கிறிஸ்துவின் மரணத்தை ஆசரிக்க வேண்டுமென்று கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருகிறது.இந்த ஆசரிப்புI கொரிந்தியர் 11 : 21 "இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்" என்றும் அழைக்கப்படுகிறது.இந்த ஆசரிப்பில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதை எப்படி, எப்போது ஆசரிக்கவேண்டும்?
இயேசு கிறிஸ்து இந்த ஆசரிப்பை பொதுசகாப்தம் 33 - ல், யூத பஸ்கா பண்டிகையின் இரவன்று ஆரம்பித்து வைத்தார்.இந்தப் பாஸ்கா பண்டிகை வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே. அதாவது நிசான் என்ற யூத மாதத்தின் 14 - ம் தேதியன்று மட்டுமே கொண்டாடப்பட்டது. அந்தத் தேதியேக் கணக்கிடுவதட்க்கு, முறிப்பிட்ட ஒரு நாளை யூதர்கள் மையமாக வைத்து இருந்தார்கள்; அந்நாள், இளவேனிட்காலத்தில் பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருக்கும் நாளாகும். அந்த நாளுக்குப் பின் எப்போது அமாவாசை வருகிறதோ அப்போதுதான் நிசான் மாதம் துவங்குகிறது. 14 நாட்கள் கழித்து, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பாஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இயேசு தம்முடைய அப்போஸ்தலருடன் பாஸ்காவைக் கொண்டாடினார், பிறகு யூதாஸ் ஸ்க்கரியோதை அனுப்பிவிட்டு கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த இராப்போஜனம் யூத பாஸ்கா பண்டிகைக்குப் பதிலாக ஆசரிக்கப்படுவதால் இது வருடத்திற்க்கு ஒருமுறை மட்டுமே ஆசரிக்கப்பட வேண்டும்.
மத்தேயுவின் சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது:மத்தேயு 26 : 26. அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; 28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது''. என்றார்
இயேசு சொல்லர்த்தமாகவே அந்த அப்பத்தை தம்முடைய உடலாகவும், திராட்சரசத்தை தம்முடைய இரத்தமாகவும் மாற்றியதாகச் சிலர் நம்புகிறார்கள். ஆனால், இயேசு அந்த அப்பத்தைக் கொடுத்த சமயத்தில், அவருடைய மாமிச உடல் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாகவே இருந்தது. இயேசுவின் அப்போஸ்தலர்கள் நிஜமாகவே அவருடைய உடலையும் இரத்தத்தையும் புசித்துக்கொண்டிருந்தார்களா? இல்லை, ஏனென்றால் அது நரமாமிசத்தைச் சாப்பிடுவதாக ஆகி இருக்கும், கடவுளுடைய சட்டத்தை மீறுவதாய் இருந்து இருக்கும்.
ஆதியாகமம் 9 : 3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். 4. மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். லேவியராகமம் 17 : 10. இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
''போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்''. என்று இயேசு சொன்னதாக லூக்கா 22 :20 - ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாத்திரம் சொல்லர்தமாகவே 'புதிய உடன்படிக்கையாக' மாறியதா? அப்படி ஆகி இருக்கவே முடியாது, ஏனெனில் உடன்படிக்கை என்பது ஒரு பொருள்ளல்ல, அது ஓர் ஒப்பந்தம்.
எனவே, அப்பம், திராட்சரசம் ஆகிய இரண்டும் வெறும் அடையாளச் சின்னங்கள் தான். அப்பம் கிறிஸ்துவின் பரிபூரண உடலை அடையாளப்படுதுகிறது. பாஸ்காவின்போது உபயோகிக்கப்பட்ட அப்பத்தின் மீதியே இயேசு புதிய உடன்படிக்கைக்குப் பயன்படுத்தினார். அந்த அப்பம் புளிப்பிலாமல், அதாவது ஈஸ்ட் சேர்க்கப்படாமல், தயாரிக்கப்பட்டது. யாத்திராகமம் 12 : 8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
புளிப்பு என்பது பைபளில் பாவத்திற்கு அல்லது கலங்கத்துக்கு அடையாளமாக இருக்கிறது. எனவே, இயேசு பலியாகச் கொடுத்த அவருடைய பரிபூரண, அதாவது பாவமற்ற உடலையே அந்த அப்பம் குறிக்கிறது.- மத்தேயு 16 : 11. பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12. அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
I கொரிந்தியர் 5 : 6. நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? 7. ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
I பேதுரு 2 : 22. அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
I யோவான் 2 : 1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
சிவப்பு திராட்சரசம் இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. அந்த இரதம் தான் புதிய உடன்படிக்கயேச் செல்லுபடியாகுக்கிறது. தமது இரத்தம் "பாவ மன்னிப்பைப் உண்டாக்குவதற்குச்" சிந்தப்படுகிறதேன்று இயேசு சொன்னார். இதன் மூலம் தேவனுடைய கண்களில் மனிதர்கள் சுத்தமானவர்களாக ஆகி, புதிய உடன்படிக்கைக்குள் வர முடியும். எபிரெயர் 9 : 4. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபிரெயர் 10 : 16. அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, 17. அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இந்த உடன்படிக்கையின்; அதாவது ஒப்பந்தத்தின், மூலமே விசுவாசமிக்க கிறிஸ்தவர்களால் பரலோகத்துக்குச் செல்ல முடியும். அங்கே அவர்கள் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து முழு மனிதகுலத்துக்கும் ஆசிவாததைப் பொழிவார்கள். ( ஆதியாகமம் 22 :18 ; எரேமியா 31 :31 -33 ; 1 பேதுரு 2 :9 ; வெளிப்படுதல் 5 :9 ,10 )
இந்த ஞாபகார்த்த சின்னங்கள் யார் புசிக்க வேண்டும்? நியாயமாகவே, புதிய உடன்படிக்கையில் உள்ளவர்கள் மட்டும்தான், அதாவது பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கயுடயவர்கள் மட்டும்தான், அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிக்க வேண்டும். அவர்கள் பரலோக ராஜாக்களாகத் தேர்ந்து எடுக்கப்படத்தைச் கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்களுடைய மனதிலே உறுதிப்படுத்துகிறது. (ரோமர் 8 :16 ) அவர்கள் யேசுவுடனும் ராஜ்ய உடன்படிக்கைலும் இருகிறார்கள். லுக்கா 22 :29
பரதிஸ் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய மற்றவர்களைப் பற்றியென்ன? அவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்குச் கீழ்ப்படிந்து, கர்த்தருடைய இராப்போஜன நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். பார்வையாளர்களாக மட்டுமே இருந்து அந்நிகழ்ச்சிக்கு மரியாதை காட்டுகிறார்கள், அப்பத்தையும் திராட்சரசத்தையும் அவர்கள் புசிப்பதில்லை. வருடத்துக்கு ஒருமுறை, நிசான் 14 அன்று சூரிய அஸ்தமனதுகுப் பின் நாம் கர்த்தருடைய இராப்போஜணத்தை ஆசாரிகிறோம். உலகமெங்கும் சில ஆயிரம் பேர் மட்டுமே தங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருப்பதாகச் சொன்னாலும், எல்லா கிறிஸ்தவர்களுமே இந்த ஆசரிப்புமிக்க மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது. யேகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் காண்பித்துள்ள மிக உயர்ந்த அன்பைப் பற்றி நாம் எல்லோருமே சிந்தித்துப் பார்ப்பதற்க்கு அது ஏற்ற சமயமாக இருக்கிறது.- யோவான் 3 :16
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )