் போதிக்கிறது!! இவர்கள் அனைவரும் அந்த சர்ப்பத்தின் ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு அந்த சர்ப்பத்தின் தூதர்களாகவே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கைலாஷ மகரிஷி என்பவர் கைலாய மலையில் இருக்கிறாராம்!! சிறகு அடித்து வந்து இறங்னார்கள் தேவதூதர்கள், அவர்களுடன் கிறிஸ்து இயேசுவும் வந்தாராம்!! கிறிஸ்து இயேசு சீக்கிரம் இரண்டாம் வருகையில் வரயிருக்கிறாராம் (கைலாஷ மகரிஷி போல் இன்னும் எத்துனையோ பேரிடம் "வந்து" பேசிய கிறிஸ்து இயேசுவிற்கு இனி வரவிருப்பது எப்படி இரண்டாம் வருகையாகும்), ஆகவே மகரிஷிக்கு சாகாமை சரீரத்தை கொடுத்து சென்றிருக்கிறாராம்!! இவர்களை பொறுத்தவரை "பாவத்தின் சம்பளம் மரணம்" கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

In the summer of 1912, the Christian Sadhu Sunder Singh traveled through the snowy Himalayan regions alone and on foot, often refreshed by the beautiful scene through, which he passed, but more often fatigued to the last degree in his difficult and fruitless search for the holy men he hoped to meet there.............


Read More.......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

The Greatest ever Sardarji Joke!



-- Edited by soulsolution on Friday 27th of May 2011 07:56:01 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard