kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: +2 ரிஸல்ட்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
+2 ரிஸல்ட்


+2 ரிஸல்ட் வந்தாகிவிட்டது!! ஜெயித்த அனைவரையும் தளத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்!! தோற்று போனவர்கள் எதையும் இழந்து போகவில்லை, மீண்டும் ஒரு பிரயாசம் வைத்தால் நிச்சயமாக ஜெயிப்பீர்கள் என்றும் வாழ்த்துகிறோம்!!

இந்த முறையும் வழக்கம் போல் ஜெபகோபுரங்களையும், தொலைப்பேசி ஜெபங்களையும், பரிட்சை ஸ்பெஷல் உபவாச கூட்டங்கள், இதில் பங்கு கொண்டவர்கள், இதை நடத்தியவர்கள் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது கேள்விகுறியே? இவர்களின் சத்தம் எல்லாம் பரிட்ச்சை தொடுங்கும் போது மாத்திரமே, அதன் பின் நிசப்தம் தான் இவர்களின் பதில்!! ஏனென்றால் முதல் வரிசையில் இருப்போரை நாம் அறிவோம், இவர்கள் எந்த வரிசையில் இருக்கிறார்கள் என்பது கூட இவர்களுக்கு தெரியாது!!

படிக்கிறவனுக்கு தேவன் நிச்சயமாக உதவி செய்கிறவர்!! அவர் உழைத்து சாப்பிட சொல்லுகிற தேவன்!! படிக்காமல் வெறும் ஜெபத்தை மாத்திரம் நம்பியிருப்பது வீணான முயற்சியாகும்!! தேவனின் சித்தம் அறிந்து ஜெபிப்பதே சிறந்த ஜெபம்!!

இனியும் இது போன்ற கோமாளி கூட்டங்களில் சிக்காமல், தேவனிடத்தில் தேவையான ஞானத்தைற்கு நீங்களே ஜெபியுங்கள், அவருக்கு தொலைபேசியோ, மனித சிபாரிசோ பிடிக்காது!! நீங்கள் யாராகா எப்படி பட்டவராக இருந்தாலும் தேவனிடத்தில் அவரின் சித்தத்தின்படி கேட்டால் போதும், அவர் உங்கள் தேவைகளை அவரின் சித்தத்தின்படி நிறைவேற்றுவார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard