kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பெரிய வெள்ளி பிதற்றல்கள்"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
"பெரிய வெள்ளி பிதற்றல்கள்"


இதோ இன்னொரு பெரிய வெள்ளி வருகிறது. ஆவியில் நிறைந்த தேவஊழியர்கள்(?) ஸ்பெஷல் செய்திக்கு கூடுதல் பணம்வசூல் செய்வார்கள். சிலுவை வார்த்தை தியானங்களுக்குப் பஞ்சமில்லை. எல்லாரையும் குழப்பும் இந்த வசனம்தான் சுவாரஸ்யமான விஷயம். ஒவ்வொரு ஊழியக்காரனும் ஒவ்வொருவிதமாக பேசுவான்.

நடுநிலைக் கிறிஸ்த்தவர்களே இந்த பெரியவெள்ளியன்றாவது விழித்துக்கொள்ளுங்களேன்.

சீசன் கருதி மறுபடியும் பதிக்கப்படுகிறது.

இன்றைக்கு என்னோடு பரதீசிலிருப்பாய்",

 

 

 

 

 

"Today shalt thou be with me in Paradise".Luke23:43

மிகவும் பிரசித்தமான இந்த வசனம் அனேகமாக எல்லா பெரிய வெள்ளிக்கிழமைகளிலும் தியானிக்கப்படுகிறது. நாமும் சற்று விவாதிக்கலாமே?

இயேசு கிறிஸ்து "மரித்து" மூன்றாம் நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்றும் தேவன் அவரை மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள்தான் "உயிரோடு" எழுப்பினார் என்றும் நாம் நன்கறிவோம். இப்படியிருக்க இந்த "நல்ல கள்ளனை" மாத்திரம் அன்றைக்கே எப்படி பரதீசுக்கு கூட்டிச்சென்றார்?

பரதீசு என்றால் என்ன? அது எங்கிருக்கிறது?

யாராவது விளக்கலாமே? உங்களை "நடத்தும்" உங்கள் பாஸ்டர் மார்களிடமாவது கேட்டு பதிக்கலாமே?

பெரிய வெள்ளி அன்று பிரசங்கிக்கப்படும் இந்த வசனம் மொழிப்பெயர்ப்பாளர்களின் இயேசு கிறிஸ்துவை பற்றிய அறிவையே வெளிப்படுத்துகிறது. மரித்து மூன்று நாள் அளவு கல்லறையில், பின்பு 40 நாட்கள் வெவ்வேறு விதமாக தம் அப்போஸ்தலர்களுக்கு, சீடர்களுக்கும் திடப்படுத்தும் படியாக இந்த பூமியிலேயே தங்கியிருந்த இயேசு கிறிஸ்து ஏன் தான் அப்படி சொன்னார் என்று ஒரு பிரசங்கியாவது யோசிக்கிறாரா?

ஒரு கமா (,) வினால் ஒரு தவறான கோட்பாடு அல்லது பிரசங்கமே உருவாக காரணமான கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பாளர்கள் மற்றும் இதை மொழிப்பெயர்த்த "பரிசுத்த வேதாகமம்" காரர்கள் தான் பொறுப்பாகிறார்கள்.

பரதீசு என்றால் தோட்டம் (Garden). பூமியை உருவாக்கி அப்படி பட்ட ஒரு பர்தீசில் தான் தேவன் ஆதாமை வைத்தார். முதலாவது பரதீசு என்பது பாரசீக வார்த்தை என்பதையே நம் ஊழியர்கள் அறிவார்களோ என்று தெரியவில்லை! இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு ப‌ர‌தீசாக‌ தான் இந்த‌ பூமி "முந்த‌ய‌ சீருக்கு" திரும்பும் என்று தேவ‌ன் வாக்க‌ளித்திருக்கிறார். அதுவே, ந‌ம் கிறிஸ்துவின் அர‌சாட்சியும், அதை தொட‌ர்ந்து  நித்தியத்திற்கும் இந்த பூமியில் வாழ‌ப்போகும் ஒரு இட‌மாக‌ இருக்க‌ போகிற‌து.

ந‌ம்ம‌வ‌ர்க‌ள் 2 கொரி. 12ம் அதிகார‌த்தில் வ‌ரும் மூன்றாம் வாண‌ம், ப‌ர‌தீசு என்று குழ‌ம்பி போய், விசுவாசிக‌ளையும் (!!) குழ‌ப்பிவிட்டு வ‌ருடாவ‌ருட‌ம் ஒரு பிர‌ச‌ங்க‌ம் வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்


Verily I say unto you, Today you will be with me in Paradise.


Verily I say unto you today, you will be with me in Paradise.

மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன் "இன்றைக்கு என்னோடு பரதீசிலிருப்பாய்". -இது தவறான மொழிபெயர்ப்பு.

"மெய்யாகவே இன்றைக்கு நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ என்னோடு பரதீஸிலிருப்பாய்". சரியான மொழிபெயர்ப்பு.


ஒரு கமா படுத்தும் பாடு. ஆவியில் நிறைந்து பிரசங்கிக்கும் ஊழியர்களுக்கு அவர்களது 'ஆவியானவ்ர்' இந்த சிறிய கமா விஷயத்தைக்கூட சொல்லிக்கொடுக்காதது ஏனோ?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

/////இப்படியிருக்க இந்த "நல்ல கள்ளனை" மாத்திரம் அன்றைக்கே எப்படி பரதீசுக்கு கூட்டிச்சென்றார்?////

 

கள்ளன் = திருடன் , களவானி, மற்றவர் பொருளை அபகரிப்பவன் , இழிவானவன் ,

அது என்ன நல்ல கள்ளன் ??



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஓ அதுவா? பரதீசுக்கு இயேசுகிறிஸ்துவால் அழைத்துச்செல்லப்படுபவன் கெட்ட கள்ளனாக இருக்கக்கூடாதே அதான் 'நல்ல கள்ளன்'.


 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

ஓ............................... இப்படி௬ட  சொல்லலாமோ , ஆனா எப்படி தான் சரியா சொல்றது 


வலப்பக்கத்தில் உள்ள கள்ளன் (அ) அவரை ஏற்று  கொண்ட கள்ளன் இப்படி  சொல்லலாமே !!!!!!!!!!!


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

லூக்கா 23:42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அந்த கள்ளனுக்கு கூட இயேசு கிறிஸ்து ராஜியத்தை ஸ்தாபிக்கும் ஒரு நாள் வரும் என்று தெரிந்திருந்ததினால் தான் நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது என்று அந்த ராஜியத்தை குறித்து கேட்டிருக்கிறான்!! அந்த கள்ளனுக்கு தெரிந்தது கூட ஒரு குருட்டு கூட்டத்திற்கு தெரியவில்லை, ஏனென்றால் வேத புரட்டன் அத்நாஷியஸின் சீஷர்கள் இவர்கள்!! அத்நாஷியஸ் தான் இவர்களிடம் வந்து கள்ளன் அன்றே கிறிஸ்துவுடன் (கிறிஸ்து சரீரத்தில் இருந்தாராம்) பரதீசுக்கு (இவர்கள் இதை பரலோகம் என்பார்கள்) கூட்டி போய் இருக்கிறார் என்று சொல்லிக்கொடுக்கும் போது, பாவம் இவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தானே இவர்களின் விசுவாச வெளிப்பாடு!!

ராஜியத்தில் வரும்போது தன்னை நினைவுக்கூறும்படியாக கேட்ட கள்ளனிடம், மூன்று நாட்கள் பின் உயிர்த்தெழ இருக்கும் கிறிஸ்து இயேசு எப்படி இன்றே நீ என்னுடன் பரதீசில் இருப்பாய் என்று கேட்டிருக்க முடியும்!! அத்நாஷியஸ் என்கிற புரட்டனின் போதகத்தில் விழைவே இது!!

கத்தோலிக்கர்கள் மரியாள் தொடங்கி பல புனிதர்கள், பல போப்மாகள் பரலோகத்தில் பரிந்து பேசுபவர்களாக இருக்கிறார்கள் என்று நிரூபிக்கவே இப்படி பட்ட ஒரு மொழிபெயர்ப்பு!! ஒரு காலத்தில் மரியாள் எப்படி பரிந்து பேசுகிறார் என்று கேட்ட மாற்று சபையார் இன்று தங்களில் உள்ள பல ஊழியர்கள் அங்கே ஆலோசனை சங்கத்தில் கிறிஸ்துவிற்கே ஆலோசனை வழங்கிக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது!! இப்படி பரலோகத்தில் இருக்க முடியும் என்பதை நிலை நிறுத்தவே கள்ளன் பரதீசில் (இவர்கள் இதை பரலோகம் என்று தான் சொல்லுவர்கள்) அன்றே சென்று விட்டதாக நினைத்து காமேடி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்!!

மரித்த கிறிஸ்து இயேசு மூன்றாம் நாள் சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று மறுபடியும் வேதத்தில் இல்லாத அத்நாஷியஸ் போதனையை தந்து தன் மூடத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜான்!! எங்கே இருந்து தான் கண்டு பிடிக்கிறார்களோ இதை எல்லாம்!!

கிரேக்க பாஷையில் இருந்த போது இந்த வசனத்திலோ, அல்லது வேறு வசனங்களிலோ கமா (,) போன்றவை பயன்படுத்தவில்லை, அதை தங்களின் போதனைக்கு சாதகமாக கத்தோலிக்கர்கள் லத்தீனில் மொழிப்பெயர்க்கும் போது மாற்றி விட்டு, பெரும் தவறை செய்து இருக்கிறார்கள்!!

இதன் பின் கிறிஸ்து அன்றே பரதீசிக்கு போனதாகவோ, அல்லது கள்ளன் அன்றே அவருடன் பரதீசிக்கு போனதாக எந்த வசனமும் இல்லையே!! ஏனென்றால் கிறிஸ்து தன் ராஜியத்தில் வரும் போது, அந்த கள்ளன் மாத்திரம் இல்லை, வேத புரட்டன் அத்நாஷியஸும் அவர்களின் சீஷர்களும் அங்கே தான் இருப்பார்கள்!!

//அது சரி "இந்த ரெண்டு கள்ளர்களுக்கும் என்ன வித்தியாசம், ஒருவன் மரிக்கும் தருவாயில் அவரை நோக்கி அபயமிட்டதால் என்ன பலன் என்று செத்து போன ரசலிடம் கேட்டு  விளக்குவீர்களா?//

ஏன் வேத புரட்டன் அத்நாஷியஸ் உங்கள் குருட்டு கூட்டத்திற்கு வந்து சொல்லவில்லையா!! அல்லது கொல்வின் தான் காவல் கோபுர புத்தகங்களை மிகவும் அபிமானத்துடன் படிப்பாரே, அவரிடம் கேட்க வேண்டியது தானே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இன்றைக்கு சபைக்கு சபை சிலுவை தியானம்தான். அதெப்படி கிறிஸ்துவின் இறந்ததினம் மாத்திரம் ஒவ்வொருவருடமும் வெள்ளிக்கிழமைகளிலேயே வருகிறதோ என்ற அடிப்படைக்கேள்விகூட கேட்கத்தெரியாத அப்பாவிக்கூட்டம் இன்று 'துக்கக் கஞ்சி'யைக்கூட வயிறுமுட்ட குடித்துவிட்டு 'துக்கம்' அனுஷ்டிப்பர்.

என்ன கொடும சார்!!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//But the whole three Persons are coeternal, and coequal.//

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்!! என்றார் இயேசு கிறிஸ்து சிலுவையில் தன் ஆவியை தன் பிதாவிடத்தில் ஒப்படைக்கும் முன்!!

அத்நாஷியஸின் கூற்றின்படி மூவரும் (!!??) ஒரே நிலையில் இருப்பவர்கள்!! இந்த மூன்றில் ஒருவர் (ஆனாலும் இவர்கள் மூன்று அல்ல, ஒருவரே என்கிறார் அத்நாஷியச்) சிலுவையில் தொங்குகிறார், ஆனாலும் மூவரும் ஒருவரே, ஒருவர் பரலோகத்தில் இருக்கிறார், மற்றவர் தன்னை பாவமாக்கிறார், ஆனாலும் மூவரும் ஒருவரே, என்ன ஒரு விசுவாசம்!!

ஆனால் நம் சத்திய வசனங்களின்படி பார்த்தோமென்றால், உலக தோற்ற முதல் நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து இயேசு பிதாவினால் நியமிக்கப்பட்டவராக இருக்கிறார் (இருவரும் ஒருவராக இருக்க முடியுமா!??)!! ஒருவர் நியமிக்கிறார், மற்றொருவர் நியமிக்கப்பட்டவராக இருக்கிறார், இருவரும் ஒரே நிலையிலோ, ஒரே தன்மையிலோ இருக்க வாய்ப்பே இல்லை!!

சிலுவை கிறிஸ்துவின் மரணத்திற்கு ஒரு சாதனமாக உபயோகிக்கப்படுத்தப்பட்டது, அது முக்கியம் இல்லை, மாறாக கிறிஸ்துவின் மரணமே நமக்கு பாடம்!! சிலர் இதை வைத்து பக்கம் பக்கமாக எழுதுவார்கள், நமக்கு கவலையில்லை!! சிலுவையின் உபதேசம் என்றால் ஏதோ சிலுவை மரத்தை பிரசங்கிப்பது கிடையாது, மாறாக கிறிஸ்துவின் மரணம் தான் சிலுவையின் உபதேசமாகும்!! சிலுவையின் உபதேசம் என்பது ஒரு துக்க செய்தி அல்ல, மனுகுலத்திற்கு அதுவே நற்செய்தி!!

இயேசு கிறிஸ்து சிலுவையில் மனுகுலத்திற்காக மரித்தார் என்பதே கிறிஸ்துவும் தேவனும் வேறு வேறு என்பதை நிரூபிக்கிறது!! அத்நாஷியஸ் சொன்னால் என்னா, அவர்களின் சீடஜனங்கள் சொன்னால் என்ன, வேதம் என்ன சொல்லுகிறது என்பது தானே நமக்கு முக்கியம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோஸப்

//ஏரியனின் சீடர்களுக்கு கிறிஸ்து பற்றிய எல்லாமே இப்படி தான் விகற்பமாக இருக்கும்.//

என்ன செய்வது வசனம் பேசுவோர் எல்லாம் உங்களுக்கு எதிரிகளாக இருக்கும் போது விகற்பமாக இருப்பதில் என்ன ஆச்சரியம்!! வசனத்துடன் ஏரியஸின் விசுவாசத்தை நாங்களும், வசனமே இல்லாத பக்கம் பக்கமாக எழுதப்பட்ட அத்நாஷியஸின் விசுவாசாப்பிரமானத்தை நீங்களும் கைக்கொள்வதால் உங்களுக்கு விகற்பமாக இருப்பதில் ஆச்சரியம் இல்லையே!!

//சிலுவையை பற்றிய உபதேசம் என்று தான் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, சிலுவை முக்கியம் இல்லையாம். சிலுவையை யாரும் வணங்குவதில்லை. சிலுவை கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூற வைக்கப்படும் சாதனமேயன்றி வேறில்லை என்பது எங்களுக்கும் தெரியும்.//

இப்படி சொல்லி சொல்லி தான் சிலுவையை தொட்டு கும்பிடும் அளவிற்கு கத்தோலிக்க சபை சிலுவையை விக்கிரகமாக ஆக்கி வைத்திருக்கிறது!! சிலுவையை பற்றிய உபதேசம் என்றால், சிலுவை எந்த வடிவில் இருந்தது, அது எந்த மரத்தினால் செய்யப்பட்டிருந்தது, அதன் உயரம், கனம் என்ன என்று சொல்லுவதற்காக அல்ல!! சிலுவை என்பது பாடுகளை குறிக்கும் ஒரு வார்த்தையாகும், கிறிஸ்துவின் சிலுவை என்பது அந்த பாடுகளினால் மனிதர்களுக்கு இரட்சிப்பு உண்டாயிற்று என்பது தான் அதில் அடங்கியிருக்கும் சுவிசேஷம்!! இதை தான் சிலுவையின் சுவிசேஷம் என்று சொல்லுவோமே தவிர, கத்தோலிக்க சபை அல்லது தினகரனின் பெதஸ்தாவில் சிலுவையை வைத்து அதை விக்கிரகமாக மாற்றுவது அல்ல‌!!

//கிறிஸ்து என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என ஏன் சொன்னார், ஏனெனில் அவர் மனிதனாகவும் இருந்தார். உலகத்தின் பாவ அந்தகாரம் அவரை மூடிய போது சொன்னது. தேவன் மாம்சமாகி மனிதனின் பாடுகளை அனுபவித்து மரணத்தையும் வென்றார். மனிக்குலத்தை ரட்சிக்க படைத்தவரே வந்தார் என்பது தான் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. தேவன் தன்னால் ரட்சிக்க முடியாமல் தனக்கு பதிலாளியாக ஒரு substitute அனுப்பி ரட்சித்திருப்பார் என்பது அவரது நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது.//

தேவனுக்கு மாற்று என்று யார் சொன்னது!! தேவனால் கிறிஸ்து நியமிக்கப்பட்டவர் என்று தானே எழுதியிருக்கிறேன்!! ஒருவரே சாவாமையுள்ள தேவன் எந்த ரூபத்திலும் மரிக்க முடியாது என்பது வேதம் எனக்கு தரும் விசுவாசம்!! ஆனால் தேவன் மனிதனாக வந்து மரித்தார் என்று எத்துனை பெரிய தேவ தூஷனத்தை எத்துனை சுலபமாக நம்புகிறீர்களே!! இருவரும் ஒருவரே என்கிறீர்களே, அல்லது பரலோகத்தை விட்டு அந்த சர்வவ்வல்லமை உள்ள தேவனே கிறிஸ்துவாக பூமிக்கு வந்தார் என்கிறீர்களே, அப்படி என்றால் சிலுவையில் இருந்துக்கொண்டு, கிறிஸ்து (அவர் தான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவன் என்கிறீர்களே) யாரை நோக்கி கூப்பிடுகிறார், யாரிடம் தன் ஆவியை ஒப்புக்கொடுக்கிறார்!!??

வெளி. 13:8ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, உலகத்தோற்ற முதல் (உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்து அல்ல) அடிக்கப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் என்றால் என்ன?? தேவன் தன்னையே உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்டவராக நியமித்துக்கொண்டாரா??

எபிரேயர் 10:7. அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.

இருவரும் ஒருவரே என்கிறீர்களே, அல்லது தேவனே தான் கிறிஸ்துவாக மாம்சத்தில் வந்தார் என்று சொல்லுபவர்கள், இந்த வசனத்தில் யார் யாருடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறார்!!??

இரட்சிப்பு தேவனின் செயலே, ஆனால் அதை நிறைவேற்ற அவரே வந்து மரிக்க முடியாது, ஏனென்றால் அவர் ஒருவரே சாகாமை உள்ளவர், ஆகவே அவரின் குமாரன், நேச குமாரனான கிறிஸ்துவை அனுப்பித்தார் என்கிறது வேதம்!! அப்பாவும், பிள்ளையும் ஒருவரே என்று அத்நாஷியஸ் கொஞ்சமும் வசனத்துடன் சொல்லவில்லை, ஆனால் அது தான் இன்று பிரபலாமாக இருக்கிறது!! அப்படி தான் இருக்கும், ஏனென்றால் சத்தியத்தை கண்டுப்பிடிப்பவர்கள் வெகு சிலரே, ஏனென்றால் அது இடுக்கமான வாசல் என்கிறது வேதம்!!

//The very idea of God sending a substitute to rectify and save humanity is blasphemous, disgusting and heretical. Jesus was never a substitute for God but God who came to save the world.//

The very idea of Almighty God coming down to earth in Flesh and dying is the blasphemous statement ever made!! The Almighty God cannot die, says the Scriptures, but funny Athnasius killed the Almighty God on Cross by bringing him down to earth in flesh!!

God himself came down in flesh is unbiblical as He says, He sent His only Son in flesh!!

John 3:16 For God so loved the world that he gave his one and only Son

Please don't be a blind follower of Athnasius and his craziest faith which is totally out of bible!! Trust the Bible!!

அத்நாஷியஸ் கூட்டத்தாரும் அவரின் சீடர்களும் வேதத்தை முழுமையாக பார்க்காமல் பகுதி பகுதியாக பார்ப்பதினால் தான் பல பிரச்சனைகள்!!

தேவன் மாம்சத்தில் வந்தாராம், அப்படி என்றால் உயிர்த்தெழுந்த பிறகு எந்த தேவனின் வலது பாரிசத்தில் வீற்றார் என்பதற்கு விளக்கம் இருக்கிறதா??

இருவரும் ஒருவரே தான் என்றால் ஏன் ஒருவர் பிதா என்றும் ஒருவர் குமாரன் என்றும் சொல்லப்பட வேண்டும்??

இருவரும் ஒருவரே என்றால், ஏன் தேவன் சபையை தன் குமாரனின் சாயலில் ஒன்று சேர்க்க வேண்டும்?? அதற்கு பதிலாக தன் சாயலில் உருமாற்றலாமே!!

அத்நாஷியஸ் கூட்டத்தாரிடம் பதில் இருக்கும், ஆனால் அந்த பதில் வேதத்தில் இருக்காது!!

ஒன்றை மாத்திரம் சொல்ல வேண்டும்,

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;

அத்நாஷியஸின் சீடர்கள் தேவனை ஒரு விளையாட்டு பொருளாக்கி, அவரை மாம்சத்தில் கொண்டு, சிலுவையில் ஏற்றியிருக்கிறார்கள்!! தேவதூஷனத்தில் ஊறி இருக்கும் இவர்களுக்கு தாங்கள் தேவ தூஷனம் செய்கிறோம் என்று கூட தெரியாத அளவில் இருக்கிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard