////அன்பு சகோதரர் ஆமோஸ் அவர்களை யௌவன ஜனம் தளத்துக்கு இன்முகத்துடன் வரவேற்கிறோம்; மனம்விட்டு வெளிப்படையாகவும் மரியாதையாகவும் பேசுவோம்; இதுவரை இந்த தளத்தில் உறுப்பினராகி விவாதித்தவர்களை கௌரவமாகவே நடத்தியுள்ளோம்;எனவே அச்சங் கொள்ளவேண்டாம்.
தயவுசெய்து நீங்களாவது எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்;அதற்காக உங்கள் கூடுகைக்கு (வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு) இரண்டு வருடம் வந்தால் ஓரளவுக்கு எல்லாம் புரியும் என்று தயவுசெய்து சொல்லிவிடவேண்டாம்;ஏனெனில் உங்கள் கூடுகைக்கு வந்திருந்தபோது உங்கள் சகோதரர்களிடம் கேட்டதற்கு என்னையே பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள்; உங்கள் விசுவாசம் என்ன,என்றும் உங்கள் உபதேசம் என்ன என்றும் அதாவது டாக்ட்ரீன் என்ன என்றும் விதம்விதமாக நான் ஆர்வத்துடன் கேட்டும் அதற்கு சரியான நேரடி பதிலைச் சொல்லாமல் அவர்கள் என்னை விசாரணை செய்வதிலேயே கவனமாக இருந்தார்களே ஒழிய தங்களிடம் அவர்கள் கற்றுக்கொண்டவற்றை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல அவர்களுக்கு தைரியமில்லை.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல உங்கள் செய்தியை பொறுமையாகக் கேட்டு ஒரு குறிப்பிட்ட வசனத்தை நீங்கள் வியாக்கியானம் செய்ததைக் கொண்டே நீங்கள் "இன்னார்" என்று அறிந்துகொண்டேன்;
இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து அவர் தொழத்தக்கவரல்ல என்று உபதேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யெகோவா சாட்சிகளே;
மூடி மறைத்து மர்மமாகவும் தந்திரமாகவும் போதிப்பதை விட்டுவிட்டு உங்களுக்கு தைரியமிருந்தால்இயேசு தொழத்தக்கவரல்ல என்பதிலிருந்து உங்கள் உபதேசத்தைச் செய்யுங்கள்;மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்..!///////
ஆனால் மறை முகமாக, மெய்பொருள் அச்சகத்தில் உங்களுகென்று தனி மரியாதை உள்ளது அதனால் சத்தியத்தின் வழி மாத இதழை நீங்கள் அச்சடிக்க வேண்டாம், அது மாற்றுக்கருத்து உள்ளவர்களின் இதழ், என்று மேலும் பல சென்சார் செய்த வார்த்தைகளை உபயோகித்து உள்ளார்.
நெல்லெண்ணம் கொண்ட அந்த அச்சகத்தார் ஆமோஸ் சகோதரரிடம் சொல்ல மனிதன் மனமுடைந்து போனார் .
"ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் " என்ற வசனத்தை நமது சகோதரர் மறந்திருப்பரோ ???
என்ன கொடுமை சார் இது??
இவர்ர்ல்லாம் போதகராம்?, இவருக்கெல்லாம் ஒரு ௬ட்டமாம்?
இவருக்கெல்லாம் ஒரு ஊழியமாம் , கிறிஸ்தவன் என்ற போர்வையில் வாழும் இவர் யார் ?......................
-- Edited by Guru on Friday 13th of May 2011 07:41:07 AM
//சில்சாம் அண்ணே நம்ம தகுதிக்கு இது சரியோ , இது முறையோ ,இதுதருமம் தானோ?//
jhon wrote
//////நிச்சயம் தகாது!
.
சகோ. சில்சாம்
உங்களுக்கு அந்த அச்சக உரிமையாளரை தெரியுமென்றால், அவர் உண்மையான கிறிஸ்தவர் என்றால் இது போன்ற கள்ள உபதேச கயவர்களை பற்றி நன்கு விளக்கி பத்திரிக்கை அச்சிடப்படுவதை தடை செய்யுங்கள்
"ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள்" என்பது சகோதரர்களுக்குள் வேண்டுமானால் பொருந்தும் சாத்தானின் தூதர்களுக்கு அல்ல!
சகோ ஜான் சொன்னதை நானும் ஏற்கிறேன் ஆனால் ஒரு சந்தேகம்
கோவை வெறியன்ஸ், சாத்தானின் வாய், கள்ளதீர்கதரிசி, மேசியாவின் எதிரி,
என்று சில்சாமால் அன்புடன் !!!!!!!! அழைக்கப்படும் நமது சகோதரரை விட்டு
சில்சாம் புயல் தற்போது சென்னை பக்கம் வீசுகிறதோ ?
-- Edited by Guru on Friday 13th of May 2011 12:18:37 PM
-- Edited by Guru on Friday 13th of May 2011 08:30:12 PM
-- Edited by Guru on Friday 13th of May 2011 08:30:34 PM
சில்சாம் ஒரு கிறிஸ்தவனா அல்லது கிறிஸ்தவனின் வேஷத்தை தரித்து குழப்பத்தை கொண்டு வர நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு ஏஜண்டா என்கிற ஒரு சந்தேகம் இப்பொழுது எழும்புகிறது!!
ஜான் அவர்கள் இந்தியரா அல்லது இலங்கையை சேர்ந்தவரா என்பது எனக்கு தெரியாது!! இந்தியராக இருந்தால் அவருக்கு இங்கே இருக்கும் வியாபரா சட்டம் தெரியாது போல்!! இலங்கைக்காரராக இருந்தால் அதை பற்றி கவலை இல்லை!!
இந்தியாவில் அச்சகங்களுகு பஞ்சம் இல்லை என்பதை ஜான் அறிய வேண்டும்!! என்ன!! ஜான் அவர்கள் ஒருவரை சாத்தானின் தூதன் என்று சொல்லும் முன் சற்று நிதானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!! வேதமே எனக்கு தெரியாத சில்சாமை உங்களை போன்றோர் "கிறித்தவன்" என்று ஏற்றுக்கொள்ளும் போதே உங்களின் நிலை என்னவென்று எங்களுக்கு தெரியும்!!
சில்சாமின் உண்மையான வேலை என்ன என்பதை கூடிய விறைவில் வெளிச்சாத்திற்கு கொண்டு வருவோம்!! அப்பொழுது ஜான் போன்றோர் யார் தான் "சாத்தானின் தூதன்" என்று நிச்சயமாக அறிந்துக்கொள்வார்கள்!!