கிறிஸ்தவத்துக்கு வக்காலத்து வாங்கும் மேதாவிகளுக்கு....
ஒரே வேதம் ஒரே உபதேசம் என்று ஏமாற்றும் ஏமாற்றுக்கூட்டத்துக்கு...
ஒரே வேதம் என்று சொல்லிக்கொள்ளும் நீ அந்நிய பாஷை உண்டா இல்லையா என்று சொல், உண்டென்றால் அதை நீ வக்காலத்து வாங்கும் எல்லா சபைகளிலும் ஏன் பேசுவதில்லை? ஏன் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை யாருமே பேசியதில்லை?
ஒரே வேதம் என்று சொல்லிக்கொள்ளும் நீ ஞானஸ்நாம் குழந்தையிலா, முழுக்கா, தெளிப்பா என்பதில் ஏன் இத்தனை வேறுபாடுகள்?
இராப்போஜனம் தினமுமா, வாரமொருமுறையா, மாதமொருமுறையா, காலையிலா, மாலையிலா, அதற்கு அர்த்தம் என்ன, தகுதி என்ன?
மரணம் குறித்த உபதேசம் என்ன?
தசமபாகம், நகை அணிவது, முக்காடு போடுவது, வைத்தியம் தேவையா என்பது போன்ற விஷயங்களில் ஏன் உங்களிடையே உடன்பாடு இல்லை.. ஒரே வேதம்தானே?
உயிர்த்தெழுதல் யாருக்கு, பரலோகம் யாருக்கு, உங்களில் எத்த்னை பேருக்கு, (முழுநேர ஊழியக்காரன்கள்) உட்பட அப்.பவுல் போன்று என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லும் தைரியம் உண்டு?
அந்நிய பாஷை உண்டென்றால் எல்லா வேசி சபைகளிலும் பேச வேண்டும், இல்லாவிட்டால் அத்தகைய சபைகளை எதிர்க்கவேண்டும், இன்னும் விக்கிரக ஆராதனை செய்யும் ரோமன்கத்தோலிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்துதான் பாரேன். ஆக நான் கூட்டுக்களவானிகள் என்று சொன்னதற்கு நீங்களே சான்று.
இதைத்தான் வேதத்தில் வேசித்தனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சத்தியத்துக்குப் புறம்பாக எந்த சபை இருந்தாலும் அது வேசிதான், சத்தியமாகிய கிறிஸ்துவை பின்பற்றாமல் மனிதனால் கொண்டுவரப்பட்ட கோட்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது புருஷனான கிறிஸ்துவின் உபதேசத்துக்குக் கீழ்ப்படியாமல்; வேறு எவனுடைய உபதேசத்துக்கோ கீழ்ப்படிவது.
மஹா வேசித்தனம்....
செய்யுங்கள், அவள் கொடுக்கும் மதுபானத்தின் போதையிலிருந்து வெளிவர கிருபை வேண்டும்...
என்ன சகோதரரே, இப்படி கேட்டு விட்டீர்கள் கேள்வீகளை!!
பல குட்டைகளில் ஊறிய மட்டைகள் ஏதோ திரித்துவம் என்று வேதத்தில் இல்லாத ஒரு கருத்தால் ஒரே மாதிரி இருப்பதாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த மட்டைகளிடம் இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் எப்படி??
ஒருவன் குழந்தை ஞானஸ்நானம் உள்ள சபையில் ஒரு காலையும் மற்றோரு காலை இன்னோரு சாக்கடையில் வைத்துக்கொண்டு தான் கால் வைத்திருப்பதே இரண்டு வித்தியாசமான சாக்கடையில் தான் என்பதை கூட தெரியாமல் அவன் கொண்டிருக்கும் விபச்சார ஆவியினால் வசனங்களை விட்டு விட்டு, அந்தரங்கத்தை மாத்திரம் ஆறாய்ந்து எழுதுவதை பெறுமையாக நினைத்துக்கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஜால்ரா அடித்து, அவர்கள் தலைவனின் நாகரீகமான எழுத்துக்களை (!!) மறந்து அல்லது மறைத்து, அடுத்தவரின் எழுத்தை பூதாகாரப்படுத்தி கேள்வி கேட்பது மாத்திரமே தெரிந்திருக்கிறவன், தன்னை மெத்த படித்த மேதாவி என்று விளம்பரப்படுத்தி சொந்தமாக ஒரு கருத்தை எழுதமுடியாமல், வசந்தகுமாரை அப்படியே காப்பி அடித்து எழுதி என்னமோ பெரிய சாதனையை செய்தது போல் ஃபிலிம் காட்டுகிறான்!! அத்நாஷியஸ் ஏரியஸை குறித்து எங்கோ இருந்து பார்த்து எழுதியதை இன்னொருவர் ஏதோ இவர் சொந்தமாக எழுதியதாக நினைத்து அதை பாராட்டுகிறார்!! இது தானே இவர்களின் பொழுதுப்போக்கு!!
தீங்கு என்று எத்துனை வசனங்கள் கொடுத்தாலும், எவனோ தீங்கை குறித்து எதையோ கிறுக்கிவைத்ததை (இப்ப மட்டும் மூல பாஷை இவர்களுக்கு தேவைப்படுதாம்) ஒட்ட வைத்து, அது மாரல் தீங்கு இது இம்மாரல் தீங்கு என்று திரித்துவத்தை போல் வகையறுத்துக்கொண்டு விளக்கம் கொடுக்கிறாராம் இன்னோரு மெத்த படித்த மேதாவி!!
கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்புகிறார் என்கிறது வசனம், யோபுவை சோதிக்கும்படியாக சாத்தானுக்கு அனுமதி தருகிறார் தேவன், இப்படி எல்லாம் வசனங்கள் சொன்னாலும், இவர்கள் ஏதோ இவை எல்லாம் தேவனுக்கு கெட்ட பெயர் உண்டு பன்னும் என்று நினைத்து, அதற்கான எதிர் நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்!! கிறிஸ்தவத்துக்கூ மாத்திரம் அல்ல, விட்டால் தேவனுக்கு சட்ட ஆலோசனை (Legal Opinion) கொடுப்பார்கள் போல்!!
தேவன் அவர் செய்வதை அவரே அறிவித்திருக்கிறார், இவர்கள் என்னமோ அது அப்படி இல்லை, இது அப்படி இல்லை என்று கரடி விடுகிறார்கள்!! இவர்கள் திரித்துவம் என்கிறா ஒரு கயிற்றினால் கட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள், மற்றபடி இவர்கள் சொல்லுவது அல்லது சிந்திப்பது போல் சபை மாறி போக எல்லாம் இவர்களை நடத்தும் போதகர்கள் இவர்களுக்கு அனுமதி தர மாட்டார்கள்!! கேட்டால் இது என்னூடைய ஆடு, அந்த சபைக்கு போனால் கெட்டு போய் விடுமாம்!!
பேரின்ப பெருவிழா, அற்புதா விழா போன்ற விழாக்களில் இந்த சபையார் எல்லாம் ஒன்று சேருவார்கள், ஒரே மாத்திரி கூச்சல் போடுவார்கள், அதன் பின் அவர் அவர் சபைக்கு போய் மற்றவனை ஆடு திருடுகிறவன் என்பார்கள்!! எத்துனை வருடங்கள் இதை எல்லாம் நாமும் காணும்படி தேவன் நம்மை அப்படி பட்ட சபைகளில் வைத்திருந்தார்!! வருஷா வருஷம் பேரின்ப பெருவிழா வரும், வருஷா வருஷம் அதே சபைகளிலிருந்து கூட்டம் வரும், காணிக்கை போடும், ஆனால் வருஷா வருஷம் வரும் ஊழியக்காரன் (வேலைக்காரனாம்!!) மாத்திரம் வித்தியசமான வாகனங்களில் வருவானம்!! கேட்டால் வேலை வெட்டி பார்க்காமலே தேவன் இவர்களை ஆசீர்வதித்து புது புது வாகனங்களை வாங்க (எந்த உழைப்பில் வாங்குகிறார்களோ, வெட்கம்கெட்டவர்கள்) உதவி செய்தாராம்!! என்ன கொடுமை சார் இது!! ஆனால் அங்கே அந்த கூட்டங்களுக்கு வருபவர்கள் அதே ஆட்டோ, அதே பஸ்ஸில், அதே பைக்கில் வந்து, நமக்கு இவர்களை போல் ஆசிர்வாதம் கிடைக்காதா என்று இன்னும் கொஞ்சம் அதிகமாக காணிக்கை போட்டு செல்வார்கள்!! அது போல் ஆசீர்வாதம் வேண்டுமென்றால் கூட்டத்தில் பங்குக்கொள்பவராக வரக்கூடாது, கூட்டத்தில் பேச்சாளராக (ஊழியக்காரனாக) வர வேண்டும்!!
கிறிஸ்தவர்களே, உங்கள் தேவைகளை தேவனிடத்தில் கேளுங்கள், இடைதரகர்கள் எதற்கு தேவை!! உங்கள் பக்கத்து வீட்டில், உங்கள் தெருவில் தேவையில் இருப்போருக்கு அள்ளி தாருங்கள், ஏனென்றால் ஏழைக்கு இறங்குபவன் தான் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறானாம், பென்ஸ் காரில் வருபவனுக்கு கொடுப்பவன் ஏமாந்து நிற்க்கிறான் என்பது தான் மறுக்க முடியாத உண்மை!!
உங்கள் கேள்வி கனைகள் தொடரட்டும் சகோ ஆத்துமா அவர்களே!!