சில்சாம் எழுதுகிறார்!!!!!!!! ///தங்களது நேர்த்தியான பதில்களால் அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டீர்கள்;இதன்மூலம் "நிறைகுடம் ததும்பாது" என்ற முதுமொழிக்கும் இலக்கணமாகத் திகழ்கிறீர்கள்; முக்கியமாக முதல் கேள்வியிலேயே கோல்டா அவர்கள் குறைவுபட்டிருக்கிறார்;ஏனெனில் அண்மையில் ஏஞ்சல் டிவியில் சாதுஜி அவர்களது நெஞ்சினிலே நிறைந்து சொன்னது, "ஞானஸ்நானம்" அவசியமல்ல என்பதாக;
மேலும் பெந்தெகொஸ்தே மார்க்கத்தாரும் கூட இராப்போஜனம் அல்ல,பகற் போஜனமே நடத்துகின்றனர்;அதிலும் கத்தோலிக்கர்களைப் போலவே,"இது உங்களுக்காகப் பிட்கப்பட்ட கர்த்தருடைய சரீரம்" என்று தவறாமல் உச்சரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது;அதுபோலவே பாத்திரத்திலும் (அவுன்சு குடுவையில்) "இது உங்களுக்காக சிந்தப்பட்ட இயேசுகிறித்துவின் இரத்தம்" என்று உச்சரித்தவாறே வழங்கப்படுகிறது;இதில் எதை குற்றங்காண இயலும்...?
அன்பே பிரதானம்...அன்பை நிறைவேற்றுங்கள்..! ////
கொல்வின் எழுதுகிறார் !!!!!
எனது பதில்கள்
1) குழந்தையாக இருந்தபோது. ஏனென்றால் நான் கத்தோலிக்க பாரம்பரியத்தை சார்ந்தவன். மதம் மாறி வந்திருந்தால் பெரியவனாக இருக்கும் போது பெற்றுக் கொள்ளலாம்.
2) இராப்போஜனம் என்று சொல்வதில்லை. திருவிருந்து ஆலயம் சென்றால் எடுப்பேன். தவறு என்றால் என்ன தவறு என்று சுட்டிக் காட்டுங்கள்
3) ஒரு கோணத்தில் பார்த்தால் சரி. சான்றாக கிறிஸ்தவர்கள் வேறு நாடுகளில் கொடுமைப்படுத்தும்போது துன்பப்படுத்தும்போது போப்பினால் குரல் கொடுக்க முடியும். இன்னும் பலநாடுகளில் அதிகமாக கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படாதிருப்பதற்குக் காரணம் போப்பின் அதிகாரமே. மறைவாக பல காரியங்கள் நடைபெற்றாலும் அவை வெளிவருவதில்லை. அதற்கான அவசியம் கூட கிடையாது. மீடியாக்களை அவதானியுங்கள் உண்மை விளங்கும்.
வாளவிய அதிகாரம் எங்களை கட்டுப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் எப்படி உங்கள் திருச்சபைக்கு கட்டுபடுகிறீர்களோ நானும் கட்டுப்பட்டவன் ஆவேன். ஆயினும் வேதத்திற்கு புறம்பான காரியங்களில் கட்டுப்படுவதில்லை உ-ம் சிவைணக்கம், புனிதர் வழிபாடு. இதனை நான் செய்யாதிருப்பதற்காக திருச்சபை என் உரிமைகளில் தலையிடுவதில்லை
4) கத்தோலிக்கன் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதாக எங்கோயாவது எழுதியிருக்கின்றேனா.? எனது சபை எது வெனக் கேட்டால் நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். இன்னும் பலருக்கும் தெரியாது நான் கத்தோலிக்கன் என்று. என்னுடன் பேசும் யாருமே இலகுவில் என்னை கத்தோலிக்கனாக எடைபோட மாட்டார்கள்
திருச்சபை விட்டு திருச்சபை மாறுவதால் பரலோகம் செல்ல முடியுமா? இல்லையேதானே! தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டும். அதனை கடைபிடிக்க வேண்டும். இரட்சிப்பு இயேசுவால்தான் வருகிறது. நான் சார்ந்திருக்கும் திருச்சபையால் அல்ல. நான் இயேசுவையே சார்ந்திருக்கிறேன். ////
5) கண்டிப்பாக ஆராய்வேன். நம்பலாம். ஆனால் இப்போது இல்லை. குறிப்பாக பாவசங்கீத்தனம் செய்தல், சிலைவணக்கம், புனிதர் வணக்கம், குழந்தை ஞானஸ்நானம், உறுதிபூசுதல் மற்றும் சடங்காசாரங்கள், ஜெபமாலை ஜெபிப்பது போன்ற மூடப்பழக்கவழக்கங்களை எதிர்கிறேன். இவற்றை நான் கைக்கொள்வதில்லை. குழந்தை ஞானஸ்நானம் நான் அறியாத பருவத்தில் வழங்கப்பட்டது. பாவசங்கீத்தனம் நான் குருவானவரிடம் செய்வதில்லை. தேவனிடமே செய்கிறேன். பேப்புமார் செய்த பாவங்களை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.. பல தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ளார்களே!. இதனை நீங்கள் அறிய மாட்டீர்களா? ///
கோல்வின் அவர்களே, என்ன கூத்து நடக்கின்றது அங்கே? ரசளைப் பற்றியும் அவரின் பிழையான போதனைகளை பற்றியும் ஆராய்து பார்க்கும் நிங்களா இந்த அருவருப்பான சபைக்கு போகின்றிர்கள். வாந்தி எடுக்கும் சபைக்கு போய்க் கொண்டா இங்கு எம்முடன் திருத்துவதைப் பற்றி வாதாட வந்தனிங்கள். அதவிட கேவலம் என்ன வென்றால் சில்சாம் என்ற போதகர் அதை நியாயப் படுத்தி ; ஜால்ரா அடித்து எழுதுகிறார் பாருங்கள் அது தான் சுப்போரோ சோப்பர்.......: விரைவின் வெளிப்படுதல் ௧௩ ஆம் அதிகாரத்தின் பதிலை கொடுக்கிறேன்: வாசித்த பின்பாவது கொல்வின் அவர்கள் இந்த வேசி சபையில் இருந்து வெளியே வருகிறாரா என்று பார்ப்போம்.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )