"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்" மாற்கு16:17,18.
மாற்கு 16ல் 9ம்வசனம் முதல் 20 வரையுள்ள வசனங்கள் மிகவும் பழமையான மூலப்பிரதிகளில் இல்லை. ஆக இது மனிதனால் சேர்க்கப்பட்ட வசனங்கள் ஆகும். இதை சேர்த்து எழுதிய நபர் அப் பவுலுக்கு நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும் (அப் 28:4,5,6). இன்னும் கொஞ்சம் 'பில்டப்' கொடுத்து சுவாரசியமானதாக முடிக்க முடிவு செய்திருப்பார் போலும். வேதத்தை ஆராய்ச்சி செய்ய விரும்பாத அறிவிலிகள் இதையும் 'வேதவாக்காக' எடுத்துக்கொண்டு அரையும் குறையுமாக இவ்வசனங்களைக் கையாளுவார்கள்.
இவ்வசனங்களை அப்படியே நம்பும்பட்சம், இதில் ஒன்றையாவது செய்யாதவன் அவிசுவாசி என்று முடிவு செய்யலாமா? பிசாசுகளை நம்மூர் பூசாரி துரத்துகிறான், நவமான பாஷைகளை பேசுகிறேன் என்று பிதற்றும் கூட்டம் ஏராளம், சர்ப்பங்களை இடும்பர் என்ற சாதியில் ஒரு தொழிலாகவே எடுக்கிறார்கள், சாவுக்கேதுவானவைகளைக் (கோக், பெப்ஸி, மதுபானங்கள், ஏன் விஷத்தையே) குடித்தும் தப்புகிறார்கள். வியாதியஸ்தர் மேல் கைவைத்து சுகமாக்கும் முறைதான் தொடு வர்மம். அக்கு பிரஷர் வைத்தியம்.... ஆக இவர்களெல்லாரும் விசுவாசிளோ?
என்ன முட்டாள்தனம். இந்த வசனங்களுக்கு இந்தக் கிறிஸ்தவம் என்ன விளக்கம் கொடுக்கிறது? இந்த சம்பவங்கள் இன்று யாருக்காவது அப்படியே நடக்கிறதா? இவைகளை நடப்பிக்காதவர்களை அவிசுவாசி என்று முடிவு செய்யலாமா?
தங்கள் குற்ற சாட்டுக்கு எனக்கு ஆதாரம் வேண்டும் சகோதரா ஏன் என்றால் "எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதைபற்றி கொள்ளுங்கள்" என்று வசனம் சொல்வதாக எனக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்!!!!!!