kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எவை மன்னிக்கப்படும்??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
எவை மன்னிக்கப்படும்??


மத்தேயு 12:32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

Matthew 12:32 Anyone who speaks a word against the Son of Man will be forgiven, but anyone who speaks against the Holy Spirit will not be forgiven, either in this age or in the age to come.

இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக பேசப்படும் எதைவும் மன்னிக்கப்படும் என்கிறது வசனம்!! இயேசு கிறிஸ்து தான் பிதா என்று சொல்லும் கூட்டத்தார், இயேசு கிறிஸ்து மரித்தார் ஆனால் மரிக்கவில்லை என்று சொல்லும் கூட்டத்தார், இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே, இயேசு கிறிஸ்துவே சர்வவல்லமையுள்ள தேவன், இயேசு கிறிஸ்து ஆவியில் அல்ல சரீரத்தில் தான் உயிர்த்தார் என்கிற போதனை, இயேசு கிறிஸ்துவின் பலியினால் உண்டான இரட்சிப்பை சகல உலகாத்தாரும் அனுபவிப்பார்கள் என்பதை மறுக்கும் கூட்டத்தார்!! இன்னும் நிறைய இருக்கிறது!! இப்படி எதுவாக இருந்தாலும் கிறிஸ்துவிற்கு விரோதமாக அவர் படைக்கப்பட்டு, அவர் மாம்சத்தில் வந்த நோக்கம், அவர் பரலோகம் சென்று தேவனின் வலது பக்கத்தில் வீற்றிருந்து, அவர் மீண்டும் ராஜாவாக வரப்போகும் அனைத்தையும் மறுதலித்து உருவான கிறிஸ்தவ கோட்பாடுகள் தான் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தைகளாகும்!! ஆனாலும் கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலின் பயனாக இந்த தூஷனங்கள் எல்லாம் மன்னிக்கப்படுமாம்!!

எது மன்னிக்கபட மாட்டாது?

சர்வவல்லமையுள்ள தேவனாகிய பிதாவை குறித்தான அறிவு, இவரின் நேசக்குமாரனான கிறிஸ்துவை குறித்தான ஞானம், இவர்களின் சிந்தையும் வல்லமையுமான ஆவியை குறித்தான அறிவு, இந்த தெளிவை தேவனிடத்திலிருந்து அவரின் வார்த்தைகளிலிருந்து பெற்றவர்கள், மீண்டுமாக தேவனை மறுதலித்து, கிறிஸ்துவின் நிலையை மறுதலித்து போனால் அது மன்னிக்கப்படமாட்டாதாம்!! ஏனென்றால் இந்த அறிவானது, இந்த ஞானமானது, பிதாவாகிய தேவனிடத்திலிருந்து தான் கிடைக்கிறது!! பிதாவிடத்திலிருந்து அவரின் ஆவியினால் பெற்றுக்கொண்ட ஞானத்தை மறுதலிப்போருக்கு மாத்திரமே அது மன்னிக்கப்படாது என்கிற ஒரு கண்டிஷன் இருக்கிறது!!

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

பிதாவிடத்தில் இருந்து அவரின் ஆவியை கொண்டவர்கள் பெற்றுக்கொள்ளும் இந்த ஞானத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அதை தூஷ்த்தி விலக கூடாது!! இந்த ஞானம் இல்லாதவர்களை குறித்து ஒன்றும் இல்லை, அவை அவர்களுக்கு மன்னிக்கப்படுமாம்!!

இன்றைய கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தை இப்படியாக விளக்குவார்கள்!! மனுஷகுமாரனான கிறிஸ்த்விற்கு விரோதமாக பேசப்படுவது மன்னிக்கப்படுமாம் ஆனால் "பரிசுத்த ஆவியான தேவனுக்கு" விரோதமாக பேசப்படும் எதுவும் மன்னிக்கப்படாது என்று!!

இப்படி பாட்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி, அப்படி என்றால் பிதாவிற்கு விரோதமாக பேசுவதை குறித்து இந்த வசனம் ஒன்றும் சொல்லுவதில்லையே!! பிதாவிற்கு விரோதமாக எதை வேண்டுமென்றாலும் பேசலாமா? அது மன்னிக்கப்படுமா, மாட்டாதா?? அல்லது பிதா தான் இயேசு கிறிஸ்து, அல்லது இயேசு கிறிஸ்து தான் பிதா என்கிற அறிவு இருப்பதால் அது மன்னிக்கப்படும் ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக பேசப்படுவது மன்னிக்கப்பட மாட்டாதா?

தேவன் ஆவியாக இருக்கிறார், ஆனால் ஆவி தேவனாக இல்லை!! இந்த உன்னதமான தேவனின் ஞானத்திற்கு விரோதமாக தான் எதையும் பேசக்கூடாதே தவிர, வேதத்தில் இல்லாத "பரிசுத்த ஆவியான தேவனுக்கு" விரோதமாக என்று வசனம் சொல்லுவதில்லை!!

தொடரும்.....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard