அன்பு அவர்களின் மகனுக்கு எம் தள அங்கத்தவர்களின் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் தங்களின் திருமண வாழ்த்துதள்ளைகளை தெரிவித்துக்கொள்கிறோம். சர்வவல்லமை உள்ள தேவனாகிய யெகோவாவின் நாமத்தினாலும் அவரின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை என்றும் உங்களுடன் இருக்கவும், சகல ஆசிர்வாததாளும் நிரம்ப செய்து வாழ வாழ்த்துகிறோம்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
சகோதரர் அன்புவின் மகனுக்கு திருமண வாழ்த்துதல்கள். சதாகாலமும் தேவன் தாமே இந்த தம்பதிகளுக்கு துணை நிட்பாராக!!! தேவனின் சித்தம் நிறைவேற வாழ்த்துதல்கள். நன்றி
bereans wrote:
வருகிற மே மாதம் 4ம் தேதி நம் அன்பர் அன்பு அவர்களின் மகனின் திருமணம் நாஸரேத்தில் நடைபெற இருக்கிறது, அதற்கான அழைப்பும் அவர் தந்திருக்கிறார்!!
இந்த தளத்தில் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களையும் தெரிவிப்போருக்காக இந்த திரி துவங்கப்பட்டிருக்கிறது!!
தேவன் தாமே இந்த திருமண தம்பதிகளை ஆசீர்வதித்து, அவரின் சித்தத்தின்படியான சகல ஆசீர்வாதங்களினாலும் நிறம்ப செய்ய, வாழ்த்துகிறோம் ஆசீர்வதிக்கிறோம்!!
-- Edited by bereans on Wednesday 27th of April 2011 07:52:26 AM
விரைவில் திருமணமாகவிருக்கும் எனது மகனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சகோதரர்கள் bereans, soulsolution, Dino மற்றும் சகோதரி jenniliya அவர்களுக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
திருமணம் சம்பந்தமான அலுவல்கள் மற்றும் வேறு பல அலுவல்களின் காரணமாக இத்தளத்திலும் எனது தளத்திலும் சில நாட்களாக பதிவுகளைத் தரவில்லை.
விரைவில் உலகப் பணிகளிலிருந்து விடுபட்டு தேவப்பணியைத் தொடருவேன்.
எனது மகனை வாழ்த்தும்படிக்கு இத்திரியைத் துவக்கிய சகோ.பெரியன்ஸ்-க்கு எனது விசேஷித்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.