kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


ஜான்:
//இந்த உங்களுக்கு புரியாது போன்ற டகால்டி வேலையெல்லாம் வேண்டாம்!! மிருகமும், கள்ளதீர்க்கதரிசியும் யார்?//

மிருகம் மிருகம் கிடையாது, அப்படியே கள்ளதீர்க்கதரிசி கள்ளதீர்க்கதரிசி கிடையாது!! உங்களுக்கு சொன்னாலும் புரியாது!! அந்த நிலையை கடந்து சென்று விட்டீர்கள்!!

//உங்களுக்கு பிடிக்காத, நம்பாத, விசுவாசிக்காத வசனங்களை என்ன பண்ணலாம்? கிழித்து விடலாமா? ஏசாயா 66:23 -24 அப்படி பட்ட ஒருவசனம் ஆகையால் என்னிடம் கேட்க்காதே என்று சொல்லுகிறீர்களா?//

ஏன் நான் காண்பித்த வசனங்கள் உங்களுக்கு எரிச்சல் மூட்டுதோ!! வசனங்களை கிழிப்பது, சேர்ப்பது எல்லாம் உங்கள் வேளை, எனக்கு நீங்கள் விரக்தியில் பேசுவது போல் தான் இருக்கிறது!! ஏசாயா 66:23 -24 வசனங்களை சகோ சோல் சொல்யூஷன் விளக்கியிருக்கிறார்!! ஆனாலும் உங்களுக்கு புரியாது!! ஏனென்றால் எதிர்ப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டிருப்பது உங்கள் சுபாவம்!!

//மறுபடியும் கேட்கிறேன் நேரடியாய் பதில் சொல்லுங்கள் மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார்? //

ஏன் நானும் தான் இத்துனை வசனங்களை காட்டி கேள்வி கேட்டிருக்கிறேன்!! உங்களிடத்திலிருந்து பதில் வராது என்றும் தெரியும்!! ஏனென்றால் தேவன் எல்லாரையும் இரட்சிக்க இருக்கிறார் என்றால் அது உங்கள் கூட்டத்தாருக்கு பிடிக்காது!! உங்களுக்கு கேள்விகள் மாத்திரமே கேட்க தெரியுமா!!

//ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றால் கிழே சொல்லப்பட்ட கூட்டம் யார்?

அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. (வெளி 20:7-9)//

அதான் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள் என்று முடிவாகிவிட்டதே, நீங்கள் சுவிசேஷம் சொல்லி உங்கள் தேவனின் சித்தத்தை மாற்ற பிரயாசிப்பது வீண் என்று உங்களுக்கு தெரியாதா!!

//வெட்டியா எதாவது திட்டாமல், காமடியை தவிர்த்து உருப்படியாய் ஏதாவது பதில் சொல்லலாமே?//

உங்களுக்கு பதில் எழுதியதில் உங்களை திட்டியிருக்கிறேன் என்று சொல்லுவதும் அபாண்டம்!! ஆனால் உங்கள் பதிவை சற்றே கண்கள் திறந்து பார்த்தால் நலம் என்று நினைக்கிறேன்!!

//ஒழுங்கா வாசியுங்கள் "தேவத்துவம்" பரிபூரனமுள்ளவர்கள் எல்லாரும் தேவனே! நம்முடைய (கிறிஸ்தவனுடைய) ஜீவன் அவருக்குள் மறைந்து இருகிறதினால் அவருக்குள் விசுவாசியின் ஜீவன் பரிபூரனப்படும்.

...நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10 )
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது (கொலோசெயர் 3:3 )//

ஆமா நீங்கள் தேவர்கள் தான்!! போதுமா!! நல்லா விளக்கம் தருகிறீர்களய்யா!! நீங்கள் தேவனாகி விட்டதற்கு என் வாழ்த்துக்கள்!! நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காக பவுல் எப்படி காத்துக்கொண்டிருந்தாரோ, அப்படியே காத்திருக்கிறோம்!!

//ஆமா இரண்டு வெவ்வேறு ஆள்தத்துவங்களை இந்த வசனம் காண்பிக்கிறது. கிறிஸ்துவும் , பிதாவும் ஒரே ஆள்த்ததுவங்கள் அல்ல.

அது சரி...மொத்தம் ஒரே தேவன்தானா? ம்ம்...இயேசுவும் ஒரு தேவன், மோசேயும் ஒருதேவன் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்! ஒரே கர்த்தரா? அப்போ பிதா கர்த்தர் இல்லையா??//

ஆளத்துவங்கள் இல்லீங்கோ, இரண்டு நபர்களே அவர்கள்!!

உங்களுக்கு தோன்றுகிற இடத்தில் பிதாவும் கிறிஸ்துவும் ஒருவராக இருக்கிறார்கள், சில சமயம் இருவரும் வேறு நபர்களாகிவிடுகிறார்கள், பிதாவே கிறிஸ்துவாக வந்துவிடுகிறார், ஆனாலும் பூமிக்கு வந்த கிறிஸ்து (பிதா) அவரிடமே ஜெபித்தும் கொள்கிறாராம்!!

காமெடியின் உச்சத்தில் இருக்கிறீர்கள்!!

தெளிவாக ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம்!!

தேவன் யார்? கிறிஸ்து யார்? மூன்றாவது தேவனான பரிசுத்த ஆவியான தேவனை (வேதத்தில் இல்லாவிட்டாலும் வாதத்திற்கு எடுத்து கேட்க்கிறென்) பற்றி பிறகு பார்க்கலாம்!!

சும்மா, இருவரும் ஒருவர் தான், ஆனால் வேறு ஆளத்துவங்கள் போன்ற ரிக்கார்டரை ஆன் செய்யாமல் தெளிவாக எழுதுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நேரடியான கேள்வி: வேதம் ஒரே தேவன் என்று சொல்கிறதா அல்லது மூன்று தேவர்கள் என்று சொல்கிறதா?

 

வேதம் இயேசுவை 'கிறிஸ்து' என்று சொல்கிறதா? அல்லது இவர்தான் பிதாவாகிய தேவன் என்று சொல்கிறதா?

 

வேதம் பிதா பெரியவர் என்று சொல்கிறதா அல்லது இயேசுகிறிஸ்து பெரியவர் என்று சொல்கிறதா?

 

வேதம் இயேசுவை குமாரன் என்று சொல்கிறதா அல்லது பிதாவாகிய தேவன் என்று சொல்கிறதா?

 

வேதம் இயேசுவை 'அநாதி' தேவன் என்று சொல்கிறதா அல்லது ஆதி(ஒரு ஆரம்பம்)யுள்ளவர் என்று சொல்கிறதா?

 

பிதா கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருப்பாரா அல்லது கிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பாரா?

 

நான், நானேதான் நீங்கள் வணங்கும் பிதாவாகிய தேவன் என்று ஒருமுறையாகிலும் கிறிஸ்து 'பகிரங்கமாக' சொல்லியிருக்கிறாரா? இல்லை என்றால் ஏன்?

 

கிறிஸ்து சுயசித்தம் செய்ய வந்தாரா அல்லது பிதாவின் சித்தம் செய்யவந்தாரா?

 

என்னையன்றி பிதாவால் ஒன்றும் கூடாது என்று சொன்னாரா அல்லது பிதாவன்றி என்னால் ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்னாரா?

 

தாம் ஒருவரே சாவாமையுள்ளவர் என்று பிதாவைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது; கிறிஸ்து செத்தாரா இல்லையா? 

 

கிறிஸ்துவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பியது யார்?

 

இயேசுகிறிஸ்துவின் தேவனானவர் யார்?

 

இயேசுகிறிஸ்துவை அனுப்பியவர் யார்?

 

இயேசுகிறிஸ்து தானாக வந்தாரா அல்லது யாருக்காவது 'கீழ்ப்படியும்' நோக்கத்தோடு அனுப்பட்பட்டாரா?

