இந்த 2009 -ம் வருடம் நமக்கு வெளியே கலவரமாகவும் உள்ளே அமைதியாகவும் வாய்த்திருக்கும்;இது யாத்திராகமம்.14:20 -ன் சம்பவத்தைப் போலிருக்கும்;பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக அநேகர் தேவபிள்ளைகளிடம் வருவார்கள்;இது யோசேப்பு எகிப்தில் மகிமையாக உயர்த்தப்பட்டது போலிருக்கும்;தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு வெளிப்படுத்தாமல் ஒன்றையும் செய்கிறதில்லை;(ஆமோஸ்.3:7)
நீதிமான்களாகிய தேவபிள்ளைகளிடம் துன்மார்க்கருடைய ஆஸ்திகள் வந்து சேரும்;துன்மார்க்கர் ஆக்கிரமித்திருந்த ஸ்தானங்களில் சன்மார்க்கத்தார் வருவார்கள்;தேசத்தில் துஷ்டர் ஒடுக்கப்பட்டு சமாதானம் பெருகும்;இன,மத வேறுபாடுகளால் மக்களைப் பிரிக்கிற குழப்பவாதிகள் வலுவிழந்து நடுநிலையாளர்கள் ஆட்சிபீடங்களை நோக்கி வருகிறார்கள்;அவர்களுக்கு ஆலோசனை கூறவும் தேவதிட்டங்களை செயல்படுத்தவும் கர்த்தர் தேவபிள்ளைகளை எழுப்புகிறார்;
அவர்கள் எகிப்தில் யோசேப்பும் பாபிலோனில் தானியேலும் இருந்ததுபோல உலகெங்கும் உள்ள அரசாங்கங்களை நடத்துவார்கள்;அரபு நாடுகளிலும் சீனாவிலும் பெரிய எழுப்புதல் உண்டாகும்;இதன் விளைவாக இந்தியாவில் பெரிய மாற்றங்கள் வரும்;அதற்கு ஆதரவானதொரு அரசாங்கமே இந்தியாவில் வரும் மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும்;இந்தியாவின் எழுப்புதல் இஸ்லாமியர்களின் மூலம் வரும்;இதுபோன்ற இன்னும் அநேக தேவதிட்டங்கள் செயல்படுத்தப்படப்போகும் ஏழு வருடங்களின் ஆரம்ப வருடமே இந்த "2009"
இந்த ஆண்டில் அதுவும் முக்கியமான ஒரு நாளான மே 1ம் தேதிக்கு ஒசாமா பின் லேடன் செத்து போவான் என்று ஒரு தீர்க்கதரிசியினாலும்(!!) சொல்ல முடிந்ததா!! பூகம்பம் வரும், கடல் கொந்தளிக்கும், தீ பிடிக்கும், வீடுகள் இடிந்து விழும், காற்று வீசும், மழை வரும் என்று சொல்லுவது தான் இவர்களின் தீர்க்கதரிசனம்!! 35 வருடங்களாக ஆண்டுக்கொண்டிருந்த சிவப்பு படை தோற்று போய் மம்தா பேனர்ஜி ஆட்சியை பிடிப்பார் என்று சொல்ல முடிந்ததா!!
தேஞ்சு போன ரெகார்ட் போல் மழை, பூகம்பம் போன்றவற்றை சொல்லிக்கொண்டு மேண்மை பாராட்டிக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்திற்கு ஐய்யோ!! என்னை விட்டு அகன்று போங்கள், அக்கிரமசெய்கைக்காரர்களே என்று வேதத்தில் இவர்களை குறித்தே எழுதப்பட்டிருக்கிறது!!
ஆண்டுக்கான ஜோஷியத்தை இவர்களை விட பெட்டராக சரியாக கணிக்கும் ஜோஷியக்காரர்கள் இருக்கிறார்களே!! அரசியல் நிபுனர்கள் இருக்கிறார்களே, வான் நிலை அறிவிப்பாளர்கள் இருக்கிறார்களே!! இவர்கள் எல்லாரும் எந்த ஆவியில் இவைகளை சொல்லுகிறார்கள்!!
தேவனின் நாமத்தில் புதிது புதிதாக எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று உட்கார்ந்து யோசிப்பார்கள் போல்!!
இன்னும் சொலர் ஒரு படி மேல் போய், துனிகரமாக ஒன்றை சொல்லுவார்கள், அது நடக்க கூடாது என்று தேவன் ஜெபிக்க சொன்னார் என்றும் சேர்த்துக்கொள்வார்கள்!! இவன் சொன்னது நடக்காது என்று இவனுக்கு நன்றாக தெரியும், தேவனை அசிங்கப்படுத்த இது போன்ற தீர்க்கதரிசி ஊழியர்களும் உண்டு!! பிறகு குறிப்பிட்ட இவன் சொன்ன காரியம் நடக்காமல் போனவுடன், இவன் உபவாச ஜெபத்தினாலே அது ஆயிற்று என்று இன்னும் அதிகமாக மேண்மை பாராட்ட அவனுக்கு காரணம் கிடைக்கிறது!!
தேவன் இவர்களை போன்றோரை பார்த்து நகைத்துக்கொண்டு இருப்பார்!!