இவரின் இந்த கருத்து வேத வசனத்திற்கு எத்துனை விரோதமாக இருக்கிறது என்று பாருங்கள்!!
மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
தாம் ஊழியர்கள் என்கிற போர்வையில் எத்துனை பேரை வஞ்சிக்கிறோம் என்கிற அச்சமே இல்லாமல் இருக்கும் ஒரு பெரிய கூட்டத்தார் மூலமாக தான் வஞ்சகம் உண்மையான சபையை பீறி போட்டதே தவிர, அற்புதம் எழுதுவது போல் ஏதோ ஒரு சிறிய கூட்டம் வஞ்சிக்காது, கிறிஸ்து இயேசு சொல்லுகிறபடி, அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள்!!
Original Word: πολύς, πολλή, πολύ Part of Speech: Adjective Transliteration: polus Phonetic Spelling: (pol-oos') Short Definition: much, many, often Definition: much, many; often.
4183 polýs – many (high in number); multitudinous, plenteous, "much"; "great" in amount (extent).
4183 /polýs ("much in number") emphasizes the quantity involved. 4183 (polýs) "signifies 'many, numerous'; . . . with the article it is said of a multitude as being numerous" (Vine, Unger, White, NT, 113,114) – i.e. great in amount.
ஊழியர்கள் ஒருவரை ஒருவர் இப்படி சொல்லி பொய்யான மாயையில் இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு அற்புதம் எழுதிய இந்த பதிவு ஒரு எடுத்துக்காட்டு!! இவரின் போதனைபடி ஒரு சின்ன கூட்டம் வந்து பெரிய கூட்டத்தில் இருந்து ஒருவரை தனிமைப்படுத்தி பீறிப்போடுமாம்!! அதாவது வசனம் அநேகர் வந்து அநேகரை வஞ்சிப்பார்கள் என்று சொன்னாலும், அது அப்படி தான் சொல்லும், ஆனால் அபிஷேகம் பெற்ற ஊழியர்கள் சொல்லுவது தான் சரி என்று சொல்லிக்கொண்டு அநேகர் வந்து அநேகரை வஞ்சிக்கிறார்கள்!! அநேகருக்கு என்ன அர்த்தம் என்றும் சொல்லியாகிவிட்டது!!
ஆனால் வெகு சிலரே கிறிஸ்துவின் அந்த இடுக்கமான வாசலை கண்டுபிடித்து நடப்பார்கள் என்கிறது வேதம்!! சத்தியத்தை விரும்புவோர் அல்லது அந்த வழியில் நடப்போர் ஆளுக்கு ஒரு சபை வைத்துக்கொண்டு ஒவ்வொரு உபதேசத்தினால், வித்தியாசமான தந்திரங்களினால் கூட்டம் சேர்க்காமல், கிறிஸ்து இயேசு சொன்னபடி சிலர் மாத்திரமே, அந்த சத்திய வழியை கண்டுபிடித்து நடக்க பிரயாசிப்பார்கள் என்பதே உண்மை!!
மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
சகோ.பெரியன்ஸ் அவர்களே! இன்றைய ஊழியர்களில் பெரும்பாலானோர் கூடிய விரைவில் இவ்வசனம் கூறுவதை அப்படியே நிறைவேற்றிவிடுவார்கள் என நினைக்கிறேன். எப்படியெனில், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார் என கிறிஸ்துவே தெளிவாக/நேரடியாகச் சொல்லியிருந்தும், இன்றைய ஊழியர்கள் அனைவரும் தங்களைப் “போதகர்” எனச் சொல்லிக்கொள்வது மிகவும் சகஜமான ஒன்றாகவும் அனைவரும் ஏற்றுக்கொண்டதாகவும் ஆகிவிட்டது.
பெரிய வியாக்கியானம் பேசுகிற அற்புதம் கூட தன்னை மற்றவர்கள் “போதகர்” எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே செய்கிறார். ஆக, மறைமுகமாக கிறிஸ்துவுக்கு நிகரான போதகர்கள் ஏற்கனவே நிறைய பேர் எழும்பிவிட்டனர்; அறிவில்லாத அநேக ஜனங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டும் விட்டனர். அதாவது மத்தேயு 24:4 சொன்ன பிரகாரம் அநேக (போதகர்கள்) அநேக ஜனங்களை வஞ்சித்துவிட்டனர்.
இனி இப்போதகர்கள் நேரடியாக தங்களை “கிறிஸ்து” எனச் சொல்லாததுதான் பாக்கி. அதையும் விரைவில் சொல்லிவிடுவார்கள் என நான் நினைக்கிறேன்.
மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
அநேகர் வஞ்சிகப்படுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் இவர்கள் மூலமாகத்தான் நிறைவேறிக்கொண்டிருக்கிறது அன்பு அவர்களே. இவர்களுக்குத்தெரிய நியாயமில்லை. எச்சரிக்கையெல்லாம் நமக்குத்தான்! தப்பித்தோம், தேவதயவால்.....