நன்மை தீமை பற்றிய அறிவு ஒருவர் எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்!!
இதை 4 விதமாக பிரிக்க முடியும்!!
முதலாவது: தன்னில்தானே அறிந்துகொள்ளுதல்
இதற்கு எந்தவிதமான அனுபவமோ, ஆலோசனையோ அல்லது வேறு எவ்விதத்திலாவது புரிந்துக்கொள்ளுவது என்பது இல்லாமல், தன்னில்தானே இந்த அறிவு பெற்றிவராக இருப்பது!! சர்வவல்லமை உள்ள யெகோவா தேவனுக்கு மாத்திரமே இது பொருந்தும்!!
ஏசாயா 40:13 கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? 14 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?
தேவன் ஒருரே தன்னில்தானே சகலத்தையும் அறிந்திருப்பவராக இருக்கிறார்!! ஆதாமுக்கு கட்டளையாக சொல்லும் போதுக்கூட, இந்த கனியை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று சொல்லுகிறார் என்றால் அவருக்கு மரணம் என்னவென்று தெரிந்திருக்க வேண்டுமே!! மேலும் இஸ்ராயேல் மக்களுக்கு இத்துனை பிரமானங்கள், கட்டளைகள் கொடுத்திருக்கிறார் என்றால் அவர் யாருடன் ஆலோசனை செய்திருக்க முடியும்!! அவருக்கு ஆலோசனை சொல்லுமளவிற்கு யார் உண்டு!?
யோபு பாடுகளை பற்றி தேவனிடம் கேட்டபோது தேவன் சொன்ன வார்த்தைகள்:
யோபு 38:4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. 5. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. 6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?
இப்படி எதற்கும் ஒரு முன் அனுபவமோ, அல்லது வேறு ஒருவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது தேவனுக்கு இல்லை, அவர் எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கிறார், சகலமும் அவருக்கு தெரிந்திருக்கிறது, அவருக்கு ஆலோசனை சொல்லுபவன் என்று ஒருவனும் கிடையாது!!
இந்த முறையில் நாம் மற்றவர்களின் அனுபவங்களை வைத்து, அதன் விளைவுகள், சாதகங்கள், பாதகங்களை நன்கு கவணித்து பார்த்து அதன் மூலம் நண்மை தீமையை குறித்தான அறிவை பெற்றுக்கொள்ளுதலாகும்!!
ஆனால் இந்த முறை நமக்கு அதாவது மனிதர்களுக்கு பொருந்துமா!!
பொருந்தாது என்றே கருதுகிறேன்!!
புகை பிடிப்பதின் விளைவுகள், மது பான பழக்கம், இன்னும் பல தீமைகளையும் அதன் விளைவுகளையும் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள், அந்த பழக்கத்தை புது புது விதங்களில் கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்களே அன்றி அதை விடுவதாக இல்லை!! போரின் விளைவு தெரிந்தாலும், சமாதானத்தை விரும்பாமல் இன்னும் ஆங்காங்கே குட்டி குட்டி போர் நடந்த வண்ணம் தானிருக்கிறது!! இப்படி மனிதர்கள் அன்றாடம் தீமைகளை பார்த்து அதன் விளைவுகளை தெரிந்துக்கொண்டாலும், அந்த தீமைகளுடன் ஒன்றித்து போய் இருப்பதை தான் பார்க்க முடிகிறது!!
ஆனாலும் இந்த முறையை பின்பற்றுபவர்களாக தேவதூதர்கள் என்று நாம் வேதத்திலிருந்து பார்க்கலாம்!!
1 பேதுரு 1:12. தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
நாமோ அனுதினமும் வேதத்திலிருந்து வாசித்து அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டாலும் திருந்தாமலே இருக்கிறோம், ஆனால் நமது அனுபவங்கள் மூலமாக பாவமும், பாவத்தின் விளைவான மரணமும், அந்த மரணமுண்டாகும் வழிகளும், இப்படியாக எல்லாவற்றையும் தேவதூதர்கள் நம்மை பார்த்து தெரிந்துக்கொள்கிறார்கள்!! அவர்களுக்கு தன்னில்தானே அறிந்துக்கொள்ளும் தன்மை கிடையாது, ஆனால் அதே நேரத்தில் அனுபவத்தினால் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிலையிலும் இல்லை!! தேவ தூதர்களும் பாவத்திற்கு உட்பட முடியும் என்பதை ஆதியாகம் 6ம் அதிகாரத்திலும்,
19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
இந்த வசனத்தை படித்து தான் கிறிஸ்து மரித்திருந்த நிலையில் இருந்த அந்த மூன்று நாட்களும் காவலிலுள்ள "ஆவி"களுக்கு பிரசிஙித்துக்கொண்டிருந்தார் என்கிற ஒரு தப்பிதமான போதனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்!! அவர் மூன்று நாட்கள் மரித்து இருந்தார், அந்த மூன்று நாட்கள் சென்ற பின்பே தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று பல வசனங்கள் ஆதாரமாக இருக்கிறது!! அப்படி இருக்க இந்த ஒரு வசனம் மாத்திரம் ஏன் இப்படி இருக்கிறது என்பதை நிதானித்து வாசிக்க வேண்டும்!!
முதலாவது சொல்லப்பட்ட ஆவிகள் நோவா காலத்திலுள்ள மனுஷ ஆவிகள் கிடையாது, மாறாக நோவா காலத்தில் மனுஷ குமாரத்திக்கள் அழகாக இருக்கிறார்கள் என்று தேவ குமாரர்கள் வந்து திருமனம் செய்து விழுந்து போன தேவதூதர்களை குறித்து தான் நோவா காலத்து ஆவிகள் என்று இருக்கிறது!! இப்படி பட்ட தேவ தூதர்கள் மீண்டும் தங்களை உருமாற விடாமல் வைத்திருக்கும் ஒரு நிலை தான் காவலில் உள்ள நிலை!! இந்த தூதர்கள் கிறிஸ்து இயேசுவின் கீழ்ப்படிதலை, அதன் மூலம் ஏற்பட்ட சிலுவை மரணத்தை, அதினால் உண்டான மீட்பின் வழியை கிறிஸ்துவின் அனுபவத்தினால் புரிந்துக்கொள்கிறார்கள்!! இது தான் அந்த "பிரசங்கம்"!!
தேவ தூதர்கள் ஒரு முறை பாவத்தில் ஈடுப்பட்டதினால் இந்த உலகமே அழிக்கப்பட்டது என்பது நமக்கு தெரிந்ததே!! அவர்களுக்கு அந்த ஒரு அனுபவம் போதும், மேலும் மனிதர்கள் மூலமாக நடந்தேறும் ஒவ்வொரு அனுபவத்தையும் அவர்கள் பாடமாக ஏற்றுக்கொள்கிறார்கள், நண்மை தீமையை அறிந்திருக்கிறார்கள்!! இந்த பூமி தான் அவர்களுக்கு கற்றுக்கொள்கிற இடமாக இருக்கிறது!!
இந்த முறை மனிதர்களுக்கு மாத்திரமே!! எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் வெறுமனே அறிவுரையின் மூலமாக நன்மை தீமையின் அறிவை தர முயற்சிக்கும் முறையும் மனிதனுக்கு ஏற்றதாக அமையாமல் போய் விட்டது, போய் கொண்டிருக்கிறது!!
நம் ஆதிபிதாவான ஆதாம் படைக்கப்பட்டவுடன், அவனுக்கு கட்டளையாக, சட்டமாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது:
ஆதியாகமம் 2:16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
மரணம், துக்கம், பாடுகள், வியாதிகள் என்று இப்படி ஒரு அனுபவமும் இல்லாத ஆதாமிடத்தில், கட்டளையாக, நீ இதை சப்பிட்டாய் என்றால் மரித்து போவாய், என்று சொல்லப்பட்டது!! விளைவை நாம் அறிவோம்!!
ஒரு மனிதன் அனுபவத்திற்குள் வரும் முன் பல அறிவுரைகளுக்கு ஆளாகிறான்!! பிறந்து விவரம் தெரியும் நாள் முதல், அவனுக்கு சொந்தமாக அனுபவம் இருக்காது, ஆகவே, அவன் பிறனின் அனுபவங்களை பார்த்து வளர்கிறானோ, அல்லது பிறாரால் அறிவுரை பெற்று வளர்கிறானோ, எல்லாம் ஒன்று தான்!!
எடுத்துக்காட்டாக, சிகரெட் புகைத்தால் நோய் உண்டாகும் என்று அறிவுரை இருந்தாலும், அது தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே தான் இருக்க செய்கிறது!!
இப்படி அறிவுரை மூலமாகவும் மனிதன் நன்மை தீமையின் விளைவுகளை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியவில்லை, முடிவதுமில்லை!!
திருடாதே என்று சொன்னால் திருடுகிறார்கள், திருடினால் சிறையில் இருக்க வேண்டிவரும் என்றாலும் திருடுகிறார்கள், அப்படி என்றால் அறிவுரையின் மூலமாக மனிதர்கள் நன்மை தீமையை முழுவதுமாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்!! அப்படி என்றால் அவர்களுக்கு இன்னும் ஏதாகினும் வழியிருக்கிறதா?
அனுபவமே ஒரு மனிதனின் சிறந்த ஆசானாகும்!! மனிதர்கள் பெரும்பாலுமான விஷயங்களை அனுபவங்கள் மூலமாகவே கற்றுக்கொள்கிறார்கள்!! மனிதர்களுக்கு கற்றுக்கொள்வதற்கு சிறந்த முறை அனுபவங்களே!!
பாவமும் அதன் விளைவான மரணமும் வரும் முன் பல விதமான அனுபவங்களில் மனிதன் நடந்து செல்கிறான், இவை அனைத்தும் அவனுக்கு நன்மையும் தீமையையும் குறித்த அறிவு கிடைப்பதற்கே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!
முதல் மனிதனான ஆதாமிற்கு பாவத்தின் சம்பளமான மரணம் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எத்துனை நாட்கள் ஆபேலை தன் பக்கத்தில் வைத்திருந்திருக்கலாம் என்று தெரியவில்லை, ஒரு வேளை அவன் உடல் துர்நாற்றம் எடுக்க தொடங்கிய பிறகே அவன் இனி எழப்போவதில்லை என்பதை கூட அறிந்திருக்கலாம், அப்ப தான் தேவன் சொன்ன வார்த்தைகளான,
"நீ மண்னாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்பதை தெரிந்திருப்பான்!!
பாவச்செய்ல்களின் விளைவாக வரும் நோய்கள் மனிதர்களுக்கு அனுபவத்தை தான் தருகிறது!! ஒரு வேளை ஒருவனிடம் குறிப்பிட்ட ஒரு தீய செயலின் விளைவை சொன்னால் புரியாது, அதுவே அந்த விளைவை அடைந்தால் மாத்திரமே மனிதனால் புரிந்துக்கொள்ள முடிகிறது!!
இப்பொழுது இருக்கும் இந்த பொல்லாத பிரபஞ்சத்தின் அதிபதியான சாத்தனிடமிருந்து அதிகப்படியான தீமைகளும் அதன் விளைவுகளிலும் மனிதர்கள் அனுபவப்பட்டிருக்கிறார்கள்!! இதோ கிறிஸ்துவின் ராஜியம் வருகிறது, அங்கே சாத்தான் கட்டப்பட்டு கிறிஸ்துவும் சபையும் ஆளுகை செய்யும் போது, நண்மையின் அனுபவங்களை மனிதன் பெறுவான்!!
இப்படி தீமையின் அனுபவத்தை பெறும் மனிதர்கள் நண்மையின் அனுபவத்தையும் பெறும் காலம் வருகிறது, அதன் பின் இந்த பூமி தேவனை அறிகிற அறிவால் நிறம்பியிருக்கும் என்று தீர்க்கதரிசனங்கல் பல இருக்கிறது!!