ஆதியாகமம் 27 : 18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். 19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.
ஆதியாகமம் 27 : 18 ,19 - ல் காண்கிறபடி, ஏசாவைப் போல யாக்கோபு நடித்தது தவறில்லையா ?
இந்தச் சம்பவம் உங்களுக்கு நன்கு தெரிந்து இருக்கலாம். 'நான் புசிக்கவும், நான் மரணமடைய முன்னே என் ஆத்துமா உன்னை ஆசிர்வதிக்கவும்" ஏதேனும் மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவரும்படி, வயதான காலத்தில் ஈசாக்கு தன மகன் எசாவிடம் சொன்னார். தன கணவர் சொன்னதைக் கேட்ட ரெபெக்காள் ருசியான உணவைத் தயாரித்தாள், பின்னர் யாக்கோபிடம், "உன் தகப்பன் தாம் மரணமடைய முன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிபபதட்க்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோக வேண்டும்'' என்று தெரிவித்தால். பிறகு, ஏசாவின் உடைகளை யாக்கோபு அணிந்துகொண்டார்; தன கழுத்திலும் கைகளிலும் வெள்ளாடுக்குட்டிகளின் தோலோடு, அந்த ருசியான உணவை எடுத்துக்கொண்டு தன தகப்பனிடம் சென்றார். ''நீ யார், என் மகனே'' என்று ஈசாக்கு கேட்டபோது, ''நான் உமது மூத்த மகனாகிய ஏசா'' என்று அவர் பதில் அளித்தார். அவரை ஈசாக்கு நம்பினார், ஆசிர்வதித்தார். (ஆதியாகமம் 27 :1 -29)
ரெபெக்காலும் யாக்கோபும் ஏன் அந்த விதமாய் நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பைபல் தருவதில்லை; எனினும், திடீரென இத்தகைய சூழ்நிலை எழுந்ததாக அது குறிப்பிடுகிறது. ரெபெக்காலும் யாக்கோபும் செய்ததை கடவுளுடைய வார்த்தை அங்கீகரிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை; ஆக, பொய் சொல்வதற்கோ எமாற்றுவதட்ட்கோ இச்சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். இருப்பினும், பைபல் அந்தச் சூழ்நிலையேக் குறித்து தகவல் தருகிறது.
முதலாவதாக, தன தகப்பனின் ஆசிர்வாதத்தைப் பெற யாக்கோபுக்கு உரிமை இருந்தது, அந்த உரிமை ஏசாவுக்கு இருக்கவில்லையென அந்தப் பதிவு தெளிவாய் காட்டுகிறது. முன்னர், இந்த இரட்டையரில் ஒருவரான ஏசா, ஒரு வேலை உணவுக்காக தன சேஷ்ட புதிரபாகதைத், அதாவது தலைமகன் உரிமையே மதிக்காமல் விற்றுப்போட்டிருந்தார்,அப்போது அதை யாக்கோபு முறைப்படி வாங்கி இருந்தார். ஏசா 'தன சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினார்'' (ஆதியாகமம் 25 : 29 -34 ) எனவே, நியாயமாய் தனக்குச் சேர வேண்டிய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளவே யாக்கோபு தன் தகப்பனை அணுகினார்.
இரண்டாவதாக, தான் யாக்கோபை ஆசிர்வதிதத்தை ஈசாக்கு அறிந்தபோது, அதை மாற்றுவதற்க்கு அவர் முயற்சி செய்யவில்லை. இந்த இரட்டயர்கள் பிரப்பதட்க்கு முன்பாக ரேபெக்காளிடம், "மூத்தவன் இளையவனைக் சேவிப்பான்" என கர்த்தர் சொல்லி இருந்ததை ஒருவேளை அவர் நினைவுபடுத்திப் பார்த்து இருக்கலாம். ஆரானுகுச் செல்ல யாக்கோபு புறப்பட்ட போது முன்பை விட இன்னும் அதிகமாய் அவரை ஈசாக்கு ஆசிர்வதித்தது கவனிக்க வேண்டிய குறிப்பு.- ஆதியாகமம் 28 : 1 -4
இறுதியாக, நடந்த எல்லாவற்றையும் தேவன் கவனித்து வருகிறார், அவற்றில் அக்கறை காட்டினார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்: ஈசாக்கு அளித்த அந்த ஆசிர்வாதம், ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறிதியோடு சம்மந்தப் பட்டிருந்தது. ஆதியாகமம் 12 : 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
அந்த ஆசிவாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்ள கூடாதென தேவன் நினைத்து இருந்தால் ஏதாவதொரு விதத்தில் அவர் அதில் குறிக்கிட்டு இருப்பார். மாறாக, அதை யாகொபுகு பின்வருமாறு உறுதிப்படுத்தினார்: ''உன்சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசிர்வதிக்கப்படும்.- ஆதியாகமம் 28 : 10 -15 நன்றி
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )