'கடைசி நாட்கள்' என பைபல் அலைகிற இந்தக் காலப்பகுதியிலும் கடவுளை நேசிப்பவர்களைப் பளிச்சென அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது!!!!! இந்தக் கடைசி காலத்தில் மக்கள் II தீமோத்தேயு 3 : 1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், ..... இருக்கிறார்கள்.
கடவுளை நேசிக்கிற மக்களை நீங்கள் எப்படி அடையாளம் காணலாம்? ''நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்'' என்று பைபல் கூறுகிறது. (I யோவான் 5 :3 ) கடவுள் மீதுள்ள அன்பு, பைபளிலுள்ள ஒழுக்கநெறிகளுக்கு மதிப்புக் கொடுக்க மக்களைத் தூண்டுகிறது. உதாரணமாக, செக்ஸ், திருமணம் பற்றிய சட்டங்கள் கடவுளுடைய வார்த்தையில் உள்ளன. கணவன் மனைவிக் கிடையில் மட்டுமே பாலுறவு இருக்க வேண்டுமெனவும், திருமணம் நிரந்தர பந்தமாக இருக்க வேண்டுமெனவும் அது சொல்கிறது. (மத்தேயு 19 : 9 ; எபிரெயர் 13 :4 ).... மேலுமான பதிவுகள் தொடரும்
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )