kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் பரலோகராஜியத்தில் பிரவேசிப்பார்கள்??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யார் பரலோகராஜியத்தில் பிரவேசிப்பார்கள்??


மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!!

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் பரலோகத்திற்கு போக முடியும் என்று போதிப்பவர்கள் தான் இன்று அநேகராக இருக்கிறார்கள்!! அப்படி பார்த்தோமென்றால் பல கோடி ஜனங்கள் பரலோகத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள்!! வெவ்வேறு சபைகளுக்கு சென்றாலும், சிறைச்சாலையில் இருந்தாலும், விபச்சார விடுதிகளில் இருந்தாலும், கொலை கொள்ளையில் ஈடுபட்டாலும், அல்லது மிஷனரி ஊழியம் செய்தாலும், இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களே!! அப்படி என்றால் இவர்கள் எல்லாரும் பரலோகம் சென்று விட முடியுமா??

அப்படி என்றால் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்று ஏன் கிறிஸ்து தம்மை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லி அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் சொல்ல வேண்டும்?

தொடரும்...............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

John:

//இவர் எப்போது உளறுவதை நிறுத்துவார் என்று தெரியவில்லை? பிதாவின் சித்தமே இயேசு கிருஸ்துவை எல்லாரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே.//

அத்நாஷியஸின் சீடஜனத்துக்கு வசனம் கொடுத்தவுடன் வருகிற கோபத்தை பாருங்களேன்!! அத்நாஷியஸ் என்ன வசனத்தை கொண்டா விசுவாசப்பிரமானம் எழுதினான்!! அப்படி தானே சீடர்களும் இருப்பார்கள்!! இயேசு கிறிஸ்துவை எல்லாரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே பிதாவின் சித்தமாக இருக்கிறது என்பதற்கு வசனம் இருக்கிறதா, அல்லது இதுவும் அத்நாஷியஸின் போதனை தானோ!! அவரை ஏற்றுகொள்வோர் அவரை ஏற்றுக்கொள்ளாதோர் என்று வேதத்தில் தேவனே சொல்லியிருந்தும் அத்நாஷியஸின் சீடர்கள் பிதாவிக்கு இருக்கும் சித்தத்தை வேதத்திற்கு வெளியே கற்று தருகிறார் போல்!!

//இவருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. யூதாஸ், அந்தி கிறிஸ்த்து மற்றும் கள்ள தீர்க்கதரிஷி ஆகியோர் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பரலோகம் போவர்கள் அப்புறம் எதுக்கு இந்த கேள்வி அப்புறம் தேவையில்லாத விளக்கம். எல்லார் பாவமும் மன்னிக்கப்படும் ஆகையால் "Go Sin Many More" Enjoy the best of both worlds. (இது தான் ரசலில் Gospel)//

பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் எல்லாரும் பரலோகம் போவார்கள் என்பது அத்நாஷியஸின் போதனை, ஏனென்றால் அத்நாஷியஸின் சீடர்களுக்கு தெரிந்தது இரண்டே இடங்கள் மாத்திரமே,

ஒன்று பரலோகம், இதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோர் மாத்திரம் போவார்கள், ஆனால் கிறிஸ்துவிற்கு முன் இருந்த தாவீது, ஆபிரஹாம் நோவா போன்றோரெல்லாரும் பரலோகத்தில் இருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள் இவர்கள்!! எதையாவது எப்படியாவது எழுதவேண்டும் என்றும் எதற்கும் வசனம் தேவையில்லை என்போரெல்லாம் கிறிஸ்தவ கூட்டமே கிடையாது!!

மற்ற இடம், இதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள்!!

வேதத்தில், வரவிருக்கும் ராஜியமும், அதில் பிதாவின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் இங்கேயும் (பூலோகத்தில் தான்) செய்யப்படுவதாக என்று கிறிஸ்து இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்திற்கு எல்லாம் இவர்களுக்கு அர்த்தம் தெரிவதில்லை!! இவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றால் உடனே அவர்கள் பரலோகம் சென்று விடுவார்கள், அந்த கள்ளனை அப்படி தானே பரலோகத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள் இவர்கள்!!

இன்று கிறிஸ்தவ தேசங்களாக இருக்கும் இடங்களில் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தானே, அப்படி என்றால் அங்கே யாரும் பாவம் செய்வதில்லை போல்!! கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இருக்கும் நாடுகளில் சிறைச்சாலைகள் இல்லை போல்!!

இதோ உங்கள் நினைவுகள் வேறு என்றும் தேவன் வைத்திருக்கும் நினைவுகள் வேறு என்றும், அவர் வைத்திருக்கும் வரயிருக்கும் அந்த சமாதனத்தை குறித்து நீங்கள் அறிவதில்லை!!

எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

For I know the plans I have for you,” declares the LORD, “plans to prosper you and not to harm you, plans to give you hope and a future.

நீங்களோ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் (காந்தியை போன்றவர்களாகவும் இருக்கலாம்) நரகத்திற்கு போவார்கள் என்கிற முடிவோடு இருக்கிறீர்கள், ஆனால் கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவனின் பாவங்கள் மாத்திரம் மன்னிக்கப்பட்டு அவர்கள் எல்லாரும் பரலோகம் போய்விடுவார்கள் என்று போதிப்பது தான் அத்நாஷியஸின் நற்செய்தி.

ஏசாயா 55:8. என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். 9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

8. “For my thoughts are not your thoughts, neither are your ways my ways,” declares the LORD“ 9. As the heavens are higher than the earth, so are my ways higher than your ways and my thoughts than your thoughts.

நீங்கள் நினைப்பதோ அழிவு மாத்திரமே, உங்களை போன்றோரிடம் தேவ அன்பு கிடையாது!! ஏன் கிடையாது என்று சொல்லுகிறேன் என்றால், இப்பொழுது உங்கள் பேச்சை கேட்டு மனம் மாறுகிறவர்களால் சந்தோஷப்படும் நீங்கள், ஏற்றுக்கொள்ளாதோரை நரகத்திற்கு தல்லுகிறீர்கள்!! இது தான் அன்பு இல்லை என்கிறேன்!! தேவனின் நினைவுகளும், வழிகளும் உங்களை போன்ற பாதாளத்தை நோக்கிய நினைவுகள் அல்ல, அவர் எல்லாரையும் இரட்சிக்க போகிறார், மாம்சமான எல்லா கண்களும் (உங்களையும் சேர்த்து தான், ஏனென்றால் நீங்கள் எல்லாம் பரலோகத்தில் இருப்போம் என்கிற மமதையில் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் எல்லாரும் இதே பூமியில் தேவனின் ராஜியத்தில் வருவீர்கள், அவர் எல்லாரையும் இரட்சிக்கிறார் என்பதை காண்பீர்கள்) அதை காணும்!!!

எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றவுடன் எல்லாரும் பாவம் தான் செய்வார்கள் என்பதும் உங்களின் கீழ்த்தரமான எண்ணம் தான்!! ஏன் காந்தி போன்றோர் கிறிஸ்துவை ஏற்காமல் பாவம் (உலக பிரகாரமானது தான்) செய்யாமல் தானே இருந்திருக்கிறார்!! இன்று கிறிஸ்துவின் நாமத்தில் லூட்டி அடிக்கும் ஊழியர்களை விட காந்தி போன்றோர் எத்துனையோ மேல்!! உங்கள் போதனைப்படி சீல் வடிந்த லாசரு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலே தானே பரலோகம் சென்றான்!!

உங்கள் நினைவுகளை மாற்றி அன்பை உங்கள் இருதயங்களில் வைத்தாலே, யாவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக வசனங்களில் விளங்கும்!! இதற்காக ரஸ்ஸலையோ, யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளையோ படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை!! அப்படியே வாசித்தாலும் அவர்கள் வசனத்தை தான் எழுதுகிறார்கள், உங்கள் குருவான அத்நாஷியஸ் போல் வசனமே இல்லாத விசுவாச பிரமாணத்தை கொடுக்கிறவர்கள் அல்ல‌!!

கொல்வின்:
//Sin Many More" Enjoy the best of both worlds. 
சரியாக சொன்னீர்கள்.  இதைத்தான் இன்றைய கள்ளப்போதகக் கூட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றன. நரகம் என்ற ஒன்று இல்லை. தேவன் நரகத்தில் மனிதனை வாதிக்க கொடூரமானவர் இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் எத்தனை பாவங்கள் வேண்டுமானாலும் துணிந்து செய்யலாம். எல்லாம் அனுபவிப்பதற்குத்தான்.  இதனால்தான் பெரியவரும் விபச்சாரத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதி்த்து சென்றுள்ளார்.
கத்தோலிக்கர்களின் ஆத்தும சுத்தரிகரிப்பு ஸ்தலம் போன்றும் இவர்களின் போதனைகள் இருக்கிறது.//

உலகத்தில் கிறிஸ்துவை அறிந்தவர்கள் மாத்திரமே பரிசுத்தவான்கள், அல்லது நரகம் இருக்கிறது என்று தெரிந்திருந்து பாவம் செய்வதில்லை என்பதெல்லாம் தான் கள்ள உபதேசத்தில் உச்ச கட்டம்!! இவர்களை பொறுத்தவரையில் எத்தனை பாவங்கள் வேண்டுமானாலும் துணிந்து செய்யலாம் என்று எங்கே சொல்லி அல்லது எழுதியிருக்கிறேன் என்று சொல்லுவீர்களா!! அதாவது எழுதுவது எல்லாவாற்றிலும் குற்றம் கண்டுப்பிடிப்பவர்கள் வாசிப்பதில்லை என்று தான் அர்த்தம்!! நரகம் இருக்கிறது என்று போதிப்பவர்கள் மாத்திரம் பாவமே செய்வதில்லையா!! உங்களுக்கு தெரியாது என்று சொல்லுங்கள், அவ்வளவே!! மேலும் "இவர்களை பொறுத்தவரையில்" என்று சொல்லாததை தயவு செய்து துனிந்து நாங்கள் (அல்லது நான்) சொன்னதா எழுதவேண்டாம்!! கத்தோலிக்கர்கள் என்ன விசுவாசம் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு உங்களை விட நன்றாக தெரியும், நான் கத்தோலிக்கத்த மதத்தில் இருந்த வரையில் தீவிரமான கத்தோலிக்கனாக தானிருந்தேன்!! அவர்களின் எல்லா கோட்பாடுகளும் எனக்கு அத்துப்படி!! இப்பவும் எனக்கு பல ஃபாதர்ஸ் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்!! அவர்கள் செய்யும் துனிகரமான பாவங்களையும் நான் அறிவேன்!! உங்களை போன்றே திரித்துவத்தை போதிப்பவர்கள் தான், உங்களை போன்றே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களை நரகத்திற்கு அனுப்புவர்கள் தான், பிறகு எப்படி துனிந்து பாவம் செய்கிறார்கள் என்று சொல்ல முடியுமா!! எதிர்த்தும், நைய்யாண்டி செய்தும் எழுத வேண்டும் என்று மாத்திரமே தான் குறிக்கோளாக வைத்திருக்கிறீர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை!!

ஜோஸப்:
//இவ்வளவு பேசும் நீங்கள் பிதாவின் சித்தம் என வேறு ஏதாவது இருந்தால் என்னவென்று எடுத்து வையுங்கள் பார்ப்போம்.//

1 Peter 2:15
For it is God’s will that by doing good you should silence the ignorant talk of foolish people.
1 Thessalonians 5:18
give thanks in all circumstances; for this is God’s will for you in Christ Jesus.
Philippians 2:13
for it is God who works in you to will and to act in order to fulfill his good purpose.

அனால் எல்லாவற்றுக்கு மேல்:

1 திமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

இந்த ஒரு வசனமே தேவனின் மகா பெரிதான அன்பை வெளிப்படுத்தும் சித்தம்!! ஆனால் இதையே உங்கள் கூட்டத்தார் மறுதலித்து தேவன் அன்பில்லாதவர், அவர் கிறிஸ்துவை ஏற்காத எவரையும் நரகத்தில் தள்ளிவிடுவார் என்று எல்லாம் போதிக்கிறீர்கள்!! நீங்கள் வேதத்தை காட்டிலும் அத்நாஷியஸ் வழியில் உருவான ஊழியர்களின் புத்தகங்களை படித்து தான் இப்படி எழுதுகிறீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! ஏனென்றால் தேவன் சித்தம் கொண்டது நடக்காது என்று தான் உங்கள் கூட்டம் போதிக்கிறது!!

அவருக்கு சித்தம் தான், ஆனால் அது கண்டிஷ்னல் என்று சொல்லி தேவ தூஷனம் செய்கிறீர்கள்!! அவ்வளவே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

எத்துனை தெளிவாக இன்றைய ஊழியர்களை படம் போட்டு காண்பிக்கும் ஒரு வசனம்!! இன்றைய பிரபல மாயாஜால ஊழியர்கள் இயேசு "சுவாமியின்" நாமத்தை உச்சரித்து தான் பலரை நடக்க வைக்கிறார்கள், சுனாமி வரும், பூகம்பம் வரும், சண்டைகள் வரும், என்றும், பலரின் பெயர்களை உச்சரித்து தங்களை தீர்க்கதரிசிகள், அற்புத சுகம் தரும் ஊழியர்கள் என்றும், தங்களை பரிசுத்தவான்கள் என்று சொல்லிக்கொள்ளுவோரை குறித்தே எழுதப்பட்ட வசனம் இது!!

ஆனால் கிறிஸ்து இயேசு சொல்லுவதோ, இவர்களை அவர் அறிவதில்லையாம்!! ஏன் என்றால் இவர்கள் அக்கிரமச்செய்கைக்காரர்களாம்!! தங்களை பரிசுத்தவான்கள் என்று வேடமிட்டு காண்பிப்பவர்கள் , கிறிஸ்துவின் பார்வையில் அக்கிரம செய்கைக்காரர்களாம்!! அக்கிரம செய்கைக்காரர்கள் என்றால் கிரமம் இல்லாமல் செய்வோர்!! அது என்ன கிரமம்? எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்று தெரியாமல் செய்வது தான் அக்கிரமம்!! அப்படி என்றால் இன்றை ஊழியர்கள் கிரமம் இல்லாததை செய்துவருகிறார்கள்!!

இது மாத்திரமில்லையே, இவர்களை கிறிஸ்து இயேசு ஒருக்காலும் அறிவதில்லையாம்!! இவர்கள் தான் கிறிஸ்துவை அப்படி என்று, இப்படி என்றும், நான் நேத்து ராத்திரி தான் அவரோடு பேசினேன் என்றும், அவர் என்னோடு காரில் பயனம் செய்தாரே என்றும், அவர் வந்து தான் என்னை இந்த ஊழியம் செய்ய சொன்னார் என்றும், இந்த டீவியை அவர் சொல்லி தான் நடத்துகிறேன் என்றும், சொல்லுவோரை பார்த்து தான், இவர்களை ஒருக்காலும் அறியவில்லை என்பாராம் உலக இரட்ச்சகர் கிறிஸ்து இயேசு!!

கிறிஸ்து ஒரு ஆறுதலையும் சொல்லுகிறார்!! குறைந்தப்பட்சம் இப்படி பட்ட வசனத்தை வாசித்த பிறகாவது, பிதாவின் சித்தம் செய்வோராக, தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சத்தியத்தை அறிகிற அறிவை பெற அவரிடம் கேட்கலாமே!! அப்படி செய்கிறவர்களே, கிறிஸ்து எனும் கன்மலையின்மேல் தன் வீட்டை கட்டியவனாக இருக்கிறான்!! இந்த வார்த்தைகளை கேட்காதவர்கள், கிறிஸ்துவை அஸ்திபார கல்லாக கொள்ளவில்லை என்பது உறுதி!!

கிறிஸ்துவின் பெயரை சொல்லுவது ஒரு பொருட்டே கிடையாது!! இன்று கிறிஸ்துவின் நாமத்தை அறியாதவர்களோ, அவரின் பெயரை உச்சரிக்காத கிறிஸ்து அல்லாதவர்களும் எத்துனையோ கோடி ஜனங்கள் இருக்கிறார்கள், ஏன் கிறிஸ்துவை எதிர்ப்பவர்கள் கூட தான் அவரின் பெயரை உச்சரிப்பவர்களாக இருக்கிறார்கள், அவரின் பெயரை அறிந்தவர்களோ, அவரின் பெயரை உச்சரிப்பவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் கிடையாது என்று கிறிஸ்து இயேசுவே சொல்லியிருக்கிறார்!!

நாம் கிறிஸ்து எனும் அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களாக இருப்போமே!! நம்மையே கிறிஸ்துவை அறிந்திருக்கிறோம் என்கிற பெருமையை விட்டு விட்டு அவர் நம்மை அறிந்திருக்கிறாரா என்பதை வேதத்திலிருந்து நம்மை ஒப்பீட்டு பார்ப்போமே!!

எபேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

எபேசியர் 2:22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

தொடரும்..................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard