பிதா சொன்ன அனைத்தும் சத்தியம் என்பதால் கிறிஸ்து இயேசு சொல்லுவதை பாருங்கள், பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்!! பரிசுத்தமாக நான் பரிசுத்தவான், நான் பரிசுத்தவான் என்று மேடைக்கு மேடை சொல்லுவதினால் ஒருவன் பரிசுத்தவான் ஆவதில்லை, மாறாக பிதாவின் சத்தியத்தினாலேயே ஒருவன் பரிசுத்தமாகிரான்!!
மேலும் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார், உம்முடைய (பிதாவின்) வசனமே சத்தியம், என்று!! திரித்துவர்கள் சொல்லுவது போல் இருவரும் ஒருவர் தான் என்றால், "என்னுடைய வசனமே சாத்தியம்" என்றல்லவா இருந்திருக்கும்!! சரி போகட்டும் அவர்கள் வசனத்தினாலோ சத்தியத்தினாலோ பரிசுத்தமாவது கிடையாது, சுய அறிக்கையினால் பரிசுத்தம் என்கிற வேஷத்தை தரித்திருக்கும் கூட்டம்!!
பூர்வ காலத்தில் பிதா பூமியில் தான் நியமித்திருந்த தீர்க்கதரிசிகளின் வாயினால் வசனங்களை கொடுத்து வந்தார், ஆனால் அதையே கிறிஸ்து மாம்சத்தில் வந்த பிறகு, தேவன் தன் வார்த்தைகளை, வசனங்களை கிறிஸ்து இயேசுவின் மூலமாக கொடுக்கிறார் என்கிறது வசனம்!! மொத்தத்தில் கொடுக்கப்பட்டது பிதாவின் வார்த்தைகள், அது பூர்வகாலத்தில் தீர்க்கதரிசிகளின் வாயினால் வெளிவந்தது, கிறிஸ்து இயேசு மாம்சத்தில் வந்த பிறகு அது கிறிஸ்துவினால் வந்தது!! அன்று வேலைக்காரர்களை நியமித்திருந்த தேவன் இன்று தனது குமாரனையும் அவரின் சாயலில் உருமாற்ற ஒரு கூட்டத்தை தன் வசனத்தினால் பரிசுத்தம் செய்கிறார் தேவன்!! கிறிஸ்து சொன்னது ஒரு போதும் நான் என் சுயமாக எதையும் சொல்லவில்லை என்கிறார், எதையும் செய்யவில்லை என்கிறார்!! என்றால், இருவரும் ஒன்றானவர்களாக (இதில் மூவர் வேறு) என்று யோசிக்க வேண்டாமா!!
கிறிஸ்து தேவனின் வார்த்தைகளை எடுத்து சொல்லுவதினாலே அவருக்கு தேவனின் வார்த்தை என்கிற பெயரே இருக்கிறது!!
வெளி 19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
யார் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருக்க முடியும், கிறிஸ்துவா, பிதாவா!! கிறிஸ்து தானே, அப்படி என்றால் கிறிஸ்துவின் நாமம் தானே தேவனுடைய வார்த்தை!!
யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
அந்த வார்த்தையான கிறிஸ்து இயேசுவாக மாம்சத்தில் வந்தவர், சத்தியத்தினால் நிறைந்திருந்தார், ஏனென்றால் தேவனின் வார்த்தை அவர், நமக்குள் (அப்போஸ்தலர்கள், அன்றைய இஸ்ராயேலர்கள் மத்தியில்) வாசம்பண்ணினார் என்று யோவான் எழுதுகிறார்!! அவரின் மகிமையை கண்டதாக யோவான் எழுதுகிறார், அந்த மகிமை தேவனின் மகிமையாக இல்லாமல், அந்த மகிமை, பிதாவின் ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்ததாக வசனம் சொல்லுகிறது!! தேவனோடு இருந்த அந்த வார்த்தை தான் மாம்சமாக வந்தது என்கிறது வசனம், தேவனே இல்லை!!
ஒரே வார்த்தையான தீங்குக்கு பல அர்த்தங்களை தரும் சிலர், வெளிப்படுவதற்கும் வருவதற்கும் ஒரே அர்த்தம் தானென்றால் என்ன செய்வது, அது அவர்களின் புரிந்துக்கொள்ளுதலில், அவர்களை நடத்திய அத்நாஷியஸின் புரிந்துக்கொள்ளுதல்!!
தேவனின் தன்மைகள் கிறிஸ்து இயேசுவின் மூலமாக வெளிப்பட்டதை, தேவனே மாம்சத்தில் வந்தார் என்கிற தேவதூஷனம் போய், இப்பொழுது பல வேதம் சரியான மொழிப்பெயர்ப்பான "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்று சரியானதை எழுதுகிறார்கள்!! இது சும்ம இல்லை, இதற்கு ஜோடு, இனை வசனம் உண்டே!!
1 யோவான் 4:2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
மாம்சத்தில் வந்தவர் தேவன் அல்ல, மாறாக கிறிஸ்து தான், இதை தவிர மற்ற போதனைகள் அந்திகிறிந்துவின் பொதனை என்கிறார் யோவான்!! அத்நாஷியஸ் அப்படி பட்ட அந்திகிறிஸ்துவின் ஆவியில் ஏவப்பட்டு எழுதியது தான் அவரின் விசுவாசப்பிரமானம்!! ஆகவே தான் தாங்கலே அந்திகிறிஸ்துவின் ஆவியில் இருந்துக்கொண்டு இனி தான் அந்திகிறிஸ்து வருகிறான் என்று போதிக்கிறார்கள் அந்தி கிறிஸ்துவின் சீடர்கள்!!
நல்ல கோர்வையான விஷயத்தை பார்ப்போம்!!
கிறிஸ்து வார்த்தையாக தேவனிடத்தில் இருந்தார், கிறிஸ்துவையும் வேதத்தில் உள்ளப்படி தேவன் என்போம், ஆனால் பிதா என்கிற சர்வவல்லமையுள்ள தேவன் என்று இல்லாமல், ஒரு வல்லமையுள்ள தேவன் என்கிற நிலையில் அவர் அந்த தேவனோடு இருந்தார்!! இப்படி சொல்லுவதினால் பல தேவர்கள் கோட்பாட்டை சொல்லுவதாக இல்லை, ஏனென்றால் தேவன் என்கிற ஒரு வார்த்தையை உபயோகிப்பதினால் அவர்கள் அனைவரும் சர்வவல்லமையுள்ள தேவன் என்று ஆகாது!! ஏனென்றால்,
2 கொரிந்தியர் 4:4.........................இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
இப்படி பிசாசு முதற்கொண்டு தேவன் என்று வேதம் சொல்லுகிற அநேக தேவன் இருக்கும் போது அனைவரும் சர்வவல்லமையுள்ள தேவனா??
சரி, கிறிஸ்து தான் அந்த வார்த்தை, யோவான் 1:14ன் படி அந்த வார்த்தை, இயேசுவாக மாம்சத்தில் இந்த பூமிக்கு வந்தார்!! தேவன் வரவில்லை, வார்த்தையான கிறிஸ்துவே வந்தார்!! இந்த இயேசு தன் சுயமாக ஒன்றையும் செய்யாமல், சொல்லாமல் தன்னை அனுப்பியவரிடம் கேட்டு, பார்த்தே சகலத்தையும் செய்வதாக சொல்லுகிறார்,
யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
யோவான் 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
இதுக்கு எல்லாம் அத்நாஷியஸின் சீடர்கள் பதில் வைத்திருப்பார்களா!!??
ஆனால் அத்நாஷியஸ் முதல் இன்று தங்களை ஊழியர்கள் என்றும் ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு கூட்டத்தார்,
யோவான் 7:18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
தங்களின் சுயமாக பேசி, மனித ஆலோசனைகளை தந்து மனிதர்களை ஆறாய்ந்து வருகிறார்கள்!!
ஆனால் நமக்கோ கிறிஸ்து இயேசுவின் மூலமாக, "உமது வசனமே சத்தியம்" என்கிற அந்த சத்தியத்தின் மேல் வாஞ்சை இருக்கிறது!! நானே வழி என்கிற அந்தி வழியான கிறிஸ்துவின் மூலம் பிதாவிடத்தில் சேர வாஞ்சையாக இருக்கிறது!!
கிறிஸ்து சொல்லுகிறபடி, அவரின் பிதாவும் நம் பிதாவுமான யெகோவா தேவனின் வார்த்தைகளை கிறிஸ்து தந்தார், அந்த வார்த்தைகளே அந்த வசனங்களே சத்தியம்!! மற்ற அனைத்தும் மாயை, மாயை, மாயை!!!!
யோவான் 8:16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். 17. இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. 18. நான் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறார் என்றார்.
கிறிஸ்து இயேசுவிற்கு நியாயந்த்தீர்க்கும் அதிகாரத்தை தேவனே கொடுத்திருப்பதால் இந்த வசனத்தை இப்படி சொல்லுகிறார் கிறிஸ்து இயேசு!! கிறிஸ்து இயேசு அடிக்கடி பயன்ப்படுத்தும் ஒரு வார்த்தை "என்னை அனுப்பிய பிதா" என்று!! இந்த அறிவிப்பு ஒன்றே அவர் பிதா அல்ல, மாறாக பிதாவினால் அனுப்பப்பட்டவர் என்று தெளிவாக இருக்கிறது!! அத்நாஷியஸின் சீட ஜனங்கள் அனுப்பியவரே வந்தவர் என்று வாதிடுவதால் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகள், அதாவது கிறிஸ்து இயேசு சொல்லும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் சுயமான மனித போதனைகள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது!! கிறிஸ்து இயேசு சொல்லுகிறார், உமது வசனமே சத்தியம் என்று, அதாவது தேவனின் வார்த்தைகளை அனைத்தும் சத்தியமாக இருக்கிறது, அந்த சத்தியத்தை தான் கிறிஸ்து இயேசு சொல்லுகிறார், அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாதவர்களாக இருக்கிறார்கள், அத்நாஷியஸின் சீட ஜனங்கள்!!
இந்த வசனத்தின் மூலம் கிறிஸ்து இயேசு சொல்லுவது, நான் தனியாக இல்லை, நான் மூன்றாகவும் அல்ல, மாறாக நான் மட்டும் இல்லை, நானும் என் பிதாவும் என்று இருவராக இருக்கிறோம் என்கிறார்!! இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று கிறிஸ்து இயேசு சொல்லும் அந்த இரண்டு பேரில் ஒருவர் கிறிஸ்து இயேசு மற்றொருவர் பிதா!! இவர்கள் இருவராக இல்லாமல் ஒருவராக இருந்திருந்தால் இதை குறித்து இருவரின் சாட்சி என்று கிறிஸ்து இயேசு துனிச்சலாக ஒரு பொய்யை சொல்லியிருக்கமாட்டார்!! ஆனால் அத்நாஷியஸ் மற்றும் அவனின் சீட ஜனங்கள் அவர்கள் இருவர் அல்ல ஒருவரே என்று சொல்லி துனிச்சலான பொய்யை தந்திருக்கிறார்கள்!!
அவரே மேலும் தொடர்ந்து, அந்த சாட்சிக்காரர்களில் ஒருவர் நான் (கிறிஸ்து இயேசு) என்றும், மற்றவர் தன்னை அனுப்பின பிதாவும் என்று தெளிவாக சொல்லுகிறார், ஏனோ அத்நாஷியஸின் குருட்டு கண்களுக்கு இது தெரியவில்லை, எத்துனையோ கோடி ஜனங்களை குருடாக்கி விட்டிருக்கிறான்!! இத்துனை தெளிவாக, இருவரை (மூவர் என்று கூட கிறிஸ்து சொல்லவில்லை) குறித்து கிறிஸ்து இயேசு சொல்லியிருப்பது, அவரின் வார்த்தை உண்மையும் சத்தியமும் உள்ளது என்று நம்பும் நமக்கு தெளிவாக இருக்கிறது, ஏனென்றால் நாம் வசனத்தை சத்தியம் என்றும் அது தேவனிடத்திலிருந்து வந்தது என்று நம்புகிறோம், ஆனால் அவர்களோ அதை குறித்து குருடர்களாக இருந்துக்கொண்டு, கிறிஸ்து இயேசு இத்துனை தெளிவாக தானும் பிதாவும் இருவர் என்று சொல்லியும் அதை நம்ப மறுக்கிறார்கள்!! இவர்கள் இதற்கென்றே இருக்கவும் இருக்கிறார்கள், குருடர்கள் குருடர்களுக்கு வழிக்காட்டுபவர்களாக!!
இருவராக இருக்கிறார்கள் என்கிற சத்தியம் கிறிஸ்து இயேசு சொல்லியும் அதை கேட்க மனதில்லாதவர்களுக்கு என்னத்த சொல்ல!!