நித்திய ஜீவன் ,இறைவன், சில்சாம் என்னும் நண்பர்கள் தன்னுடைய தளத்தில், தங்களின் கருத்தை பதிந்தார்கள் , சில்சாம் என்பவரின் பதிவுகள் எனக்க மிகவும் பிரயோஜனமாக உள்ளது , அவரின் பதிவுகளில்
Post Info
TOPIC: இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
RE: இயேசு அழைக்கிறார் சொத்து தனியாருக்கு விற்பனை..!
Reply Quote Printer Friendly
இந்த செய்தியானது எங்கும் பரவியிருப்பதை சமாளிக்க பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்,பால் தினகரன் அவர்கள்; அதாவது இந்த குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த பணத்தினால் வானகரம் ஜெப கோபுரத்துக்கான நிலம் வாங்கப்பட்டதாம்; இது அப்பட்டமான பொய்யேயன்றி வேறில்லை; ஏனெனில் இந்த நிலம் அண்மையில் தான் விற்கப்பட்டுள்ளது; வானகரம் ஜெப கோபுரம் அமைந்துள்ள இடம் மதுரவாயல் அருகேயுள்ள பிரம்மாண்டமான பாலத்துக்கு மிக அருகில் உள்ளது; இது விற்கப்ப்பட்டுள்ள விலைக்கு அதாவது வெறும் 45 கோடிக்கு (?!) வானகரத்திலுள்ள சென்னையின் பிரதான சாலையில் வாங்குவதென்பது இயலாத காரியமாகும்; ஏற்கனவே சுமார் 100 கோடி ரூபாய்க்கு பாரி டவர் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு கைமாறியது; அப்போதே இயேசு அழைக்கிறார் நிறுவனத்தில் (ஆம் அது ஸ்தாபனம் அல்ல..) அரசியல் புகுந்துவிட்டது; வரி ஏய்ப்பு செய்வோர் நிச்சயமாகவே அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பர். இது சம்பந்தமான விவரங்களையறிந்தஉண்மையான கிறித்துவின் சீடர்கள் இங்கே தாங்கள் அறிந்த உண்மையைப் பகிர்ந்துகொள்வதால் அநேகரை எச்சரித்து நல்வழிப்படுத்த முடியும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் டாடா (TATA) தொழிற்சாலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது; சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருவள்ளூருக்குச் செல்லும் வழியில் திருநின்றவூர் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய ஊர்களுக்கு இடையே இடதுபுறம் அமைந்திருப்பது குறிப்பிட்ட நிலமாகும்.
இந்த இடத்தைக் கடந்துசெல்லும்போதெல்லாம் ஒருபுறம் பொறாமையுடனும் இன்னொருபுறம் பெருமையுடனும் பெருமூச்சு விட்டவாறு கடந்து செல்லுவேன்; பொறாமைக்குக் காரணமானது கெட்ட எண்ணமல்ல, நாமும் இதுபோல ஆண்டவருக்காக நிலங்களைக் கொள்ளவேண்டும் என்ற உத்வேகம் சார்ந்த எண்ணமே; பெருமைக்குக் காரணம், பல்வேறு சர்ச்சைக்குரிய கொள்கைகளுடன் இயேசு அழைக்கிறார் ஊழியம் நடைபெற்றாலும் ஆண்டவருடைய நாமம் உச்சரிக்கப்படுவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்; மேலும் ஆண்டவருடைய நாமத்தை முன்னிறுத்தி செயல்படக்கூடிய நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதுடன் ஆங்காங்கு நிலங்களை வாங்கிப்போடுகிறார்கள்;எப்படியோ காணிக்கை பணங்கள் வீணாகாமல் நல்லதொரு விதத்தில் சாமர்த்தியமாக முதலீடு செய்கிறார்களே,நல்லது தான் என்ற விதத்தில் பெருமை தான்.
இதுபோன்ற எண்ணத்துடன் வழக்கமாக நான் பார்வையிட்டுச் செல்லும் இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபனத்துக்கு சொந்தமான இந்த நிலத்தின் காம்பவுண்டு சுவரில் திடீரென ஆங்காங்கு போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது, "இந்த நிலம் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சொந்தமானது" என்பதாக;உடைந்து சாய்ந்து கிடக்கும் "இயேசு அழைக்கிறார்" பலகையைக் காணவில்லை; பாழடைந்த துருபிடித்த இருப்பு கதவு அழகாக நீலநிற வர்ணம் பூசப்பட்டுள்ளது; சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள நிலமானது தனியார் தொழிற்சாலைக்கு சுமார் 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
இந்த அதிர்ச்சிகரமான செய்தியை அறிந்ததும் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்;இது தனியார் சொத்தாக இருப்பதால் தானே இஷ்டம் போல விற்கமுடிகிறது? இயேசு அழைக்கிறார் எனும் ஊழிய ஸ்தாபனமானது ஆர்வமுள்ள தேவ பிள்ளைகளின் தியாகமான காணிக்கைகளால் நடைபெறுவது உண்மையானால் அதைக் கொண்டு வாங்கப்படும் அனைத்து சொத்துக்களும் சபையாருக்கு தானே சொந்தமாக இருக்கமுடியும்? அதனை சபையாருக்கு அறிவிக்காமல் அவரவர் இஷ்டப்படி விற்கமுடியுமா? இதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லட்டும்,இதே காரியத்தை சிஎஸ்ஐ (CSI) போன்ற சபை நிர்வாகம் செய்யமுடியுமா?
ஏற்கனவே சபையாருக்கு சொந்தமான நிலங்கள் வடதேசத்து வியாபாரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு வரும் நிலையில் இதோ அண்மையில் ஒரு அநியாயம் நடைபெற்றுள்ளது; ஒருவேளை அந்த நிலத்தை மிகமிக குறைவான விலைக்கு எப்போதோ வாங்கி வைத்திருந்து தற்போது 100 மடங்கு கொள்ளை லாபத்துக்கு விற்றார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம்; அப்படியானால் நாம் ஊழியம் செய்கிறவர்களா அல்லது நிலபேர முதலாளிகளா?
உண்மையான ஆதங்கத்துடனே எழுதுகிறேன்,சென்னைக்கு வெளியே கிராமங்களில் சபைகள் நசுக்கப்படுகின்றன;வெளி ஊழியங்கள் செய்ய முடிகிறதில்லை;பல சபைகளுக்குக் கட்டிடமில்லை; ஊழியர்கள் பலரும் வறுமையில் வாடுகின்றனர்; இயேசு அழைக்கிறார் ஊழியம் போன்ற ஸ்தாபனத்தார் நடத்தும் சுவிசேஷ கூட்டங்களை நடத்துவதற்கு இடங்களும் கிடைப்பதில்லை;இந்த கடினமான சூழ்நிலையில் இரயில் நிலையத்துக்கு அருகே இரயில் பாதையை ஒட்டி நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்த இந்த நிலமானது கம்பீரமாக இருந்தது;அது இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை என்பது ஒரு மாபெரும் இழப்பாகும்.
ஒரு காலத்தில் ஏறக்குறைய திருநின்றவூர் முழுவதுமே கிறித்தவ சமுதாயத்துக்கு சொந்தமாக இருந்ததாம்;ஆனால் அந்த நிலை வேகமாக மாறிவருகிறது;திருநின்றவூரிலுள்ள தாசர் பள்ளி மைதானம் சுவிசேஷக் கூட்டங்களுக்கு பிரபலமானது;அந்த இடமானது பெரிதான எந்த வருமானமும் இல்லாவிட்டாலும் அதன் நிர்வாகிகளால் தொடர்ந்து லாபநோக்கில்லாமல் பலவருடங்களாக செயல்பட்டு வருகிறது;இதன் ஸ்தாபகரான ஐயா அவர்கள் சுமார் 50 வருடத்துக்கு முன்பே இந்த பகுதிக்கு வந்து பல ஊழியங்களை செய்துள்ளார்;ஆனால் தற்போது இந்த பகுதியில் நமக்கு சொந்தமான ஒரு பெரிய சொத்து தனியாருக்கு அதுவும் தொழிற்சாலை நிர்வாகத்தாருக்கு கைமாறியது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
இதுபோலவே வெளிநாடுகளிலும் சபைக்கு வருவோரின் எண்ணிக்கையானது மிகவும் சொற்பமாக இருப்பதுடன் சபைகள் பலவும் கேளிக்கை விடுதிகளாகவும் மசூதிகளாகவும் மாறிவருகிறதாம்;அந்த நிலையானது தென்னகத்தின் கிறித்தவ தலைநகராம் சென்னைக்கு அருகே இந்தியாவின் எருசலேமான தென்னகத்துக்கும் ஏற்படத் துவங்கிவிட்டதோ என்று அச்சமாக உள்ளது.
ஒருவேளை அந்த நிலமானது உங்களுக்கு அவசியமில்லாவிட்டால் அங்கே ஒரு நகர் அமைத்து கிறித்தவ சமுதாயத்துக்கு சலுகை விலையில் நீண்ட கால கடனுக்கு கொடுத்திருக்கலாமே? ஒரு பள்ளியோ சமுதாய கூடமோ அமைத்திருக்கலாமே? இது இயேசு அழைக்கிறார் நிறுவனமானது ஊழியம் என்ற பெயரில் செய்து வரும் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அக்கிரமங்களில் ஒரு சிறு துளி தான்;இந்தியாவின் பல பகுதிகளிலும் நீங்கள் சுவிசேஷ படைமுயற்சி கூட்டங்கள் என்ற பெயரில் செய்து வரும் ஊழியங்களின் நோக்கமே இதுபோல நிலங்களை வேவு பார்த்து வாங்கி விற்கும் தொழிலுக்காகவே போலும்..!
பால் தினகரன் போன்ற தனியார் நிறுவன முதலாளிகளுக்கு இனியும் காணிக்கை என்ற பெயரிலும்இளம்பங்காளர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரிலும் கடவுளுக்காக என்ற எண்ணத்தில்பணம் அனுப்புவதில் இனியும் பிரயோஜனமில்லை;அவர்களுடைய ஊழியம் நசிந்துவரும் ஊழியமும் அல்ல;அவர்களுடைய கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுக்கு முன்பாக இந்த நிலத்தின் மதிப்பு அவர்களைப் பொருத்தவரையிலும் சாதாரண பல்குச்சி(Tooth Pick or Tooth Brush) வாங்கும் அளவுக்கு தான் இருக்கமுடியும்.
ஆனால் கடந்த 40 வருடங்களாக நினைவு தெரிந்த நாளிலிருந்து உங்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஏழை விசுவாசிகள் இன்றைக்கும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம்;நீங்கள் ரொம்ப நாளாகவே கவலைப்படாதிருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்என்று சொல்லிவருகிறீர்கள்;கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட உங்களுக்கே எங்கள் மீது அக்கறையில்லாவிட்டால் இனி நாங்கள் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்? யார் மூலம் கடவுள் நாங்கள்ஆசீர்வதிக்கப்படுவோம்? உங்களை மட்டும் அபரிமிதமாக ஆசீர்வதித்த கடவுள் எங்களை மட்டும் ஏன் கண்டுகொள்ளுகிறதே இல்லை? உங்களை ஆசீர்வதித்த கடவுள் இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருப்பானோ? அப்படியானால் உங்கள் பின்னால் அலைந்தது எங்கள் தவறு தான்..!
ஓஹோ உண்மையுடனும் உத்தமத்துடனும் தேவனுக்கு பயந்து கடுமையாக உழைத்து சிக்கனமாக வாழ்ந்தால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம் அல்லவா? நாங்களும் வீடு வாசல் என்று சுதந்தரிக்கலாம் அல்லவா? அப்படியானால் உங்களுக்கு நாங்கள் ஏன் காணிக்கை அனுப்பவேண்டும்? சொல்லுங்கள் முதலாளிகளே, சொல்லுங்கள்..!
இனியும் கிறித்தவத்தின் பெயரால் காணிக்கை கொள்ளையடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பவர்களை கிறித்தவர்கள் நம்பக்கூடாது; புண்ணியம் வேண்டுமா,உங்கள் அருகில் ஏழை எளியோருக்கு உதவி செய்யுங்கள்;கடவுளைக் குறித்து டிவியைப் பார்த்து அறியவேண்டிய அவசியமில்லை;அருகிலிருக்கும் சபைக்கு செல்லுங்கள்;இப்படியே கிறித்தவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கு விற்கப்பட்டாலும் உடனே அதனை எதிர்த்து போராடுங்கள்;அதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்;கர்த்தருக்காகவும் சபை ஊழியங்களுக்காகவும் சபை மக்களின் நலனுக்காகவும் சொத்துக்களை வாங்கவேண்டுமே தவிர அவற்றை எக்காரணம் முன்னிட்டும் விற்கக்கூடாது என்பதை சபையார் அழுத்தமாக வலியுறுத்தவேண்டும்;இது சம்பந்தமாக உணர்வடைந்த விசுவாசிகள் தாங்கள் இதுபோன்ற ஊழியங்களுக்கு பணம் அனுப்புவதை நிறுத்தினால் மட்டும் போதாது,அவர்களுக்கு எழுதியும் போன் செய்தும் விசாரித்து விளக்கம் கேட்கவேண்டும்,நமது எதிர்ப்பைப் பதிவுசெய்யவேண்டும்.
பின்குறிப்பு: குறிப்பிட்ட நிலத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி ஏதோ ஒரு விக்கிரகக் கோவில் இருந்தது அது இடிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கே காணப்படுகிறது;ஒரு விக்கிரகக் கோவில் இடிக்கப்பட்டதற்காக சந்தோஷப்படுவதா அல்லது அது தற்போது மீண்டும் கட்டப்படுமே அதற்காக வருத்தப்படுவதா..? கிறித்தவத்துக்கு இனியும் எழுப்புதல் வேண்டாம்,புரட்சி வெடிக்கட்டும்..!
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது எனக்குஅவர் கொடுத்த புகாராகவே தோன்றுகிறது , தங்களிடம் இது போன்ற ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக சமர்பிக்க ஆணை பிறப்பிக்கிறேன் , தங்களின் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்கவும்
தாங்கள் வெளியிட்டிருக்கும் இந்த பதிவை நான் இன்னும் பர்த்ததில்லை!! அவர்கள் திடீரென்று ஊழியர்களை தூக்குவார்கள், திடீரென்று தாக்குவார்கள்!! உங்களுக்கு எது தேவையோ தளங்களிலிருந்து பிரயோஜனப்படுத்துக்கொள்ளுங்களேன்!!
Even I too heard that "Bharat Scans" is also Paul Dhinakarans !!! God knows from where he got the Money to buy Bharat Scans and develop it as a Big Organisation in Chennai and also they are planning to expand all over India....