"இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த நியாயப்பிரமாணச் சட்டத்தில் மிருக பலிகளை செலுத்தும்படி ஏன் சொல்லப்படிருந்தது''? என்று சிலர் கேட்கலாம். இதே கேள்விக்கு அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு பதிலளித்தார்:கலாத்தியர் 3 ; 19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. 20. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். 21. அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. 22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. 23. ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம். 24. இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது''
மனிதவர்க்கத்தின் சார்பாக யேகோவா தேவன் அளிக்கவிருந்த மாபெரும் பலியே இந்த மிருக பலிகள் அடையாளப்படுத்தின. அந்த மாபெரும் பலி கடவுளுடைய மகனான இயேசுகிறிஸ்துவின் மரணமே. " தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.'' என்று சொன்னபோது இயேசு அன்பான செயலையே மனதில் வைத்தார்.
ரோமர் 5 : 12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
கடவுள் மீதும் மனிதர் மீதும் இருந்த அன்பின் காரணமாக, இயேசு தம் பரிபூரண மனித உயிரை மனப்பூர்வமாக ஆதாமின் சந்ததியாருக்கும் மீட்க்கும் பொருளாகச் செலுத்தினார். இயேசு பின்வருமாறு கூறினார்:- ''அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்''. ஆதாம் பாவம் செய்து, மனிதவர்க்கம் முழுவதையும் பாவத்துக்கும், மரணத்துக்கும் அடிமைகளாக விற்றுப்போட்டான்.
சங்கீதம் 49 :- உள்ள சிலவசனங்கள் இப்படியாக நமக்கு சொல்கின்றது. 7.ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 8. எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே''. எந்த மனிதனாலும் அவர்களை அவற்றின் பிடியில் இருந்து விடுவிக்க முடியவில்லை. ஆகவே, இயேசு ''வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.(எபிரெயர் 9 :12 ) உயிர்த்தியாகம் செய்து இயேசு சிந்திய இரத்தத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், கடவுள்''நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்தார்'': அதாவது, காணிக்கைகள், பலிகள் ஆகியவை உட்பட நியாயப்பிரமான சட்டம் முழுவதற்க்கும் கர்த்தர் முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் ''பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்''. பெற வழிவகுத்தார். - கொலோசெயர் 2 :14 , ரோமர் 6 :23
-- Edited by Dino on Tuesday 19th of April 2011 09:15:55 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
"மரணமே உயிரின் பிறப்பிடம். இது அஸ்தேக்கு இனத்தவரின் நம்பிக்கை. இவர்கள் மெசோ அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு நர பலி செலுத்தி இருந்தார்கள்'' என்று வலிமைவாய்ந்த அஸ்தேக்குகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது!!! ''அந்தப் பேரரசு விரிவாக விரிவாக நரபலிகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. பேரரசின் மீது நம்பிக்கையே வலுப்படுதுவதட்க்காக அவ்வாறு செய்யப்பட்டது" என்று அதே புத்தகம் தெரிவிக்கிறது. ஒவ்வொருவருடமும் 20 ,000 நரபலிகள் வரை அவர்கள் செலுத்தியதாக மற்றொரு கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது!! (இந்த தகவல் அனைத்தும் ஒரு பிரபல ஆங்கில சரித்திர புத்தகத்தில் எடுத்தது)
காலம்காலமாக மக்கள் தங்களது தெய்வங்களுக்கு ஏதோவொரு விதத்தில் பலிகளை செலுத்தி வந்திருகிறார்கள். பயம், சந்தேகம், குற்றவுணர்வு போன்றவையே அதற்கு காரணம். மக்கள் தாங்களாகவே ஏற்படுத்திய வழக்கங்கள் ஒருபுறமிருக்க, பலி செலுத்துவதற்க்கான சில வழக்கங்களை கடவுளே ஏற்படுத்தி இருக்கிறார். ஆம், சர்வவல்லமை உள்ள கடவுளாகிய யேகோவா அவற்றை ஏற்படுத்தியதாக பைபல் கூறுகிறது!! ஆகவே, பின்வரும் கேள்விகளைக் குறித்துக் சிந்திப்பது பொருத்தமாக இருக்கிறது. எப்படிப்பட்ட பலிகள் கடவுளைப் பிரியப்படுத்துகிறவையா?கடவுளை வழிபடுகையில் இன்று நாம் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவேண்டுமா? பதில் தொடரும் ....
-- Edited by Dino on Wednesday 20th of April 2011 12:52:36 AM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
இஸ்ரவேல் தேசம் உருவானபோது, அவர்கள் தம்மை எப்படி வழிபட வேண்டும் என்பது சம்மந்தமாக தெளிவான கட்டளைகளை கொடுத்தார். பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவது இதில் உட்பட்டு இருகிறது. (எண்ணாகமம் 28 ,29 அதிகாரம்) பூமியில் விளைந்த பொருள்கள் காணிக்கைகளாக செலுத்தப்பட்டன. காளைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், புறாக்கள், காட்டுப்புறாக்கள் ஆகியவை கூட பலி செலுத்தப்பட்டது. சில காணிக்கைகள் முழுமையாக தகனிக்கப் பட்டது. இதுதவிர, சமாதான பலிகளும் செலுத்தப்பட்டது. கடவுளுக்குச் செலுத்திய பலிகளில் ஒரு பாகத்தைச் சாப்பிடுவதன் மூலம் அதைச் செலுத்திவரும் அதில் பங்குகொண்டார். -லேவியராகமம் 19 : 5 -8
மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீல் செலுத்தப்பட்ட அணைத்து காணிக்கைகளும் பலிகளும் கடவுள் வழிபாட்டின் ஓர் அங்கமாக இருந்தன; அதோடு, அவரை சர்வலோக பேரரசாக ஏற்றுக்கொள்வதை காட்டுவதற்க்கு வழியாகவும் இவை அமைந்தன. கடவுள் தங்களுக்கு அளித்த ஆசிர்வாததிட்கும் பாதுகாப்புக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரவேலர் பலி செலுத்தினார்கள். இதனால் பாவமன்னிப்பையும் பெற்றுக்கொண்டார்கள். வணக்கம் சம்மந்தமாக கடவுள் கொடுத்திருந்த வழிமுறைகளை உண்மையாக பின்பற்றிய வரையில் அவர்கள் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.- நீதிமொழிகள் 3 :9 ,10
பலி செலுத்தியோரின் மனப்பான்மையே யேகோவா முக்கியமாக கருதினார். தம்முடைய திர்க்கதரிசியாகிய ஓசியா மூலம் அவர் பின்வருமாறு கூறினார்:- ''பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.(ஓசியா 6 :6 ) ஆகவே ஜனங்கள் உண்மை வணக்கத்தை விட்டு வழிவிலகி, ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, அப்பாவிகளுடைய இரத்தத்தைச் சிந்திய போது அவர்கள் யெகோவாவின் பலிபீடத்தில் செலுத்திய பலிகளுக்கு எந்த மதிப்புமே இல்லாமல் போனது. அதனால் தான், எசாயா மூலம் இஸ்ரவேல் தேசத்திடம் யேகோவா பின்வருமாறு கூறினார்:- ஏசாயா 1 : 11. ''உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை''. தொடரும் ..
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )