யெகோவா தேவனை அறியாமல் செய்ய வைத்தது நம் ஊழியர்களே!! யெகோவா என்கிற பெயரை உச்சரித்தால் அவர்கள் யெகோவா சாட்சிகள் என்று கத்தோலிக்க சபைகள் ஆரம்பித்து வைத்த ஒரு எழுதப்படாத சட்டத்தை இன்று காளான் போல் வந்திருக்கும் பெந்தகோஸ்தே சபைகள் வரைக்கும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு, யெகோவ என்கிற நாமத்தை உச்சரிக்க பயப்படுகிறார்கள்!! தமிழ் வேதாகமோ கிங் ஜேம்ஸை மொழிப்பெயர்த்து வைத்துக்கொண்டு அதில் உபயோகப்படுத்தப்பட்ட மூன்று நான்கு இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் யெகோவா நாமத்தை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்!! நம் அண்டையில் இருக்கும் மலையாலத்திலும், தெலுங்கிலும் யெகோவா என்றே பயன்படுத்தி இருக்கிறார்கள்!!
யெகோவா தேவனின் நாமத்தை உச்சரிக்க இவர்கள் ஏதோ அருவருப்பாக நினைக்கிறார்கள், ஆனால் யெகோவா தேவன் சொல்லுவது,
சங்கீதம் 91:14...................என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.!!
நாங்களோ அவரின் நாமத்தை அறிந்து அந்த மகிமையான நாமத்தை உச்சரித்து, அவரே அந்த உன்னதமான தேவன் என்று பிரசங்கித்தும் வருகிறோம்!! மேலும் யெகோவா தேவனின் குமாரனும், நம் போதகருமான கிறிஸ்து சொல்லுவதை வாசியுங்கள்:
மத்தேயு 12:31. ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. 32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மனுஷ குமாரனனான கிறிஸ்து இயேசுவிற்கு விரோதமான வார்த்தைகள் சொன்னால் கூட அது மன்னிக்கப்படுமாம் ஆனால் பரிசுத்த ஆவிக்கு (திருவத்தின் மூன்றாம் நபர் அல்ல) விரோதமாக ஏறெடுக்கப்படும் தூஷனம் மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லையாம்!! யார் இந்த பரிசுத்த ஆவி, திரித்துவம் அல்லது திரியேக தேவனின் மூன்றாம் நபரா!? திரித்துவர்கள் அப்படி சொல்லுவார்கள், ஆனால் நமக்கோ, தேவன் ஆவியாக இருக்கிறார் என்று வேதம் சொல்லுவது தெரிந்ததே!! ஆகவே ஆவியாக இருக்கும் அந்த பரிசுத்தமான, உன்னதமான, காணக்கூடதவராக இருப்பவரை, சாவாமை உடையவரை தூஷிக்கும் ஒரு கூட்டம் நம் கிறிஸ்தவ தளங்களில் குறிப்பாக தமிழ் கிறிஸ்தவ தளங்களில் நாம் பார்க்கவும் வாசிக்கவும் நேரிடுகிறது!! இவர்கள் இயேசு மாத்திரமே தேவன் என்று சொல்லிக்கொண்டு யெகோவாவின் நாமத்தை தூஷிக்க துனிந்திருக்கிறார்கள்!! நாமோ கிறிஸ்துவின் உன்னத பலியை விசுவாசித்து அதை குறித்து பல பதிவுகளை தந்தும் நம்மை மேசியாவின் எதிரிகள் என்று பட்டம் கட்டி மகிழ்கிறார்கள், கூடவே நான் யெகோவா தேவனின் நாமத்தை பயன்ப்படுத்துவதை விமர்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்!! இயேசு சாமி, இயேசு நாதர், சிலுவை நாதர் என்று என்னனமோ பெயர்களை சொல்லி இயேசு கிறிஸ்து என்கிற நாமத்தை உச்சரிக்க கூட தயங்குகிறார்கள்!!
இவர்களை குறித்தும் இவர்களின் மேட்டிமையான ஞானத்தை குறித்தும் வேதம் நமக்கு சொல்லுகிற ஒரு வசனம் இருக்கு:
II கொரிந்தியர் 10:12 ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
யெகோவாவின் நாமத்தைக் கூட உச்சரிக்கவிரும்பாத இவர்களிடம் வேதத்தைப் பற்றியும், வேதத்தில் இருக்கும் விஷயங்களை குறித்தும் விவாதிப்பதில் என்ன பயன் வரப் போகின்றது. சாத்தானிடம் இயேசு சொல்கிறார், மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு:"அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்". வேதம் தெளிவாக சொல்கிறது முழு வணக்கமும் அவருக்கே என்று!! இதை புரிந்துகொள்ள ஏன் சிக்கல் என்று தான் புரியவில்லை!!!
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
அதற்கு காரணம் நம் ஊழியர்கள் துவங்கிய இயேசு நாதர், அருள் நாதர், சிலுவை நாதர் போன்ற பெயர்களில் தான் இருக்கிறது!! இந்த பெயர்களினால் வசியப்பட்டு போன ஜனங்களுக்கு யெகோவா தேவன் என்பது விளங்கிக்கொள்ள முடியாத பெயராக இருக்கிறது!!
நமக்கு அந்த விசுவாசம் இருக்கிறது, அவரின் நாமத்தை கிறிஸ்து இயேசு சொன்னது போலவே நாம் உயர்த்துவோம், மற்றவர்கள் ராஜியத்தில் அறிந்துக்கொள்வார்கள்!!
யோவான் 4:23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
கிறிஸ்து இயேசு இப்படியாக சொல்லியிருக்கிறார்!! உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் நிச்சயமாக பிதாவையே ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுவார்கள்!! இதையே பிதாவும் விரும்புகிறார், கிறிஸ்துவும் போதிக்கிறார்!! திரித்துவம் என்கிற ஒரு கோட்பாடு, இவர்கள் யாவரும் ஒருவரே அல்லது ஒரே வல்லமையுள்ளவர்கள் என்கிறதான போதனையில் இருப்போர் இந்த வசனக்களை சற்றே கடினமாக தான் புரிந்துக்கொள்ள முடியும்!! ஏனென்றால் கிறிஸ்து தன்னை தொழுத்துக்கொள்ள சொல்லவேண்டுமென்றால், நீங்கள் யாவரும் உண்மையோடும், ஆவியோடும் என்னை (கிறிஸ்துவை) தொழுதுகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம்!! ஆனால் பிதாவின் குமாரனாக இருக்கும் கிறிஸ்து மனிதர்கள் தம்மை ஆராதிக்கவோ தொழுதுக்கொள்ளவோ விரும்புவதில்லை!!
யோவான் 5:41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
இயேசு தன்னை தொழுதுகொள்ளவேண்டாம் என்று சொல்லுவதாக இந்த வசனத்தை எடுத்துக்கொள்ளலாமே!!
ரோமர் 8:15. அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
கிறிஸ்துவின் சீஷர்களானவர்கள் புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றவர்கள், யெகோவா தேவனை இனி யெகோவா என்று அழைக்காமல், கிறிஸ்து இயேசு எப்படி அப்பா, பிதாவே என்று அழைக்கிறாரோ, அந்தபடியே அழைக்கலாம்!! நம் கிறிஸ்துவின் சீஷர்களாக மாத்திரம் இல்லை, தேவனின் குமாரர்கள் குமாரத்திகளாக இருப்பதினால் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாகவும் இருக்கிறோம்!! இந்த தகுதியை பிதாவே (யெகோவா தேவனே) நமக்கு தருகிறார்!! இதோ கிறிஸ்து இயேசு எப்படி பிதாவை அப்பா பிதாவே என்று கூப்பிடிகிறாரோ, அப்படியே நாமும் கூப்பிடவே அழைக்கப்பட்டிருக்கிறோம்!! இனி மோசையை போல் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமானத்திற்கு கீழ்ப்பட்டவர்களாக இல்லை என்பதற்கு சாட்சியமே, நாம் இனி அடிமைத்தனத்தின் ஆவியில் இல்லாமல் தேவனின் குமாரனான கிறிஸ்து இயேசுவின் ஆவியை பெற்று யெகோவா தேவனை அப்பா பிதாவே என்றே அழைக்கிறோம்!!
மாற்கு 14:36. அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்;
கலாத்தியர் 4:5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். 6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். 7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.
இத்துனை வசனங்களும் குமாரனான கிறிஸ்து யார், பிதாவாகிய தேவன் யார், நாம் யாரை தான் தொழுதுகொள்ள வேண்டும் என்பது தெளிவாக சொல்லியிருக்கிறது!! குமாரனுடன் நமக்கு உண்டான உறவு, பிதாவுடன் நமக்கு உண்டான உறவு எல்லாம் மிகவும் தெளிவாக இருக்கிறது!!
ஆக கிறிஸ்து இயேசு சொல்லுவது போல் நாம் பிதாவை தொழுது கொள்வோம், கிறிஸ்துவின் நாமத்தினால்!!
யெகோவாவின் நாமத்தைக் கூட உச்சரிக்கவிரும்பாத இவர்களிடம் வேதத்தைப் பற்றியும், வேதத்தில் இருக்கும் விஷயங்களை குறித்தும் விவாதிப்பதில் என்ன பயன் வரப் போகின்றது. சாத்தானிடம் இயேசு சொல்கிறார், மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு:"அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்". வேதம் தெளிவாக சொல்கிறது முழு வணக்கமும் அவருக்கே என்று!! இதை புரிந்துகொள்ள ஏன் சிக்கல் என்று தான் புரியவில்லை!!!
தீத்து 3 அதிகாரம் 8. இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். 9. புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். 10. வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்".
அவர் ஒருவருக்கே என்பதில் எத்துனை பேர் இருக்கிறார்கள்!!??
இந்த வசனம் இயேசு கிறிஸ்துவை தொழுத்துக்கொள்ள கூடாது என்றா சொல்லுகிறது என்கிறார்கள் பெந்தகோஸ்தே வீரர்கள்!!
இந்த வசனத்தை யார் படித்தாலும் "அவர் ஒருவருக்கே ஆராதனை" என்பதன் அர்த்தத்தை தெளிவாக விளங்கிக்கொள்வான் என்றே நினைக்கிறேன்!! ஒருவருக்கே ஆராதானை என்று தெளிவாக வசனம் சொல்லியிருந்தும், இயேசு கிறிஸ்துவை இந்த வசனம் தொழுதுக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை என்று சொல்லுவது அர்த்தமற்ற ஒரு வாதமாகும்!!
இவர்கள் சொல்லுவார்கள், இருவரும் ஒன்று தான் என்று, பிறகு ஜான் கேட்பார், நான் எப்ப சொன்னேன் இருவரும் ஒருவரே என்று!! முதலில் நீங்கள் அனைவரும் பிதாவும் இயேசுவும் யார் என்று ஒருமித்த கருத்துக்கு வாருங்கள், பிறகு மற்றதை பார்க்கலாம்!!
//நிச்சயம் எழும்பாது! கிறிஸ்துவும் , பிதாவும் ஒருவரே என்று யார் சொன்னது?//
இவர் தான் அவர் அவர் தான் இவர் இயேசு தான் யெகோவா என்று நீங்கள் உங்கள் பதிவில் எழுதிவிட்டு இப்படி கேட்பது விச்சித்திரமாக இருக்கிறது!!