 

தொடரும்....

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பக்கத்து வீட்டு பதில்கள்:

//     வேதம் பிதா பெரியவர் என்று சொல்கிறதா அல்லது இயேசுகிறிஸ்து பெரியவர் என்று சொல்கிறதா?

இயேசுகிறிஸ்து பெரியவர் என்றே வேதம் சொல்லுகிறது. (பிதா பெரியவர்- பெரியவரை பெரியவர் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.)//

லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்;

கிறிஸ்து பெரியவராக இருப்பார் என்று லூக்கா எழுதியிருக்கிறார், அதில் எந்த மறுப்பும் இல்லை, ஆனால் பிதா அவரிலும் பெரியவராக இருக்கிறார் என்று இயேசு கிறிஸ்துவே சொல்லுவதை புறக்கனித்தால் எப்படி!!

யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

யோவான் 14:28............................................, ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

ஆமா, ஆமா, கிறிஸ்து இயேசு சொன்னவைகளை நாம் சொல்ல வேண்டியது தான் இல்லை!! அப்படி தானே எல்லாவற்றிலும்!! பிதா எல்லாவற்றிலும் பெரியவராக, நல்லவராக இருப்பதை கிறிஸ்து இயேசு சொல்லியிருக்கிறார் ஆனால் அடைப்புகுறி() அப்படி சொல்லவேண்டிய அவசியமில்லை என்கிறது!! சிந்திப்போம், செயல்படுவோம்!!!!

//வேதம் இயேசுவை 'அநாதி' தேவன் என்று சொல்கிறதா அல்லது ஆதி (ஒரு ஆரம்பம்) யுள்ளவர் என்று சொல்கிறதா?

இயேசுவை அநாதியானவர் என்றே வேதம் சொல்லுகிறது. ( ஆதிக்கும் முன்பாக இருப்பவர் அநாதியானவர்தானா..? ஆதி என்பது ஆரம்பத்தைக் குறிக்கும் வார்த்தையல்ல. ஆரம்பம் எது என்பதை அறியாத இடத்தினைக் குறிக்கும் வார்த்தையாகும். இப்படி அடைப்புக்குறிக்குள் நினைத்ததையெல்லாம் எழுதவும் வேதம் அனுமதிக்கவில்லை.)//

ஆதி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் ஆரம்பம் எது என்பதை அறியாத இடத்தினைக் குறிக்கும் வார்த்தை என்பது எந்த விதத்தில் நியாயம்!! அநாதி என்பதற்கு தான் ஆரம்பம் எது என்பதை அறியாத இடத்தினைக் குறிக்கும் வார்த்தை!! ஆதி என்பது ஒரு ஆரம்பத்தை, தெரியப்பட்ட, தொடங்கப்பட்ட ஒரு ஆரம்பத்தை குறிக்கும் சொல்லாகும்!!

அநாதி [ anāti ] , (அந்+ஆதி) what has no beginning , eternal God ;
ஆதி [ āti ] , beginning , commencement , துவக்கம் ;
நன்றி: http://www.dictionary.tamilcube.com

இது யெகோவா தேவன் (நம் பிதா):
சங்கீதம் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
சங்கீதம் 93:2 உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

இது கிறிஸ்து இயேசுவை பற்றிய வசனங்கள்:
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது,
கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
இது கிறிஸ்து இயேசுவே சொன்னது:
வெளி 1:8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

இவர்கள் சொல்லுவது போல் ஆதி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் ஆரம்பம் எது என்பதை அறியாத இடத்தினைக் குறிக்கும் வார்த்தை என்று எடுத்துக்கொண்டால், இதோ ,

அப்போஸ்தலர் 11:15 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

இதை எப்படி புரிந்துக்கொள்வார்கள்!! எப்ப இவர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கியது என்பதை தெரியாத ஒரு ஆரம்பம் என்று எடுத்துக்கொள்வார்களோ!!

நல்ல தமாசு!!

//   பிதா கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருப்பாரா அல்லது கிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பாரா?

அது உங்கள் மாம்சம் உங்களுக்குக் கீழ்பட்டிருக்குமா அல்லது நீங்கள் உங்கள் மாம்சத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பீர்களா என்பதைப் பொருத்த விஷயம்.//

ஈகோ பிரச்சனை!! கேட்டு கெட்டு போன விசுவாசம்!!

1 கொரிந்தியர் 15:28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் வசனம்!! தெளிவில்லாத "உங்கள் மாம்சத்துக்கு" தேவையான பதில்!!

//நான், நானேதான் நீங்கள் வணங்கும் பிதாவாகிய தேவன் என்று ஒருமுறையாகிலும் கிறிஸ்து 'பகிரங்கமாக' சொல்லியிருக்கிறாரா? இல்லை என்றால் ஏன்?

சொல்லியிருக்கிறார்; ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை என்பதுடன் மூர்க்கத்துடன் அவரை அடிக்க வந்தார்கள் என்றே வேதம் சொல்லுகிற்து.//

எங்கே? எப்போது? தன்னை தேவனின் குமாரன் என்று சொல்லுவதால் தான் அடிக்க வந்தார்களே அன்றி தன்னை பிதா என்று சொல்லியதால் அல்ல‌!!

//என்னையன்றி பிதாவால் ஒன்றும் கூடாது என்று சொன்னாரா அல்லது பிதாவன்றி என்னால் ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்னாரா?

சீடர்களைப் பார்த்து என்னையன்றி உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று இயேசு சொன்னாரே தவிர இதுபோன்ற கருத்தில் அவர் எதையும் சொல்லவில்லை; கேள்வியே தவறு. பாடத்தில் இல்லாத கேள்விகளுக்கு க்ரேஸ் மார்க் போடப்படுமா..?//

பாடத்தை புரிந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு க்ரேஸ் மார்க் உண்டு அது தான் தேவனின் ராஜியம்!!

//   தாம் ஒருவரே சாவாமையுள்ளவர் என்று பிதாவைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது; கிறிஸ்து செத்தாரா இல்லையா?
கிறிஸ்து மரணத்தை ருசிபார்த்தார் என்று வேதம் சொல்லுகிறது; ருசிபார்த்தல் என்ற வார்த்தையிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது.//

மரித்தார் என்பது மாத்திரமே நேரடியான பதில்!! சாவாமையுள்ள ஒருவரால் எந்த நிலையிலும் மரிக்க முடியாது, மரிக்க கூடாது!! ஆகவே தான் சாவாமையுள்ளவர் வராமல், மரணத்தை ருசிபார்க்கும்ப்படியாக தனது குமாரனை மரிக்க அனுப்பினார் பிதா!! உங்கள் ஆட்கள் சொல்லுவது போல் இதில் இரகசியம் ஒன்றும் இல்லை, வேதத்தில் இது தெளிவாகவே இருக்கிறது!!

//கிறிஸ்துவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பியது யார்?
பிதா எழுப்பினார், ஆவியானவர் எழுப்பினார், இயேசுவானவரும் மீண்டும் எழத்தக்க நிலையிலேயே தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார்; யாரும் அவருடைய உயிரைப் பறிக்கவில்லை. ஏனெனில் அவரைக் குறித்து ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள் என்று பேதுரு சொல்லுகிறான்.//

ஜீவாதிபதியாக மாற்றப்பட்டார்!! அவர் மாம்சத்தில் வந்த போது அல்ல, மரணத்தில் தன்னை ஒப்பு கொடுத்த பிறகே!!

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.

கிறிஸ்துவிற்கு கொடுக்கப்பட ஒரு விஷயத்தை குறித்து தான் வசனம் சொல்லுகிறது!!

// இயேசுகிறிஸ்துவை அனுப்பியவர் யார்?
அவருடைய பிதா.//

ஆனாலும் இருவரும் ஒருவரே!!

//தானாக சுயமாக வந்தார். யாரும் கட்டாயப்படுத்தி அவரை அனுப்பவுமில்லை;கீழ்ப்படியும்படி மிரட்டவும் இல்லை.மனிதன் வாழும் மாதிரியை சர்வவல்லவரே மனு உருவெடுத்து வந்து செய்துகாட்டினார், நாடகம் அல்ல‌. [அவர் முழுமையான மனுஷனாக இருந்தாலே அவரை பலியிட முடியும்; எனவே மனிதன் ஆனார் என்றும் வேதம் சொல்லுகிறது. தன்னைத் தொழத்தக்க தெய்வமாக இயேசுவானவர் தன் மீட்பின் திட்டம் நிறைவேறும் முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் ஆதாமின் பாவத்துக்கான தீர்வு உண்டாகாமலே போயிருக்கும் அல்லவா..?]//

சுயமாக வரவில்லை என்று தான் வசனம் சொல்லுகிறது:
யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
கட்டாயப்படுத்தி அனுப்பட்டார் என்று யாரும் சொல்லவில்லை!! கீழ்ப்படிதலுக்கு அர்த்தமே அது தான்!! கீழ்ப்படியும்படி மிரட்டினால் அதன் பெயர் அடிமைத்தனம், கீழிப்படிதல் அல்ல!! சர்வவல்லவர் மனு உருவெடுத்து வந்தார் என்பது கள்ள போதனை, துருபதேசம்!! சர்வவல்லவர் சாவாமையுள்ளவர், அவர் எந்த உருவத்தில் இருந்தாலும் அவரால் மரிப்பது கூடாத காரியம், ஆகவே தான் தன் சொந்த குமாரனை (தான் அல்ல) மரிக்கும் படியாக அனுப்பினார்!! சர்வவல்லமையுள்ள சாவாமையுள்ள தேவன் மனிதனாக வந்து பலியாக்கப்பட்டார் என்பதை விட ஒரு பேரிய தேவ தூஷனம் இருக்க முடியாது!! தன்னை தொழத்தக்க தெய்வம் என்று கிறிஸ்து இயேசு மீட்பின் திட்டம் நிறைவேறிய பின்னரும் சொல்லவில்லை, வெளிப்படுத்தவில்லை!! ஆதாமின் பாவத்துக்கான தீர்வு ஏதோ தற்செயலாக நடந்த காரியம் என்று என்ன வேண்டாம், அது தேவனின் அநாதி தீர்மானம்!! தீர்வு உண்டாகமலே போயிருக்கும் என்பது மூடத்தனமான வாதம்!!

வசனமே இல்லாத பதில்கள்!! பாரம்பரிய விசுவாசம் வெளிப்படும் பதில்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சிக்கலான கேள்விகளும் சிலிர்ப்பான பதில்களும்,


ஒரு நபர் ஒருபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களாக இருக்கவே முடியாது என்ற ஒரு சாதாரண விஷயம்கூட தெரியாமல் இந்தக் கிறிஸ்தவம் எப்படி ஒரு 'மாயை'க்குள் அகப்பட்டுத்தவிக்கிறது?

 

தேவன் ஒருவரே! 

கிறிஸ்து ஒருவரே!! 

இதைத்தானய்யா வேதம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது...

 

ஒன்றாக ஒரே எண்ணத்தில் இருப்பதென்பதற்கும் ஒரே ஆளாக இருப்பதற்கும் வித்தியாசமில்லை? இரண்டாவது சாத்தியமேயில்லை. தனித்தன்மையென்பதே ஒரு ஆள் 'தனி'யாக இருந்தால்தானே பொருந்தும்.

மூன்று வெவ்வேறு நபர்களைக் காண்பித்து இவர்கள் மூவரும் ஒருவர்தான் இவர்களைத் திருமணம் செய்துகொள் என்று ஒரு பெண்ணிடம் சொல்வது எவ்வளவு விபரீதமோ அதுபோலத்தான் இந்தத் திரித்துவமும்...

 



-- Edited by soulsolution on Wednesday 8th of June 2011 12:12:44 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard