இன்று ஜோசப் அவர்களுடனான தொலை பேசி விவாதத்தில் அவர் மிஷினரி ஊழியம் பற்றி பேசினார். மிஷினரிகள் இல்லாவிட்டால் உங்களுக்கு சத்தியம் தெரிந்திருக்குமா? நீங்கள் கிறிஸ்தவராயிருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார். நல்லது. அவர் தொடர்பு கொண்டதற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன், உண்மையிலேயே...
சரி விஷயத்திற்கு வருவோம். அதென்ன மிஷினரி ஊழியம்? வேதத்தில் அது அறிவுறுத்தப்படுகிறதா? ஊழியத்தில் இப்படி ஒரு பிரிவு வேதத்தில் இருக்கிறதா? பிரதான கட்டளை என்று சொல்லப்படும் ''நீங்கள் உலகம் முழுவதும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் அறிவித்து...." என்ற வசனத்தின் படி உலகின் மூலை முடுக்கெல்லாம் சுவிசேஷம் அறிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீண்டும் வேத வசனங்கள் எந்தக் காலகட்டத்தில் யாருக்கு சொல்லப்பட்டது என்பதை உணர்ந்து அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதில்தான் ஞானம் இருக்கிறதேயன்றி குறிப்பிட்ட வசனங்களை மட்டும் பொதுவான கட்டளையாகவோ, அல்லது இது எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை என்றோ எடுத்துக்கொள்வது முற்றிலும் அறிவீனமான செயல்.
புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்படாத நிலையில், ஆதிசபையினருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை இன்று உலகம் முழுவதும் வேதம் பரவிவிட்ட நிலையில், தகவல் தொடர்பின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அந்த குறிப்பிட்ட கட்டளையை 'நிறைவேற்றச் சொல்லி' மூளைச் சலவை செய்து அனுப்புவதுதான் மிஷினரி ஊழியம்.
மதுரையை மையமாகக் கொண்டு செய்ல் படும் CGMM என்ற அமைப்பு பழங்குடியினருக்கெல்லாம் போய் சுவிசேஷம் சொல்ல ஊழியர்களை அனுப்புகிறார்கள். பாஷையே தெரியாது, அவர்கள் மொழிக்கு எழுத்துக்கள் கூட கிடையாது. இந்த லட்சணத்தில் அந்தப் பழங்குடியினத்தவருக்கு முதலில் படிப்பு சொல்லிக்கொடுத்து அதன்பின் அவர்களுக்கு வேதம் கற்பித்து அவர்களை பரலோகத்துக்கு தயார் படுத்துகிறார்களாம்.... எந்த வேதத்தில் யார் இப்படிச் செய்தார்கள்? வசனம் உண்டா? அப்.பவுலே புறஜாதியாருக்கு சுவிசேஷம் அறிவிக்கப் ரோமாபுரி, கொரிந்து, பிலிப்பு, கலாத்தியா என்று பட்டணங்களில் அதுவும் கல்வியறிவு பெற்றவர்களிடம்தான் தர்க்கம் செய்து பிரயாசப்பட்டார்.
இத்தனை கல்வியறிவு பெற்ற நமக்கே இன்னும் வேதம் முழுவதுமாக தெளிவில்லாத நிலையில் இது எத்தகைய அறிவீனமான செயல் என்று உணரமுடியும்.
ஆக இந்த மிஷினரி ஊழியம் ஒரு மதிகேடான செயல். அதுவும் அறுப்பு உலகின் முடிவு என்பதை மறந்து அறுக்கிற காலத்தில் விதைக்க முற்பட்டால் எஜமானனின் கோபத்துக்குத்தான் ஆளாவோம்.
விதைக்க ஒரு காலமுண்டு அக்காலத்தில் அப்போஸ்தலர்கள் உண்மையில் விதைத்தார்கள். இப்போது அறுவடையின் காலம், அறுக்கிறவர்கள் மூலமாக முதிர்ந்த தனியங்களை தேவன் களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டிருக்கும் வேளையில் விதைக்க பிரயாசப்பட்டால் அது எஜமானனை அலட்சியப்படுத்துவதாகும்... இன்னும், தொடரும்...
'நான் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்' என்பதே தெரியாமல் நடப்பதுதானே வஞ்சனை....
மிஷனரி ஊழியம் அத்தனை உயர்வானதாகத் தெரிந்தால் போகவேண்டியதுதானே, யாராவது தடுத்தார்களா? இல்லை 'அழைப்பு' வரவில்லையா? எங்களைப் பொறுத்தவரை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
மூளைச் சலவை செய்து அனுப்புவதுதான் மிஷனரி ஊழியம். பெரும்பாலும் பரிதாபத்துக்குரிய, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளவர்களைத்தான் இப்படி ஊர் விட்டு ஊர் அனுப்புவார்கள்.
நல்ல வசதியுள்ளவர்கள் போகவே மாட்டார்கள், ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.. வசதிபடைத்தவர்கள் அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். மிஷனரியைத் 'தாங்குவார்கள்'.
ஆனானப்பட்ட பவுலே அக்காலத்து மெட்ரோசிட்டிகளில் ஏற்கனவே உள்ள சபைகளின் தரத்தை உயர்த்தத்தான் அத்தனை கடிதங்களை எழுதி அந்தந்த சபைகளைதான் விஸிட் செய்துகொண்டிருந்தான். படிப்பறிவில்லாதவர்களுக்கும், பாஷையே இல்லாத பழங்குடியினருக்கும், கிராமங்களுக்கும்போய் யாரும் சுவிசேஷம் சொல்லவில்லை. ஏனென்றால் வேதம் வாக்கியங்களை வாசித்தறியாமல் ஒருவனும் தேவதிட்டங்களை புரிந்துகொள்ளவே முடியாது என்பது அப்போஸ்தலருக்குத் தெரியும்.
'பிதாவானவர் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவினிடத்தில் வரவேஏஏஏஏஏ முடியாது' என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இல்லை.
ஆனால் இந்த முட்டாள் 'மிஷனரி'கள் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து மலைவாழ் பழங்குடியினரிடம் பழகி, (பாஷையே தெரியாது) அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை விளக்கிச்சொல்லி, பவுல் ரேஞ்சுக்கு அவர்களை உருவாக்கி அவர்களை பரலோகத்துக்குத் தகுதியாக்குவார்கள். அவன் பாட்டன், முப்பாட்டன், பூட்டனெல்லாம் விஷயமே தெரியாமல் செத்துட்டான்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்...
"ஹலோ என்ன பிரதர் வேதத்துக்கு விரோதமாகப் பேசுகிறீர்கள்? அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார்; இப்படிக் குதர்க்கமான கேள்விகளை கேட்கக்கூடாது. உலகமுழுவதும் போய் சுவிசேஷம் அறிவிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது... நான் சொல்லுவேன். இல்லாவிட்டால் இந்த 'ஆத்துமா' நரகத்துக்குப் போய்விடும்."
என்பார்கள்.
சரி பரலோகம் செல்ல வெறும் விசுவாசம் மட்டும் போதுமா என்றால்.
"விசுவாசம் அவசியம்தான் ஆனால் முடிவுப்பரியந்தம் நிலைநிற்கவேண்டும் அதற்கு ஞானஸ்நானம், ஆவிக்குரிய சபை, வரங்கள், ஊழியங்கள், பரிசுத்தமான வாழ்வு, அபிஷேகம்.... எல்லாம் வேண்டும்" என்பார்கள். 'நீதிமானே இரட்சிக்கபடுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே போவான்?' (நரகத்துக்குத்தான் இதென்ன கேள்வியோ?).
இன்னும் புரியாவிட்டால் மனக்கண்கள் மேற்படி "தேவனானவன்" மூலமாய் குருடாக்கப்பட்டுள்ளது என்பதை கன்ஃபார்ம் பண்ணிக்கொள்ளலாம்.
தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
அன்று படிப்பறிவு இல்லாதவர்களுக்கு போதித்தவர்கள் அப்போஸ்தலர்களிடமோ அல்லது அப்போஸ்தலர்கள் கைகளை வைத்து அனுப்பியவர்களிடம், சுத்தமான தெளிவான சுவிசேஷம் கிடைத்தது!! நாளடைவில் இந்த பிரபஞ்சத்தின் தேவனானவன் சுவிசேஷத்தை கள்ளத்தனமாக மாற்றியது கூட தெரியாமல் கிறிஸ்தவம் வளர்ந்தது!! கல்வி அறிவு விஞானம் பெறுக பெறுக வேதத்தை சுத்தமாக ஆறாய வாய்ப்புகளும் வசதிகளும் பெறுகியது!! தானியேலில் சொல்லப்பட்டிருக்கும் வசனம் நிறைவேறுகிறது!!
வேதப்புத்தகம் எத்துனை மொழிகளில் வந்தாலும் அதன் மூல பாஷையில் வாசித்து விளக்கங்களை புரிந்துக்கொள்ளும்போது தான் நரகம், மரணம், பாதாளம் போன்றவைகளின் அர்த்தம் புரியும்!! தம்ழில் எதற்கெடுத்தாலும் நரகம் என்று போட்டிருப்பார்கள், ஏனென்றால் அது மொழிப்பெயர்ப்பு மாத்திரமே!! மூல பாஷையில் (இதில் பலருக்கு அலர்ஜி இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது) பார்த்தால் தான் நரகம் என்றால் என்னவென்று தெரியும், புரியும்!!
அப்படி என்றால் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்றும் கேட்கலாம்!! சுமார் ஒரு 10 ஆண்டுகள் முன்பு இருந்த நிலையையும் இன்றைய நிலையையும் பார்த்தோமென்றால் அறிவின் வளர்ச்சி தெரிந்துக்கொள்ளலாம்!! வசனம் நிறைவேறி வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி!!
அப்போஸ்தலர் 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
ஆறாய்கிற விஷயம் ஏதோ இன்றைய சமாச்சாரம் அல்ல, அன்றே அதை செய்ததாக வேதமே சொல்லுகிறதே!! மிஷனரிகள் என்று தாங்கள் கற்றுக்கொண்டதை அப்படியே போய் கக்கி வருகிறார்கள், என்ன பிரயோஜனம்!! கிறிஸ்துவை அறிவித்தோம் என்று திருப்திக்கொள்கிறார்கள்!! அப்படி கற்பிக்கப்படுகிறார்கள்!! உண்மையை தேடும் வாஞ்சையும் இல்லை, அவர்களின் மூத்த ஊழியர் என்ன சொல்லுகிறாரோ, அதுவே அவர்களுக்கு வேதமாக இருக்கிறது!!
சகோதரர் சொன்னது போல் வசதிப்படைத்தவர்கள் மிஷனரிகளாக போவதில்லை, மிகசிலரை தவிர, மற்றவர்களெல்லாம் மிஷனரிகளை தாங்குகிறவர்களாக இருப்பவர்கள்!!