கலெக்ஷன் கள்ள போதகனின் வாந்தி: //இயேசுவானவர் மாம்சத்தில் உயிர்த்தெழவில்லை;சரி,அப்படியானால் அவருடைய சரீரம் எங்கே போனது என்றும் சொல்லலாமல்லவா? சொல்லமாட்டான்,அவனுடைய வேதப் புரட்டு கிளாஸுக்கு வந்தா தான் சொல்லிக்கொடுப்பானாம்..!
இதைக் கண்டிக்க விரும்பும் நண்பர்களும் சத்தியத்தை அறிந்த சகோதரர்களும் உடனே இதற்குரிய பதிலைப் பதிக்கவும்;மற்றதை பிறகு பார்ப்போம்...//
இயேசு கிறிஸ்து ஆவியில் உயிர்த்தெழுந்தார் என்று இத்துனை வேத வசனங்கள் சொல்லியும் குருடர்கள் குருடர்களாகவே தான் இருப்பார்கள் ஏனென்றால் இந்த கலெக்ஷன் கள்ள போதகனை குறித்து தான்,
1 பேதுரு 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
ஆவியில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசுவை சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வாதாடுகிறவன் நிச்சயமாகவே மூடனாக தான் இருக்க முடியும்!! சரீரம் எங்கே இருக்கிறது என்று வேதத்தில் இல்லாத ஒரு கேள்வியை கேட்டு மடக்கி பெரிய புலிகேசி என்று நினைக்க வேண்டாம், நீ சும்மா வந்தி எடுக்கும் வெத்துகேசி தான்!! வார்த்தை ஜாலத்தினால் ஏதோ பெரிய விஷயம் எழுதிவிட்டாய் என்று நினைக்க வேண்டாம்!!
கிறிஸ்துவின் சரீரம் என்னவாயிற்று என்று வேதம் சொல்லாத போது அதை குறித்து ஆறாய எனக்கு அவசியம் இல்லை!! ஆனால் கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுபவன் வேத பார்வையில் கள்ள போதகனே!!
என்ன கூட்டனி சேர்த்து தன் போய்யை நிறுப்பிக்க நினைக்கிறாயா!! வா, கிறிஸ்து சரீரத்துடன் தான் உயிர்த்தெழுந்தார் என்று நிரூபி, இல்லாவிட்டால் உன் கலெக்ஷன் தொழிலை விட்டு விடு!! நீ என்ன மற்றதை பிறகு பார்ப்பாய், இப்பவே பார்!! உனக்கு வசனம் தெரியாது, இத்துனை வசனம் காண்பித்து இதை நம்பாதாவர்கள் என்ன பெரிய சத்தியத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள்!! நீ கூட்டி வா உன் கூட்டத்தை, உனக்கு நான் பதில் தருகிறேன், உன்னை போல் வாந்தி எடுத்து இல்லை, வசனத்துடன் பதில் தருகிறேன்!! தைரியம் இருந்தால் நிரூபி இல்லாவிட்டால் உன் கேவலமான தொழிலையும் எழுத்தையும் விட்டு ஒழி!!
உன்னை போன்று சாக்கடையில் தொழில் நடத்தும் பன்றிக்கு எல்லாம் எந்த வகுப்பும் சரி படுத்தாது, உன் புத்தி அப்படி!!
இந்த கலெக்ஷன் கள்ள போதகன் சொல்லி கொடுத்த தவறான உபதேசங்கள் எல்லாம் வசனங்களுடன் இவன் சொல்லியது தவறு என்று சொன்னவுடன் இவனின் வழக்கமான வாந்தி எடுப்பது துவங்கியிருக்கிறது!!
பி.கு. இதை வாசித்தவுடன் கலெக்ஷன் கள்ள போதகனின் புதிய சீஷர்கள் என்னமோ இதை போல் ஒரு எழுத்தை பார்க்காத மாதிரி போய் எல்லா தளங்களிலும் கூப்பாடு போடுவார்கள்!!
இந்த விவாதத்திற்கு காரணமான ஜானிடம் கேட்கிறேன்,
இயேசு கிறிஸ்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்று ஒரு வசனத்தை காண்பியுங்கள், வேதத்தை புரட்டாமல்!!
