kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜோசஃப் பக்கம்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: ஜோசஃப் பக்கம்


//இடையான்குடி, நாசரேத், மெய்ஞானபுரம், பாலையங்கோட்டை, நாகர்கோவில், திருனெல்வேலி, மதுரை, வேலூர், சென்னை என பல இடங்களில் இன்னைக்கு கிறிஸ்துவை மக்கள் அறிந்ததுக்கு மிஷனரிகள் தான் காரணம். சீகன்பால்கு ஆரம்பகால முயற்சி எடுக்கவில்லையென்றால் இன்றைக்கு வேதம் நம் கையில் நிச்சயம் கிடைத்திருக்காது. இவர்களை நான் அளவுக்கு மீறி யெல்லாம் புகழவில்லை அவர்களை மதிக்கிறேன் அவ்வளவுதான், உங்களை போன்றவர்கள் இவ்வளவு மோசமாக தூற்ற அவர்கள் அப்படி என்ன செய்தார்கள். சுவிஷேஷ‌ம் அறிவிக்க‌வில்லை என‌ அபாண்ட‌மாக‌ சொல்லாதீர்க‌ள், அப்ப‌குதிக‌ளில் வாழும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கேளுங்க‌ள் அவ‌ர்க‌ள் சொல்வார்க‌ள் மிஷ‌ன‌ரிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள் என‌. இப்ப‌டி எதையுமே அறின்துகொள்ள‌ ம‌ன‌மில்லாம‌ல் எதையாவ‌து தூற்ற‌க்கூடாது.//

 

கிறிஸ்துவை அறிந்தார்கள் சரி என்னய்யா பிரயோஜனம். நீங்கள் சொன்ன ஊர்களில் அப்படியே பரிசுத்தம் பொங்கி வழிகிறதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. சீகன் பால்கு முயற்சியெடுக்கவில்லை என்றால் வேறு யாராவது எடுத்திருப்பார்கள்; வேதமே இல்லாமல் ஆயிரக்கணக்கான வருடங்கள் போனதே அவர்கள் கதி? யாரையும் தூற்றவில்லை. தலையில் வைத்துக்கொண்டாடும்படி ஒன்றும் செய்யவில்லை என்பதே நம் வாதம். 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பிரசங்கியாகவும் அப்போஸ்தலனாகவும் புறஜாதியானவருக்கு போதகனாகவும் நியமிக்கப்பட்டேன் என்று பவுல் சொல்லும் வசனத்தை காண்பித்திருக்கிறீர்கள் அப்ப புறஜாதியார் என்பவர்கள் பவுல் இருந்த காலத்தில் உள்ளவர்கள் தானா, அதுக்கப்புறம் உள்ளவங்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த நற்செய்தி தேவையில்லையா, நீங்க சொல்றபடி பாத்தா கிறிஸ்துவின் போதனைகள் அதிக பட்சம் 3ம் நூற்றாண்டோடவே ஆசியா மைனரிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளோடேயும் முடங்கி போயிருக்கும், உங்க கையில் நீங்க வச்சு பிரிச்சு மேஞ்சுகிட்டு இருக்கிற வேதம் கிடைத்தே இருக்காதே. இப்படி பைபிள் ஒரு சாராருக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கு என்ற பாணியில் நீங்கள் சொன்னால் அப்புறம் எதுக்கு சார் நீங்க அதை ஆராய்ச்சி பண்ணுறீங்க, அதனால யாருக்கு என்ன லாபம். எல்லாருக்கும் மீட்பு என்றால் எங்களோடு நீங்க மோதவேண்டியதே இல்லையே.//

என்னங்க டாக்டர் நீங்க!! ஒரு பதிவில் ஏதோ பரவாயில்லை நல்லா எழுதியிருக்கிறீர்களே, பரவாயில்லை என்று நினைப்பதற்குள் உங்களின் வழக்கமான வார்த்தைகள் வந்து குவிகிறதே!!

//உங்க கையில் நீங்க வச்சு பிரிச்சு மேஞ்சுகிட்டு இருக்கிற வேதம் கிடைத்தே இருக்காதே.//

அய்யா, உலகில் உள்ள எல்லா புறஜாதிகளிடமும் பவுல் நேரடியாக செல்லவில்லை, ஆனால் அவர் எழுதிய வார்த்தைகள் சென்றது என்பது தான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது!! பவுல் எழுதியது தான் முக்கியமே தவிர அதை யார் யார் எல்லாம் சுமந்து வந்தார்கள் என்பவர்கள் அவசியம் இல்லை!! அவர்களை தேவன் நிச்சயமாக பயன்படுத்தினார், சுவிசேஷர்களாக அல்ல மாறாக வேதத்தை சுமந்து செல்லும் கருவிகளாக, அவ்வளவே!! கூரியர் எடுத்து வருபவர் வேதாகம புத்தகத்தை டெலிவர் செய்கிறார் என்பதற்காக அவர் அப்போஸ்தலரோ, சுவிசேஷகரோ என்று அழைக்கப்பட முடியாது!!

வேதத்தை கத்தோலிக்கர்கள் முடக்க பார்த்தார்களே!! ஆனாலும் தேவன் அதை நிறைவேறவிடவில்லை!!

நாங்கள் வேதத்தை ஆராய்வது எங்களுக்காகவும், சத்தியத்தை விரும்புவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே!! தேவனை மகிமைப்படுத்தவே!! வேத புரட்டர்களை அடையாளம் காணவே!! நீங்கள் தான் மோதல் என்கிறீர்கள்!! எங்கள் விளக்கத்தில் நாங்கள் தேவனை மகிமைப்படுத்துவது உங்களுக்கு ஏனோ பிடிக்காததினால் அதை மோதல் என்கிறீர்கள்!! தேவன் எல்லாரையும் இரட்சிக்க வல்லவராக இருக்கிறார் என்றால், உங்கள் கிரியை நினைத்து (நான் இத்துனை பேருக்கு சொல்லுகிறேன், அவர் அத்துனை பேரை இரட்சிப்புக்குள் நடத்தினார்) மேன்மை பாராட்ட முடியாமல் போய் விடுமோ என்று அச்சப்படுகிறீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 //திரு சோல் அவர்களே, உங்களுடைய பழி வாங்கும் எண்ணம் நீங்கள் எந்தளவுக்கு கீழ்த்தரமானவர் என நினைக்கத்தோன்றுகிறது. என்ன சார், இதுவரைக்கும் நீங்கள் ரொம்ப நாகரீகமா எழுதி வந்திருக்கிற மாதிரி பேசுறீங்க. நீங்களும் உங்க சகாவும் கத்தொலிக்க சபையையும் மற்ற சபைகளையும் எவ்வளவு கேவலமாக தூஷித்து எழுதியுள்ளீர்கள் என்பதுக்கும் இந்த இணைய உலகமே சாட்சி. இதை எந்தெந்த சபை தலைவர்களிடம் எந்த மட்டத்தில் இதை கவனத்தில் கொண்டு செல்லவேண்டும் என்பதும் தெரியும். வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். மோத வேண்டும் என்றால் நேரடியாக சில்சாமுடன் மோதுங்கள், அதை விடுத்து 3வது ஆளை துணைக்கு கூப்பிட்டால் இது என்ன சார் டீசன்சி.//

நேரடியாக சில்சாமுடன் தான் மோதல். கூடிய சீக்கிரம் மதவாதத்தைத் தூண்டி மாற்றுமதத்தினர் மனதைப் புண்படுத்தும்படி பதித்த வேசிமார்க்கத்தான் என்ன ஆவான் என்று பார்க்கத்தான் போகிறீர்கள். மற்ற சபைகளையும் ஊழியர்களையும் விமரிசித்து கேவலமாக எழுதியது உங்கள் தளத்திலும் உள்ளது. திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான். சில்சாமுக்குப் பிடிக்காதவர்களை (சாதுஜி உட்பட) அவன் எப்படி விமரிசிக்கிறான் என்பது உங்களுக்கே தெரியும். போலிக்கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்கள் சங்கதி இன்னும் அம்பலத்துக்கு வரும்.

மூணாவது ஆளைத் துணைக்குக் கூப்பிடவில்லை, செருப்படி வாங்கினால்தான் சரியாவேன் என்று நிற்கும் பேர்வழிகளுக்கு அதைத்தான் செய்ய வேண்டும். கிறிஸ்தவம் பற்றிய தளத்தில் மாற்று மதத்தவர்களை தேவையில்லாமல் இழுத்தால் இதுதான் கதி. 'பாச்சா' வைப்பற்றி சீக்கிரம் தெரிந்து கொள்வீர்கள். ராணுவத்தை விமரிசித்து செருப்படி வாங்கி கொஞ்ச நாள் சும்மா இருந்தான்... பத்தாது போல‌...

நீங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள்.

இந்து முன்னனி சகோதரர்களுக்கு மட்டும் நீஙகள் பதில் சொன்னால் போதும்... செய்தி சீக்கிரம் வரும்.

டீசன்ஸி பற்றி உங்கள் தலைவன் பதிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.



-- Edited by soulsolution on Saturday 27th of August 2011 10:53:45 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அது என்ன சோல் சார், இந்து மதத்தை சேர்ந்த வெள்ளைக்கார மிஷனரிகளுக்கு இந்தளவுக்கு கரிசனையுள்ளவர், கிறிஸ்தவ மிஷனரிகளை விஷனரிகள் என்றீர்களே, இதுக்கு உங்க வீடு தேடி வர அந்த மிஷனரிகள் உயிருடன் இல்லை ஆனால் தேவன் உங்களை நிச்சயம் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் அதை பார்க்கத்தான் போகிறோம். //

அடடா, டாக்டர் சார், உங்கள் தலைவர் எழுத்தை கருப்பு கண்ணாடியை மாட்டிக்கிட்டு தான் வாசிப்பீர்களோ அல்லது பார்க்காமலே தாண்டி விடுவீர்களா!! அந்த சர்ப்பத்தை கிறிஸ்துவின் சபை தன் காலின் கீழ் போட்டு மிதிக்கும்!! அந்த சர்ப்பம் எழுதியது:

 

வேல் வேல் வெற்றி வேல்

வேல் வேல் வீர வேல்..!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//And he said, My son shall not go down with you; for his brother is dead, and he is left alone: if mischief befall him by the way in the which ye go, then shall ye bring down my gray hairs with sorrow to the grave.

போனதுக்கு அப்புறம் ஹதம் ஹதம், எல்லாம் முடிந்தது என சொல்லும் நண்பர்கள், மேலே உள்ள வசனத்தில் யாக்கோபு நரை மயிரை சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்க பண்ணுவீர்கள் என்கிறாரே. லாஜிக்கலாக பார்த்தாலும் ஒண்ணுமே யில்லாம போனப்புறம் அஃதாவது நம்ம சோல் அண்ணாச்சி சொல்றமாதிரி he cease to exist என ஆனபிறகு எப்படி நரைமயிர் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கும். அப்புறம் சவுல் வேண்டிக்கொண்டெ போது சாமுவேலின் ஆவி வந்ததாக வருகிறதே, இப்படி பல ஆச்சரியங்கள் நம் நண்பர்களுக்கு இருக்க இவர்கள் ஹதம் ஹதம் என போன கேசை மங்களம் பாடி முடித்துவைக்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!//

எல்லாம் முடிந்தது என்று நான் சொல்லவில்லை டாக்டரு, வேதம் சொல்லுது. ஏன் உன் வேசிமார்க்கம் பிரசிங்கியின் புத்தகத்தை ஒரு நாத்திகன் எழுதினான் என்று சொல்லிக்கொடுக்கிறதா? எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது. மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல. 

ஒன்றும் தெரியாமல் பெரிய்ய இதைக் கண்டுபிடித்தமாதிரி கொக்கரிக்கக் கூடாது. முட்டாள் டாக்டரே Grave    என்பதற்கு என்ன அர்த்தம் என்று மெத்தப்படித்த மேதாவியான உமக்குத் தெரியாதோ? 

சாகும்போது சஞ்சலத்தோடே சாவேன் என்பதுதான் அர்த்தமேதவிர, செத்தபின் சஞ்சலம் என்று உன் வேசிமார்க்க‌ உபதேசிகள் சொல்லித்தந்தார்களா? இதே எபிரேய "ஷியோல்" sheol தான் இங்கு 'கல்லறை' என்றும் அநேக இடங்களில் 'நரகம்' என்றும் சாதுர்யமாக மொழி பெயர்க்கக்ப்பட்டுள்ளது, "நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்." இந்த இடத்தில் நரகத்தில் இறங்கப்பண்ணுவீர் என்றால் விவகாரமாகிவிடுமே.

தமிழில் ஒரு விவகாரமான வார்த்தை 'பாதாளம்'. பாதாளம் என்றால் பல்லாயிரம் அடி ஆழ பள்ளம் அங்கு அக்கினி எரியும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள், பாதாள சாக்கடையை சற்று யோசிக்க வேண்டும், பாதாள ரயில் என்ன அக்கினி எரியும் நரகத்துக்கா போகிறது. முதலில் பாதாளம், நரகம் என்றால் என்ன என்று ஒரு முடிவுக்கு வாருங்கள். 

எசேக்கியேல் 28:18 உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

சாத்தானை அழித்து சாம்பலாக்குவாராம் மனிதர்களை நரகத்தில் வேதனைப்படுத்துவாராம்.

G   R   A   V   E    -GRAVE என்றால் கல்லறை...

புரிஞ்சிதா?

போ போயி முட்டிக்க‌...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அப்புறம் போனப்புறம், பாத்தியா, ஓடிட்டான், எப்படி துரத்தினோம் பாத்தியளா என கொக்கரிப்பது.//

 

யாக்கோபு 4:7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இவர் பேசுறதயெல்லாம் பேசிவிட்டு கடைசியில் நான் பேசுவதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் அப்படிம்பார். மத்தவங்க இவரை பேசுறது மாத்திரம் ஊசியால் குத்துவது போல் இருக்கும். //

அந்த பண்பு இருக்கிறதே!! அதை கூட இல்லாமல் அல்லவா இருக்கிறார்கள் அநேகர்!! நீங்கள் உண்மையில் படித்தவர் தான் என்றால் சகோ சோல் எழுதியதை ஒர் பக்கத்திலும், உங்கள் தலைவர் சில்சாம் எழுதியதை இன்னோர் பக்கத்திலும் வைத்து வாசித்து பாருங்கள்!! அதன் பின் ஒரு முடிவிற்கு வரலாமே!!

//தமிழ் கிறிஸ்தவ தளத்தில் தனது குப்பைகளை அள்ள மறந்து ஒருவர் ஓடினார், தள நிர்வாகிகள் வாக்குவம் கிளீனர் வைத்து சுத்தம் செய்தனர். ஓடினப்புறம் ஐயோ வடை (குப்பை) போச்சே என ஒப்பாரி வைத்தார்.//

அதானே, வசனங்களை குப்பை என்று சொல்லும் அளவிற்கு தரம் கெட்டு இருக்கிறீர்கள்!! தமிழ் கிறிஸ்தவ தளத்தை நட‌த்துவோர்க்கு துளி அளவிற்கும் இங்கிதம் கிடையாது!! அதன் நிர்வாகி யாராக இருந்தால் எனக்கு என்ன!! ஒருவர் என்னத்தை தான் எழுதினால் என்ன, அதை அகற்றும் முன் சம்பந்தப்பட்டவரிடம் நீக்கிக்கொள்ளும் படியாக ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் நீக்கும் அளவிற்கு இருக்கும் ஒரு நிர்வாகி நிச்சயமாக சாடிஸ்ட் குணம் படைத்தவராக தான் இருக்க முடியும்!! ஒருவனின் படைப்பை கூட மதிக்காமல் இருப்பது அவர்களின் மண்டைக்குள் இருக்கும் போதனை தான்!! தன்னை பரிசுத்தவான் என்றும் பிறரை பாவிகள் என்று எண்ணும் அவர்களை விட ஒரு பெரிய குப்பை தொட்டி இருக்க முடியாது!! நீரும் அதே குப்பை தொட்டியின் ஒரு குப்பை பகுதி தான்!!

கிறிஸ்தவர்கள் தானே என்று நினைத்து கேட்டேன், பிறகு தான் தெரிந்தது அது எப்படி பட்ட கூட்டம் என்று!! ஒப்பாரி வைக்கவில்லை டாக்டர், என் படைப்புக்களை தாருங்கள் என்று தான் கேட்டேன்!! அதை திருப்பி தர துப்பில்லாத திருடர்கள் தான் அந்த நிர்வாகிகள்!! அவர்களிடம் கண்ணியத்தை எதிர்ப்பார்த்தது என் தப்பு தான்!! ஆனால் தேவன் எனக்கு இப்படி பட்ட ஒரு இலவச தளத்தை காண்பித்துக்கொடுத்தது அதற்கு பிறகு தான்!! இப்படிபட்ட‌ ஒரு குப்பையான தளமும் இருக்கிறது என்பதை காட்டவே அங்கே அழைத்து சென்றிருக்கிறார் என் தேவன்!! அங்கே குப்பையானவர்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டவே என்னை அது போன்ற குப்பை தொட்டிக்கு கூட்டி காண்பித்து வந்திருக்கிறார்!!

ஆனால் நீங்கள் குப்பை கிளறி விடுவதையும் தொழிலாக வைத்திருக்கிறீர் போல்!!

//இவர்கள் கையில் உள்ள வசனம் வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு, இவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்திருந்தால் இப்படி வசனங்களை புரட்ட மாட்டார்களே, எல்லாத்துக்கும் மேலாக இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்றுக்கொண்டிருப்பார்களே. சுவிஷேஷம் அறிவிப்பது அவசியம் என உணர்ந்திருப்பார்களே. //

அமா, எங்க கையில் இருக்கும் வசனம் உங்களுக்கு முள்ளாக தான் தெரியும்!! எங்க கையில் என்று இல்லை, வச்னங்கள் என்றாலே உங்களுக்கு அப்படி தான், ஏனென்றால் மிஷனரிகள் எழுதியது தான் உங்களுக்கு வேதவக்கு!! டாக்டர் ஐய்யா, நீங்கள் சொல்லுவதால் எல்லாம் சரி என்று நினைத்து விடாதீர்கள்!! இது கொஞ்சம் அதிகமாக படித்த அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு தான்!! உங்களுக்கு தேவன் யார் இயேசு கிறிஸ்து யார் என்று தெரியாத அளவிற்கு புத்தி மங்கி போய் விட்டது!!

II யோவான் 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

2 John 1:9 Anyone who runs ahead and does not continue in the teaching of Christ does not have God; whoever continues in the teaching has both the Father and the Son.

BOTH என்றால் டாக்டருக்கு புரியும் என்று நினைக்கிறேன்!! உங்கள் உணர்வு எல்லாம் "மிஷனரிகள்" மூலமாக தானே வந்தது, அப்படி தான் இருக்கும்!! நீங்கள் தொழுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, கிறிஸ்த்துவால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லுவதே உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது!! உங்கள் அனைவருக்கும் ஒர் ஆனவம் இருக்கிறது!! அதாவது நீங்கள் மிகவும் பரிசுத்தம் உள்ளவர்கள் என்கிற ஆனவம்!! உங்கள் சிந்தனையில் ஓடும் விஷயம் என்னவென்றால், எல்லாரும் இரட்சிக்கப்பட்டால் எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான்!! உங்கள் இருதயங்களில் அன்பு அல்ல, துவேஷமே தலைவிரித்து ஆடுகிறது!! சுவிசேஷம் என்று நீங்கள் சொல்லுவது ஒரு பெரிய பொய் மூட்டை!!

//நீயெல்லாம் அழிவை குறித்து பிரசங்கித்து 8 பேர் தானே உன்னை சேர்த்து தப்பிச்சாங்க என நோவாவையே நக்கலடிப்பார்கள். இவர்களை சொன்னால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.//

வேதத்தில் அப்படி தானே இருக்கிறது!! நான் உங்களை சொன்னால் அல்லது நீங்கள் பார்க்கும் வேலையை எழுதினால் எழுதுங்கள்!! யாரோ எழுதுவிட்டு போவதை வேதம் என்று குதிப்பதினால் தான் என்னத்தை எழுதுகிறோம், என்னத்தை புரிந்திருக்கிறோம் என்கிற அறிவில்லாமல் பேத்துகிறீகள்!! பொத்துக்கொண்டு வந்தால் ஒட்டவைத்துக்கொள்ளுங்கள், பொத்துக்கொண்டு வராது!!

நீங்கள் கும்பிடும் தெய்வம் எல்லா மனிதர்களையும் இரட்சிக்க வல்லமையில்லாதவர் என்று சொல்லுவதே நீங்கள் எப்படி பட்ட தேவனை தொழுதுக்கொண்டு இருக்கிறீர்களோ!! வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் கிறிஸ்து இயேசு அனைவரையும் இரட்சிக்க வல்லமையுள்ளவர்!! ஆனால் அவர் பெயரில் வந்த பல கள்ள கிறிஸ்துக்களின் உபதேசத்தில் கவரப்பட்டு நாங்கள் தொழும் தெய்வத்துக்கு எல்லாரையும் இரட்சிக்கும் வல்லமை கிடையாது என்று மார்த்தட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்!! சபாஷ்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//உலகப்பிரகாரமான வங்கி அதிகாரி பணிக்கும், ராணுவ வீரர் பணிக்குமே இந்த குதி குதிக்கும் போது, யாரால் நாம் சத்தியத்தை அறிந்துகொண்டோமே அந்த தியாக செம்மல்களை களங்கப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்களுக்கு வரும் அதே கோபம் நமக்கும் வரும். அவர்களை பகடி செய்வது அவர்களை அனுப்பியவரை பகடி செய்வதாகும். சி.டி ஸ்டட், டேவிட் லிவிங்ஸ்டன், ஹட்சன் டெய்லர் போன்றோர் அரைகுறை அர்ப்பணிப்போடு போயிருந்தால் இந்தளவுக்கு பெரிய காரியங்களை செய்திருக்கமுடியாது. மனந்திரும்புகிற 1 ஆத்துமாவை குறித்து பரலோகமே  சந்தோஷம் அடைகிறது என சொன்னால் 99 பேரை குறித்து கேட்பார்க. ஒருத்தன் ரட்சிக்கப்பட்டது ஒரு பெரிய விஷயமா என்பார்கள். என்ன சொன்னாலும் சரி, மிஷனரி பணி இவர்களுக்கு பெரிய இடறல் தான்.//

நீங்கள் 'சத்தியத்தை' அறிந்துகொண்ட லட்சணம்தான் தெரிகிறதே. அரைகுறையாக சத்தியத்தைக் கேட்டதனாலதான் அறைகுறை மிஷனரிகள் தாங்களறிந்த அரைகுறை சத்தியத்தை உங்களுக்கும் சொல்லி தேவன் அரைகுறையாகத்தான் ரட்சிப்பார் என்று ஒரு அரைகுறை சுவிஷேசம் சொல்லிவருகிறீர்கள். அவர்களை அனுப்பியது சத்தியமாக தேவன் அல்ல என்று தீர்மானமாகச் சொல்லமுடியும். அனுப்பப்பட இவர்கள் அப்போஸ்தலர்களா? 

பிதா யார் குமாரன் யாரென்று விவரிக்கத்தெரியாதவர்கள், மரணம் பற்றி கேட்டால் காததூரம் ஓடுபவர்கள், இல்லாத நரகத்தை உருவாக்கி அதில் மனிதர்களை வாதிக்கும் ஒரு கொடூரவாதியாக தேவனைச் சித்தரிக்கும் பணியை கண்டிப்பாக விஷ நரிகளே செய்யும். சுவிசேஷம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் மிஷனரிகளாம். அவர்களைத் தூக்கி வைத்துக்கொண்டாட ஒரு விசிறிகள் கூட்டம். மிஷனரிகள் வந்து வேசிமார்க்கத்தைத்தானே பரப்பிவிட்டுப் போனார்கள். 2000 சபைகளில்  2000 வித போதனைகள். சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லை. இவர்களிடம் இருக்கும் ஒரே ஒற்றுமை தேவனைக் கூறுபோட்டு மூன்றாக விற்பது ஒன்றே. ஸ்டட், லிவிங்ஸ்டன், டெய்லர் கிழித்த கிழியில்தான் இன்று கிறிஸ்தவம் உலகெங்கும் பரந்து விரிந்து நாறிக்கொண்டிருக்கிறது. 

//அவ்வளவு உணர்வு (சொரணை) உள்ளவர்கள் மிஷனரிகளை விஷனரிகள் என சொல்லி களங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும், மற்ற சபையினரை வேசி மார்க்கம் என சொல்வதையும் விடவேண்டும். செய்வார்களா?//

வெளி 14:8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.

வெளி 17:5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

வெளி 18:2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.

வேசிகளுக்குத் தாய் என்று சத்தியமறியாத போலிக் கிறிஸ்தவத்தைத்தான் குறிக்கிறது. மிஷனரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல‌.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//துன்மார்க்கன் அழிந்து, இல்லாமல் போனால் அப்போ நியாயதீர்ப்பு என்பது யார் யார் எந்த கோர்சில் சேர்வது என்ற கவுன்சிலிங்காக இருக்குமோ?//

 

அட மூடர்களே மரித்தவன் உயிர்த்தெழுந்த பின்னர்தான் நியாயத்தீர்ப்பு என்பதுகூடத் தெரியாமல் உங்களை மெகா காமெடிக் கிறிஸ்தவர்களாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறீர்களே வெட்கமாக இல்லை?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

// விங் கமாண்டர் சார். எல்லாருமே மண்ணுக்கு திரும்பும்போது, எதன் அடிப்படையில் ராஜ்யத்தில் கற்றுக்கொள்வார்கள் என்கிறீர்கள். ராஜ்யத்தில் கற்றுக்கொள்ளும் வரை எங்கே இருப்பார்கள். செயல்படாத நிலை என்பது சரீரம் செயல்படாத நிலை தான், மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட சரீரம் மண்ணுக்கு திரும்புகிறது. அழியத்தொடங்கும் சரீரங்களால் யோசனைகளை செயல்படுத்த முடியாது.//

மீண்டும் முட்டாள்தனம்.... எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்ற செய்தியே  உம் மூளைக்கு போகவில்லையா? 

//வேதத்தில் இல்லாத வார்த்தையை குழப்புகிறோம் என்கிறீர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயதீர்ப்பையும் நரகத்தையும் உங்களுக்கு அலர்ஜியாதலால் மறுக்கிறீர்கள். 

40 Therefore as the tares are gathered and burned in the fire, so it will be at the end of this age. 41 The Son of Man will send out His angels, and they will gather out of His kingdom all things that offend, and those who practice lawlessness, 42 and will cast them into the furnace of fire. There will be wailing and gnashing of teeth. //

 நியாயத்தீர்ப்பு என்பது பற்றி தெளிவாக பதித்தாயிற்று. உம்ம்ய்டைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும்போது பூச்சக்கரத்துக் குடிகள்  நீதியைக் கற்றுக்கொள்வார்கள் ஏசாயா26:9.

நியாயத்தீர்ப்பு நாள். ‍கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடம்.....

மேற்கண்ட உமது வசனம் ஒரு உவமை. நெருப்பில் பதர் எரிந்து அழிந்துதான் போகும். நெருப்பில் அழுகை, பற்கடிப்பு....???

//களஞ்சியங்களை கட்டி வைத்தவனிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது எது, அழிந்து போகும் ஆத்துமாவா? தேகத்தை விட்டு பிரிந்து ஆண்டவரோடிருக்க ஆசை என பவுல் ஏன் சொல்லவேண்டும் என்ன சார், உங்க கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கிறதே!//

 

ஆத்துமா எடுத்துக்கொள்ளப்பட்டால் என்றால்,  நீ செத்துவிட்டால் என்பதுதான் அர்த்தம்.

எல்லோருக்கும்தான் அதே ஆசை. இங்கு ஆத்துமா எங்கிருந்து வந்தது?

//நீங்க‌ ரொம்ப‌ மென‌க்கெட்டு மேற்கோள் காட்டிய‌ பிர‌ச‌ங்கியில் க‌டைசி வ‌ச‌ன‌த்தில் இப்ப‌டி இருக்கிற‌தை க‌வ‌னித்தீர்க‌ளா? அனைத்தையும் நியாய‌த்தில் கொண்டு வ‌ன்து நிறுத்துவார் என்று தானே சொல்லியிருக்கிற‌து. தீமையை செய்து ம‌ரித்த‌வ‌ரும் நியாய‌த்தில் த‌ன‌து கிரியைக‌ளுக்கு க‌ண‌க்கு ஒப்பிவிக்க‌ வேண்டும் என்ப‌து நிச்ச‌ய‌ம‌ல்ல‌வா, அப்புற‌ம் எப்ப‌டி ஆத்துமா அழியும் என்கிறீர்க‌ள். //

மீண்டும் முட்டாள்தனம். உயிர்த்தெழுந்தபின்ன்ரெ நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தமுடியும். செத்தவனிடம் யாரய்யா பேசுவார்கள்?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஒவ்வொரு மூச்சும் இதயத்துடிப்பும் அவரது கன்ட்ரோலில் இருக்கும் போது அவர் சிந்திய ரத்தம், அளித்த மீட்பை அடுத்தவருக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது, இவ்வளவு விலையேறப்பட்ட மீட்பை குறித்து அசட்டையாகவும் இருக்க முடியாது.

ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம், அதான் எல்லாருக்கும் மீட்புங்கறீங்கல்ல அப்ப நாங்களும் எப்படியோ (ராஜ்யத்தில் கற்றுக்கொண்டு) மீட்பை கண்டடைவோம்.ஆனால் நீங்கள் நம்புவது மட்டும் தவறாக இருப்பின், கொஞ்சம் யோசித்து பாருங்கள். 

நீங்க எங்கமேல இவ்வளவு கோபப்படுவது ஏன் (அஃதான் நாங்களும் மீட்பை கண்டடையும் போது).//

பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவினிடத்தில் வரமாட்டான்  என்ற ஒரு குழப்பமில்லாத வசனம் புரியலையா? 

எல்லாருக்கும் மீட்பு என்பது வேத சத்தியம். இதைப் புரிந்துகொண்ட பின்பும் முட்டாள்தனமாக 'அடுத்தவருக்கு' அளித்து என்ன பயன்? நாங்கள் கோபப்படுவது உபதேச விகற்பங்களுக்குத்தான். ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவுக்கு நிகர் வைப்பது தேவதூஷணம். ஒரு வேளை ராஜ்ஜியத்தில் எங்களுக்கு மீண்டும் உங்களூக்கு போதிக்க வேண்டி வரலாம். அதற்கான பயிற்சியாக இருக்கலாம். நாங்கள் நம்புவது தவறு என்பதற்கான எந்த வேத ஆதாரமும் இல்லை. ஏனென்றால் "ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்படைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது"

இங்கு "ஒரே" என்றால் "ஒரே"தான். 

நியாயத்தீர்ப்பின்போது வெட்கித் தலைகுனிவீர்கள் நண்பர்களே...

நரகம் என்ற ஒரு வார்த்தையே வேதத்தில் இல்லாதபோது தேவனை எவ்வளவு கொடூரமானவராக சித்தரித்தோமே, எல்லாரையும் இரட்சிக்கும் அவரது வல்லமையை துச்சமாக எண்ணினோமே என்றெல்லாம் எண்ணி எண்ணி...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சில்சாம் கேலிக்கூத்து//அரசாங்கம் தனது மக்களுடைய நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கிறது;உதாரணமாக முதியோர் பென்ஷன் திட்டத்தை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டிலுள்ள அத்தனை முதியோருக்கும் மாதாமாதம் 1000 ரூபாயை எடுத்துக்கொண்டு போய் கொடுக்கிறதில்லை; மாறாக திட்டத்தை ஊடகங்களின் மூலம் அறிவிக்கும் அரசாங்கமானது தேவையுள்ளவர்களின் விண்ணப்பத்தைக் கோருகிறது;அதில் தரப்படும் தகவல்களின் அடிப்படையில் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதாமாதம் பென்ஷன் உதவியை அரசாங்கம் வழங்குகிறது.//

முட்டாளின் மூடத்தனமான விளக்கம் இது. அனைவருக்கும் பென்ஷன் என்றால் அனைவருக்கும்தான். கேள்விப்பட்டு விண்ணப்பித்த ஒருசிலருக்குமட்டும் பென்ஷனாம், கேள்விப்படாத முதியோர்களுக்கு ஆயிரம் கசையடியாம். ஒரு ஆள் பாக்கியில்லாமல் சென்சஸ் எடுக்க முடியுமானால் எல்லாருக்கும் பென்ஷன் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகிறது. அதைச் செய்யத் துப்பில்லாத அரசாங்கம் கையாலாகாத அரசாங்கமாகும். 

 

நீங்கள் தொழும் ஆண்டவரால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்று நீங்களாகவேதான் பறைசாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். தேவனைக் கையாலாகாதவராக கோடா கோடி ஜனங்களை நரகத்திற்கு அனுப்பும் "சர்வ வல்லவராக" இராஜாதி இராஜாவாக, இரட்சிக்கக் கூடாதபடிக்கு என் கை குறுகிவிட்டதோ என்று பொய் சொல்லுபவராகவே இவர்கள் நம்பிக்கொண்டும் சித்தரித்துக்கொண்டும் இருக்கிறார்கள். பரலோகத்துக்கு முன்குரிக்கப்பட்ட சிறுமந்தையாகிய கிறிஸ்துவின் சபைக்கு கூறப்பட்ட வசனங்களை இவர்கள் 'உலகத்துக்கு' கொண்டு சென்று உலகத்தை பரலோகத்துக்கு கூட்டிப்போவார்களாம். மனிதன் உயிர்த்தெழுந்து பூமியில் நித்தியத்துக்கும் வாழ்வான் என்ற நற்செய்தி இவர்களுக்குக் கசக்கிறது. இல்லாத நரகத்துக்குப், போகவே முடியாத மக்களுக்கு இவர்கள் பயமுறுத்தி நற்செய்தி அறிவித்துக் காப்பாற்றுவார்களாம். ஏதோ தேவன் இந்தத் தாந்தோன்றிகளை நம்பித்தான் ஜனங்களை இரட்சிப்பார் என்று காமெடியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தேவன் நகைப்பார்....

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//josephsneha Wrote@tcs on 19-09-2011 13:38:15:
உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் தொடர்வது வேதனையாக இருக்கிறது, இருவருமே சென்சிட்டிவான விஷயங்களை தவிர்க்கலாமே. வார்த்தை பிரயோகங்களும் கூரிய பட்டயங்களாக உள்ளன. சகோதரர் கொல்வின், சில்சாம் மூலமாக தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைப்பதாக அந்த வயக்காட்டு கோமாளிகள் சொல்லிக்கொண்டு போகட்டுமே, பலர் தங்களது இணையபக்கத்தை விசிட் செய்துள்ளனர் என்பது அவர்களுக்கு என்னமோ சாதகமாக தெரியலாம். அவ்வாறு வருவோர் நாளை இவர்களை போன்ற ரசலின் ஏஜண்டுகளை காலில் கிடக்கும் செருப்புடன் வரவேற்றார்கள் என்றால் நல்லது தான். மாறாக இவர்களது தளத்திற்கு வருவோர் மனம் குழம்பி இவர்களின் ஏ.சி ரூமுக்கு சென்றால் தான் பிரச்சனை. விளம்பரம் என்பது பொதுப்படையான வார்த்தை நண்பரே. விளம்பரம் என்பது இவர்களது வஞ்சகத்தை தோலுரிப்பதாகவும் இருக்கலாம் அல்லவா, வேதத்தின் மீது எனக்கு அதிக வாஞ்சை ஏற்பட்டதே இவர்களை போன்ற வஞ்சகர்களால் தான்.//

எங்கோ ஒரு இடத்தில் இந்த தளம் விமர்சிக்கப்படுகிறது!! நல்லது!!

ஜோஸப் அவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்!! இங்கே யாரும் யாரையும் தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்!! இங்கே வருவோர் இதை பின்பற்றுங்கள் என்றும் நாங்கள் ஒரு போதும் சொல்லுவதில்லை, ஏனென்றால் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும்கிரிஸ்துவிடம் சேர முடியாது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் அறிந்திருக்கிறோம்!! இங்கே கூட்டம் வந்தாலும் சரி, வராமல் போனாலும் சரி, எங்கள் எழுத்து நியமிக்கப்பட்ட காலம் வரை நிச்சயமாக வெளிவரும்!! இங்கே எழுதுவது எங்களை மெறுகேற்றுவதற்கே, வசனங்களில் இன்னும் தேர்ச்சி பெருவதற்கு தேவன் எங்களுக்கு இப்படி பட்ட ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கிறார் என்றே நாங்கள் நினைக்கிறோம்!!

நாங்கள் ஏ.சி ரூம் வைத்திருக்கும் அளவிற்கும் இல்லை என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்!! எங்கோ யாரையோ எப்படியோ பார்த்து விட்டு எங்களை விமர்சிப்பதில் ஒரு நியாமும் இல்லை!! எங்களால் உங்களுக்கு வேதத்தின் மீது வாஞ்சை வந்தது என்றால் எங்களை தேவன் உங்களுக்கு என்று ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கிறார் என்றே நாங்கள் சொல்லுவோம்!! மேலும் வஞ்சிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா,

1. இல்லாத திரித்துவத்திற்கு ஒரு விளக்கத்தை வைத்துக்கொண்டு அதை வேதத்தில் தேடுவார்கள்!!

2. இயேசு கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தார், ஆனாலும் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது!!

3. ஆவியில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை மாம்சத்தில் இருப்பதாக சித்தரிப்பார்கள்!!

4. வைத்திருக்கும் திரித்துவம் என்கிற தியரியை நிரூபிக்க இயேசுவே பிதா என்பார்கள்!!

5.  காணக்கூடாத தேவனை தினமும் பார்த்து பேசுவதாக கதை விடுவார்கள்!!

இன்னும் நிறைய இருக்கு......................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard