இது வேதபுரட்டர்கள் வசனத்துடன் சேர்த்துக்கொள்ளுவதாகும்!! இவர்கள் வேத புரட்டர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்!! ஒருவர் வசந்தகுமாரின் வேதம் எழுதுவார், இன்னோருவர் வசனத்துடன் தன் சொந்த சரக்கை சேர்த்துக்கொள்வார்!! கேட்டால் வசனத்தில் இரஸலியனோ, யெகோவா சாட்சியோ வேதாகம (பேத) மாணவர்களுடன் போராட்டம் இல்லை என்று பவுல் சொன்னாரா என்று கேட்பார்??
என்ன செய்வது, ஒருவர் சத்தியத்தை அறிந்தவராக கத்தோலிக்க மதத்தில் இருக்கிறவர் ஆனால் அதில் உள்ள தவறுகளை எதிர்ப்பவராம், ஆனால் போப்பிற்கு கட்டுப்பட்டவராம், ஏனென்றால் அவர் தான் திருச்சபை தலைவராயிற்றே!! பல தடவை போப் மண்ணிப்பு கேட்டு விட்டாராம், அப்படி என்றால் மண்ணிப்பு கேட்டிருக்கிறார் என்றால் அவர்கள் செய்தது தவறு தானே!! தவறு செய்ய முடியாதவர்கள் என்று போப் தங்களை சொல்லிக்கொண்டு தான் ஆளுகை செய்துவந்த காலம் இருந்தது, அந்த மதத்தில் இருக்கும் ஒருவர் ஆழமான சத்தியத்தில் இருக்கிறார் என்றால் என்ன சொல்லுவது!! அதில் எடுத்த ஞானஸ்நானம், பகலில் எடுக்கும் "இராப்போஜனம்" அதுவும் ஒரு நாளைக்கு எத்துனை முறை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளும் "திருவிருந்து" என்கிற இராப்போஜனம்!! பின்னே இராப்போஜனம் என்று சொல்லியிருக்கிறது, திருவிருந்து என்று சொல்லக்கூடாது என்று வேதத்தில் இருக்கிறதா என்னா!!?? அந்த அப்பத்தை கிறிஸ்துவின் சரீரம் என்று சொல்லி ஒரு பேழைக்குள் வைத்து அதன் முன் மண்டியிட்டு ஒரு ஆராதனை கேட்டால் அது எல்லாம் விக்கிரக ஆராதனை கிடையாது, நான் சத்தியத்தில் தான் இருக்கிறேன் என்பார்!! ஒரு குழந்தை தெளிப்பு ஞானஸ்நானம், ஒரு முழுக்கு ஞானஸ்நானம், இருவரும் ஒன்று தான் ஏனென்றால் இவைகள் முக்கியம் இல்லை, அன்பு தான் பிரதானம், ஏனென்றால் கூட்டம் வேண்டுமே!! எது பிரிக்கிறதோ இல்லையோ, ஆனால் திரித்துவம் என்கிற ஒரு பாச கையிற்றினால் கட்ட பட்டவர்களாக இருக்கும் வேதப்புரட்டர் கூட்டம்!! தனக்கென்று ஒரு சொந்த கருத்து இல்லாமல், வசந்தகுமாரின் கருத்தை அப்படியே எழுதுவது தான் விவாதமாம்!! கேட்டாள் எனக்கு புரியவில்லையாம்!! அட உங்கள் சொந்த கருத்துக்களை எழுதங்கப்பா என்றால் இல்லை இல்லை கல்லூரி மாணவர்கள் இப்படி தான் Citation & Reference கொடுத்து எழுதுவார்களாம்!! என்னமோ கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் ஏதோ விவாதத்திற்காக இதை (Citation & Reference) கொடுப்பதாக மெத்த படித்த மேதாவி சொல்லும் கருத்தாகும்!!
"பிதாவே, இவர்களுக்கு மன்னியும்"!!
மத்தேயு 24:5................"நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்."
இவர்களை குறித்தே சொல்லியிருக்கிறார் நம் போதகர் கிறிஸ்து இயேசு!! பிதா என்று இவர்கள் யாரை கூப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை!!!!