ஜோசப்: //ஆமாய்யா நீங்கள் எழுதிய பதிவை பார்த்து உங்களது தளத்திலேயே பதில் எழுதலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் ஏற்கனவே உமது நாகரீகம் தான் ரொம்ப பிரபலமாயிற்றே, நீர் இங்கு வந்து இந்த பதிவை பார்ப்பீர் என தெரிந்து தான் இந்த தளத்தில் எழுதுகிறேன்
இயேசுவின் சரீர உயிர்தெழுதலுக்கு பின்
1) இயேசு சாப்பிட்டார் (லூக்கா 24:42-43) ஒருவேளை இயேசு ஆவியாய் இருந்தால் எப்படி சாப்பிட்டிருக்க முடியும்
2) மத்தேயு 28:9 இயேசுவின் ஆவியாக மட்டும் இருந்திருந்தால் அவரது பாதங்க்களை எப்படி தழுவியிருக்க முடியும், கொஞ்ச்சம் யோசிங்க்ணா...
3) தோமாவுக்கு காண்பித்தது (யோவான் 20:25) , ஒருவேளை அது இயேசுவின் சரீரமாக இல்லாமல் இருந்திருந்தால் தனது கையில் உள்ள ஆணி பாய்ந்த காயம் இருந்திருக்காது
4) யோவான் 20:19-20
இயெசுவின் உயித்தெழுந்த சரீரத்துக்கு கதவையும் தாண்டி வரும் ஆவிக்குரிய தன்மையும், ஏனையோர் சாப்பிடும் அதே முறையில் உணவு சாப்பிடும் மாம்சத்திற்குரிய தன்மையும் இருந்தது. இதுவே மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்த சரீரத்தின் தன்மை. அதன் வாயிலாக தான் இயேசு தனது காயங்க்களை காண்பித்தார்.
போங்க்க போய் உங்க ரசல் விட்டுட்டு போன மூல பாஷையில் ஏதாவது நூதனமாக எழுதி வச்சுட்டு போயிருப்பார். பாத்து வழக்கம் போல் சத்தியத்தை புரட்டுங்க...//
ஏன் அத்நாஷியஸ் என்கிற வேத புரட்டன் உமக்கு இதை குறித்து ஒன்றும் எழுதவில்லை என்கிற கவலையா உமக்கு!! மூடரகளின் கூட்டமே, உங்களிடம் கேட்டது, கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா என்பதற்கான நேரடியான வசனம்!! திரித்துவத்தை திரித்து சொல்லுவது போல், இயெசு சாப்பிட்டர், நகம் வெட்டினார் என்று சொல்லி திசை திருப்ப வேண்டாம்!! இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்றாரா என்பதற்கான நேரடியான வசனம் இருந்தால் சொல்லுங்கள்!!
நாகரீகத்தை குறித்து ஜோஸப் பேச வேண்டியதில்லை, தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உம்முடைய நாகரீகத்தை ஒருவர் வெளிப்படுத்தியதை நானும் வாசித்தேன், உம்முடைய நாகரீகத்தை நீரே ஒப்பு கொண்ட பதிவையும் வாசித்தேன்!! ஆகையால் முதலில் நீர் உம்மை நாகரீகப்படுத்திக்கொண்டு அதன் பின் அடுத்தவர்களை சொல்லலாம்!!
நான் கேட்ட கேள்வி என்ன, நீர் தொடங்கியிருக்கும் பதில் என்ன!! இப்படி தானே தேவையில்லாத வாதம் துவங்குகிறது!! உங்கள் அத்நாஷியஸ் இதை குறித்து விளக்கம் கொடுக்கவில்லை போல்!!
கிறிஸ்து ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு போதுமான வசனங்களை நான் கொடுத்திருக்கிறேன்!! உம்மிடம் அதற்குண்டான மாற்று வசனங்கள் இருந்தால் சொல்லும், சும்மா ரஸ்ஸல் ரஸ்ஸல் என்று வாந்தி எடுக்காதீர்!!
அடுத்து ஜான்:
//பவுல் அகிரிப்பாவிடம் இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து பேசும் போது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்று பேசுகிறார்.
* இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. (அப்போஸ்தலர் 26:32)
யூதர்களும் கூட இயேசுவின் கல்லறை வெறுமையை இருந்தது என்று ஒப்புக்கொண்டு, அவருடைய சீஷர்கள் சரீரத்தை திருடிக்கொண்டு போனதாய் Talmud ல் எழுதிவைத்து இருக்கிறார்கள். ஆவியில் புத்தர் எழுந்தார் என்று புத்தனுடைய சிஷனும் சொல்லலாம். முஹம்மது எழுந்தான் என்று ஒரு முஸ்லிம் சொல்லலாம். என்னடா அத்தாட்சி என்றால் "நான் பார்த்தேன்" என்பான். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அது போல ரசலின் சீஷர்கள் கேவலப்படுத்துகிறார்கள்//
அகிரிப்பாவிடம் சொன்னது இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து தானே அன்றி அவர் சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்பதாகவா? நீங்கள் எழுதியது ஒன்றும் வேதத்திலிருந்து இல்லை என்று மாத்திரம் நிச்சயம்!! நான் கேட்டது கிறிஸ்து இயேசு சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற நேரடியான வசனம்!!
//நல்ல பதில்கள் சகோ. ஜோசப்! வழக்கம் போல ரசல் கூட்டம் இயேசுவின் சரிரம் காத்துல கரைஞ்சு போச்சு என்று புளுகும். 1 கொரி 50 ஐ வழக்கம் போல தவறாக திரித்து கொக்கரிக்கும். அதற்கு மேலே பவுல் எழுதியுள்ள ஆவிக்குரிய 'சரிரம்' என்ன என்பதை வசதியாக மறந்து விடும். //
உங்கள் அத்நாஷியஸ் கூட்டத்தாருக்கு ரஸ்ஸலை எழுதாமல் தூக்கம் வராது, அல்லது விரல் நகராது போல்!! 1 கொரி 15:50ஐ காட்டி எழுதினால் அதற்கு மேல் ஆவிக்குரிய சரீரம் என்பதை குறித்து எழுதியிருப்பதி சுத்த தமாசு!! அத்நாஷியஸிடமே கேட்டு சொல்லுங்கள், ஏன் மாம்சமும் இரத்தமும் பரலோக ராஜியத்தை சுதந்தரிக்காது என்று!! 1 கொரி 15:50ஐ விளக்க முடியவில்லை, ஆனால் நாங்கள் தவறாக திரித்து கொக்கரிக்கிறோமா!! ஏன் நீங்கள் வந்து ஒழுங்காக வாந்தி பண்ணிவிட்டு போக வேண்டியது தானே!! விளக்கம் இருந்திருந்தால் தான் இந்த பதிவிலேயே விளக்கியிருப்பீர்களே, அத்நாஷியஸ் இரவில் வந்து விளக்கம் கொடுப்பார் என்று காத்து கொண்டு இருக்கிறீர்களோ!!
//எத்தனை மேலோட்டமான மதியீனமான கருத்து பாருங்கள்...இதுபோன்ற மௌடீகமான ஆசாமிகளால் தான் கொலைக்காரர்களே உருவாகிறார்கள் போலும்...இயேசுவை சிலுவையில் அறைந்த முறையிலிருந்து அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் உட்பட அனைத்தையுமே கேள்வி கேட்கும் இவனே நல்ல போதகனாம்,நாமெல்லாம் கள்ளப் போதகர்களாம்...இது எப்படி இருக்கு..? இவனுக்கு எப்படி விளங்கவைப்பது என்றே புரியவில்லை..!//
நீ கலெக்ஷன் கள்ள போதகன் தான்!! இல்லை என்று யார் சொன்னார்கள், அதையே நீயே தான் ஒப்புக்கொண்டு இருக்கிறாய்!! ஆவியில் தான் உயிர்த்தெழுந்தார் என்று இத்துனை வசனங்களும் காட்டியும், இல்லை சரீரத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்று கொக்கரிக்கும் கூட்டத்திற்கு ஒரு வசனமும் கிடைக்கவில்லையே!! இருந்தா தானே கிடைப்பதற்கு!! மாம்சத்தில் கொலையுண்டு ஆவியில் உயிர்த்தெழுந்தார்!! பிந்திய ஆதாம் உயிர்ப்பிக்கும் ஆவியானார்!! பூட்டிய கதவுகளில் வழியாக சரீரத்தை கொண்டு யாரும் நுழைய முடியாது!! சரீரம் எங்கே என்று கெட்டால் எனக்கு என்ன தெரியும், அது ஒன்றும் வேதத்தில் இல்லை, அது வெளிப்படும் போது நிச்சயமாக விளங்கும்!! இவர்கள் கூட்டத்தில் பலர் பரலோகத்திற்கு விஸிட் அடித்து வருகிறார்களே, அவர்கள் போய் கிறிஸ்து சரீரத்தில் இருக்கிறாரா என்று பார்த்த்டு வரட்டுமே, விட்டலாச்சாரிய கதை மன்னர்கள்!! போட்டி போட்டுக்கொண்டு கலெக்ஷன்!!
என்னூடைய எழுத்துகளினால் கேள்விகள் கேட்க்கப்படலாம், உன்னுடைய எழுத்து தான் கொலைவெறியை தூண்டும் எழுத்து என்பதை விரல் சூப்பும் குழந்தைக்கூட (குழந்தைகள் அவதார் கொண்டிருக்கும் ஒரு பெரிய பட்டாளம் இருக்குதே உனக்கு) விரலை எடுத்து சொல்லிவிட்டு, மீண்டும் விரல் சூப்ப ஆரம்பிக்கும்!! அப்படி ஒரு மிருக குணம் உனக்குள் இருப்பதை வெளிநாட்டவர்களுக்கு தெரியுதோ தெரியவில்லையோ, எனக்கு தெரியும்!! கேளிவியால் தான் ஞானம் வரும், உன்னை போல் மாய்மாலம் செய்வதால் வராது!! நான் என்னை ஒரு போதும் போதகன் என்று சொன்னதில்லை, ஆனால் கள்ள போதகனான உன்னை பலர் போதகர் என்று தான் சொல்லுகிறார்கள், அது எனக்கு தான் தெரியும் நீ எப்படி பட்ட போதகன் என்று!! கிறிஸ்து ஒருவரை தவிர எனக்கு போதகர் கிடையாது!! உன்னால் அப்படி சொல்ல முடியாது, ஏனென்றால் உன்னையே எல்லோரும் போதகர் என்று சொல்ல நீ விரும்புகிறாய், விட்டு விடு!! இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த முறை, அவர் உயிர்த்தெழுந்த நிலை, எல்லாம் நான் வேதத்தின் படி தான் எழுதுகிறேன்!! புரிஞ்சதா!!
கிறிஸ்துவின் சரீரம் எங்கே மறைக்கப்பட்டிருக்கிறது என்பது வேதத்தில் வெளிப்படுத்தப்படவில்லை, ஆகவே நான் அதை குறித்து விளக்கம் அளிக்க அவசியம் இல்லை என்கிறேன்!! கானாததில் துனிச்சலாக நுழையும் குணம் உனக்கு வேண்டுமென்றால் இருக்கலாம், ஏனென்றால் நீ பிரசித்தி பெற்ற கள்ள போதகன், ஆனால் அந்த தைரியம் எனக்கு இல்லை!! மறைவானது எல்லாம் கர்த்தருக்கு உரியது என்பதை நான் நம்புகிறேன்!!
தொடரும்................
பி.கு. இவனுங்களுக்க்கு வசனம் தெரியவில்ல்லை என்றால் இவனுங்களின் அடுத்த வார்த்தை ரஸ்ஸல்!! பரவாயில்லையே ரஸ்ஸலையும் வசனத்துக்கு பதிலாக எழுதுகிறார்கள்!!
ஜோஸப்: //வேதபுரட்டனான ஏரியனின் சீடர் கூவ ஆரம்பித்துவிட்டார். இயேசு ஆவியில் மாத்திரம் உயிர்த்தெழுந்திருந்தால் அவரது சரீரம் எங்கே என்பதற்கு பதிலை காணோம். சரீர பிரகாரமாக உயிர்த்தெழப்போய் தான் அவரால் சரீரப்பிரகாரமானவர்கள் செய்வதையெல்லாம் செய்ய முடிந்தது. இட்லி கொப்பரையில் இருந்து வரும் ஆவியை உம்மால் இட்லி என நினைத்து சாப்பிட முடியுமா. சரீர பிரகாரமாக இயேசு காணப்படப்போய் தான் அவரால் சாப்பிடவும், தனது சீடனை தொடவும் அனுமதிக்கமுடிந்தது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லை பேச வந்துவிட்டார்.
தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அந்த நபர் எவ்வாறு நாகரீகமாக பேச ஆரம்பித்தார் என்பது தெரியுமா அல்லது உமது பாரபட்சமான கண்களுக்கு தெரியவில்லையா. அப்போது கூட எனது எழுத்துக்களை திரும்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கும் தன்மையை எனக்கு ஆண்டவர் கொடுத்திருந்தால். உம்மை போல் மூச்சுக்கு 300 தரம் மூடனே என நான் கூவவில்லை. இப்பவும் அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முயற்சியில் தான் உள்ளேன், நீர் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டாம்.
இயேசு, இந்த ஆலயத்தை இடித்து போடுங்க்கள் அதை நான் திரும்பவும் எழுப்புவேன் என தன் சரீரத்தை குறித்து தான் சொன்னார். இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் நான் ஆவியில் வந்து எனது சரீரத்தை காணாமல் போக செய்துவிடுவேன் என சொல்லவில்லை.
நம்து சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயம் என 1 கொரி 6:19 இல் இருக்கிறது. நமது சரீரத்தை ஆலயம் என வேதம் வர்ணிப்பதை கவனியுங்கள். இயேசுவின் உயிர்த்தெழுந்த மகிமையான சரீத்தால் பூட்டிய அறை வீட்டுக்குள் ஊடுருவவும் முடிந்தது அதே சமயத்தில் தனது சீடனை தொட்டுப்பார்க்கவும் அனுமதித்தார் இயேசு. //
தன் சீடனை தொட்டு பார்க்க அனுமதித்த கிறிஸ்து இயேசு மரியாளை தொடவிடவில்லை என்பது எல்லாம் ஆறாய்ந்துபார்க்க வேண்டும்!! தன் அப்போஸ்தலர்களுக்கு தான் உயிர்த்தெழுந்தாகிவிட்டது என்று வெளிப்படுத்தவும், அவர்களை திடப்படுத்தி சாட்சிகளாக ஏற்படுத்தவுமே தன்னை அந்த மாதிரி வெளிப்படுத்தினார்!! ஓர் இடத்தில் தோட்டக்காரரை போலவும், மற்றோரு இடத்தில் வழிப்போக்கனை போலவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாக தன்னை வெளிப்படுத்தியவர் சரீரம் இருந்ததினால் அல்ல, ஆவியாக இருந்ததினால் மாத்திரமே!!
ஆவிக்குறிய சரீரம், மாம்சத்துக்குறிய சரீரம் என்று இருவருக்கும் சரீரம் என்பது தன்மையை விவரிக்கவே உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகள்!! அதை வெறும் மாம்சம் அல்லது ஆவி என்று வாசித்தாலும் அர்த்தம் மாறாது!!
சுத்து வளைத்து இத்துனை பேசு நீங்கள், அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று வசனம் தந்து விவாதத்தை முடித்து வைக்கலாம்!! இப்பொழுது கிறிஸ்து இயேசு சரீரத்தில் இருக்கிறாரா, அல்லது ஆவியானவராக இருக்கிறாரா?? மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிக்காது என்றால் என்ன?? சரீரத்தோடு பூட்டிய அறைக்குள் நுழைய முடியுமா!!
நாகரீத்தை குறித்து பேசும் நீங்கள் மண்ணிப்பு கேட்டது பெரிய விஷயம் கிடையாது!! ஆனால் மண்ணிப்பு கேட்கும் அளவிற்கு எழுதியிருக்கிறீர்கள், அப்படி என்றால் உங்களுக்கும் கோபம் வரும், அந்த கோபம் மற்றவர்களுக்கு வரும் போது அதை ஏன் கேள்வி கேட்க்கிறீர்கள் என்று தான் உங்களை கேட்டேன்!! எனக்கு மண்ணிப்பு கேட்கும் சுபாவம் உண்டு என்று சொல்லி தங்களை மேன்மை படுத்திக்கொள்கிறீர்கள்!! உங்களுக்கு பிறர் எழுதும் போது என்ன உணர்சிகள் வருகிறதோ, அதே தான் அடுத்தவர்களுக்கு வரும் என்பதை மறந்து விட வேண்டாம்!!
உயிர்த்தெழுதலில் இரண்டு விதம் இருக்கிறது, மேன்மையான உயிர்த்தெழுதல் கிறிஸ்துவின் சாயலில் ஆவியான் உயிர்த்தெழுதல், பொதுவான உயிர்த்தெழுதல், சரீரத்தில் நடக்கும் உயிர்த்தெழுதல்!! இந்த பூமியில் மாத்திரமே சரீரத்திற்கு வேலை இருக்கு, பரலோகத்திற்கு இந்த சரீரத்துடன் போக முடியாது, இந்த மாம்சத்தில் போக முடியாது, ஏன் ஒரு குறிப்பிட்ட எல்லையை கடக்க வேண்டுமென்றால் கூட நமக்கு வேறு உபகரனங்கள் தேவைப்படுகிறது!!
Darby Bible Translation But this I say, brethren, that flesh and blood cannot inherit God's kingdom, nor does corruption inherit incorruptibility.
இப்படி மாம்சமோ இரத்தமோ தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது என்று பவுல் சொல்லுகிறார்!! இதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்!! பிறகு எப்படி இயேசு உட்கார்ந்து மீண் சுட்டு சாப்பிட்டிருக்கிறார், கடல் மீது நடந்திருக்கிறார்!!
அதாவது கடல் மீது நடக்க அவருக்கு மாம்சம் தேவைப்பட்டதா!! இல்லை, அவரின் பயந்து நடுங்கி போன அப்போஸ்தலர்களுக்கு உயிர்த்தெழுந்து வந்திருப்பவர் தான் தான் என்று தெளிவாக புரியும்படியே அவர் மாம்சத்தில் இருந்த நாட்களின் சில பல செயல்களை செய்து காண்பித்திருக்கிறார்!! தன் பிதாவிடத்திலிருந்து, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களையும் பெற்ற கிறிஸ்துவிற்கு தான் விரும்புகிற படி அப்போஸ்தலர்களிடம் தரிசனம் ஆகி அவர்களை சாட்சிகளாக உருமாற்ற எல்லாவற்றையும் செய்து காண்பித்திருக்கிறார்!! இப்படி அவர் கண்களுக்கு தெரியாத ஆவியாக இருந்து, இதோ நான் தான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்திருக்கிறேன், என்று சொல்லியிருந்தால், ஏற்கனவே பயந்து நடுங்கி வீடுகளில் பதுங்கியிருந்த சீஷர்கள் இன்னும் பயந்து தான் போய் இருப்பார்கள்!!
மோசேயின் சரீரத்தை தேவனே அடக்கம் செய்தார் என்று இருக்கும் போது, கிறிஸ்துவின் சரீரத்திற்கும் தேவனே நிச்சயமாக ஏற்பாடு செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை, இது நிச்சயமாக வேதத்தில் இல்லை, வேதத்தில் இல்லாததை யாரும் நம்ப வேண்டும் என்றோ, நம்புங்கள் என்றோ நான் சொல்லுவதில்லை!! இது என் தனிப்பட்ட கருத்து!!
//இப்பதான் இயேசு ஆவிக்குரிய வகையில் தான் உயிர்தெழுந்தார் என்றீர்கள் அதற்குள் மேலும் ஒரு வகையறாவை உள் நுழைத்திருக்கிறீர்கள். சரீரத்தில் நடக்கும் உயிர்த்தெழுதல் அதற்கப்புறம்.... சரீரத்தை விட்டுவிட்டு பரம் ஏறி போய் விடுவோமா?...//
என் பதிவில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது, இந்த சரீரத்திலோ மாம்சத்திலோ பரம் ஏறி போக முடியாது, இந்த சரீரத்தில் உயிர்த்தெழுபவர்கள் இந்த பூமியில் வாழ்வார்கள்!! கிறிஸ்துவின் சாயலை தரித்துக்கொள்வோர் அவர் இருக்கும் அதே ஆவியின் தன்மையில் பரலோகம் செல்வார்கள்!! இதை தான் நான் சொல்லியிருக்கிறேன்!! 1 கொரிந்தியர் 15:50!!
உயிர்த்தெழுவோர் அனைவரும் பரலோகம் சென்று விடுவார்கள் என்பது கிறிஸ்தவத்தின் தவறான ஒரு போதனை!! ஆனால் பரலோகம் போகாமல் இருந்தாலும், இந்த பூமியில் நித்தியத்திற்கும் மனிதன் வாழ்வான் என்பது வேதம் தரும் நம்பிக்கை!!
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு பிறருக்கு நித்திய ஜீவனை தரும் அதிகாரத்தை பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்!! ஆகவே உயிர்ப்பிக்கிற ஆவியானார், உயிர்ப்பிக்கிறா மாம்சமானார் என்று இல்லை!!
//எப்படி இது என்ன மூல பாஷை வகையறா விளக்கமா? //
In the Form of Spirit or in the Form of Flesh!! Body is used to define whether the subject is Spirit or Flesh. God is Spirit, says the Bible!! He is in Heaven, says the bible, Flesh and blood cannot inherit God's kingdom, says the bible!! So with fleshly body Christ cannot enter the heaven, breaking all divine rules!! As God is Spirit, So is Christ!!
கோல்டா: //பிலிப்பியர் 3:21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.//
அதற்கு மேலே உள்ள வசனத்தையும் சேர்த்து வாசித்தோமென்றால், இப்ப இருக்கிறா இந்த மாம்ச சரீரத்தை அழித்து போட்டு, தான் இருக்கும் ஆவியின் ரூபத்திற்கு (மறு ரூபம்) மாற்றுவார்!! ஏனென்றால் பரலோகத்தில் இரத்தத்தோடும், மாம்சத்டோடும் இருக்க முடியாது என்பது அப்போஸ்தலர்களுக்கு தெரியும்:
பிலிப்பியர் 3:20. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
//ஒரு பத்து வயது பிள்ளை வேதம் வாசித்தால் கூட, நரகம் உண்டு, தேவ தூதனுக்கு கால் உண்டு, இயேசு கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்து விடும்.
இவங்க ஏன் இப்படி இருக்காங்க என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.//
ஒரு பத்து வயது பிள்ளை வேதத்தை வாசித்தால் நிச்சயமாக அவனுக்கு சொல்லிக்கொடுத்தப்படியே புரிந்துக்கொள்ளுதல் உண்டாகும்!! இயேசு கிறிஸ்து சரீரத்தில் (மாம்சத்தில்) உயிர்த்தெழுந்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா!!?? பத்து வயது சிறுவன் புரிவது இருக்கட்டும், நீங்கள் இதற்கு வசனம் காண்பிக்கலாமே!! இவங்க வேதத்தை ஆறாயந்து கொண்டிருப்பதால் இவர்களை புரிந்துக்கொள்ளவே முடியாது!!
ஜானுக்கு கொஞ்சம் நாகரீகம் இருக்கிறது: //விடை உங்கள் கேள்வியிலே இருக்கு சகோதரியே. இவர்கள் வாசிப்பது வேதம் அல்ல, யாரோ ஒரு பொறம்போக்கு எழுதிய புத்தகம். வேதம் அந்த பொறம்போக்கு எழுதிய புத்தகத்திற்கு ஒத்து போக வில்லை என்றால் வேதத்தை மாற்றிவிடுவார்கள்.//
கோல்டாவின் கேள்விக்கு நான் விடைக்கொடுத்துவிட்டேன்!! ஒரு மொழிப்பெயர்ப்பை அல்ல, அந்த "பொறம்போக்கு" மரித்த பிறகு பல மொழிப்பெயர்ப்பு வந்து விட்டது!! அதை எல்லாவர்றிலுமிருந்து தான் ஆறாய்ந்து பார்க்கிறோம்!! இன்று வேத பண்டிதர்கள் என்று சொல்லுவோர் அனைவருமே பொறம்போக்குகளை போல் பல மொழிப்பெயர்ப்புகளிலிருந்து தான் ஆறாய்ச்சி நடத்தி விடை காண முயற்சிக்கிறார்கள்!! தேடுவோர் எல்லாரும் பொறம்போக்குகளாகவே இருந்துவிட்டு போகிறோம், ஏனென்றால் தெடுகிறவன் கண்டடைவான்!! மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் பத்து வயது பிள்ளைக்கு தெரியும் நரகம் நிச்சயமாக எனக்கு தெரியாது!!
//இதற்குப் பின்னரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் சரீரப் பிரகாரமானது அல்ல என்று யாராவது கூறுவார்கள் எனில், அவர்கள் மூளையை எங்கே கழற்றி வைத்தார்கள் என்றுதான் கேட்க வேண்டும்?//
இயேசு கிறிஸ்து மாம்சத்தில் கொலையுண்டு ஆவியில் உயிர்த்தெழுந்தார்!! பிந்திய ஆதாம் உயிர்ப்பிக்கும் ஆவியானார்!!
இன்னும் அநேக வசனங்கள் இந்த கூட்டத்தாருக்கு காண்பித்தாகிவிட்டது!! அவர் சப்பிட்டார், தண்ணீரின் மேல் நடந்தார், எலும்புகள் இருந்தாலும் பூட்டிய அறைக்குள் மாயாவி போல் நுழைந்தார் என்று கேட்டவைகளுக்கும் பதில் தந்தாகிவிட்டது!! ஆனால் இயேசு கிறிஸ்து மாம்சாத்தில் அல்லது மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்கிற ஒரு வசனத்தை காண்பிக்க சொன்னால், அத்நாஷியஸின் சீட கூட்டத்திற்கு காண்பிக்க வசனம் இல்லை!! பத்து பேர் சேர்ந்து பேசினால் அது பதில் இல்லை, வேறு ஒன்று!! வசனத்தை கேட்டால் வசனம் சொல்லுங்கள், அத்நாஷியஸ்தனமாக பேசி மூளை இல்லை என்று நிரூபிக்க வேண்டாம்!! நாங்களாவது எடுத்துக்கொள்ளும் தூரத்தில் மூளையை கழற்றி வைத்திருக்கிறோம், ஆனால் மூளையே இல்லாமல் அல்லது அதை இழந்து பேசுவது போல் இருக்கிறது உங்கள் தர்க்கங்கள்!!
சரீரம் கானவில்லை என்றால் அவர் மாம்சத்தில் உயிர்த்தெழுந்துவிட்டாராம்!! அப்படி என்றால் மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிக்கம்மாட்டாது (1 கொரி. 15:50) என்பதற்கு அத்நாஷியஸ் வேறு விளக்கம் ஏதும் வைத்திருக்கிறாரா!! வேதத்தில் இல்லாததை சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரே என்பது அவரின் விசுவாச பிரமானம் ஒன்றே சாட்சியாக இருக்கிறது, அத்நாஷியஸின் சீடர்கள் அவரையும் மிஞ்சியவர்களாக தான் இருக்க முடியும்!!
இப்படி மாம்சத்தோடு தேவனின் ராஜியத்தை சுதந்தரிக்க முடியாது என்கிறா ஒரு தெய்வீக சட்டம் (Divine Law) இருந்தும் அதை கிறிஸ்துவே மீறுகிறார் என்று அல்லவா நீங்கள் பேசி வருகிறீர்கள்!!
//அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். (லூக்கா:24)//
தன்னை அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் ஏன் தொட்டு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களிடம் மாத்திரம் ஏன் பிரத்யட்சமாக கானப்படவேண்டும் என்று எல்லாம் யோசிக்காமல், அப்படியே அத்நாஷியஸின் போதனையை ஏற்றுக்கொள்ளுவதினால் வரும் வினை தான் எங்களை மூளையை கழட்டி வைத்தவர்கள் என்று சொல்லும் துனிச்சல்!!
அவர் அப்போஸ்தலர்களை தனக்கு சாட்சிகளாக உலகம் எங்கும் அனுப்புவதற்காகவே அவர்களை திடப்படுத்தி, உயிர்த்தெழுந்தது தான் (இயேசு கிறிஸ்து) தான் என்று அவர்கள் சாட்சி சொல்லும்படியாக, அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில் செய்த சில பல காரியங்களை மீண்டும் அப்போஸ்தலர்களிடத்தில் செய்து காண்பித்தார்!!
அப்போஸ்தலர் 10:40. மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார். 41. ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.
ஏன் அனைவருக்கும் பிரத்தியட்சமாய் தன்னை வெளிப்படுத்தியிருக்கலாமே!! இது மட்டுமா, பவுல் சொல்லுகிறார்,
II கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
இனி ஒரு போதும் கிறிஸ்துவை மாம்சத்தில் அறியோம் என்கிறார் அப்போஸ்தலர்!! அப்படி என்றால் அவர் மாம்சத்துடன் அல்லது மாம்ச சரீரத்துடன் பரலோகத்தில் வீற்றிருக்கிறார் என்பது அத்நாஷியஸின் போதனை தானே!! அப்போஸ்தலர்களுக்கு தரிசனமான கிறிஸ்து இயேசு, பவுலிடம் வரும் போது பவுல் கானமுடியாமல் குருடாகி போகிறான், இது தான் கிறிஸ்து மகிமை அடைந்த நிலை!! யாரோ ஒருவர், கிறிஸ்து உயிர்த்தெழுந்தவுடன் மகிமையான சரீரத்தில் இருந்ததால் தான் எழும்பு இருந்தும் பூட்டிய அறைக்குள் நுழைய முடிந்தது என்று எழுதினார்!! மகிமை அடடிந்த கிறிஸ்துவை காணாதப்படிக்கு பவுல் குருடாகி போனான், அவரின் அன்பு சீஷன் யோவான், செத்தவனை போல் விழுந்தான்!!
//இதை எழுதினாலும் ஏரியனின் சீடர்களுக்கு புரியாது. இப்படி இரண்டு விதமான சரீரங்கள் இருப்பதால் தான் இவற்றை வேறுபடுத்தி வேதம் காண்பிக்கிறது 1 கொரி 15:44. இந்த உயிர்தெழுதலை தான் இயேசு நடத்தி காண்பித்தார். அந்த வசனத்தை நன்றாய் பாரும் ஜென்ம சரீரம், ஆவிக்குரிய சரீரம் என இரண்டு சரீரங்க்கள் இருப்பதை. வேதத்தை யார் புரட்டுகிறார்கள் என்பது புரிந்தால் சரி.//
இரண்டு சரீரங்கள், அதாவது ஜென்ம சரீரம் என்பது மாமிச சரீரம்!! ஆவிக்குறிய சரீரம் என்பது மாமிசம் இல்ல்காத சரீரம்!! இதில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து எந்த சரீரத்தில் இருந்தார் என்றால் அவர் இரண்டு சரீரத்திலும் இருந்ததாக சொல்லுகிறீர்கள்!! அத்நாஷியஸ் ரொம்பவும் குழப்பிவிட்டன் போல்!!
ஜென்ம சரீர்மான மாம்சம் அழிந்து போன பிறகே, ஆவிக்குரிய சரீரம் வருகிறது!! சரி உங்களுக்கு கேள்வியை இப்படி கேட்க்கிறேன்,
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது மாமிச சரீரத்திலா அல்லது ஆவிக்குறிய சரீரத்திலேயா!!??
கிறிஸ்துவின் மாம்சத்தின் சரீரம் விதைக்கப்பட்டு ஆவிக்குரிய சரீரமே எழுந்தது!! இதற்கு ஏரியஸின் சீஷராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, வேத புத்தகத்தை கையில் வைத்திருந்தால் போதும்!!