அப்போஸ்தலர்கள் என்பதற்கு அர்த்தமே தெரியாமல், தற்கால சீனியர் ஊழியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் அப்.டேவிட் பிரகாசம், அப்.பால் தங்கையா. அப்.அகஸ்டின் ஜெபக்குமார்... என்று போட்டுக்கொள்கிறார்கள் அல்லது அனுமதிக்கிறார்கள். அப்போஸ்தலர்களூக்கு இருந்த தகுதியில் கால் தூசளவுகூட இல்லாத இந்த அட்டூழியர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்ற்கு அழைத்துக்கொள்வது எத்தகைய அறிவீனம்....
ரெவரென்ட்(பிதாவைக் குறிக்க வேதத்தில் ஒரே இடத்தில் பயன்படுத்தப்பட்ட பதம்) என்று போட்டுக்கொண்டு ஆளாளுக்கு தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ளூம் பழக்கம் முதலில் சி.எஸ்.ஐ உள்ளிட்ட 'மெயின் லைன்' சபைகளில் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது போனவன் வந்தவன் எல்லாம் இதைப் போட்டுக்கொண்டு காமெடி பண்ணுகிறார்கள்...
"தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்.தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரத் தொங்கல்களை பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களைல் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும் மனுஷரால் ரபீ, ரபீ (ஐயரே, Pastor, Father) என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்"
இதற்கு இந்தக் கிறிஸ்தவம் என்ன பதிலளிக்கப்போகிறது? இன்னும் Father, பாஸ்டர், ரெவரென்ட், ஐயர், அப்போஸ்தலர்.... என்று அழைப்பது தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது. கிறிஸ்து போதித்ததற்கு அப்படியே உல்டாவாகவல்லவா கிறிஸ்தவம் நடக்கிறது.
இதைத்தான் அந்தி கிறிஸ்து என்கிறோம். இதை எதிர்த்து எத்தனை ரோஷக்கார கிறிஸ்தவர்கள் குரல் கொடுக்கிறார்கள்?
//பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்;//
தமிழ்கிறிஸ்தவ தளம் இதற்கு என்ன பதில் சொல்லி மழுப்பப்போகிறது.
இதில் "மூத்த" அப்போஸ்தலராம். சாம்.செல்லதுரை என்ற தறுதலையை உருவாக்கிச்சென்ற செல்லதுரை. தன் மகனையே செழிப்பு உபதேசத்திற்கு ஒப்புக்கொடுத ஒப்பற்ற அப்போஸ்தலர் "மகிமைக்குள்" பிரவேசித்தாராம். செத்துப்போனார் என்று போட என்ன வெட்கமோ? அதென்னய்யா உயிர்த்தெழாமல் நேரடியாக "மகிமைக்குள்" பிரவேசிப்பது? அப்ப அவர் சாகவே இல்லையா?
நான் பதித்த வசனங்களுக்கு பதில் உண்டா? ஆதி அப்போஸ்தலர்களே சகோதரே என்றுதான் அழைக்கப்பட்டனர்.
இதுவும் வேசித்தனம்தான்...
-- Edited by soulsolution on Tuesday 3rd of May 2011 09:30:06 AM
//பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்;//
சரியாக சொன்னிர்ககல் சகொதரரெ , மெலெ குரிப்பிட்டுல்ல வரிகலை நானும் பார்தென்...இதை எலுதிய அந்த நபர்...எல்லொரையும் குரையும் சொல்லுவார், பின்பு இது பொன்ரு காமடியும் பன்னுவார்...HE HE He...!! இது தான் Neenகல் சொன்னது பொல அலியொ என்ரு தொனுகிரது....
அப்பன்காரன் ஒயிட் அன்ட் ஒயிட் போடச் சொல்லி பின்பற்றினார், மகன்காரன் ஒரே கோட் சூட், கீ போர்டு, ஸ்டைலான ஆங்கிலம் கலந்த தமிழ் ஆராதனை. இதில் ரெவ்சாம் என்று பேர். ரெவரெண்டாமுங்கோ அதாவது பய பக்திக்குரியவர்...
இந்த அவனா நீயி நபர்கூட சாம் P செல்லதுரையைக்குறித்து தனது தளத்தில் அவனை ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்ற ரேஞ்சுக்கு விவாதித்திருக்கிறார்கள். திருவாளர் மைகோ உட்பட.. இப்படி ஒருத்தனை ஒருத்தன் மாறி மாறி தூற்றிக்கொண்டு ஊழியம் செய்கிறார்கள்...
அதாவது ஒரு ஊழியக்காரன் (நினைப்பு தான்) இன்னோரு ஊழியக்காரன் மேல் என்ன வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் நாற அடிக்கலாம், ஆனால் நாம் செய்யும் போது அச்சச்சோ, ஊழியக்கரான், அதுவும் தேவனால் (!!) ரெவெரண்ட் என்று அபிஷேகம் செய்ப்பட்டவரை தூஷிக்க கூடாது, அது உங்களுக்கு உங்கள் சந்ததிக்கும் சாபத்தை வரவைக்குமாம்!!
I தெசலோனிக்கேயர் 2:4 சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
நாம் தொடர்ந்து தேவனின் வார்த்தைகளான வேதத்திலிருந்து அவரின் சித்தத்தின்படியே, மனிதர்களை திருப்திப்படுத்த அல்ல, மாறாக தேவன் நமக்கு வெளிப்படுத்திய அவரது வார்த்தையை தைரியமாக பிரசங்கிக்கவும், களைகளை எடுத்து காண்பிக்கவும், தேவ தூஷனங்களை எதிர்க்கவும் தேவ அன்பை வெளிப்படுத்தவும், தேவனுக்கு பிரியமுண்டாகும்ப்படியே செய்வோம்!!
தேவ தூஷனம் செய்வோருக்கும் தேவனின் அன்பு இருப்பதால் தான், அனைவருக்கும் இரட்சிப்பு என்கிற சுவிசேஷத்தை வேதம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியே சொல்லுவோம்!!
போலி அப்போஸ்தலர்கள், ஊழியர்கள், மாய்மாலம் செய்வோர், ஓசியில் ஊர் சுற்றுவோர், பரிசுத்த நடனம் என்கிற பெயரில் தேவ தூஷனம் செய்வோர், தப்பிதமான கோட்பாடுகளையும், மனித முறைமைகளையும் வெளிப்படுத்துவோம்!!
உனக்கு ஒரு ஊழியக்காரனையோ, அல்லது சபையையோ பிடிக்கவில்லை என்றால் அதை பகிரங்கமாக எதிர், குறைந்த பட்சம் அப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து விலகு...
அதைவிட்டுவிட்டு, விக்கிரக ஆராதனை, மாதாவணக்கம், புனிதர்கள் வணக்கம் என்று இன்று உலகளாவி நிற்கும் ரோமன் கத்தோலிக்கத்தை விட்டு விட்டு இவர்கள் எதிர்ப்பதெல்லாம் இந்து, இஸ்லாம் சமயக் கோட்பாடுகளை. இந்த அ(றிவி)லிகளுக்கு தைரியமிருந்தால் கத்தோலிக்கத்தை நேரடியாக எதிர்க்கலாமே? ஆவிக்குரிய சபைக்குப் போகிறேன் என்று சொல்பவன் மற்ற சபைகளில் ஆவியில்லை என்று எதிர்க்கலாமே?
நண்பர் ஜோசப் அன்று சொல்கிறார் சி.எஸ்.ஐ சபைகளில் அந்நிய பாஷை பேசுவதில்லை ஆனால் அந்நிய பாஷையை நான் நம்புகிறேன் என்று... கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று வசன விளக்கம் வேறு. உங்கள் சபையைப் பொறுத்தவரை அவர் மாறிவிட்டாரே? லட்சக்கணக்கான சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்களில் ஏன் ஒருவர் கூட பேசுவதில்லை? ஏனென்றால் அந்த சபைகளில் அது 'கற்று'க்கொடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை. பெந்தெகொஸ்த் சபைகளில் உற்சாகப்படுத்தி 'உளர' வைக்கிறார்கள். அவ்வளவே!ஆக நீ உனக்குப் பிடிக்காத ஊழியக்காரன் என்றால் அவனைப் பற்றி விமர்சிப்பாய், அதே சமயம் அவன் கடைபிடிக்கும் கோட்பாடுகளை நீயும் ஏற்றுக்கொள்வாய். அப்படித்தானே?
உனக்கு தினகரன் பிடிக்காது,
பால் தங்கையா பிடிக்காது,
பென்னி ஹின் பிடிக்காது,
CPM, TPM பிடிக்காது,
கத்தோலிக்கத்தை உள்ளார ஒரு கிறிஸ்தவமாகவே ஏற்றுக்கொள்வதில்லை,
நீ போகும் சபையைத்தவிர ஏறக்குறைய எல்லா சபைகளுமே பிரச்சனைக்குரியவைகள் என்று நம்புகிறாய்....
இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவே இருந்து கொண்டு யாருக்கு ஊழியம் செய்கிறாய்?
தேவனுக்கே வெளிச்சம்.
-- Edited by soulsolution on Wednesday 4th of May 2011 09:09:25 AM