kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எபி@யெளவன ஜனம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
எபி@யெளவன ஜனம்!!


எபி@யெளவன ஜனம்:

//கிறிஸ்துவைப் பற்றி அறிவிப்பதனால்(சுவிசேஷம்) ஒரு பயனும் இல்லை என்று சொல்லும் நீங்கள் பின்னர் ஏன் ஒரு தளம் ஆரம்பித்து வேதத்தைப்பற்றியும் கிறிஸ்துவைப்பற்றியும் உள்ள தங்களது கருத்துக்களை எழுத வேண்டும்?  அதன் மூலம் மாத்திரம் என்ன பயன்?//

சுவிசேஷம் என்று சொல்லிக்கொண்டு என்ன அறிவிக்கப்படுகிறது என்பதை பார்த்து தான் அப்படி எழுதினேன்!! மேலும் கிறிஸ்துவை பற்றை அறிவிப்பதனால் ஒரு பயனும் இல்லை என்பது தவறான வாதம், நான் அப்படி சொல்லவில்லை!! சுவிசேஷம் என்றால் நல்ல செய்தி, அதை அப்படியாகவா அறிவிக்கப்படுகிறது என்பதை மாத்திரம் சொல்லுங்கள்!!

நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விட்டால் உங்களுக்கு பரலோகம், இல்லாவிட்டால் என்றென்றும் அவியாத அக்கினியில் நித்தியத்திற்கு எரிந்துக்கொண்டு இருக்கும் ஒரு தண்டனை!! இது எந்த வகையில் நல்ல செய்தி (நற்செய்தி, சுவிசேஷம்) ஆகி விடும் என்பது தான் என் கேள்வி!!

மாறாக‌,

 கிறிஸ்துவை யார் என்று தெரியாமல் மரித்த கோடா கோடி ஜனங்களின் நிலை என்ன என்பதையும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்காகவும் கிறிஸ்து மரித்திருக்கிறார், கிறிஸ்துவின் மரணத்தின் பயனில் அனைவரும் பங்கு பெறுவார்கள் என்பதே சுவிசேஷம், நீங்கள் தெளிவாக படித்தீர்களென்றால் இதை தான் நான் செய்துக்கொண்டும், சொல்லிக்கொண்டும், பதிவு செய்துக்கொண்டும் இருக்கிறேன்!! இந்திய தேசத்தில் தோமையார் வந்து சுவிசேஷம் அறிவித்த போது இருந்த அதே சதவிகிதத்தில் தான் கிறிஸ்தவர்கள் இன்று வரை இருக்கிறார்கள்!!

சுவிசேஷத்தை நல்ல செய்தியாக சொன்னால் அதில் பயனுண்டு, மற்றபடி சுவிசேஷம் என்று இன்று சொல்லப்படுவதை நான் சுவிசேஷம் என்று எடுத்துக்கொள்வதில்லை!! இந்த தளத்தில் நான் எங்காவது சுவிசேஷம் சொல்ல தான் துவங்கினேன் என்று எழுதியிருக்கிறேனா!! இந்த தளம் துவங்கப்பட்டது, நான் தெரிந்துக்கொண்டதை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளட்டும் என்பதற்காக தானே அன்றி, நான் புரிந்துக்கொண்டதை பிறர் மேல் தினிப்பதற்கு அல்ல!! ஒருவனை பிதா இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவிடத்திற்கு வரான், என்று தான் வேதம் சொல்லுகிறது, நான் அதை நம்புகிறேன்!!

அறுப்போ உலகத்தின் முடிவு என்கிறது வசனம், ஆனால் இப்ப தான் விதைக்கவேண்டும் என்று அடம்பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்!! இது உலகத்தின் முடிவில் இருக்கிற நாட்கள் என்பதை மாத்திரம் பிரசங்கம் செய்கிறீர்கள், ஆனால் உலகத்தின் முடிவு என்றால் அறுவடை தானே அன்றி, விதைப்பு இல்லை,

ஏனென்றால்

எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு!!

//Romans 10:11-17

13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.//


Romans 10:13


New American Standard Bible (©1995)
for "WHOEVER WILL CALL ON THE NAME OF THE LORD WILL BE SAVED."

King James Bible
For whosoever shall call upon the name of the Lord shall be saved.

American King James Version
For whoever shall call on the name of the Lord shall be saved.

American Standard Version
for, Whosoever shall call upon the name of the Lord shall be saved.

Douay-Rheims Bible
For whosoever shall call upon the name of the Lord, shall be saved.

Darby Bible Translation
For every one whosoever, who shall call on the name of the Lord, shall be saved.

English Revised Version
for, Whosoever shall call upon the name of the Lord shall be saved.

Webster's Bible Translation
For whoever shall call upon the name of the Lord shall be saved.

World English Bible
For, "Whoever will call on the name of the Lord will be saved."

Young's Literal Translation
for every one -- whoever shall call upon the name of the Lord, he shall be saved.'

No where this verse says, whoever worships (தொழுதுக்கொள்ளுவது) the Lord shall be saved!!

கிறிஸ்துவின் நாமத்தை கூப்பிடுகிறவர்களுக்கு இரட்சிப்பு என்று தான் வசனமே தவிர, கிறிஸ்துவின் நமத்தை தொழுத்துக்கொள்வோருக்கு இரட்சிப்பு என்று நீங்கள் சொல்ல்லுவதால், அல்லது நம்பிக்கை வைப்பதால் அப்படி ஆகாது!! ஒரு காலத்தில் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாங்க என்று தான் நம்பியிருந்தோம், இன்று அதே நிலவுக்கு மனிதன் வடை (சாரி சமோசா) எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்!! நம் நம்பிக்கை என்பது உண்மை அறியப்படும் வரை தான்!! அதன் பின் அந்த உண்மை தான் நம் நம்பிக்கையாக இருக்கவேண்டும்!!

நீங்கள் கொடுத்த ரோம் 10:13ஐ முழுவதுமாக கொடுக்கிறேன், அதன் பின் தொழுதுக்கொள்ளுதல் என்று வருகிறா மற்றோரு வசனத்தையும் தருகிறேன், நீங்களே எது சரி என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்!!

 

 


GreekTransliterationStrong'sMorphologyEnglish
πᾶςpas3956A-NSMwhoever
γὰρgar1063CONJfor
ὃςos3739R-NSMwhosoever
ἂνan302PRTever
ἐπικαλέσηταιepikalesētai1941V-AMS-3Smay call on
τὸto3588T-ASNthe
ὄνομαonoma3686N-ASNname
κυρίουkuriou2962N-GSMof Lord
σωθήσεταιsōthēsetai4982V-FPI-3Swill be saved

Call upon is not worship!! Please check the original word and the translated word in Tamil!!

 

Now about worship:

 


GreekTransliterationStrong'sMorphologyEnglish
πνεῦμαpneuma4151N-NSNspirit
o3588T-NSMthose
θεὸςtheos2316N-NSMGod
καὶkai2532CONJand
τοὺςtous3588T-APMthose
προσκυνοῦνταςproskunountas4352V-PAP-APMwho worship
αὐτὸνauton846P-ASMhim
ἐνen1722PREPin
πνεύματιpneumati4151N-DSNspirit
καὶkai2532CONJand
αληθείᾳalētheia225N-DSFtruth
δεῖdei1163V-PAI-3Sit is necessary
προσκυνεῖνproskunein4352V-PANto worship

 

தொடரும்............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எபி@யெளவன ஜனம்:

//கிறிஸ்துவின் இரத்தம் மூலமாகவே மீட்பு. ஆனால் அந்த உண்மையின் செய்தியை மிஷனரிகள் பிறருக்கு அறிவிக்கிறார்கள். அப்படி அறிவிப்பதனால் பயன் இல்லை என்று சொல்பவர்கள் பின்னர் ஏன் தங்கள் கருத்துக்களை தளம் போட்டு சொல்ல வேண்டும்? எல்லாருக்கும் எப்படியும் இரட்சிப்பு, நரகம் இல்லை என்பவர்கள்

*பின்னர் ஏன் தளம் ஆரம்பிக்க வேண்டும்?அதன் நோக்கம் என்ன?

*ஏன் வேதாகமத்தில் தேவனுக்கு கீழ்ப்படிதல் பற்றி சொல்லியுள்ளது? அதனால் என்ன பயன்?//

கிறிஸ்துவின் இரத்தத்தினால் அனைவருக்கும் மீட்பு என்பது வேதம் தருகிற நற்செய்தி!! கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே மீட்பு என்பது மிஷனரிகள், ஊழியர்கள் தருகிற நற்செய்தி!! ஆகவே தான் இவர்களின் அறிவிப்பு ஒரு குறுகிய வட்டத்திற்கான அறிவிப்பு, ஆனால் கிறிஸ்துவின் பிறப்பின் செய்தியோ,

லூக்கா 2:10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இப்படி கிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்குமே நற்செய்தி என்கிற போது, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே அது நற்செய்தி என்கிறார்கள் மிஷனரிகளும் ஊழியர்களும்!! இது வேதத்தின் படி சரியாக? இல்லையே!!??

எங்கள் கருத்துக்களை தளம் போட்டு சொல்லும் நோக்கம்,

எல்லா மனிதர்களுக்கு இரட்சிப்பு உண்டு என்று வேதம் சொல்லும் நற்செய்தியை அறிவிக்கவே!! அதை எந்த விதத்திலும் எங்கள் சொந்த நினைப்பாகவோ, நாங்கள் பரலோகம் சென்று பெற்று கொண்ட செய்தியாகவோ இல்லாமல், இந்த நற்செய்தியை வேதத்திலிருந்து தான் அறிவிக்கிறோம். கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி எப்படி எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாகிறாது!! கிறிஸ்துவை குறித்து அறியாமல் மரித்து போன கோடா கோடி ஜனங்களுக்கு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி எப்படி நற்செய்தியாக இருக்க முடியும்!! குருடர்கள், ஊமையர்கள், செவிடர்கள் இன்னும் ''''''' போன்றோருக்கு கேள்வியே படாமல் இது எப்படி நற்செய்தியாக இருக்க முடியும்!! அப்படி என்றால் இதை ஏன் நற்செய்தி என்று தேவ தூதர்கள் சொல்லுகிறார்கள்!! ஏனென்றால்,

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. 7. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

இப்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு பிறகு சத்தியத்தை அறிகிற அறிவை அடைய தேவனே சித்தம் கொண்டிருக்கிறார், அவரின் சித்தம் நிறைவேறியே ஆகும் என்று வேதம் சொல்லுகிறது!! தேவனின் இந்த சித்தத்தை நிறைவேற்றவே, கிறிஸ்து தம்மை எல்லாருக்காகவும் மீட்கும் பொருளாக ஒப்பு கொடுத்திருக்கிறார்!! இதை தான் அப்போஸ்தலர்கள் போதித்திருக்கிறார்கள், இதையே தான் இந்த தளத்தின் மூலமாக நான் (நாங்கள்) சொல்லி வருகிறேன் (வருகிறோம்)!! நான் இந்த ஒரே வசனத்தை மாத்திரம் சொன்னால் கூட உங்களுக்கு ஏற்றுக்கொள்ள கஷ்ட்டமாக இருக்கலாம், ஆனால் இதோ,

1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

நம்முடைய, அதாவது அவரை விசுவசிக்கும் கூட்டத்தாரின் பாவங்களை நிவிர்த்தி செய்த்திருக்கும் கிருபாதாரபலியாக மாத்திரம் அல்ல, அவர் சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார் என்பதை தான் இந்த தளத்தின் மூலம் சொல்லுகிறோம்!! அவரின் இந்த பலியினால் அவரை ஏற்றுக்கொண்டோர் மாத்திரம் அல்ல, அவரை ஏற்றுக்கொள்ளாதோர், அவரை கேள்விபடாதோர், அவர் யார் என்றே தெரியாமல் மரித்து போனோர், அவரை அறியும் சந்தர்ப்பமே இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருப்போர், அவரை எதிர்ப்போர், அவரை நிந்திப்போர், அவரை ஏற்றுக்கொள்ள மறுப்போர் என்று எத்துனை கோடி ஜனங்கள் இருந்தாலும் அவர்கள் யாவருக்காகவும் கிறிஸ்துவின் பலி வீண் போகாது என்பதே நற்செய்தி!! இதை தான் நாங்கள் சொல்லுகிறோம்!! சுமார் ஒரு 200 வருடங்களாக தான் விஞானம் இத்துனை வேகமாக வளர்ந்து, இன்று கம்ப்யூட்டர் புரட்சியே நடந்துக்கொண்டு இருக்கிறது, செய்திகள் ஒரு சொடுக்கில் உலகமெங்கும் சென்று விடுகிறது, ஒரு மொபைலிலிருந்து இன்னோரு மொபைலுக்கு 5 விணாடிகளில் ஒரு முழு பைபிளே அனுப்பிவிடும் அளவிற்கு விஞானம் வளர்ந்திருக்கிறது!! ஊழியர்களுக்கு தொலைபேசி, அலைபேசி, இனையத்தளம், பத்திரிக்கைகள் போன்ற சாதனங்கள் மூலம் அவர்கள் அறிவிக்கும் நற்செய்தி சென்று அடைகிறது, ஆனால் இந்த வசதிகள் சுமார் 200 வருடங்களாக தானே இருக்கிறது, அதற்கு முன்!! அப்படி என்றால் கிறிஸ்து வந்து சுமார் 1800 வருடங்கள் வரையில் கூட கிறிஸ்துவை கேள்விப்படாமல் நீங்கள் சொல்லும் பாவத்தில் மரித்து போனவர்களே, கேள்வி படாதது அவர்களின் குற்றமா, இன்று உங்களுக்கு இத்துனை வசதிகள் இருக்கிறது என்று சொல்லியும், உங்கள் பக்கத்து வீட்டிற்கு, உங்கள் தெருவில் இருக்கும் எல்லா வீட்டிற்கும், நீங்கள் நற்செய்தி அறிவித்து விட்டீர்களா??

ஆங்கிலேயர்கள் இந்த பெரிதான தேசத்தை சுமார் 350 வருடங்கள் ஆண்டார்கள், அப்போ ஜனத்தொகையும் மிகவும் குறைவு தான், மிஷனரிகள் அந்த நேரத்தில் தான் மிகவும் அதிகமாக இந்த தேசத்தில் இருந்தார்கள், நிறைய கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், சேவை மைய்யங்கள் என்று கிறிஸ்துவின் அன்பை நிச்சயமாக அறிவித்தார்கள், அதிகாரத்தில் இருந்தார்கள், இருந்தாலும் இந்த நாடு ஏன் கிறிஸ்தவ நாடாக மாறவில்லை!? தேவனுக்கு சித்தம் இல்லை என்று தான் சொல்ல முடியும்!! நாம் நம் ஊழியம் மூலம், தேவனுக்கு உதவிசெய்கிறோம் கட்டளையிடுகிறோம் என்றெல்லாம் நினைத்து ஏதேதோ செய்து வருகிறோம், ஆனால் தேவன் அனைவரையும் இரட்சிக்க தீர்மானித்திருக்கிறார், அதுவே அவரின் சித்தமாகவும் இருக்கிறாது என்று மேலே வசனத்தில் காண்பித்தேன், என்றால் தேவனின் சித்தம் நிறைவேறும் என்று நான் விசுவசித்து, அதையே அறிவிக்கிறேன்!! இதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!!

இன்று ஊழியங்கள், நற்செய்தி பெருவிழாக்கள், அற்புத கூட்டங்கள் இப்படி நடக்கும் எந்த ஒரு கூட்டத்திற்கும் செல்பவர்களில் 99% ஏற்கனவே சபைகளில் இருப்போர் தான்!! மீதம் உள்ள 1%த்தில் எத்துனை பேர் இந்த நற்செய்தியை கேட்டு, சத்தியத்தை அறிந்து, ஞானஸ்நானம் எடுத்து, ................ என்று இருப்பார்கள்!! யாருக்கு லாபம் இருக்கிறதோ, இல்லையே, கூட்டத்தை நடத்துவோருக்கு காணிக்கையும், கூட்டத்தில் பேசியவருக்கு சூட்கேஸும் நிறம்பும்!! இதற்கு தானே இத்துனை ஆர்ப்பாட்டம்!! இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டாலும், உண்மை இதுவே!! யாரோ கஷ்ட்டப்பட்டு உழைத்து கொடுக்கும் பணத்தில் யாரோ குடும்பத்துடன் காரில் சுற்றுகிறார்கள், விடுமுறை என்று அமேரிக்கா, ஆஸ்த்ரேலியா சென்று வருகிறார்கள், வியர்வை சிந்தி அனுப்பும் பணத்தில் ஏசியில் குடும்பத்துடன் பதுங்கும் சோஃபாவில் அமர்ந்து வசனம் பேசுகிறோம் என்று சொல்லுகிறார்கள்!! இது தான் நற்செய்தியா!!

சிந்தியுங்கள்!! ஒரு பக்கம் வசனத்தின் படி எல்லாருக்கும் மீட்ப்பு என்கிற செய்தியை சொல்லிக்கொண்டும் மறுப்பக்கம், ஊழியர்களின் வேஷங்களையும் களைக்கும் பிரயாசத்தில் தான் இந்த தளம் இருக்கிறாது!! அது மாத்திரம் அல்ல, சத்தியத்தை, பல விஷயங்களில் சபைகளில் போதனை சபைக்கு சபை மாறுபட்டிருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்!! வேதத்தில் இருக்கும் பல கேள்விகளுக்கு விடையில்லை, கேட்டால் அது எல்லாம் மறைவானது என்று சொல்லப்படுகிறது, இதை எல்லாம் பல மொழிப்பெயர்ப்புகளை வைத்து, தேவனின் தன்மையோடு ஒத்து வருகிற வசனங்களே உன்மையான மொழிப்பெயர்ப்பு என்று அறிவித்து வருகிறோம்!! இதை தவிர இதன் மூலம் எங்களுக்கு காணிக்கை அனுப்புங்கள், தசமபாகம் அனுப்புங்கள், உங்கள் ஜெபத்தேவைகளை அனுப்புங்கள் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்றும் சொல்லுவதில்லை, ஏனென்றால் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு தெளிவாக சொல்லுகிறது, நம் ஜெபங்களை பிதாவிடத்தில் சேர்ப்பதற்கு கிறிஸ்து இயேசு ஒருவரே மத்தியஸ்தராக இருக்கிறார், அந்த மத்தியஸ்தர் இடத்தை ஊழியம் செய்கிறோம் என்று சொல்லுபவர்கள் எடுத்துக்கொண்டு எங்களிடம் காணிக்கை அனுப்புங்கள் நாங்கள் உங்களுக்கக ஜெபிக்கிறோம் போன்றவற்றை எதிர்த்து எழுதவே இந்த தளம்!!

//உங்களுக்கு தெரிந்த இந்த உண்மை பாவம் பவுல், பேதுரு போன்றவர்களுக்கு தெரியவில்லை போலும். இல்லையென்றால் இரத்தசாட்சியாய் மரித்திருக்க மாட்டார்களே//

பவுல் பேதுரு போன்றோர் இரத்தசாட்சிகளாக மரிக்க தேவனால் நியமிக்கப்பட்டிருந்தார்கள்!! அவர்கள் கிறிஸ்துவின் நிமித்தமாக படும் பாடுகள் முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது!! அவர்கள் சொன்னதை தான் நான் சொல்லி வருகிறேன் என்பதற்காகவே உங்களுக்கு 1 தீமோத்தேயு 2:7ஐ கொடுத்திருக்கிறேன்!! பவுல் அறிவிக்காததை இன்று ஊழியர்கள் அறிவிக்கிறார்கள்:

1. எங்கள் ஊழியத்தை தாங்க எங்களுக்கு தசமபாகம் காணிக்கைகளை அனுப்புங்கள் (நாங்கள் ஏசி அறையில் சோஃபாவில் உட்கார்ந்து உங்களிடமிருந்து வரும் பணத்தில் கோட் சூட் போட்டு பிரசங்கிப்போம், இதை தேவன் தான் செய்ய சொன்னார்)!!

2.  நாங்களும் எங்கள் குடும்பத்தில் இருக்கும் ஐந்து வயது குழந்தை வரை தேவனின் அபிஷேகத்தால் நிறைந்திருக்கிறோம், நாங்கள் மாத்திரமே இந்த சபை கட்டிடத்தை நிர்வாகிக்க முடியும், ஆகவே நான் பாஸ்டரும், என் மனைவி பாஸ்டரம்மாவும், எங்கள் மகன் இளம் ஜெப வீரனாகவும், என் மகள் கீ போர்ட் வாசிக்கவேண்டும், என் கடைக்குட்டி மைக் பிடித்து அல்லேலுயா சொன்னால் தான் அபிஷேக இறங்கும்!!

3.  இப்படி பட்ட ஒரு நரகம் இருக்கிறது, பரலோகத்தில் இன்றைய ஊழியர்களுக்கு வீடுகளும் பங்களாக்களும் கட்டப்பட்டு வருகிறது என்று அடிக்கடி விஸிட் வாரம் ஒரு முறையாவது, போய் வருவது பவுலுக்கும் பேதுருவுக்கும் கொடுத்து வைக்கவில்லை!!

4. பவுல் எந்த தசமபாகத்தை குறித்து போதித்தான் என்று சொல்ல முடியுமா!! எப்படி பட்ட நரகத்தை போதித்தானென்று சொல்ல முடியுமா??

5. எனக்கு ஊழியத்தினால் பிழைப்பு உண்டாகும் என்று தெரிந்திருந்தாலும், கூடாரத்தொழில் செய்து பிழைத்த பவுல் எங்கே, ஆடம்பரத்தின் உச்சத்தில் 10 ஏடிஎம் கார்டுகளுடன் வெளிநாட்டு கார்களில், அதுவும் மக்கள் அனுப்பும் பணத்தில் இதை எல்லாம் செய்வது பவுல் பேதுரு சொல்லிக்கொடுத்து தானோ!!

6. பவுல் ராஜியத்தை குறித்து பிரசங்கித்தார், நாங்கள் செய்கிறோம், நீங்கள் செய்கிறீர்களா, இல்லையே!!

எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் அதற்காகவே கிறிஸ்து இந்த உலகில் வந்தார் என்று சொல்லுவது நற்செய்தியாகுமா, அல்லது கிறிஸ்து இரத்தம் சிந்தியிருக்கலாம், ஆனால் அதை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே இரட்சிப்பு என்று நீங்கள் சொல்லுவது நற்செய்தியாகுமா!! கிறிஸ்துவின் இரத்தம் அனைவருக்கும் என்பதில் அன்பு வெளிப்படுகிறதா, அல்லது அதை ஏற்றுக்கொள்வோருக்கு மாத்திரமே என்பவர்களிடம் அன்பு இருக்கிறதா!! கிறிஸ்துவின் இரத்தம் மனித சிந்தைக்கு அப்பாற்பட்டது, அந்த அன்பை நாங்கள் புரிந்திருக்கிறோம், எல்லாரும் புரிந்துக்கொள்வார்கள்!!

தொடரும்............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தமிழ்கிறிஸ்தவ தளத்தில் ஜோஸப்ஸ்நேகா:

//என இருக்கிறதை கவனிச்சியளா. அதுவும் யேகோவா தேவனே கூப்பிட்டால் பதில் அளிப்பார், அதுவும் இஸ்ரவெலின் தொழுகைக்கு பாத்திரமான தேவன். எப்படி இந்த வசனத்தை வெறும் கூப்பிடுதல் என்று மாத்திரம் வைத்துக்கொள்ளலாமா.//

//ஆகா, என்ன அருமையான கண்டிபிடிப்பு, பின்னிட்டேள் போங்கோ. கூப்பிடுதல் வேறு தொழுதுகொள்ளுதல் வேறு. தொழுதுகொள்ளும் எண்ணத்தில் இருப்பவன் தான் கூப்பிடுவான், தொழுதுகொள்ள எண்ணாதவன் எப்படி கூப்பிடுவான். கூப்பிட்டால் வருவார் என்பது உண்மை தான், அதற்காக அவரை 108 ஆம்புலன்ஸ் ரேஞ்ச்சுக்கு மாத்திரம் கற்பனை செய்ய வேண்டாம். பல ஆங்கில வேதாகமங்களை காட்டியிருக்கீங்க. அதே வேதாகமத்தில//

அதானே 108 ஆம்புலன்ஸை கூப்பிடுகிறோம் என்றால் அதை தொழுதுக்கொள்ளவே என்கிற அபாரமன கற்பனைகளை கொண்ட ஜோஸப்ஸ்நேகாவிற்கு வாழ்த்துக்கள்!! கூப்பிடுகிறவன் எல்லாம் தொழுத்துக்கொள்ளும் என்னத்தில் கூப்பிடுகிறான் என்பது அத்நாஷியஸ்தனமான கருத்து!!

//'Call to Me and I will answer you, and I will tell you great and mighty things, which you do not know.'//

என்னை நோக்கி கூப்பிடுங்கள், அப்பொழுது உங்கள் தெரியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை சொல்லுவேன் என்கிற தேவன், என்னை தொழுதுக்கொள்ளுங்கள் உங்களுக்கு காரியங்களை விளங்கச்செய்வேன் என்பது பொறுத்தமாக இருக்கும்!! கூப்பிடதல் என்றால் கூப்பிடதல் மாத்திரமே, தொழுதுக்கொள்ளுதல் கிடையாது!! உங்கள் அத்நாஷியஸ் கருத்தை தினிக்க வேண்டாமே!!

கூப்பிடுதல் வேறு, தொழுதுக்கொள்வது வேறு என்பதை கிரேக்க பாஷையில் வழியாக அர்த்தத்துடன் சொல்லியும் இப்படி அத்நாஷியஸ்த்தனமாக அடம்பிடிப்பதில் என்ன அழகோ!!

//மிஷனரி ஊழியம் தேவ சித்தம் இல்லையா, இதைபோன்ற ஒரு அறிக்கையை என் வாழ் நாளில் கேட்டதேயில்லை. //

நான் சொல்லும் பலது உங்கள் வாழ்நாளில் நீங்கள் கேட்டதேயில்லை என்று ஒவ்வொன்றாக சொல்லுவீர்கள்!! ஏனென்றால் நீங்கள் எழுதுவது எல்லாம் நானே பேசி போதித்தவன் தான்!! ஆகவே நீங்கள் எழுதுவது எனக்கு எந்த விதத்திலும் ஆச்சரியமாக இல்லை!! ஒரு காலத்தில் இதே குப்பையை தான் நானும் பேசிக்கொண்டு இருந்தேன்!!

//நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்னானம் கொடுங்கள் என இயேசு இறுதி கட்டளை கொடுத்தாரே, இது மிஷனரி ஊழியத்துக்கான அறை கூவல் இல்லையா? ஒருவேளை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என சொல்வதால் உங்களுக்கு இந்த வசனம் பிடிக்கலையோ என்னவோ.//

அப்படி என்றால் மிஷனரி என்பதற்கு அர்த்தம் கிறிஸ்துவின் அந்த கடைசி கட்டளை தானா!! ஆஸ்பத்திரி, கல்விகூடங்கள், சமூக சேவையை மத சார்பு அமைப்பு செய்வது தான் மிஷன‌ரி பணி!! இதை தான் கிறிஸ்து செய்ய சொன்னார் என்றால் அவருக்கு சீஷனாக இருப்பவர்கள் இவைகளை தானே செய்ய வேண்டும்!! இதையா நீங்கள் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! மிஷனரி என்பதை தேவன் கிறிஸ்தவ ஊழியமாக வைக்கவில்லை!! மிஷனரி அனைத்து மதத்திலும் இருக்கும் ஒரு சேவை அமைப்பு மாத்திரமே!! பிதா குமாரன் பரிசுத்த ஆவியை நான் மறுதலிக்கவில்லை, ஆனால் நீங்கள் சொல்லும் திரித்துவத்தை ஏற்றுக்கொள்வதில்லை!!

//அன்றைக்கு மிஷனரிகள் ஊழியம் செய்தது தான் இன்றைக்கு இந்தியாவில் கிறிஸ்தவம் வளர்ந்துவருகிறது. நீங்கள் வெறும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை மாத்திரம் வைத்து இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எங்கே வளர்ந்திருக்கிறார்கள் என்கிறீர்கள், எத்தனையோ பேர் வெளிப்படையாக பல்வேறு காரணங்களுக்காக தங்களை கிறிஸ்தவர்கள் என அறிவிக்காமல் ரகசிய கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா? ஏதோ ஒரு ஊழியம் மூலமாக, சபையின் மூலமாக தனி நபரின் மூலமாக சத்தியத்தை அறிந்து கொண்டு, பைபிளை மறைத்து வைத்துக்கொண்டு, வெளியே வேற வேலையாக போகிறேன் என சொல்லிக்கொண்டு ஆலயத்துக்கு செல்லும் ரகசிய கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்.//

இப்படி பட்ட கருத்தை எல்லாம் சொல்லி என்ன சாதிக்க போகிறீர்களோ!! அது என்ன ரகசிய கிறிஸ்தவன்!! யாருக்கு அவன் கிறிஸ்தவன்!!

மத்தேயு 10:32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன். 33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.

ஒருவன் இரகசிய கிறிஸ்தவன் என்று தன்னை சொல்லுகிறான் என்றால் அவன் உலக ஆதாயத்திற்காக உலகத்திற்கு ஒத்த வேஷதாரியாக இருக்கிறான்!! அவன் கிறிஸ்தவனே கிடையாது!! தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்காமல் இருப்பவர்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவது சரியாகுமா?? இதை நான் கேட்கவில்லை, மேலே உள்ள வசனம் கேட்க்கிறது!! தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் இந்த நாட்டின் எந்த சட்டமும் தடை செய்வதில்ல, அப்படி இருக்க இவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் வேறு ஏதோ ஆதாயத்திற்காக அப்படி செய்கிறார்கள்!! இரு எஜமானர்களுகு ஊழியம் புரிவதாகும்!! இவர்களை கிறிஸ்துவே தன்னை மறுதலிப்பவர் கூட்டம் என்கிறார் ஆனால் நீங்கள் என்னமோ இவர்களையும் "இரகசிய" கிறிஸ்தவர்கள் என்கிறீர்களே!! நல்ல தமாசு போங்க‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோஸப்:
//வைராக்கியமான பிற மத நம்பிக்கைகளை விட்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட ரகசிய கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து பார்த்திருக்கிறீர்களா? அதில் உள்ள கஷ்டம் தெரியுமா? ரகசிய கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கடைசி வரை அப்படி வாழ்வதில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாகவேண்டும் என்ற வகையில் என்றோ ஒரு நாள் அவர்களது விசுவாசம் அவர்களது குடும்பத்திற்கு, சமுதாயத்துக்கு முன்னால் அவர்களால் அறிக்கை பண்ணப்படும். சில காரணங்க்களுக்காக தாங்கள் கொண்ட விசுவாசத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் மறைத்து வாழ வேண்டிய வாழ்க்கை அவர்களுக்கு. உங்களுக்கு எங்கே அந்த கஷ்டம் தெரியப்போகிறது.//

இதை எல்லாம் படித்து விட்டு சிரிப்பதா இல்லை உங்களுக்கு புரிய வைப்பதா என்பதில் ஒரே குழப்பம்!! இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு எத்துனை பாடுகளின் மத்தியில், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்து வாழ்ந்து கிறிஸ்தவர்கள் என்கிறா காரணத்திற்காக கிறிஸ்துவை மறுதலிக்காமல் மரித்திருக்கும் மனிதர்களையெல்லாம் உங்களுக்கு தெரியாதா!! இரகசிய கிறிஸ்தவம் என்கிற ஒரு விஷயமே வேதாகமத்தின் கருத்து அல்ல!! அவர்கள் என்றாவது ஒரு நாள் வந்து அறிக்கை செய்வார்கள் என்பது அவருக்கே தெரியுமா, அப்படி அறிக்கை பண்ணாமல் இருப்பவனை குறித்து தான் அந்த வசனத்தையே உங்களுக்கு காண்பித்தேன், ஆனால், உங்களுக்கு வசனத்தை விட, உங்களின் வாதம் தான் பெரிதாக தெரிகிறது!! பவுலை குறித்து வாசித்ததே இல்லையா!! வைராக்கியமான யூத மார்க்கத்தை சேர்ந்தவன், அழைப்பு கிடைத்தவுடன் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் குப்பையாக ஆக்கி தன்னை கிறிஸ்தவன் என்று வெளிப்படுத்தினான், மீண்டும் யூதர்களுடனே யூதனாக வாழ்ந்த பிறகா தன்னை கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்கிறான்!!

இரகசிய கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டத்தை அறிக்கை பண்ணாதவரை கிறிஸ்தவர்கள் என்று அழைக்காமல் இருப்பது நல்லது!! சீஷத்துவம் என்றால் என்னவென்று நினைத்தீர்கள்!! அதற்கு பாடுகள் உண்டு, ஏதோ எனக்கு தோது படும்போது நான் என் விசுவாசத்தை அறிக்கை செய்துக்க்கொள்வேன் என்று சொல்லி கொண்டு இருப்பது கிறிஸ்தவம் கிடையாது!!

//சுவிஷேஷத்தை அறிவிக்குமுன் மக்களின் அடிப்படை தேவையை சந்திக்க வேண்டும், மிஷனரிகள் தென் தமிழகத்துக்கு வந்த காலத்தில் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் தென் தமிழக மாவட்டங்களை சார்ந்தவராக இருந்திருந்தால் அறிந்திருப்பீர்கள். அடிப்படை கல்வி, மருத்துவ வசதி போன்றவை மறுக்கப்பட்ட நிலையில் இருந்த அம்மக்களை சந்திக்க அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது இன்றியமையாததாக இருந்தது, சுவிஷெஷம் அறிவிக்கப்பட இது ஒரு காரணி மாத்திரமேயன்றி இந்த கல்வி, மருத்துவ வசதிகளை மாத்திரம் மிஷனர்கள் செய்துகொண்டிருக்கவில்லை.//

எப்படி, இயேசு கிற்ஸ்து தன் அப்போஸ்தலர்களிடம், நீங்கள் போய் சர்வ ஜாதிகளுக்கும் சுவிசேஷம் சொல்லும் முன், அவர்களுக்கு மருத்துவ வசதிகள் இருக்கிறதா, அவர்கள் பிள்ளைகள் படிக்க வசதிகள் இருக்கிறதா போன்றவற்றை பார்த்து, அது இல்லாவிட்டால் அதற்கு முதலில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் திறந்து அதன் பின் அதன் மூலமாக தான் கிறிஸ்துவின் போதனைகளை தரச்சொன்னாரோ!!

சர்வ ஜாதிகளுக்கும் போய் சுவிசேஷம் அறிவிக்க சொன்ன கிறிஸ்துவின் கட்டளையை ஏற்று, ஏன் உங்கள் ஆடம்பர ஊழியர்கள் ஆஃப்ரிக்கா கண்டத்திற்கு போக பயப்படுகிறார்கள்!! நீங்கள் சொன்ன தென் தமிழகத்திலிருந்து மாத்திரமே ஊழியர்கள் என்று சொல்லும் ஒரு கூட்டம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள்!! அப்படி இந்திய முழுவதும் இன்று மிஷனரிகள், ஊழியர்கள் என்று இருந்தாலும் இந்தியாவின் கிறிஸ்தவ ஜனத்தொகையை சொல்ல முடியுமா!! இத்துனை ஊழியர்கள் மிஷனரிகள் இருந்தாலும் ஒரே விசுவசத்தில் இருக்கிறார்களா?? இத்துனை ஊழியர்களும் மிஷனரிகள் இருந்தாலும் இந்தியா கிறிஸ்தவ நாடாக இல்லையே, அப்படி என்றால் இது தானே தேவனின் சித்தம்!! மனுஷ குமாரன் வரும் போது விசுவாசத்தை கான்பாரோ என்கிற வசனத்திற்கு அர்த்தம் தெரியுமா!??

முதலாவது ஊழியர்களையும் மிஷனரிகளையும் மக்களுக்கு முன்பாக சாட்சியாக வாழ சொல்லுங்கள், கிறிஸ்தவம் தானாகவே வளரும்!! இவர்களை ஒருவரும் பாடு பட சொல்லவில்லை!! இவர்கள் வேலை செய்துக்கொண்டே ஊழியம் செய்தால் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார்கள்!! டீவி ஊழியம், பத்திரிக்கை ஊழியம், தீர்க்கதரிசின ஊழியம், என்று ஒவ்வொரு பெயராக வைத்துக்கொண்டு அதற்கு பணம் கேட்பதை நிறுத்தினாலே கிறிஸ்தவம் தானாகவே வளரும்!! முதலில் ஒவ்வொரு ஊழியனும், தன் தெருவில் இருப்பவர்களை பரலோகம் கூட்டி போக முடியுமா என்று பார்க்கட்டும், பிறகு நாட்டையோ, உலகத்தையோ பார்க்கலாம்!! தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு விஷயம் மாத்திரமே கிறிஸ்தவமாகாது!! கீழே இருக்கும் இத்துனை சபைகள் (பதிவு செய்யப்பட்டவைகள் மாத்திரமே) இருந்தும் கிறிஸ்தவ சதவிகிதம் 2.3% மாத்திரமே என்பது உங்களுக்கு தெரியுமா!! நீங்கள் சொல்லும் இரகசிய கிறிஸ்தவர்களை சேர்த்தால் 3% வரும்!! இவர்களை வேதத்தின்படி கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடாது!! அப்படி என்றால் 350 வருடங்களாக மிஷனரிகளினாலும், நம் ஆடம்பர ஊழியர்களின் கூட்டு முயற்சினாலும் 3% தான் கிறிஸ்தவர்கள் இருந்துக்கொண்டு இருப்பதே, இப்படி பட்ட ஊழியமோ மிஷனரிகளோ தேவனின் சித்தம் தானா என்று யோசித்து பாருங்கள்!! ஒரே பிரசங்கத்தில் 3000 பேர், 5000 பேர், அனுதினமும் சபைக்குள் வந்துக்கொண்டு இருந்த அப்போஸ்தலர்களின் ஊழியம் எங்கே, இன்று நீங்கள் பேசும் ஊழியமும் ஊழியர்களும் எங்கே!!??

இதோ இந்தியாவில் இருக்கும் சபைகளின் விவரங்கள்:



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

My God! this many Prostitutes of Bobylon in India alone...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard