இப்படியாக டீவியிலும், போஸ்டர் வாயிலாகும் பல அழைப்பை நாம் இந்த கிறிஸ்தவ மண்டலத்தில் காண முடிகிறது!!
நான் 30, 60, 90 நாட்கள் உபவாசம் இருந்து தேவனை தரிசித்தேன் என்றெல்லாம் பேட்டி கொடுக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள்!!
90 நாட்கள் எல்லாம் சாப்பிடாமலும் குடிக்காமலும் இருப்பது மனிதனால் முடியாத காரியம், அதுவே ஒரு பெரிய ரீல் தான்!! அதை அப்படியே எடுத்துக்கிட்டாலும், வேதத்தின் படி பார்த்தோமென்றால் இவர்கள் இத்துனை நாட்கள் உபவாசம் இருந்து தேவனை பார்த்தார்க்கிறார்களா அல்லது "இப்பிரபஞ்சத்தின் தேவனை" பார்க்கிறார்களா என்பது தான் விஷயம்!!
மத்தேயு 4:2. அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
வேதம் இந்த வசனத்தின்படி சொல்லுகிறது என்னவென்றால், இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசத்தில் இருந்த போது, அவரை தேவன் வந்து தரிசிக்கவில்லை, மாறாக அங்கே வந்தவன் இப்பிரபஞ்சத்தின் தேவனாகிய நம் எதிராளியான பிசாசு தான்!! வேதத்தில், குறிப்பாக புதிய ஏற்பாட்டில் எங்கேயும் உபவாசம் முடிந்தால் தேவன் வந்து தரிசனம் தருவார் என்றெல்லாம் இல்லை!! இவை எல்லாம் வேறு மதங்களில் இருக்கிறது!! காட்டுக்கு சென்று முனிவர் உபவாசித்து தியானம் செய்தால் கடவுள் அவர்களுக்கு தரிசனமாகி வரங்களை கொடுப்பார் என்று அவர்கள் சொல்லுவார்கள், அது நம் ஆறாய்ச்சி கிடையாது!! ஆனால் நம் ஊழியர்கள் சொல்லுவது போல் இவர்கள் 90 நாட்கள் வரை உபவாசம் இருந்து விட்டு, தேவனை தரிசித்தார்கள் என்பது உண்மையா?? வேதத்தில் ஆதாரம் உண்டா என்றால் இல்லையே!!
கிறிஸ்துவை தரிசித்த பவுல் 3 நாட்கள் குருடாகி போனான்!! அப்போஸ்தலனாகிய பவுலுகு அப்படி ஆயிற்று!! கிறிஸ்துவின் அன்பான சீஷன் யோவான், அவரை பார்த்த போது செத்தவனை போல் கீழே விழுந்தானாம்!! வேதம் நமக்கு இப்படி சொல்லிக்கொடுக்க, இந்த ஊழியர்கள் இருக்க முடியாத 90 நாட்கள் உபவாசம் இருந்தார்களாம், தேவன் இவர்களை பார்க்க வந்தாராம் போன்ற கதைகளை துனிச்சலாக பிரசங்கம் செய்கிறார்கள்!! கேட்டு கொண்டு இருக்க ஒரு ஏமாளி கூட்டம் இருப்பது தான் இவர்களின் துனிச்சலுக்கு காரணம்!!
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்த உபவாசமும் புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் உபவாசமும் ஒன்றா?? இல்லையே!! பழைய ஏற்பாட்டு காலத்தில் உண்டான உபவாசங்கள் எல்லாம் தேவனின் வார்த்தைகள் படியும் அவர் சொல்லிய விதங்களிலும், அவர் சொன்ன போதும், அவர் சொன்ன காரணத்திற்காகவுமே இருந்தது!!
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்கும் நமக்கு அது போன்ற ஒரு கட்டளை இருக்கிறதா!!
விளம்பரப்படுத்தி எல்லாரும் சேர்ந்து பங்கு கொள்ள வேண்டும் என்று போஸ்டர் அடிப்பதும் வாரத்தில் ஒரு நாளை நியமித்து அனைவரும் உபவாசம் இருக்கும் படியாக கூப்பிடுவதும் வேதத்தின் படி சரியா!!
////விளம்பரப்படுத்தி எல்லாரும் சேர்ந்து பங்கு கொள்ள வேண்டும் என்று போஸ்டர் அடிப்பதும் வாரத்தில் ஒரு நாளை நியமித்து அனைவரும் உபவாசம் இருக்கும் படியாக கூப்பிடுவதும் வேதத்தின் படி சரியா!!//
வசனம் எல்லாம் சரி தான், ஆனால் காலம் தான் சரி இல்லை!! ஒரு வசனம் எந்த காலகட்டத்தில் இருந்தது என்றும், அது இப்பொழுது கிறிஸ்துவின் போதனையில் பொருந்துமா என்பதை பார்க்க வேண்டாமா!! யூதனுக்கு கொடுக்கப்பட்டதை கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டும் என்றால் விருத்தசேதனத்திலிருந்து தொடங்களாமே!! உபவாசம் இருக்க சாம்பள் பூசலாமே!!
வித்தியாசம் தெரியவில்லையா!!
பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்த உபவாசமும் புதிய ஏற்பாட்டு காலத்தில் இருக்கும் உபவாசமும் ஒன்றா?? இல்லையே!! பழைய ஏற்பாட்டு காலத்தில் உண்டான உபவாசங்கள் எல்லாம் தேவனின் வார்த்தைகள் படியும் அவர் சொல்லிய விதங்களிலும், அவர் சொன்ன போதும், அவர் சொன்ன காரணத்திற்காகவுமே இருந்தது!!