kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்திகிறிஸ்துவா கிறிஸ்துவிரோதியா!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அந்திகிறிஸ்துவா கிறிஸ்துவிரோதியா!!


அந்தி கிறிஸ்து சரியான மொழிப்பெயர்ப்பா!?

இதை குறித்து சகோ அன்பு ஒரு விவாதத்தை ஆரம்பித்து இருக்கிறார், இங்கேயும் அதை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்!! இது நான்  அங்கே பதிவு செய்த பதில்!!

கிறிஸ்து விரோதி என்பதை விட கிறிஸ்துவை போல் என்பது இன்னும் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! கிறிஸ்து விரோதி என்றால் அனைவருக்கும் தெரிந்து விடும் அவன் அல்லது அது என்னவென்று, ஆனால் அவனை அல்லது அதை குறித்து வேதத்தில் வாசிப்போமென்றால்,

II தெசலோனிக்கேயர் 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

அவன் எதிர்த்து நிற்கிறது கிறிஸ்துவின் போதனைகளையும், ஆராதனைமுறமைகளையுமே!! அடுத்த வரி சொல்லுகிறது, அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் என்றால் அவனை எப்படி கிறிஸ்து விரோதி என்று எழுதுவது!! கிறிஸ்துவை போல் அல்லது கள்ள கிறிஸ்து என்றால் கூட சரியாக தான் இருக்கும்!! அந்தி என்பது மாலை என்கிற அர்த்தம் தான்!! ஆங்கிளத்தில் ''' என்பதை நம் தமிழ் வேதாகம மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே அந்தி என்று எழுதிவிட்டார்கள்!! சொன்னால் சில தமிழ் ஆர்வலர்களும் இந்த வேதத்தை மாத்திரமே கைகளில் வைத்து புரட்டிக்கொண்டிருக்கும் சிலர் இந்த மொழிப்பெயர்ப்பு வானத்திலிருந்து வந்து இறங்கியது என்று குதிப்பார்கள்!!

இது போன்ற அநேக தவறுகள் மொழிப்பெயர்ப்புகளில் இருந்தாலும் அதை மாற்றுவதாக இல்லை, கேட்டால் ஒரு புள்ளியாவது இதிலிருந்து மாற்ற கூடாது என்கிற சப்பை பாட்டு பாடுவார்கள்!! அப்பேற்பட்ட கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பே தனது அடுத்த பதிவில் இத்துனை தவறுகள் இருந்தது என்று திருத்திக்கொண்டார்கள், ஆனால் நம் தமிழ் வேதாகம் மாத்திரமே அதை அப்படியே அந்த தவறுகளுடன் தொடர்ந்து பதித்து வருகிறது!! இதை கைகளில் வைத்துக்கொண்டு சிலர் வேண்டாத வாக்குவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்!!

பல மொழிப்பெயர்ப்புகளை பார்க்கும் நாம் இதை புரிந்துக்கொள்ள முடியும், ஆனால் தமிழில் உள்ள பரிசுத்த வேதாகமம் மாத்திரம் (ஏனென்றால் தமிழ் இதை தவிர இருக்கும் எல்லா மொழிப்பெயர்ப்புகளும் தவறாம்) வைத்திருப்பவர்கள் அதை அதே அர்த்தத்தில் வாசித்து கள்ள உபதேசங்களை பறப்பி வருகிறார்கள்!!

Original Word: ἀντίχριστος, ου, ὁ
Part of Speech: Noun, Masculine
Transliteration: antichristos
Phonetic Spelling: (an-tee'-khris-tos)
Short Definition: antichrist
Definition: antichrist, either one who puts himself in the place of, or the enemy (opponent) of the Messiah.

500 antíxristos (from 473 /antí, "opposite to, in place of" and 5547 /Xristós, "Christ") – properly, opposite to Christ; someone acting in place of (against) Christ; "Antichrist."



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

(i) அந்திக்கிறிஸ்து என்றால் என்ன?



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///(i) அந்திக்கிறிஸ்து என்றால் என்ன?///

 

சொற்பொருள் விளக்கம்: அந்திக்கிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிராக அல்லது பதிலாக என்பது பொருள்.இயேசு கிறிஸ்துவைப்பற்றி பைபிள்சொல்வதை மறுதலிக்கும் எல்லாருக்கும், அவருடைய ராஜ்யத்தை எதிர்க்கும் எல்லாருக்கும், அவரைப் பின்பற்றுவோரைத் தவறாக நடத்தும் எல்லோருக்கும் இந்தப் பெயர் பொருந்துகிறது. அது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாகப் பொய் உரிமைபாராட்டுகிற அல்லது தங்களுக்கு

மேசியாவின் பாகத்தைப் தவறாகப் பொருத்திக்கொள்ளும் தனிப்பட்ட நபர்களையும் அமைப்புக்களையும்

மற்றும் தேசங்களையும்  உள்ளடக்குகிறது.

பைபிள் ஒரேயொரு அந்திக் கிறிஸ்துவையே குறிக்கிறதா?
1  யோவான் 2 :18 ..... ''பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்''.
2 யோவான் 1 : 7 : ''மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்'. ( ''அனேக அந்திக்கிறிஸ்துக்கள்''

என்று 1 யோவான் 2 :18 -யில் குறிப்பிடப்பட்டது.  இங்கு மொத்தமாக ''அந்திக்கிறிஸ்து'' என்று குறிப்பிடப்படுவதை கவனியுங்கள்)



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

அந்திக்கிறிஸ்து வருவது ஏதோ எதிர்காலத்துக்கென ஒதுக்கிடு செய்யப்பட்டதா?

1 யோவான் 4 :3 ''
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது''. ( அது கி.பி முதல் நுற்றாண்டு முடியும் சமயத்தில் எழுதப்பட்டது)

1 யோவான் 2 :18
''இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்''. ( ''கடைசிக் காலம்'' என்று யோவான் சொன்னது தெளிவாகவே அப்போஸ்தலர் காலத்தின் முடிவைக் குறித்தது. மற்ற அப்போஸ்தலர்கள் மரித்துவிட்டார்கள் மற்றும் யோவான்தானே மிகவும் வயது சென்றவனாக இருந்தான்.)



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

அந்திக் கிறிஸ்து என அடையாளங் காட்டப்படும் சிலர் _

இயேசு உண்மையில் மேசியா என்பதை மறுக்கும் ஆட்கள்

1  யோவான் 2 :22  ''இயேசுவைக் கிறிஸ்து (அல்லது மேசியா; அபிஷேகம் செய்யப்பட்டவர் ) அல்ல  என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? .......அந்திக்கிறிஸ்து''

இயேசுவை கடவுளுடைய தனித்தன்மை வாய்ந்த குமாரன் அல்ல என்று மறுதலிக்கும் எல்லோரும்

1  யோவான் 2 :22  ''பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து'' யோவான் 10 :36   லுக்கா 9:35   ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கவும்.

கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிற அல்லது தாங்களே மேசியா எனப் பொய்யாக உரிமை பாராட்டும் தனிப்பட்ட நபர்களும் மற்றும் தேசங்களும்

சங்கீதம் 2 :2  ''கர்த்தருக்கு (யேகோவாவுக்கு) விரோதமாகவும் அவர் அபிஷகம்பண்ணினவருக்கு (இயேசு அல்லது மேசியாவுக்கு) விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி'' னார்கள். வெளிப்படுத்தல் 17 :3 , 12 -14 , 19 :11 -21  ஆகியவற்றை பாருங்கள்.

மத்தேயு 24 :24  ''கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்''

இதில் கொடுக்கப்பட்ட கேள்விக்கான பதில்கள் ஓரளவுக்குப் போதும் என்று நினைக்கிறேன்.



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரிசுத்த வேதாகமம் போய் இப்பொழுது "திருவிவிலிய பொது மொழிபெயர்ப்பு" எனும் திருத்திய மொழிபெயர்ப்பு வந்து விட்டது போல்!! இதை நாங்கள் முதலில் எழுதியபோது, பரிசுத்த வேதாகமம் என்று பைபிள் சொசைட்டி ஆஃப் இந்திய வெளியிடுவது தான் சரியான மொழிப்பெயர்ப்பு என்றும் அதில் எந்த தவறும் கிடையாது என்று வாதாடியவர் இவர்!! இப்பொழுது தான் கண்கள் திறந்திருக்கிறது போல்!! இவரை சொல்லி குற்றம் இல்லை, வெளி. 13ம் அதிகாரம் நிறைவேறனுமே!!

எதிர் கிறிஸ்து என்று வாசித்தால் கூட தப்பான அர்த்தமே வரும்!! ஏனென்றால் ஆங்கிளத்தில் Anti என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு எதிர் என்கிற அர்த்தம் மாத்திரம் அல்ல, கிறிஸ்துவை போல் என்று கூட தான் அர்த்தம்!! கிறிஸ்து என்றால் அபிஷேகம் செய்யப்பட்டவர்!! இன்று பல ஊழிய நிறுவனங்கள், எங்கள் சபையில் அபிஷேகம் இருக்கிறது, என் கர்ச்சீப்பில் அபிஷேகம் இருக்கிறது, நான் எழுதும் புத்தகத்தில் அபிஷேகம் இருக்கிறது, என் கோட் சூட்டில் அபிஷேகம் இருக்கிறது என்று தங்களை "கிறிஸ்து"வை போல் பாவிக்கிறார்கள், இதுவே அந்தி கிறிஸ்து!! ஏதோ கிறிஸ்துவிற்கு எதிர்த்து நிற்பவன் என்று நினைத்திருக்கிறது திரித்துவ பெந்தோலிக்கர் கூட்டம்!! வசனத்தை வாசித்தால் தானே இவர்களுக்கு எதுவும் புரியும்:

2 தெசலோனிக்கேயர் 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

இங்கேயும் எதிர்த்து நிற்பது என்பது தன்னை அபிஷேகம் பெற்றவர்கள் (கிறிஸ்து) என்று சொல்லிக்கொண்டு, கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிர்த்து நிற்பவர்கள் மாத்திரமே, ஏனென்றால் இவர்கள் நிற்பதே தேவனின் ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்திருப்பவர்களாக!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

என் விளக்கம் தங்களுக்கு குழப்பத்தை தரலாம் நண்பர்களே !!!!

ஆனால் உண்மையை கண்டறிய நாம் கடமை பட்டுள்ளோம்


1யோவான் 2;18 ல்

அந்தி கிறிஸ்துக்கள் என்று சொல்லபட்டிருக்கிறது


அப்படிஎருக்க நாம் ஒரே கிறிஸ்து வைபற்றினவர்களாக

அல்லாமல் அந்தி கிறிஸ்துவை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன ????????????????



கிறிஸ்துவ விரோதி என்று சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard