//இன்னும் நிறைய கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தாலும் இத்தோடு நிறுத்துகிறேன். //
தங்களின் அத்துனை கேள்விகளிலுமே ஒரே பதில் தான் உண்டு!! அதற்கு உண்டான ஒரே வசனம்:
1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது என்பது நாம் பிதா என்று அழைக்கும் யெகோவா தேவன்
அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது என்பது நம் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவே!!
எத்துனை கேள்விகள் கேட்டாலும் இந்த வசனத்திற்கு இது வரையில் தங்களின் பதில் இல்லையே!!!???
கொல்வின் எழுதியது:
//அருமையாக கேள்வி எழுப்பியுள்ளீர்கள் சகோதரரே. ஆனால் பாருங்கள் நீங்கள் இயேசுவை தேவனை விட உயர்த்தியதாக சொல்லப் போகிறார்கள். //
அந்த அருமையான கேள்விகளுக்கு ஒரே வரி தான் பதில், அதை மேலே எழுதிவிட்டேன்!! இப்பொழுது நான் கேட்க்கும் ஒரே கேள்விக்கு எத்துனை பதில்கள் தருவீர்கள் என்று பார்க்கலாம்!!??
ஜானிடம் கேட்ட கேள்வி உங்களுக்கும் பொருந்தும், உங்களிடம் கேட்ட கேள்வி ஜான் அவர்களும் பதில் தரலாம்!! பதில் என்றால் கிண்டல் கேலி நையாண்டி இல்லை, நான் கேட்பது வசனத்திற்கு பதில்!! பல முறை கேட்டாலும் இதற்கு பதில் இல்லை!!
//இந்த வசனம் பிதா ஒருவர் மாத்திரமே தேவன் என்று சொல்லுவதாக பொருள் கொண்டால் அதன் அடுத்து பகுதி இயேசு கிறிஸ்து மட்டுமே கர்த்தர் என்று பொருள் வருகிறது. அப்படியென்றால் இவர்களுடைய மற்றொரு வசனமாகிய கிழே உள்ள வசனத்தில் வருகிற கர்த்தர் யார்? குறிப்பு: இவர்களுடைய பெரேயன் அறிவின்படி யோவான் 1:1 ல் இயேசுவும் 'ஒரு' தேவனாவார். ஆகையால் தேவனாகிய கர்த்தர் என்பது இயேசுவை மாத்திரம் குறிக்கிறது என்று பொருள் கொள்ளலாமா?
* அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4:10 )//
நான் விளக்கம் கேட்டால் நீங்கள் ஏதோ எழுதுகிறீர்களே!! பிதா ஒருவர் தான் தேவன் என்று வசனம் சொல்லுகிறபோது, அது என்ன பொருள் கொண்டால்!! வசனத்தின் அடுத்த பகுதி கிறிஸ்து மட்டுமே கர்த்தர் என்று வருகிறது மிகவும் சரியே!! ஆனால் தாங்கள் சுட்டி காட்டிய மத்தேயு 4:10ல் அப்பாலே போ சாத்தானே; உன் கர்த்தரை பணிந்துகொண்டு அவர்........" என்று வசனம் இருந்தால் நீங்கள் வைத்திருக்கும் வாதம் சரியாக இருக்கலாம்!! உன் தேவனாகிய கர்த்தர் என்பதற்கும் 1 கொரி 8ல் இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்று சொல்லுவதற்கு வித்தியாசம் இருக்கிறது ஜான் அவர்களே!! சம்பந்தம் இல்லாத இரண்டு வசனங்களை வைத்து கிறிஸ்துவை தேவனாகிய கர்த்தர் என்று நீரூபிக்கும் வீண் முயற்சியில் ஈடுபடுகிறீர்களே!! அப்படி என்றால் கிறிஸ்து ஏதோ மூன்றாம் மனிதரை சொல்லுவது போல் சொல்லாமல், அப்பாலே போ சாத்தானே எனக்கு ஒருவருக்கு ஆராதனை என்று சொல்லியிருக்கலாமே!! உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை என்று மற்றோருவரை சொல்லுவதாக உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை போல்!!
நீங்கள் 1000 முறையல்ல 1000 X 1000 முறை இதற்கு பதில் கொடுத்தாலும் உங்கள் '''மைன்டில் தான் பதில் தருகிறீர்கள்!! 1 கொரி 8:6 கிறிஸ்துவை கர்த்தர் என்று சொல்லுகிறது, மத் 4:10ல் கிறிஸ்து தன்னையே சொல்லாமல் தேவனாகிய கர்த்தர் என்கிறா பதத்தை உபயோகப்படுத்துகிறார் என்றாலே அவர் தனக்கு அல்ல தேவனாகிய பிதாவிற்கு ஆராதனை செலுத்தும்படியாகவே சொல்லியிருக்கிறார்!!
//இதற்கும் ஆயிரம் முறை பதில் சொல்லியாயிற்று இவர்கள் திரும்பவும் இதை கேட்டபதிற்கு காரணம் கிழே நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புவதற்கே! இதற்க்கு பதிலை வாசித்து விட்டு கிழே உள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.//
உங்களின் அனைத்து கேள்விகளுக்கு ஒரே வசனம் 1 கொரியந்தர் 8:6 என்பதை நான் எழுதிய பிறகும் இன்னும் என்ன பதில் எதிர்ப்பார்க்கிறீர்கள்!!
எடுத்துக்காட்டு:
ஒரு கட்டிடத்தை கட்டுபவர் உண்மையில் ஒரு கொத்தனாராக தான் இருக்க முடியும்!! எங்காவது ஒரு எண்ஜீனியர் வந்து செங்கல் எடுத்து ஒரு கட்டிடம் எழுப்பியதை பார்த்தது உண்டா!! ஆனாலு யார் இந்த வீட்டை கட்டினார்கள் என்றால் அந்த எண்ஜீனியரின் பெயர் தான் சொல்லப்படும்!!
அப்படியே:
தேவன் என்கிற ஒரு மகா பெரிய அறிவாளி இந்த பூமிய சிருஷ்டித்தார் ஒரு எண்ஜீனியரை போல்!! அந்த திட்டத்தை நிறைவேற்றியவர் அல்லது செய்து முடித்தவர் கிறிஸ்து!! ஒரு எண்ஜீனியருக்கும் கொத்தனாருக்கும் வித்தியாசம் தெரிகிறது, திட்டம் போடுகிற தேவனுக்கும் அதை நிறைவேற்றும் இயேசு கிறிஸ்துவிற்கு வித்தியாசம் தெரியவில்லை என்றால் அது உங்களை சொல்லி குற்றம் இல்லை!!
ஆகவே தான் தெளிவாக எழுதினேன் 1 கொரி 8:6ன் கருத்தை
அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது என்பது நாம் பிதா என்று அழைக்கும் யெகோவா தேவன்
அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது என்பது நம் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவே!!
அடுத்து அவராலே என்பதற்கு அவர்மூலமாய் என்பதற்கும் வித்தியாசம் இல்லை என்று நிரூபிக்க தோன்றுகிறதா!!
நீங்கள் ஆயிறம் முறை என்ன ஆயிறமாயிறம் முறை பதில் கொடுத்தாலும் வசனத்தை விளக்காமல் இதை அப்படி எடுத்துக்கொண்டால், அதை அப்படி எடுத்துக்கொண்டால் என்று தானே சொல்லி வருகிறீர்கள்!! தெளிவாக இந்த வசனத்தை நிதானித்து பாருங்கள்!! கர்த்தர் என்று சொல்லப்பட்ட ஒரு வசனத்தையும் தேவனாகிய கர்த்தர் என்று சொல்ல ப்படுகிற மற்றோரு வசனத்தை ஒப்பீட்டு பதில் தருவதாக நினைத்டுக்கொண்டு இருக்கிறீர்களே!! திசை திருப்புவது என் நோக்கம் இல்லை, திசை மாறாமல் இருப்பது தான் என் நோக்கம்!! நீங்கள் இன்னும் திரித்துவம் என்பது இது தான் என்கிற ஒரு Definition கொடுக்கவில்லை!! ஒருவர் மூவரா, மூவர் ஒருவரா, ஒன்றிலிருந்து மூன்றா அல்லது மூன்றிலிருந்து ஒன்றா ஒருவருக்குள் மூவரா அல்லது மூவர் சேர்ந்து ஒருவரா என்று தெளிவாக ஒன்றை வேதத்திலிருந்து சொல்லுங்கள்!!
//உங்கள் மனைவியார் உங்களை விட எந்த விதத்தில் குறைந்தவர்? உங்கள் மனைவியார் உங்களுக்கு "Submit" பண்ண வேண்டும் என்று வேதம் சொல்லுகிறதே அப்படியென்றால் அவர் உங்களை விட தாழ்ந்தவரா? இதற்க்கு பதில் தெரிந்தால் உங்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில் தெரியும்.//
இது எல்லாம் ஒரு விளக்கம் என்று எழுதுகிறீர்களோ!! நீங்கள் ஏதோ கைதேர்ந்த அரசியல்வாதி போன்று ஆண் பெண் சமத்துவத்தை வெளியிடுகிறீர்கள்!! சமூக விஷயத்தை நான் பேசவில்லை!! 1 கொரி 15:27,28க்கு இனை வசனங்கள்:
நீங்கள் அரசியல்வாதியை போல் பேசாமல், வேதத்தை வாசிப்பவராக பாருங்கள்!! மேலே உள்ள வசனங்களை வாசித்த பிறகும் சமமாக இருப்பவர்களில் ஒருவர் மற்றோருவருக்கு Submit பண்ண வேண்டும் என்று வேதம் எங்கே சொல்லுகிறது!! உங்கள் மனைவியார் உங்களை விட எந்த விதத்தில் குறைந்தவர் என்று உலகப்பிரகாரமாக கேட்க்கிறீர்களா, அல்லது வேதத்திலிருந்து கேட்க்கிறீர்களா!! படிப்பிலோ, அந்தஸ்திலோ, வயதிலோ, வேளை திறனிலோ சமமாக இருப்பதை குறித்து நீங்கள் சமம் என்று சொல்லியிருக்கிறீர்கள்!! இது வேதத்தில் இல்லை!! வேதத்தில் கணவன் மனைவியாரை குறித்து இருக்கும் வசனங்களை மேலே எழுதியிருக்கிறேன், முடிந்தால் வாசித்து பாருங்கள்!! பிறகு உங்கள் பதிலை தாருங்கள்!! கிறிஸ்துவும் பிதாவும் ஒரு சமம் என்றால் ஏன் ஒருவர் மற்றோருவருக்கு கீழ்ப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதே என் கேள்வி!! உங்கள் வித்தியாசமான எடுத்துக்காட்டின்படி உள்ள கேள்விக்கு கூட வேதம் ஏன் மனைவி கணவனுக்கு கீழ்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லுகிறது!! தேவன் கிறிஸ்துவிற்கு தலையாக இருக்கிறார் என்று வேதம் ஏன் சொல்ல வேண்டும்!!
நீங்கள் இன்னும் தெளிவாக இல்லை!! தேவனையும் கிறிஸ்துவையும் ஒரே Nature and Essence உடையவர்கள் என்று சொல்லி பல தேவ கோட்பாட்டை கொண்டு வர பார்க்கிறீர்கள்!! வேதம் தெளிவாக சொல்லுகிறது, தேவன் கிறிஸ்துவிற்கு தலையாக இருக்கிறார் என்றால் இருவரும் சமம் தான் என்கிறீர்கள்!! சமமாக இருக்கும் இருவரில் ஏன் ஒருவர் மற்றோருவருக்கு தலையாக இருக்க வேண்டும், ஏன் ஒருவர் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்!? முடிந்தால் பதில் எழுதுங்கள், ஏனென்றால் உங்கள் கோட்பாட்டில் இதற்கு பதில் இல்லை!!
நீங்கள் செல்லும் சபைகளில் எல்லாம் மனைவியர்களும் கணவர்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்களோ!! தயவு செய்து உங்கள் திரித்துவ கோட்பாட்டை நிரூபிக்க வசனங்களை மீறாதீர்கள்!!
ஒரே Nature and Essence என்று சொல்லுகிற நீங்கள் அதை வேத வசனத்துடன் சொன்னால் நன்றாக இருக்கும், ஏனென்றால் ஒரே ல் இல்லை என்பதற்கு அநேக வசனங்கள் இருக்கிறது!! கேள்வி கேட்டே பழகி போன் உங்களிடம் நான் சில கேள்விகளை கேட்க்கிறேன்!! பதில் சொல்லுங்கள் அதை விட்டு விட்டு இது ரஸ்ஸலின் கருத்து, இது ஏரியஸ்ன் கருத்து என்று தட்டி கழிக்க வேண்டாம், அதற்கு நீங்கள் பதில் கொடுக்காமல் இருந்தால் நலமாக இருக்கும்!! ஒரு கருத்தை நான் சொந்தமாக்கிய பிறகு அது என்னுடைய கருத்தாக தான் இருக்க முடியுமே தவிர அதன் பின் அதை மற்றோருவரின் கருத்து என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது!! ரஸ்ஸல் சொல்லியிருக்கலாம், அல்லது வேறு யாராவது சொல்லியிருக்கலாம், அது முக்கியம் இல்லை, அது போல் அத்நாஷியஸ் சொல்லியிருக்கலாம் அல்லது ஜான் வெஸ்லி சொல்லியிருக்கலாம் அதுவும் முக்கியம் இல்லை, உங்கள் கருத்து என்னவென்றே நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன், அந்த வரிசையில் இதோ சில கேள்விகள்:
1. தேவனும் கிறிஸ்துவும் ஒரே Nature and Essenceல் இருக்கிறார்கள் என்பதற்கு வசன ஆதாராத்தை தாருங்கள்!! கிறிஸ்து ஒரு தொடக்கத்திலிருந்து இருக்கிறார், தேவன் என்றென்றைக்கும் உள்ளவராக (அநாதியாக) இருக்கிறார் என்று வசனங்களுடன் பதிந்தும் பல முறை அது நக்கலும் நைய்யாண்டியும் குதர்த்தத்திலும் தட்டிக்கழிக்கப்பட்டு விட்டது!! முதலாவது இருவரும் ஒரே காலத்தில் இருந்து இல்லை என்பதே ஒரே Nature and Essenceல் இருக்கிறார்கள் என்கிற கோட்பாட்டை தவறு என்றாக்கிவிடுகிறது!!
2. யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
இந்த வசனம் ஒன்றான மெய் தேவனையும், அந்த ஒன்றான மெய் தேவன் அனுப்பிய கிறிஸ்து இயேசுவை குறித்து சொல்லுகிறது என்றால் இருவரும் ஒன்றா?
3. கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
இருவரும் ஒரே Nature and Essenceல் இருப்பவர்கள் என்றால் ஏன் ஒருவரை அப்பா பிதாவே என்று கூப்பிட அவரின் ஆவியை அல்ல மாறாக அவரின் குமாரனுடைய ஆவியை தரவேண்டும்!! முதலாவது ஒரே Nature and Essenceல் இருப்பவர்கள் ஏன் பிதாவாகவும் குமாரனாகவும் இருக்க வேண்டும்??
பிதாவும் குமாரனும் இன்னும் திரித்துவத்தை பேசுவோர் தொடாத பரிசுத்த ஆவியாகிய தேவன் (!!) என்கிற மூவோரு கடவுள் அல்லது மூன்றில் ஒன்றான தேவன் அல்லது திரியேக தேவன் அல்லது திரித்துவ தேவன் என்பவர்கள் ல் ஒன்று தான் என்பதை மறுக்கும் வசனங்கள்!!
மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
லூக்கா 10:22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
கிறிஸ்துவின் பிதாவினால் கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கிறிஸ்து பிதாவிடம் பெற்றுக்கொண்டார் என்றாலே இருவரும் ஒரே தன்மையில் இருப்போராக இருக்க முடியாது!! மேலும் தான் தான் பிதா என்றால், அவரே அவரை வெளிப்படுத்த என்ன அவசியம் என்பது புரியாத புதிர்!!
லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
அவர் (கிறிஸ்து இயேசு) பெரியவராயிருப்பார் என்றும் உன்னதமானவருடைய (யெகோவா தேவன் / பிதாவாகிய தேவன்) குமாரனா இருப்பார்!! இங்கேயும் கிறிஸ்துவின் பிதா தாமே அவருக்கு கொடுப்பார், இவர் பெற்றுக்கொள்வார்!! ஆனாலும் இருவரும் ஒரே தன்மையுள்ளவர்களாம்!!
யோவான் 5:19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
பிதாவிடம் கற்றுக்கொண்டு அல்லது பிதா செய்வதை பார்த்து செய்யும் இவரைவிட வேறு ஒரு போதகர் நமக்கு தேவையா!! இந்த போதகரை பின்பற்றி அவர் பிதாவினால் வெளிப்படுத்தியதை பின்பற்றினால், இவர் மூலமாகவே பிதாவிடம் சென்றடையலாம்!! இப்படி ஒருவர் காட்டி தர, மற்றவர் அதை பின்பற்றுவதாக சொன்னாலும் இருவரும் ஒரே தன்மையில் இருப்பவர்களாம்!!
இன்னும் கேட்பேன்............பதில் வருதா என்று பார்க்கலாம்!!
//இயேசுக்கிறிஸ்து தேவனைவிடத் தாழ்வானவர் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி காண்பிக்கும் வசனமாக யெகோவாவின் சாட்சிகளால் சுட்டிக்காட்டப்படுவது 1 கொரிந்தியர் 15:28 ஆகும். சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.//
நான் யெகோவா சாட்சிக் கிடையாது!! நானும் இதே வசனத்தை தான் உங்களின் கருத்தில் கேட்டேன்!! ஆனால் நீங்களோ வழக்கம் போல் வசந்தகுமாரின் கருத்தை தருகிறீர்கள்!! இதவே உங்கள் கருத்து என்றால் நான் அடுத்து கேட்க்கிறேன்!! யெகோவா சாட்சிகள் என்ன யார் கேட்டாலும் உங்கள் பதில் என்ன என்பது தான் என் கேள்வியே!?
நான் கேட்பது என்னவென்றால் வசனம் சொல்லுகிறபடி, எல்லாவற்றையும் கிறிஸ்துவிற்கு கீழ்ப்படுத்திய தேவன் தாமே கிறிஸ்துவிற்கு கீழ்ப்பட்டிருக்க மாட்டார் என்று வசனம் இப்படியாக சொல்லுகிறது, "சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது." அதன் பிறகு கிறிஸ்து தேவனுக்கு கீழ்ப்பட்டிருப்பார் என்கிறது வசனம்!! ஆக கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது தான் விஷயம்!! வசனத்திற்கு பதில் கேட்டால் இது யெகோவா சாட்சிகள் காண்பிக்கிறார்கள், இது அவர்கள் காண்பிக்கிறார்கள் என்று இன்னோருவரின் கருத்து எனக்கு வேண்டாம்!! இந்த வசனத்தை யாரிடமும் காண்பித்து, வாசித்து அர்த்தம் கேட்டால் நிச்சயமாக நான் சொல்லுவதையே சொல்லுவார்கள்!! ஆனால் நீங்களோ தொடக்க முதல் ஒரு அர்த்தம் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றார்ப்போல் வசனத்தை மாற்றி அர்த்தம் கொண்டு வர பார்க்கிறீர்களே!!
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து பிதா தான் எழுப்பினார் என்பதையாவது வசனத்தின்படி நம்புவீர்களா அல்லது அதுவும் யெகோவா சாட்சிகளின் தந்திரம் என்பீர்களா!!?? அப்படி கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பும் ஒருவரும் மரணத்திலிருந்து எழும்பும் ஒருவரும் ஒரே நிலையில் இருப்பவர்களாக முடியுமா!! கிறிஸ்து தேவனுக்கு மாத்திரம் இருந்த சாவாமையை பெற்றுக்கொண்டு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்கிறார் என்று தான் வேதம் கூறுகிறதே தவிர, அவர் பிதாவாக பிதாவின் சிங்காசனத்தில் உட்காரவில்லை!! கிறிஸ்துவே தம்மை பிதாவிற்கு தாழ்த்துகிறார் என்று சொன்னாலும் வசந்தகுமார் சொல்லாத ஒரே காரணத்திற்காகவோ, அல்லது யெகோவா சாட்சிகள் இந்த வசனத்தை காண்பிப்பதாலோ வசனம் மாறாது, உங்கள் கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளும் வரை!!
உங்களின் பதில் யெகோவா சாட்சிகள் இதை கேட்பதால் தப்பாக தான் இருக்கும் என்கிற தோரனையில் இருக்கிறதே தவிர, வசனம் என்ன சொல்லுகிறது என்று இல்லையே!!
//இது என்ன ஒரு சின்னபுள்ள தனமான கருத்து. உங்கள் கூட்டத்துடன் பேச ஆரம்பித்து சில நீங்கள் வேதம் வாசிக்கும் பெரேயா (??) முறைமையை புரிந்து கொண்டேன். நீங்கள் காட்டிய வசனம் (மத்தேயு 24:4) அநேகர் வந்து வஞ்சிப்பார்கள் என்றுதான் சொல்லுகிறதே தவிர தனி ஆளாகவோ அல்லது சிறு கூட்டமாக வந்து 'அருமையான வேதாகம வகுப்புகள்" என்று கூவி அழைத்து வஞ்சிக்கமாட்டார்கள் என்று சொல்லவில்லை. கிழே உள்ள வசனத்தில் சிலர் என்று வருகிறது உடனே வஞ்சிக்கிறவர்கள் சிறு கூட்டமாக (உதாரணமாக உங்கள் கூட்டத்தை போல) வருவார்கள் என்று முடிவு செய்ய முடியுமா?//
வேதத்தில் சொல்லப்பட்டது எல்லாம் இப்படி தான் இருக்கிறது!! எழுதியதற்கு அதிகமாக எண்ணுவது உங்களுக்கு பழகியிருக்கலாம், என்ன செய்ய!!! சொல்லாததை சொல்லி வருவது உங்களுக்கு பழக்கமான ஒன்று தானே!! ஒன்றான மெய் தேவனை திரியேக தேவன் என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் போது, மற்றதை குறித்து என்ன பேச!!
//நெசமாவா? நான் சாத்தான் மட்டும்தாம் விசாலமான பாதையில் நடப்பவன் என்றும் மற்றவர்கள் எல்லாம் இடுக்கமான வாசல் வழியை நடப்பவர்கள் என்றும் அல்லவா நினைத்தேன். எல்லாரும்தான் பரலோகம் போகப்போறோமே எப்படி நடந்தா என்ன?//
வேதத்தை மறைத்த, எறித்த சபையயில் இருப்பீர்கள் அல்லது இருப்பவர்களுடன் தொடர்புடையவராக இருப்பதினால் உங்களுக்கு எல்லாமே தோன்றுமே!! ஆனால் பரவாயில்லை, முதலில் என்னை தான் கிண்டல் செய்தீர்கள் என்று நினைத்தேன், ஆனால் வசனத்தையும் கிண்டல் அடிப்பதால் உங்கள் சுபாவம் அப்படிப்பட்டது என்று புரிந்துவிட்டது!!
நான் எழுதியது: நான் விளக்கம் கேட்டால் நீங்கள் ஏதோ எழுதுகிறீர்களே!! பிதா ஒருவர் தான் தேவன் என்று வசனம் சொல்லுகிறபோது, அது என்ன பொருள் கொண்டால்!! வசனத்தின் அடுத்த பகுதி கிறிஸ்து மட்டுமே கர்த்தர் என்று வருகிறது மிகவும் சரியே!!
ஜானின் பதில்: அப்போ பிதாவை கர்த்தர் என்று அழைக்கலாமா? கர்த்தருக்கும், தேவனுக்கும் என்ன வித்தியாசம், எதில் வித்தியாசம் என்று தங்களுக்கு தெரியுமா?
நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதற்கு எந்த விதத்திலும் பொருந்தாத ஒரு பதிவை தருகிறார், இதை தான் எஸ்கேப்பிஸம் (Escapism) என்பார்கள்!!
நான் எழுதியது: உங்களின் அனைத்து கேள்விகளுக்கு ஒரே வசனம் 1 கொரியந்தர் 8:6 என்பதை நான் எழுதிய பிறகும் இன்னும் என்ன பதில் எதிர்ப்பார்க்கிறீர்கள்!!
மீண்டும் ஜான்: //நீங்கள் சொல்லும் பதில் குழந்தைத்தனமாக தோன்றவில்லயா நண்பரே? இது செழிப்பு உபதேசத்தை நம்புகிற ஒருவன் கிழே உள்ள வசனத்தை தன்னுடைய விசுவாச ஆதாரமாக காண்பித்து விட்டு வேறு எல்லா வசனங்களையும் Contradict பண்ணினாலும் அதை பொருட்படுத்தாமல் முரட்டு பிடிவாதம் செய்வது போல இருக்கிறது
* நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம் (I யோவான் 5:15)//
உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் அது குழந்தைத்தனமாக ஆகி விடுகிறது!! 1 கொரிந்தியருக்கு இது வரையில் பதில் தராமல் தப்பித்துக்கொண்டு, தேவையில்லாம, இதில் செழிப்பின் உபதேசம் என்று ஒரு திரித்துவ வேதபுரட்டர்களின் போதனையை விளக்குகிறார்!! ஒரே தேவன் அவர் பிதா என்றும் ஒரே கர்த்தர் அவர் கிறிஸ்து இயேசு என்று வசனம் கூறுவதை எடுத்து சொன்னால் இவர் பெரிய புத்திசாலித்தனமாக பதில் தருவதாக "அப்படி என்றால் பிதாவை கர்த்தர் என்று அழைக்கலாமா"? என்றும் திரித்துவ வேதப்புரட்டர்களான செழிப்பின் உபதேசத்தாரை துனைக்கு அழைக்கிறார்!! (என்னடா இது, இப்படி ஒரு வசனம் வந்து நம் கோட்பாட்டை மாற்றுகிறது என்கிற அச்சம் தான்))!!
என் பதிலில் ஒரு குழந்தைத்தனமும் இல்லை ஜான் அவர்களே!! உங்களுக்கு வசனத்தை விளக்க முடிந்தால் சொல்லுங்கள் இல்லாவிட்டால் விட்டு விடுங்கள்!!
//நீங்கள் வேதத்தின் படி உங்களுடைய துணைவியார் உங்களை விட கீழானவர் என்று சொல்லுகிறீர்களா?
அப்படிஎன்றால் எந்த விதத்தில் கிழானவர் என்று விளக்க முடியுமா? மனைவி கணவனுக்கு கீழ்ப்பட்டவள் என்று வேதம் தெளிவாய் சொன்னாலும் அது Nature மற்றும் Essence இல் இல்லை என்பதையும் சொல்லுகிறது. நீங்கள் உங்கள் வசதிக்காக மறந்து (மறைத்து) விட்ட வசனங்களை கிழே தருகிறேன்
தேவன் ஏவாளை படைக்கும் போது தனியாக மண்ணை எடுத்து படைக்கவில்லை மாறாக ஆதாமில் இருந்து ஏவாளை எடுத்தார். தேவனுடைய பார்வையில் இருவரும் சமமே!
* அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதியாகமம் 1:23-24)
தேவன் கணவனையும், மனைவியையும் ஒரே சரிரமாக, சரி சமமாக பார்க்கிறார் ஆனால் குடும்பம் என்று ஒரு அமைப்பு போல பார்க்கும் போது கணவனுக்கு மனைவி Submit பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்.
இதற்கு ஒப்பனையானது தான் பிதாவுக்கும் , இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு. இருவரும் Nature மற்றும் Essence இல் சமமாய் இருந்தாலும் இயேசு கிறிஸ்து, பிதாவுக்கு Rank இல் கிழ்பட்டு இருப்பார். கிறிஸ்துவுக்குள் இருந்த இரண்டு சுபாவங்கள் குறித்து தியானம் செய்து பாருங்கள் உண்மை புலப்படும்.//
தேவையில்லாமல் சமூகப்பார்வையை சொல்லி வேதத்தை குழப்பாதீர்கள்!!
I தீமோத்தேயு 2:14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
ஆனாலும் இருவரும் ஒருவரே!!
என்னப்பன்னுவது, வசனத்தை கொடுத்தால் இவர்களுக்கு அது குழந்தைத்தனம் அல்லது இஸ்லாமியத்தனமாக இருக்கும்!! அவர்கள் கேள்வி கேட்க்கிறார்கள் என்றால் உங்களின் மாறுபடான கோட்ப்பாடுகளை கொண்டு தான் என்று புரியாமல், கேள்விக்கு பதில் கொடுக்க தெரியாமல் அதை அசட்டை செய்வதால் தானே!!
//ரசலுடைய போதனை இல்லாமல் ஆதி வேறு, அநாதி வேறு என்பதற்கு வேதத்தில் இருந்து வசனம் தாருங்கள். //
உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் ரஸ்ஸலை குறித்து சொல்ல உங்களுக்கு தகுதியில்லை!! கேள்வி கேட்டது நான், இதில் ரஸ்ஸல் எங்கே இருந்து வருகிறார்!!
சங்கீதம் 90:1. ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். 2. பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
இதில் அநாதியாய் இருக்கிறவர் யார் கிறிஸ்துவா!!??
சங்கீதம் 93:2........நீர் அநாதியாயிருக்கிறீர்.
இதுவும் கிறிஸ்துவோ!!
ஏம்ப்பா ரஸ்ஸலை இத்துனை மட்டமாக பேசுகிறீர்களே, ஆனால் அவருக்கு தெர்நித விஷயம் கூட உங்களுக்கு தெரியவில்லையே!!
//ஆதியிலே வார்த்தை இருந்த்தது என்று Past Tense ல் தான் வசனம் இருக்கிறது. //
ஆமாங்க இதை யோவான் எழுதுகிறார், அவர் எழுதியபோது கிறிஸ்து மாம்சத்தில் வந்ததினால், ஆதியில் அவர் வார்த்தையாக இருந்ததை குறித்து எழுதுகிறார், தொடக்கம் என்பது அநாதியாக முடியாது!! There is a difference between Eternal and Beginning!! உங்களுக்கு புரியவில்லை அல்லது உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை என்பதற்கு என்ன செய்ய முடியும்!! வேத புரட்டர்களின் சரித்திரம் யோவான் காலத்திலிருந்தே இருக்கிறதே!!
//இருவரும் ஒன்று என்று யார் சொன்னது? //
இருவரும் ஒன்று இல்லை என்றால் நீங்கள் யாரை தேவனாக ஏற்றுக்கொண்டு இருகிறீர்கள்!! யாரை தொழுதுக்கொள்கிறீர்கள்!! இருவரையுமா??
//அப்பா மற்றும் பிதா என்பவை உறவுகள். ஆதாமும், ஏவாளும் உறவு முறைப்படி கணவன் மனைவி அவர்கள் ஆனால் தேவன் ஒரே மாமிசம் என்றார். Essence மற்றும் Nature ல் அவர்கள் இருவரும் சமமே. //
ஆமாங்க தேவன் என்று அழைக்க தேவையில்லை, கிறிஸ்து அவரை எப்படி பிதா என்று அழைக்கிறாரோ, அப்படி அழைக்கும்ப்படியாக அவர் புத்திர சுவிகாரத்தின் ஆவியை தந்திருக்கிறார்!! நாம் பிதா என்று அழைக்கும் தேவனை தான் கிறிஸ்துவும் பிதா என்று அழைக்கிறார்!! """""ல் இருவரும் சமம் என்றால் ஏன் ஒருவர் மற்றவர்களுக்கு தாழ்ந்து இருக்க வேண்டும் என்பது தான் என் கேள்வியே!! திரும்ப திரும்ப நான் கேட்பதற்கு எழுதாமல் நீங்கள் சொன்னதையே அர்த்தமற்ற முறையில் சொல்லுகிறீர்களே!!
////அவர் (கிறிஸ்து இயேசு) பெரியவராயிருப்பார் என்றும் உன்னதமானவருடைய (யெகோவா தேவன் / பிதாவாகிய தேவன்) குமாரனா இருப்பார்!! இங்கேயும் கிறிஸ்துவின் பிதா தாமே அவருக்கு கொடுப்பார், இவர் பெற்றுக்கொள்வார்!! ஆனாலும் இருவரும் ஒரே தன்மையுள்ளவர்களாம்!!
யோவான் 5:19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
பிதாவிடம் கற்றுக்கொண்டு அல்லது பிதா செய்வதை பார்த்து செய்யும் இவரைவிட வேறு ஒரு போதகர் நமக்கு தேவையா!! இந்த போதகரை பின்பற்றி அவர் பிதாவினால் வெளிப்படுத்தியதை பின்பற்றினால், இவர் மூலமாகவே பிதாவிடம் சென்றடையலாம்!! இப்படி ஒருவர் காட்டி தர, மற்றவர் அதை பின்பற்றுவதாக சொன்னாலும் இருவரும் ஒரே தன்மையில் இருப்பவர்களாம்!! ////
இதற்கும் பதில் இல்லை, மாறாக கருத்தே இருக்கிறது, அதாவது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லை என்றால் அது இஸ்லாமியத்தனமாம்!! வசனத்தை எழுதி தானே கேள்வி கேட்டிருக்கிறேன், இதில் என்ன இஸ்லாமியத்தனம்?? உங்களை போன்ற புரட்டர்கள் இருக்கும் வரை இது போன்ற கேள்விகள் வந்துக்கொண்டு தான் இருக்கும், நீங்களும் பதில் தராமல், இது அதை போல் இருக்கிறது, இதை போல் இருக்கிறது என்றே சொல்லி காலத்தை ஓட்டுவீர்கள்!!
// இயேசு தேவனல்ல என்று நீங்கள் சொல்லுவதை ஏற்று கொண்டால் அதே விதிகளின் படி இயேசு ஒரு மனிதன் மட்டும்தான் அவர் தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிற வசனங்களை விட்டுவிடலாம் என்று இஸ்லாமியர்கள் சொல்லுவதையும் ஏற்கவேண்டும். வேதம் முழுவதுமே தவறாததாக இருக்கிறது என்று நீங்கள் விசுவாசித்தால் "தேவன் Nature மற்றும் Essence-ல் ஒன்றாய் இருக்கிறார் ஆனால் Persanality-ல் மூன்றாய் இருக்கிறார் " என்பதை தவிர வேறு எப்படி முடிவு செய்தாலும் அது சில வசனங்களை நிச்சயமாக Contradict பண்ணும்.கீழே உள்ள கேள்விகளையும் தொடர்ந்து வாசியுங்கள். வாசித்து உண்மையிலே உங்களுக்கு கேள்விகள் இருந்தால் அவற்றை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
நீங்கள் வசனத்தை புரட்டுவதால் தானே இஸ்லாமியர்கள் போல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாத விளக்கங்களை தர முயற்சிக்கிறீர்கள்!! தேவன் என்கிறதற்கு சரியான அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும்!! பிதா தொடங்கி, மனிதர்கள் வரையில், ஏன் சாத்தனை கூட தான் வேதத்தில் தேவன் என்று எழுதியிருக்கிறது
கீழே இந்த கேள்வியும் இல்லை, அல்லது நீக்கப்பட்டு விட்டதா, அல்லது பதிவேறவில்லையோ, எனக்கு அங்கே ஒரு கேள்வியும் இருப்பதாக தெரியவில்லை!! உண்மையான கேள்வியான யோவான் 17:3; 1 கொரி 8:6, இதற்கெல்லாம் பதில் தாருங்கள் பிறகு பார்க்கலாம்!!
//நண்பர் பெறேயனின் திரும்ப, திரும்ப வேதத்தை விட ரசலைத்தான் நேசிக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. வேதம் என்ன சொல்லுகிறது என்பதை விட ரசல் தான் முக்கியம். அவருடைய சவாலை ஏற்று கிழே உள்ள வசனங்களை பதிக்கிறேன். இதற்க்கு என்ன பதில் கொடுத்து நம்மை 'அசத்த' போகிறார் என்று ஆவலோடு இருக்கிறேன். யோவான் இல்லாத பாதத்தில் விழுந்தாரா? * அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். (வெளி 19:1) வெளிபடுத்தின விசேஷம் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காது என்பதால் ஏசாயாவில் இருந்து ஒன்று இல்லாததை எதற்கு மூடுவனேன்? * சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து (ஏசாயா 6:2)
வெளிப்படுத்தின விசேஷம் எனக்கு பிடிக்காது என்று எங்காவது எழுதியிருக்கிறேனா!! இருந்தால் தொடுப்பு கொடுத்து நிரூபியிங்கள், தேவை இல்லாத வியாக்கியானம் ஒன்றும் வேண்டாமே!! எப்படி வெளிப்படுத்தின விசேஷத்தில் தரிசங்கள் நிறைந்திருக்கிறதோ, அப்படியே நீங்கள் சுட்டி காண்பித்திருக்கும் ஏசாயா 2ம் தரிசனம் தான்!! வேதத்தில் ஒவ்வொறு பகுதியையும் சரிவர பகுத்து படித்தால் தான் புரியும்!! இல்லாட்டி இப்படி தான் சேராபீன்கள் பாதத்துடன் நடமாடிக்கொண்டு இருப்பவர்கள் என்று நினைப்பீர்கள்!! தரிச்னங்களை தரிசனமாக தான் வியாக்கியானம் செய்ய வேண்டுமே அன்றி அதை உண்மையாக எடுத்துக்கொள்ள முடியாது!!
வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்கு பாதப்படி என்று இருப்பதால் தேவன் ஏதோ தன் காலை இந்த பூமியின் மேல் வைத்திருக்கிறார் என்று தானே சொல்வீர்கள்!! வசனத்தை அப்படியே வாசித்து அப்படியே அர்த்தம் சொல்லிக்கொண்டு போனால் பாதி வேதத்தில் குழப்பம் மாத்திரமே மிஞ்சும்!!
மேலும் தேவதூதர்களுக்கு கால் இருக்கிறதா இல்லையா போன்ற தேவையற்ற விவாதத்தை குறித்து ரஸ்ஸல் எழுதி அதை ஏதோ நான் பின்பற்றுவதாக இந்த திரித்துவ கூட்டத்தார் வழக்கம் போல் பாடுகிறார்கள்!! வேதம் உங்களை விட எனக்கு முக்கியமே, அதிலிருந்து தானே கள்ளத்தனமான திரித்துவ உபதேசத்தையும் அதை போதித்து வரும் கள்ள கூட்டத்தையும் காண்பிக்க முடியும்!! வேத புத்தகத்தை விட ஒரு மனிதனின் போதனை என்னை எந்த விதத்திலும் கவர்ந்தது கிடையாது என்பதை என் பதிவுகள் தெளிவு படுத்தும்!!
வசனங்களை காப்பி பேஸ்ட் செய்வோரை பார்த்து குப்பையை காப்பி பேஸ்ட் செய்கிறார் என்று கொல்வின் சொல்லும் போதே நீங்கள் எல்லாம் எந்த அளவிற்கு வேதத்தை நேசிக்கிறீகள் என்பது தெளிவாயிற்று!!
உங்களின் இந்த கண்டுபிடிப்பை நீங்கள் வைத்து தேவதூதனுக்கு கால் இருக்கிறது அவன் நடந்து வருவான், தேவதூதனுக்கு இறகு இருக்கிறது, ஆகவே அவன் பறந்து வருவான், போன்ற கதைகளில் மூழ்கியிருங்கள்!! ஏனென்றால் வசனம் வாசிக்க மாத்திரமே உங்களுக்கு தெரியும், அதை வியாக்கியானம் பண்ணும் அறிவு இன்னும் உங்களுக்கு இல்லை!!
ஜான் அவர்கள் என்னிடம் இருந்து 'அசத்தலான" பதிலை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்!!
யெளவன ஜனம் என்கிற தளத்தில் ஜான் கேள்வி கேட்டு அதை கொல்வின் தமிழ் கிறிஸ்தவம் என்கிற மற்றோரு தளத்திற்கு எடுத்து போயிருக்கிறார்!! ஜான் கேட்ட இந்த கேள்விகளால் அவர் ஏதோ பெரிய வேத பண்டிதர் என்று என்னி விட வேண்டாம், பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவை குறித்து தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட வசனங்களையும், அது புதிய ஏற்பாட்டில் நிறைவேறியதையுமான வசனங்களை ஏடுத்து எழுதி ஏதோ பெரிய கண்டுபிடிப்பு என்று தன் வழக்கம் போல் உள்ள குழப்பத்தில் இருந்துக்கொண்டு அவரின் கூட்டளிகளான வசந்தகுமாரின் சீஷர்களிடம் பெயர் எடுப்பதாக நினைக்கிறார்!! வெளி 1:8ஐ தவிர இவர் எழுதி காண்பித்தது அனைத்தும் பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவை குறித்தான தீர்க்கதரிசனங்களும், அதன் நிறைவேறுதலும், இன்னும் நிறைவேற இருக்கும் வசனங்களே!! எடுத்துக்காட்டு,
//கிழே உள்ள வசனத்தின் படி "குத்தப்பட்டது யார்"?
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)//
பழைய ஏற்பாட்டில் ஒரு குத்தப்பட்டது என்றும் புதிய ஏற்பாட்டில் ஒரு குத்தப்பட்டதும் என்கிற வார்த்தையினால் பழைய ஏற்பாட்டில் அது யெகோவா தேவனாக இருக்கும் புதிய ஏற்பாட்டில் அது கிறிஸ்துவாக தான் இருக்கும் ஆகவே இருவரும் ஒன்று என்று அறிவீனத்தனமாக உங்கள் கூட்டணியின் முடிவாக இருக்கலாம்!! ஆனால் ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகவும், தலைச்சன்பிள்ளைக்காகத் துக்கிறதுபோல் என்றாலே அது யெகோவா தேவனை குறித்து இருக்க முடியாது என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஏதோ பெரிதாக கேள்வி கேட்டு மடக்கி விட்டோம் என்கிற மமதையோ!!
குத்தப்பட்டவர் கிறிஸ்து, குத்தியவர்கள் யூதர்கள், தேவனின் குமாரன் என்று தன்னை கிறிஸ்து சொன்னதை தேவ தூஷனமாக கருதியே அவரை சிலுவையில் அறைந்தனர், வரும் நாட்களில் அவர்களுக்கு கிறிஸ்து யார் என்று ராஜியத்தில் தெரியவரும் போது, சகரியா 12:10 நிறைவேறும்!! புரிகிறதா!!
இப்படி கோமாளித்தனமான கேள்வியும் அதில் இருக்கிறது:
//கிழே உள்ள வசனத்தில் அநாதியானவர் யார்?
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மிகா 5:2)//
அநாதி தேவனின் அநாதி திட்டத்தின் படியே எல்லாம் நிறைவேறி வருகிறது, அவரின் நினைவில் உள்ளதையே அவர் இங்கே சொல்லியிருக்கிறார், இந்த இடத்தில் அநாதி நாட்கள் என்பதை அநாதியானவர் யார் என்று கேட்டு தன் வேத அறிவீனத்தையே வெளிப்படுத்துகிறார் ஜான்!! கிறிஸ்து என்னும் ராஜா அநாதி நாட்களான தேவ திட்டத்தின்படியே புறப்பட்டு வருவார் என்பதை சொல்லும் வசனத்தை ஏதோ இவர் கேள்வி கேட்டு மடக்குகிறாராம்!! இதுவும் உங்கள் வசந்தகுமாரின் கூட்டணிக்கு சரியாக பொருந்தும்!! எது தீர்க்கதரிசனம், எது வசனம், எது கவிதை, யார் தேவன் என்று அறிவு இல்லாத வரை இது போல் இல்லை, இதை விட காமேடியான கேள்விகள் நிச்சயமாக எழும்பி கொண்டே இருக்கும், அதை முழுவதுமாக வாசிக்காத கொல்வினும் அற்புதம் போன்றவர்களும், "இனி அவர்கள் இதற்கு எல்லாம் பதில் அளிக்க மாட்டார்கள்" என்கிற வழக்கமான பதிவுகளை கொடுத்துக்கொண்டு தான் இருப்பார்கள்!!
கேள்விகளுக்கு தான் பதில் கொடுக்க முடியும்!! அறிவீனத்திற்கு கொடுக்க என்ன அவசியம்!! ஆனாலும் 1000 முறை பதில் தந்து விட்டோம் என்று வசந்தகுமாரின் குப்பையை மீண்டும் மீண்டும் 1 கொரி 15:25,26 மற்றும் 1 கொரி 8:6க்கு ஒட்டி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்!! ஒரே தேவன் பிதா என்றும் ஒரே கர்த்தர் இயேசு கிறிஸ்து என்று வசனத்தை நான் சொன்னால், அப்படி என்றால் தேவனாகிய கர்த்தர் யார் என்கிறீர்கள்!! உங்களிடம் இதற்கு பதில் இல்லை என்றும் இதற்கு பதில் தந்தால் திரித்துவம் என்கிற குப்பை போதனை பொய் என்றும் விளங்கிவிடும் என்கிற அச்சத்தில் பிசாசானவன் உங்களை கட்டி வைத்திருக்கிறான்!! இல்லாவிட்டால் இத்துனை துனிச்சலாக, தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்கிற அபத்தமான போதனைகள் தர யாராலும் முடியாது!!
//அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30) ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; (யாத்திராகமம் 33:11)//
ஆதியாகமம் 32:30ல் தேவனை கண்டேன் என்று சொன்ன வசனம் யெகோவா தேவனை கண்டேன் என்று இல்லை!! இங்கே தேவன் என்கிற பதத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை ஏலோஹிம்!! யெகோவாவிற்கும் ஏலோஹிமிற்கும் வித்தியாசம் இருக்கிறது!!
யாத் 33:11ல் முகமுகமாய் கண்டார் அல்லது பார்த்தார் என்று இல்லையே!! பேசினார் என்றால் கண்டார் என்று உங்கள் ஊரில் அர்த்தம் கொள்வீர்களோ!!
இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள யாருடைய உதவியும் தேவை இல்லை, உங்களுக்கு வேண்டுமென்றால் வசந்தகுமாரோ, அல்லது வெறு யாரோ, தேவை படுவார்கள் போதகர்கள் என்கிற பெயரில், ஆனால் எனக்கு அப்படி தேவையில்லை, கிறிஸ்துவையே என் போதகராக கொண்டிருக்கிறேன்!! உங்களை போல் பொய் சொல்லி கிறிஸ்து பிதாவாகிய தேவனும் ஒன்று என்று சொல்லுவதை அவர் சொல்ல விரும்பவில்லை, என்றே வசனம் சொல்லுகிறது!! அவர் தேவனின் ரூபமாக, (மனிதர்களும் தேவனின் சாயலிலும் ரூபத்திலும் தான் தேவன் படைத்தார்) இருந்தும் தன்னையே லூசிஃபர் சொன்னது போல், தேவனுக்கு சமமாக சொல்லுவதை அல்லது தேவன் என்கிற அந்த உன்னதமான பதவியை திருட்டுத்தனமாக லூசிஃபரை போன்று பறித்து விட கிறிஸ்து என்னவில்லை என்றே வசனம் சொல்லுகிறது!! அவர் செய்யாத அந்த காரியத்தை இன்று திரித்துவம் என்கிற பெயரில் உங்கள் கூட்டத்தார் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் யார் லூசிஃபரின் சீஷர்களாக இருக்கிறார்கள் என்று நிதானித்துக்கொள்ளுங்கள்!!
//கிழே உள்ள வசனத்தில் "குத்தின என்னை நோக்கிப் பார்த்து" ல் வருகிற "என்னை" யார்? கிறிஸ்துவா? எகோவாவா?
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். (சகரியா 12:10)//
அறிவு நிறைந்தவர்களே,
குத்தின என்னை நோக்கி பார்த்தது என்பதை மாத்திரம் கவனித்தீர்களே, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்குகாக புலம்புகிறது போலவும், தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறாது போலவும் என்பதை கவனிக்கவில்லை போல்!! ஏனென்றால் உங்களுக்கு ஒரே பேறானவர் அல்லது முதல் பேறானவர் என்பதற்கு உங்கள் போதகர்கள் சொல்லிய அர்த்தங்கள் இருக்குமே!! ஆனால் வேதம் கிறிஸ்துவை முதல் பேறானவர் என்றே சொல்லுகிறது!! மேலும் யெகோவா தேவன் குத்தப்பட்டிருக்கிறார் என்பதை விட அதிகமான தேவ தூஷனம் ஒன்றும் இருக்க முடியாது!! சாவாமையுள்ள ஒரே தேவனை உங்களின் வார்த்தைகள் கொள்ளுகிறதே!!
//whose goings forth are from of old, from everlasting// //அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. //
அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது என்பது யெகோவா தேவனின் திட்டத்தையே சொல்லுகிறது!! Whose goings forth are from of old is about Jehovah who planned everything from his everlasting!! This verse is no way says that Jesus is from everlasting!! Rather the one who planned his coming is from everlasting!!
3068. Yhvh the proper name of the God of Israel Original Word: יְהֹוָה Transliteration: Yhvh Phonetic Spelling: (yeh-ho-vaw') Short Definition: LORD Word Origin from havah Definition the proper name of the God of Israel NASB Word Usage GOD (314), LORD (6399), LORD'S (111).
From hayah; (the) self-Existent or Eternal; Jehovah, Jewish national name of God -- Jehovah, the Lord. Compare Yahh, Yhovih.
430. elohim God, god Original Word: אֱלֹהִים Transliteration: elohim Phonetic Spelling: (el-o-heem') Short Definition: God Word Origin pl. of eloah Definition God, god NASB Word Usage divine (1), divine being (1), exceedingly (1), God (2326), god (45), God's (14), goddess (2), godly (1), gods (204), great (2), judges (3), mighty (2), rulers (1), shrine* (1).
Plural of 'elowahh; gods in the ordinary sense; but specifically used (in the plural thus, especially with the article) of the supreme God; occasionally applied by way of deference to magistrates; and sometimes as a superlative -- angels, X exceeding, God (gods)(-dess, -ly), X (very) great, judges, X mighty.
see HEBREW 'elowahh
யெகோவா என்பதற்கும் எலோஹிம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் மேலே தெளிவாக இருக்கிறது!! ஆனாலும் உங்கள் போதகர்கள் என்று பலர் இருப்பார்கள், அவர்களிடமும் கேட்டு விட்டு பிறகு நம்பிக்கலாம்!!
//யேகோவா என்பவர் ஏலோஹிம் இல்லையா//
வல்லமையுள்ளவர், தேவதூதர்கள், தேவன் அனைத்திற்கும் எலோஹிம் பொருந்தும், ஆனால் இவை அனைத்திற்கும் யெகோவா என்கிற நாமத்தை உபயோகிக்க முடியாது!!
பல முறை நானும் சொல்லியிருக்கிறேன், சமம் என்கிற ஒரு பதம் இருக்கிறதென்றால் இருவர் இருக்கிறார்கள் என்பது தான் அர்த்தம்!! ஒருவராகவே ஒருவருக்கு சமமாக இருப்பது என்பது பாபிலோனிய கற்பனையே!!
உங்களின் இந்த பதிவு எனக்கு நிச்சயமாக பிரயோஜனமாக இருக்கிறது!! திரித்துவர்கள் வசனத்தை நம்பாமால் பாரம்பரியத்தை வைத்து வசனத்தை வியாக்கியானம் செய்து வேதத்தை குழப்பம் உள்ள புத்தகமாகவும், கிறிஸ்தவர்களை குழப்பமுள்ள ஜனங்களாகவும் நடத்துகிறார்கள்!!
குத்தப்பட்டவர் கிறிஸ்து இயேசு தான் என்று அனைவருக்கும் தெரியும், சிலுவையில் இருக்கும் போது கூட கிறிஸ்து இயேசு தன் பிதாவை நோக்கி கூப்பிடும் வசனமும் இருக்கிறது!! ஆனால் ஜான் போன்ற திரித்துவ போதகர்களுக்கு யெகோவா தேவன் தான் குத்தப்பட்டார் என்று சற்றும் அறிவில்லாமல் எழுதுவது பிரதான நோக்கமாக இருக்கிறது!! இவர் கேட்கிற பெரும்பாலுமான கேள்விகள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் கிறிஸ்துவின் நிறைவேறியது அல்லது இனி நிறைவேற போகும் வசனங்களை தான்!! குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் திரித்துவர்கள் என்னத்தை கேட்கிறோம் என்று கூட இல்லாமல் இந்த வசனம் சொல்லுவது கிறிஸ்துவா யெகோவா தேவனா என்று ஷெர்லாக் ஹோம்ஸ் தனத்தில் கேட்டு தன் சகாக்களின் பாராட்டுகளை பெறுகிறார்களே தவிர, பிரயோஜனமானது ஒன்றும் இல்லை!!
இவர்களிடம் 1 கொரி 8:6 மற்றும் 1 கொரி 15:26,27 கேட்டால் வசந்தகுமாரை எழுதுகிறார்களே தவிர, அந்த வசனம் என்ன சொல்லுகிறது என்று விளக்காமல் பதில் கேள்வித்தான் கேட்க்கிறார்கள்!!
இவர்களிடம் விவாதிக்காமல் விட்டு விடலாம் என்று சொன்னால், வேறு தளங்களில் வேறு சிலர் மூலமாக, அவர்களிடம் சரக்கு இல்லை, அவர்களுக்கு தெரியவில்லை போன்ற அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு ஆளாக்குகிறார்கள்!! இவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு இவர்கள் பதில் கொடுக்க மாட்டார்களாம்!! ஆனாலும் வேதத்தில் திரித்துவம் இல்லவே இல்லை என்று நிரூபிப்பது நம் கடமையாக இருக்கிறது!!
இவர்களுக்கு வரவிருக்கும் ராஜியத்தை குறித்தும், நீதியான பூமியை குறித்தும், வர இருக்கும் கிறிஸ்துவின் அரசாட்சியை குறித்தும் எந்த ஞானமும் இல்லை, ஏனென்றால் கிறிஸ்துவின் ராஜியத்தில் அனைவரும் சத்தியத்தை அறிந்துக்கொள்வார்கள் என்று சொல்லுவது இவர்களுக்கு வேடிக்கையான விஷயமாக இருக்கிறது!! பரலோக நரகம் விஸிட் போன்ற பாபிலோனிய முறைமைகள் இவர்களுக்கு நற்செய்தியாக இருக்கிறது!! சாத்தான் திரளான ஒர் கூட்டத்தை தன் கைகளில் வைத்துக்கொண்டு வசனத்தை புரட்டும் கூட்டமாக இவர்களை பயன்ப்படுத்தி வருவது இவர்களுக்கே தெரியாமல் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு பரிதாபமே!!
//ஹலோ போட்டாலும் போட்டீ்ர்கள் ஒரு பெரிய குண்டைத் தூக்கி. நீங்கள் பதித்த கருத்திலேயே மொத்த அபத்தக் கருத்திற்கெல்லாம் இது இப்பதிவு தாய். பல துறை சார்பாக பல ஆய்வு கட்டுரைகள் வெளிவருகின்றன. குறிப்பாக விஞ்ஞான துறை சார்பாக நிறைய ஆய்வு கட்டுரைகள் வெளிவருகின்றன. குறிப்பிட்ட விடயத்தில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்பட்டு எழுதப்பட்ட பின் அதனை எத்தனை பேர் உபயோகிக்கிறார்கள். எல்லோரும் மீண்டும் மீண்டுமாக அதனை ஆய்வு செய்து கொண்டா இருக்கிறார்கள். சான்றாக ஒன்றை சொல்லுகிறேன். அணுவை பிளக்கமுடியும் என ஆய்வு செய்து உறுதிப்படுத்தி எழுதினால் அதனை நீங்கள் அப்படியே ஏற்பதில்லையா? அதனை நீங்கள் மீண்டுமாக ஆய்வா செய்வீர்களா இல்லைதானே. எனவே ஒரு கட்டுரையின் நம்பகத்தன்மையை சோதிப்பதற்கு பல வழிகள் முறைகள் உள்ளன. அவை அககட்டுரையின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளன. இது ஒரு சிறுஉதாரணமே. மீண்டுமாக சரியான Citation & Reference கருத்தை விளங்கிக் கொள்ளாமல் எழுத வேண்டாம்.//
ஒரே தலைப்பிற்கு இருவேறு விளக்கங்களுடன் ஆய்வு கட்டுரைகள் வெளிவந்திருப்பதை தாங்கள் பார்த்ததே இல்லையா!! மதங்களை குறித்தான ஆய்வுகளையும் விஞ்ஞானம் குறித்தான ஆய்வுகளையும் ஒன்று இனைத்து பேசுவது என்பதே நீங்கள் எத்துனை பெரிய அறிவாளி என்பதை தான் நிரூபிக்கிறது!! விஞ்ஞானத்தில் உள்ளவைகள் பெரும்பாளும் உடனுக்குடன் நிரூபிக்கப்பட்டு எழுதப்படுகிற ஆய்வுகள், அதிலும் பல ஆய்வுகள் தவறு என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறாது!! Citation & Reference கொடுப்பதால் மாத்திரம் ஒரு கட்டுரையை நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை!! டார்வினின் பரிமான வளர்ச்சி கோட்பாடுகளை நம்புகிறீர்களா!! அதுவும் ஆய்வு கட்டுரை தானே!!
எடுத்துக்காட்டாக, 9பது கோள்கள் மாத்திரமே இருந்தது என்று நிரூபித்த விஞ்ஞானம் தற்போது 10 இருப்பதாக சொல்லுகிறதே!!
இனியும் ஆய்வு கட்டுரைகளை கண்மூடித்தனமாக எடுத்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல!! கூகலில் போய் தேடிப்பாருங்கள், எத்துனை ஆய்வு கட்டுரைகள் தப்பு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று!! ஆகவே தான் ஒருவரின் ஆய்வு கட்டுரையை வெளியிடுகிறீகள் என்றால் அது தப்போ சரியோ நீங்கள் அவரின் கருத்துக்கு தான் உடப்பட்டிருக்கிறீர்களே தவிர, இந்த கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன், இது இனி என் கருத்து தான் என்று சொல்லும் தைரியம் உங்களிடத்தில் இல்லை!! ஆய்வு கட்டுரை ஒரு காலத்தில் எழுதுவதற்கு சிரமமாக இருந்திருக்கலாம், ஆனால் இன்றோ ஒரு மெளஸ் க்ளிகில் எந்த தகவலும் கிடைத்து விடும், இப்பவும் ஏதோ ரொம்ப கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதெல்லாம் சும்மா தமாசு தான்!! சில விஷயங்களை நீங்கள் படித்து ஒரு தகுதியை உறுவாக்கவே படிக்கிறீர்கள், அப்படி தான் அணுவை பிளப்பது போன்ற உங்களின் உதாரனம், இதை ஒரு அணு விஞ்ஞானியிடம் சொல்லிப்பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவரிலும் எத்துனை பேதமைகள் இருக்கும் என்று தெரியும்!!
கொல்வின் அவர்களே, உங்களை முதலில் ஞானி என்றும் நீங்கள் ஒருவரை பார்த்து டைப் அடித்து வெளியிடுவது மிகுந்த புத்திசாலித்தனமான ஒரு காரியம் என்று நினைப்பதை நிறுத்துங்கள்!! உங்கள் சொந்த கருத்துக்களை பதிவிடுங்கள்!! நீங்கள் சொல்லும் நரகம் போன்ற கோட்பாடுகள் வேறு மார்க்கத்திலும் தான் இருக்கிறது, அதற்காக உங்களை நான் வேற்று மார்க்காத்தான் என்று சொல்லலாமா? என் எழுத்துக்கள் காவல் கோபுரத்துடன் ஒத்து இருக்கிறது என்று எழுதுகிறீர்களே, என்றாவது நான் எழுதியதை அப்படியே, இந்த புத்தகத்திலிருந்து தான் என்று எழுதியிருக்கிறீர்களா? யெகோவா சாட்சிகளின் விசுவாசங்களை அறிவீர்களே, நான் :எங்கள் விசுவாசம்" என்கிற பகுதியில் கொடுத்திருப்பது யெகோவா சாட்சிகளின் விசுவாசம் மட்டும் தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா!! அனைத்து பிரிவினை சபைகளிலும் சில விஷயங்கள் ஒன்றாக தான் இருக்கிறது, அதற்காக பெந்தகோஸ்தே சபையில் இருப்பவரை கத்தோலிக்கன் என்று சொல்ல முடியுமா!! என்னை குறித்து நீங்கள் அடிக்கடி தூஷனம் செய்வது அப்படி தான்!! என் கருத்துக்களை எழுதினால், இது யெகோவா சாட்சிகள் கருத்து போல் இருக்கிறது என்று எழுதுகிறீர்கள்!! இனி நீங்கள் எழுதுவது எல்லாம் பாபிலோனிய கருத்துக்கள் என்று எழுத நானும் தயங்க மாட்டேன்!!
இப்பவும் சொல்லுகிறேன், ஒரே தலைப்பில் அல்லது ஒரே விஷயத்தில் வெவ்வேறு ஆய்வுகள் இருக்கிறது, எது உங்கள் மனதிற்கு ஒத்து போகிறதோ, அது உங்கள் கருத்தாகி விடுகிறது!! ஒரு பதிப்பிற்கு கீழ் நீண்ட வரிசையில் ஒரு பெயர் பட்டியல் வெளியிடுவதினால் மாத்திரம் அந்த கட்டுரையில் எழுதப்பட்ட அனைத்தும் உண்மை என்று ஆகிவிடாது!! அது அந்த ஆகியோனின் சிந்தை, கருத்துக்கள் மாத்திரமே!! அந்த கருத்து என்றைக்கு வேண்டுமென்றாலும் மாறலாம்!! அப்படி அநேகம் மாறியும் இருக்கிறது!!
ஆரம்ப காலத்தில் அந்நிய பாஷை என்பதை நம்பினார் ஜாமக்காரன் பத்திரிக்கை ஆசிரியர் டாக்ட்ர் புஷ்ப்பராஜ், ஆனால் அவரே தன் ஆரம்பகால கருத்துக்களை மாற்றிக்கொண்டார்!!
நீங்கள் உங்களை மீண்டும் மீண்டும் மெத்த படித்த மேதாவி என்று தான் நிரூபிக்க விரும்புகிறீர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை!! உங்களின் இந்த Citation & Reference முறையை உங்கள் தளத்தில் இருப்பவர்களே பின் பற்றுவதில்லையே!! முதலில் அவர்களுக்கு புத்திமதி சொல்லுங்கள், பிறகு என்னிடம் வாருங்கள்!!
//உங்களுக்கு தெரிந்த போதகர் கிறிஸ்து மட்டும்தான் என்றால் இத்துணை அபத்தங்களும், கள்ளப்போதங்களும் ஏன். உங்களையே எலியாவாகவும், யோவானாகவும் உயர்த்திக் கொள்ளும் அளவிற்கு உஙகள் கூற்று உள்ளது. நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நேரடி விவாத்திற்கு வரலாம்தானே. நீங்கள் சொல்லுவது சத்தியம் என்றால் ஏன் தயங்குகிறீர்கள் நேரடி விவாத்திற்கு வாருங்கள்.//
என் தயக்கம் சத்தியத்தை விவாதிப்பதில் அல்ல, ஏன் என்று உங்களுக்கு தெரியும்!! நான் ஒன்றும் என்னை கிறிஸ்து என்று சொல்லிக்கொள்ளவில்லையே, சாதாரன மனிதர்களான எலியா, யோவானாக தானே சொல்லுகிறேன், ஆனால் திரித்துவ போதகர்களானவர்கள் தங்களை கிறிஸ்து என்று சொல்லி வருவதற்கு முன்னால் நான் இப்படி சொல்லுவது ஒன்றும் தவறே இல்லை!! எலியாவோ யோவானோ தங்களை உயர்த்திக்கொள்ளவில்லை, மாறாக கிறிஸ்துவின் பாதரட்ச்சைகளை கழட்ட கூட தகுதியில்லாதவன் என்று சொன்னவர் தான் யோவான்!! இவர்களின் ஆவிக்கொண்டவன் என்று எழுதுவதால் இவர்களாக மாறுவது என்று அர்த்தம் இல்லை, தேவனின் ஆவியை பெற்ற எவனும் தன்னை தேவன் என்று சொல்லுவது போல் இருக்கிறது உங்கள் கூற்று!! சத்தியத்தை வேதத்திலிருந்து விவாதிக்க நான் தையார், இன்னோருவரின் அந்தரங்கத்தில் மகிழும் கூட்டத்தில் உட்கார எனக்கு விருப்பம் இல்லை!!
மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.
மாற்கு 1:7 அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
இப்படி இருக்க யோவானை போல் நான் என்னை உயர்த்திக்கொண்டேன் என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது!! என்னை குற்றம் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்திற்குள் இருப்பதால் எப்படி வேண்டுமென்றாலும் எழுதுகிறீர்களே!!
ஆனால் திரித்துவ போதகர்களோ, நாங்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள் (கிறிஸ்து) என்று தங்களை சொல்லு உலா வருவது உங்கள் பார்வைக்கு தெரியவில்லை போல்,
மத்தேயு 24:5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
கொல்வின்: //நீங்கள் தற்போது உறுப்பினர் என்று அவர் சொன்னாரா? இல்லதானே!. நீங்களாக கற்பனை பண்ணிக்கொண்டு எதையாவது சொல்ல வேண்டாம்.//
நான் உறுப்பினர் என்று அவருக்கு நினைவுப்படுத்தினேன்!! அவர் என்ன எழுதினார் என்று படித்து விட்டு பிறகு என்னை விமர்சிக்கலாம்!! உங்களுக்கு எல்லாம் இதே பொழப்பா போச்சு போல்!! வேதத்தை விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றிலும் கெட்டியாக இருங்கள்!! நான் ஏதோ பதில் தரவில்லை என்கிற ஆதங்கத்தை அவர் வெளிபடுத்தியிருந்தார், நான் என்ன அவர் தளத்தின் உறுப்பினரா அங்கே பதில் கொடுப்பதற்கு என்கிற அர்த்தத்தில் கேட்டதை உங்களுக்கு புரியவில்லை, அவ்வளவே!!
//சிலவற்றுக்கு கொடுத்தீர்கள். சிலவற்றை மட்டுமே தொட்டீர்கள் என்பதே உண்மை. சகோ. ஜோனின் பெரும்பலான கேள்விகளுக்கு இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை. அப்படி அளிக்கப்பட்டிருந்தால் அவற்றை சுட்டிக் காட்டவும். நான் பதித்த கட்டுரைகளுக்கு கூட இன்னும் நீங்கள் பதில் அளிக்கவில்லை//
நீங்கள் பதிவு செய்தது வசந்தகுமாரின் கட்டுரைகள், நான் முன்னமே சொன்னேன், வசந்தகுமார் இங்கே விவாதித்தால் நான் பதில் தருவேன், இல்லை, உங்கள் கருத்துக்கள் என்று பதியுங்கள், நான் பதில் தருகிறேன், வசந்தகுமார் என்கிற ஒருவர் எழுதுகிறார், அதை பார்த்து நேர்மையாக டைப் செய்து வெளியிடுவதற்கு பதில் தர மாட்டேன் என்று நான் முடிவு செய்திருக்கிறேன்!! ஜோன் அவர்களும் பாடிய பல்லவியையே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார், மற்றபடி அவரின் அர்த்தமற்ற கேள்விகள் வாசித்து வாசித்து போர் அடித்து விட்டது!! என் கேள்விகளுக்கும் விடைகள் இன்னும் வரவில்லை, வசந்தகுமாரின் கட்டுரைகள் தான் வந்துக்கொண்டு இருக்கிறது, அது எனக்கு தேவையில்லை!! மற்றபடி நீங்கள் எத்துனை முறை அழுத்தி சொன்னாலும் சரி, எப்படி சொன்னாலும் சரி, நான் ரஸ்ஸலின் எந்த ஒரு பதிவையும் என் சொந்த பெயரில் பதிவது கிடையாது என்பது என் தேவனுக்கு தெரியும், உங்களுக்கு தெரியவோ அல்லது தெரியப்படுத்தவோ நான் கடமைப்பட்டவன் அல்ல!!
//மிகத் தவறான கருத்து குறிப்பாக சகோ. உமரின் கட்டுரைகளில் இவற்றை நீங்கள் அவதானிக்கலாம். நான் இத்தளத்தின் உறுப்பினர் ஆகும் முன்பே அவர் கட்டுரைகளை பதித்து வருகிறார. அவரின் பெரும்பாலான கட்டுரைகளில் இதனை காணலாம். இன்னும் சில சகோதரர்கள் தேவைப்படும்போது மட்டும் இந்த முறையை கடைபிடிக்கிறார்கள்.//
செரி, கொல்வின் மற்றும் உமர் என்பவரின் கட்டுரைகளை தவிர என்று வைத்துக்கொள்ளுங்கள்!! விவாத மேடைகள் என்பது தன் கருத்துக்களை பதிவதே அன்றி இன்னோருவர் என்ன எழுதினார் என்று பதிவதற்கு அல்ல!!
எங்களுக்கு மொழிப்பெயர்ப்புகளில் எங்கே சிக்கலாக தோன்றுகிறதோ, அங்கே மூல பாஷை அல்லது வேறு மொழிப்பெயர்ப்புகளின் உதவியை நாடி, மிகவும் தெளிவான அர்த்தத்தை விளங்கிக்கொள்ள பிரயாசிக்கிறோம்!! கிடைத்த ஒரு தமிழ் வேதாகமத்தை வைத்து வார்த்தை ஜாலம் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!! தேவனின் தன்மை என்னவென்று தெரிந்த பிறகு, அந்த தன்மைக்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் வேதத்தில் இருக்கிறது என்றால் நான் வேறு மொழிப்பெயர்ப்பு அல்லது கன்கார்டன்ஸ், டிக்க்ஷனரி, இன்னும் என்ன என்ன தேவை இருக்கிறதோ அதை எல்லாம் தான் பயன்படுத்தி நான் ஒரு கருத்தை கொண்டு வருகிறேன், அதில் நான் நடக்க பிரயாசிக்கிறேன்!! ரஸ்ஸல் என்றும் காவல் கோபுரம் என்றும் பிதற்றிக்கொண்டே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்களுக்கு ஒரு கொசுரு தகவல், உங்களுக்கு தெரியுமா 1964ல் கிடைத்த குமரான் குகைகள் கையெழுத்து பிரதிகள் எல்லாம் கிடைக்கும் முன்பே ரஸ்ஸல் மரித்துவிட்டார்!! ரஸ்ஸல் இருந்த போது பெந்தகோஸ்தே அவ்வுளவாக தலை தூக்கவில்லை, அவரின் எழுத்துக்களில் பெந்தகோஸ்தே தாக்கமே இருந்திருக்காது, ஆனால் இப்பொழுது பெந்தகோஸ்தேயினாரின் கோட்பாடுகள், கத்தோலிக்கத்திலிருந்து மருவி வந்து கிறிஸ்தவத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது!! இது எல்லாம் ரஸ்ஸலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை!! நான் எழுதுவது என் காலத்தில் இருக்கும் கிறிஸ்தவத்தையும், வேதத்தையும் பார்த்து தான்!! புரிகிறதா!! திரும்ப திரும்ப ரஸ்ஸல் ரஸ்ஸல் என்று இனியும் பிதற்றிக்கொண்டு எரிச்சல் மூட்ட வேண்டாம் என்று சொல்லுகிறேன்!!
மேலும் ஜான் கான்பித்த எந்த ஒரு வசனத்திலும் திரித்துவம் என்கிற வார்த்தை கிடையாது, இல்லாத ஒன்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, நீங்கள் எல்லாம் அதில் ஊரிப்போய் இருப்பதால் அந்த வசனங்களையே சொல்லிக்கொண்டு இருங்கள், ஆனாலும் அதில் திரித்துவம் கிடையாது!! யோவான் 1:1ஐ எடுத்துக்கொண்டாலும் அதில் இருவர் தான் இருக்கிறார்கள்!! நான் சொல்லுவது திரித்துவம், திரித்துவம் என்றால் மூன்று என்று அர்த்தம்!! முதலில் அதை வசனங்களில் நிரூபியுங்கள், சும்மா ரஸ்ஸல் ரஸ்சால் என்று பிதற்றுவதை நிறுத்திக்கொண்டு!!
போப் எல்லாம் உங்கள் கத்தோலிக்க சபையில் வைத்துக்கொள்ளுங்கள், கூடிய சீக்கிரம் அதிகாரம் இழந்து போன போப்பிற்கு மீணுட்ம் உங்கள் ஆவிக்குறிய சபைகள் அதிகாரத்தை தரவிருக்கின்றன, அதன் பின்பு நடக்க போவதை பாருங்கள்!! அதன் பின் வெளிப்படுத்தின விசேஷம் புரிய ஆரம்பிக்கும்!!
தேவதூத்தர்கள் கால்களுடன் தான் சுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை வேதம் சொல்லவில்லை!! அவ்வளவே!! நீங்கள் காண்பித்த அனைத்தும் தரிசனங்கள் கொண்ட வசனங்களையே!! பூமி தேவனுக்கு பாதப்படியாக இருப்பதால் தேவன் ஏதோ இந்த பூமியின் மேல் தன் "பாதங்களை" வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று நீங்களோ அல்லது வசந்தகுமாரோ அல்லது உங்கள் திரித்துவ போதகர்களோ சொல்லிக்கொண்டு இருங்கள்!!
* அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் (மத்தேயு 4:10 )//
'அவர் ஒருவருக்கே' என்றால் அவர் ஒருவருக்கு மட்டுமே என்றுதான் அர்த்தம் என்று மூடன் கூட புரிந்துகொள்வான்.
வேதபுரட்டன் கொல்வின்: //சமீபத்தில் ஒரு வேதப்புரட்டன் தனக்கு யோவானின் ஆவியும் எலியாவின் ஆவியும் வழங்கப்பட்டள்ளதாக எழுதினார். ஒருவருக்குள்ளே இருவகை ஆவியும் இருக்குமா? அவர் என்ன அர்த்தத்தில் இவ்விதம் கூறியிருப்பார்?//
உம்மை போன்ற லேகியோன் கூட்டத்தாரை துரத்தி அடிக்க தான் தேவன் எனக்கு அவ்வாறு தந்திருக்கிறார் என்று தான் அர்த்தம், வேறு என்ன!! வேதத்தில் இல்லாத திரித்துவத்தை பிரபலபடுத்திய மகா வேசியான பாபிலோனிய சபையிலிருந்து மற்ற சபைக்களுக்கு மதுவாக ஊத்திக்கொடுத்த வேத புரட்டர்களின் வேத அறிவீனத்தை வெளிப்படுத்தவே எனக்கு இந்த ஆவியை தந்திருக்கிறார் என்று தான் அர்த்தம்!!
ஒருவருக்குள் சத்தியத்தின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, தேவனின் ஆவி, விண்ணப்பத்தின் ஆவி இன்னும் எத்துனையோ இருக்கும் போது, யோவானின் ஆவியோ எலியாவின் ஆவியோ இருப்பதில் ஒரு தவறும் இல்லை, கொல்வின் என்கிற வேத புரட்டனே!! வேதத்தையே மறைத்து எரித்து திரித்து எழுதிய சபை தானே உம்முடையது, மரியாள் வணக்கம், புனிதர்கள் வணக்கம் உத்தரிப்பு நிலை, பாவ சங்கீர்த்தனம், சாமியார்கள், ரெவெரெண்டுகள், பிஷப்புகள், போப்புகள் உள்ள சபை தானே உம்முடையது, உம்முடைய சபைக்காரர்களின் புத்தகங்களை வாசித்து பாருங்கள், இப்பொழுது இருக்கும் பெந்தகோஸ்தேயை தான் அவர்கள் வேதபுரட்டர்கள் என்பார்கள்!! வேத புரட்டனும், வேத புரட்டர்களும் சேர்ந்து, நல்லா புரட்டி எடுக்குறிங்கப்பா வேதத்தை!! ஆவி என்பதை ஒரு ஆள் என்று தானே போதிக்கிறீர்கள், ஆகவே தான் உங்கள் வேத புரட்டர்களுக்கு இதை வாசித்தவுடன் குழப்பம்!! என்னை வேத புரட்டன் என்று சொல்லும் முன்பு நீர் இருக்கும் நிலையை பார்த்து பேசவும்!!
Revelation 17:2 With her the kings of the earth committed adultery and the inhabitants of the earth were intoxicated with the wine of her adulteries."
சரியான பபிலோனிய புராணம். இதற்காகதான் அடிக்கடி உங்களை பபிலோன் மதத்தவன் என்கிறேன். புரிந்ததா காலி்ல்லலாத தேவதூதன் போப்பு கோவை பெரியன்ஸ் அவர்களே. பபிலோனிய புத்தி உம்மை விட்டு எப்போது போகும். //
ஜோக்கை கொஞ்சம் சீரியஸாக படிக்கலாம்!! உங்கள் சபை முன்னோர்களை குறித்து தான் இது!! உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஊருக்கே தெரியாது என்கிற ஆனவமோ, அதிகமாக படித்திருக்கோம் என்கிற மமதையோ வேண்டாம்!! நான் ஒரு விஷயத்தை ஆறாயமல் வெளியிடமாட்டேன்!! பாதங்களை குறித்து, ஏற்கனவே பதில் தந்து விட்டேன், உங்களுக்கு திருப்தியான பதிலாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, ஏனென்றால் உங்களுக்கும் சத்தியத்திற்கும் வெகு தொலைவு!! இனி நல்ல ஜோக்கென்று நினைத்தே நீரும் உம் கூட்டாளியும் சேர்ந்து கும்மியடித்து விழுந்து விழுந்து சிறியும்!!
Stylites were solitaries who, taking up their abode upon the tops of a pillar (stylos), chose to spend their days amid the restraints thus entailed and in the exercise of other forms of asceticism. This practice may be regarded as the climax of a tendency which became very pronounced in Eastern lands in the latter part of the fourth century. The duration and severity of the fasts then practised almost pass belief, but the evidence is overwhelming, and the general correctness of the accounts preserved to us is no hardly disputed. Besides the mortification of the appetite, submission to restraints of all kinds became at this period an end in itself. Palladius tells us (ch. xlviii) of a hermit in Palestine who dwelt in a cave on the top of a mountain and who for the space of twenty-five years never turned his face to the West. St. Gregory of Nazianzus (P.G., XXXVII, 1456) speaks of a solitary who stood upright for many years together, absorbed in contemplation, without ever lying down. Theodoret assures us that he had seen a hermit who had passed ten years in a tub suspended in midair from poles (Philotheus, ch. xxviii).
என் வார்த்தைகளை ரிகார்ட் செய்த ஆளுகிட்ட அன்னைகே சொன்னேன், சரியான ஆளாக இருந்தால் இன்றே இதை வெளியிடும் என்று, ஆனால் அது இல்லை என்று நிரூபித்து விட்டார் உம்முடைய கூட்டாளி!! நீர் இத்துனை லேட்டாக எழுதியதில் தான் ஆச்சரியம்!! நீங்கள் மஞ்சல் பத்திரிக்கை நடத்திக்கொண்டு இருக்கும் கூட்டாளிகள், உங்களிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை, ஏனென்றால் அந்தரங்களை ஆறாய்வது தானே உம் பொழுதுபோக்கு!! அதை தொடர்ந்து செய்யும்!! இதை காரணம் காட்டி தான் நான் விவாதத்திற்கு வரவில்லை என்றேன் அறிவீன கூட்டமே!! ஆனாலும் உங்களுக்குள்ளே இத்துனை குப்பையையும் சாக்கடையையும் வைத்துக்கொண்டு எப்படி தான் அந்த துர்நாற்றத்திலும் உம்மால் அடுத்தவர்கள் மேல் விரல் நீட்ட முடிகிறதோ!!
//படிக்கும் எந்த வாசகரும் நிச்சியம் குழம்பித்தான் போவார்கள். கத்தோலிக்கர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதில் என்ன தப்பு? யெகோவா சாட்சிகளை யார் கிறிஸ்தவர்களாக கணக்கெடுக்கிறார்கள். பெரும்பாலான சபைகள் இவர்களை கிறிஸ்தவர்களாக கணக்கெடுப்பதே இல்லை ஏனென்றால் ஒரு தனி மனிதனால் ஆரம்பிக்கப்பட்டு அவனின் சுயபோதனைகளின் நடைபெறும் மதம்//
உம்மை அறீவனர்களுக்கு நிச்சயமாக புரியாது, ஏனென்றால் நீரே கத்தோலிக்கம் ஒரு மதம் என்று சொல்லிவிட்டு அவர்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதில் என்ன தப்பு என்றால், ஏதோ போதையில் எழுதிய எழுத்து போல் இருக்கிறது, உம் பிதற்றல்!! யெகோவா சாட்சிகளை யாரய்யா கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறார்கள்!!
இது ஜோசப் என்கிறா மற்றுமொரு வேஷதாரி எழுதியது:
//சொல்லவதுட்டாருய்யா, உலக நாகரீகங்களின் உற்பத்தி இடம். போய் உங்க அடிப்பொடியான ஆத்தும கரைசலுக்கு நாகரீகம்னா என்னன்னு புரியவைங்க.//
முதலில் நீர் எழுதிக்கொண்டு இருக்கும் தளத்தில் உள்ளதை நீர் வாசிக்கிறீரோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது!! ஆபாசமாகவும், கொச்சையாகவும், பச்சையாகவும், மஞ்சல் பத்திரிக்கை நடத்த எல்லா தகுதிகளும் இருக்கும் உம் குருநாதருக்கு நாகரீகம்னா என்னன்னு சொல்லிக்கொடுத்து பிறகு எங்கள் பக்கம் திரும்பலாம்!! என்ன!!
//மிஷனரி ஊழியம் பைபிளில் இல்லை, போட்டாருய்யா ஒரு போடு. இயேசு கொடுத்த கடைசி கட்டளையே மிஷனரி ஊழியத்துக்கான அழைப்பு தான், //
மிஷனரிக்கு அர்த்தம் தெரியுமா?
ஒரு மதவாதி பொதுவான சேவை செய்வதற்காக அனுப்பபடுவது தான் அதற்கான அர்த்தம்!! இயேசு கிறிஸ்து மிஷனரிகளாக தன் அப்போஸ்தலர்களை அனுப்பினார் என்று சொல்லுவதும் திரித்துவத்தின் புதிய தகவல், ஆனாலும் இத்துனை காமேடி கூடாதுங்கைய்யா!! யாருக்காவது வையிற்று வலி வந்து விட போகுது!!
//மிஷனரிகளின் தியாகத்தால் தான் நீர் இன்றைக்கு கிறிஸ்துவை பற்றி அறிந்திருக்கிறீர்.//
மிஷனரிகளின் தியாகத்திற்கும் நான் கிறிஸ்துவை குறித்து அறிவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!! இன்று மிஷனரி என்கிறா பெயரில் நடக்கும் அட்டுழியங்களையும் எடுத்து சொன்னால், நீர் அவர்களுக்கு பணத்தை அனுப்பவதையும் நிறுத்தி விடுவீர்!! இல்லை ஒரு வேளை நீரும் ஒரு மிஷனரியோ என்கிற சந்தேகம் வேறு இருக்கிறது!! நான் கிறிஸ்துவை அறிந்துக்கொள்ள என் கிறிஸ்துவின் பிதாவும், என் தேவனும் தான் காரணமே தவிர, நீங்கள் கோவில் கட்டி கும்பிடும் மிஷனரிகள் இல்லை!! நீங்கள் எல்லாம் மனிதர்களை நம்பி பிழைப்பு நடத்தும் கூட்டமாக இருப்பீர்கள், ஆகவே தான் மனுஷரை பிரியப்படுத்தும் தந்திரங்களை வைத்திருக்கிறீகள், ஆனால் எனக்கு அப்படி தேவையில்லை, என் தேவன் எல்லாவற்றையும் செய்ய வல்லமையுள்ளவராக இருக்கிறார் என்பது எனக்கு தெரியும்!!
//அன்றைக்கு தெந்தமிழகத்துக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் வராமல் இரு ந்திருந்தால் ஒருவேளை பகவத் கீதையையோ, ராமாயணத்தையோ பூட்டிய வீட்டில் உட்கார்ந்துகொண்டு அதன் மூல பாஷையான சமஸ்கிருதத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பீர்.//
அன்றைக்கு தோமையார் வந்ததினால் தானைய்யா கிறிஸ்தவம் தெனிந்தியாவில் வந்ததே அன்றி மிஷனரிகளினால் இல்லை என்பதை கூட தெரியாமல் பிதற்றாதீர்!! உம்மை போன்றவர்களின் மேல் மதகலவரத்தை தூண்டும் சட்டத்தை போடவேண்டும்!! உம் தலைவன் செய்துக்கொண்டு இருப்பது என்னவென்று கூட தெரியாமல் எழுதவேண்டும் என்று எதையோ பிதற்றிக்கொண்டு இருக்க வேண்டாம்!! கொசுரு செய்து, எனக்கு சமஸ்கிருதம் தெரியும்!!
//ஜிம் எலியட், டேவிட் லிவிங்ஸ்டன் போன்றவர்களின் வரலாற்றை படித்து பாரும், அப்ப தெரியும் மிஷனரி வாழ்க்கைன்னா என்னன்னு. கதவை உள்ளே தாழிட்டு கொண்டு மூல பாஷை ஆராய்ச்சி செய்வது கிறிஸ்தவம் அல்ல, அதை மற்றவருக்கு தன்னுயிரையும் பொருட்படுத்தாது அறிவிக்க துணிவதே கிறிஸ்தவம்.//
வெளியே போய் சத்தமாக பொய் பேசுவதை விட, உள்ளே கதவை தாளிட்டுக்கொண்டு மூல பாஷை ஆராய்ச்சி செய்து சத்தியத்தை அறிந்துக்கோள்வது தவறே இல்லை!! நீங்கள் சத்தமாக, துனிந்து பொய் சொல்லிக்கொண்டு கிறிஸ்தவர்கள் என்று பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!! உங்களை போல் பொது மேடை போட்டு சொன்னதையே சொல்லுவதை அன்றே கிறிஸ்து கண்டித்து இருக்கிறார் என்பது கூட உமக்கு தெரியவில்லை என்பதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை (மத்தேயு 6:1 7)
மிஷனரிகள் மதம் மாற்றியிருக்கலாம், ஆனால் சீஷர்களாக மாற்றியது இல்லை, ஆகவே தான் நீங்கள் எல்லாம் இப்படி இருக்கிறீர்கள்!! மிஷனரிகளை கண்களில் ஒத்திக்கொண்டு, வேண்டுமென்றால் அவர்களுக்கு சிலை வைத்து கும்பிடவும் செய்யும்!!
//இயேசு தனது இறுதி கட்டளையில் . சகல ஜாதியையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவி நாமத்தினால் (அட உங்களுக்கு திரித்துவம்னா அலர்ஜியில்ல) ஞானஸ்னானம் கொடுங்கள் என்றார். Tjis mission is Lord Jesus' final commandment//
சிரிப்பு தான் வருது!! There is no missionary statement made by Christ, rather the commandment was to make disciples and to baptize in the name of the Father, the Son and holy spirit and no comment on baptizing them in the name of Trinity!! பிதாவின் நாமம் யெகோவா தேவன், குமாரனின் நாமம் கிறிஸ்து இயேசு பரிசுத்த ஆவியின் நாமம்?????
//தேவதூதனுக்கு கால் இல்லை என எந்த வசனத்தில் இருக்கிறது, அதான் ஜான், கால் இருக்கிறதுன்னு பல வசனங்களை காட்டிவிட்டாரே, இதுக்கப்புறமும் கால் இல்லைன்னு அம்புலிமாமா புத்தகத்தில் உள்ள வேதாளம் ரேஞ்சுக்கு சொன்னா ஒண்ணும் பண்ண முடியாதுங்கோ.//
இப்ப தான் தெரியுது, அம்புலிமாமாவை எதிர்க்கவே இவர்கள் தேவதூதர்களுக்கு கால் இருக்கிறது என்று இத்துனை தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்று!!
இனி மீண்டும் கொல்வின்;
//உங்களை எதிர்த்து எழுதுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. உங்கள் கூட்டத்தால் யாரும் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. போப்பு பதவி பேராசைக்காதானே கோவை பெரியன்ஸ் அமைப்பு. இதில் கூட என்ன ரசலின்போதனைதானே!. வேதமா போதிக்கிறீர்கள்//
அப்பாடி உண்மையை இப்பவாவது ஒப்புகொண்டதற்கு நன்றி!! சத்தியத்தை சொல்லுவது மாத்திரமே தான் எங்கள் நோக்கமே தவிர கலெக்ஷனுக்காக ஆட்கள் சேர்ப்பது எங்கள் வேளை இல்லை!! அது எல்லாம் உங்களுக்கு தான் பொருந்தும்!! ஆகையால் ஒருவன் தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு வருகிறான் என்றால் அது தேவனின் காரியம், ஏனென்றால் தேவன் தான் ஒருவனை கிறிஸ்துவண்டையில் இழுக்க முடியும்!! ஆனால் உங்களுக்கு மிஷனரிகள், ஊழியர்கள், என்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது!! வேதத்தை போதிக்கிறவர்கள் போப் ஆகும் ஆசை வைப்பதில்லை!! உங்களுக்கு அப்படி ஒரு விருப்பம் இருந்தால் சொலுங்கள், கைவசம் ஆள் இருக்கிறது!!
//ஹலோ நீங்கள் சொல்லும் ஆட்களை நாங்கள் அங்கீகரித்தோமா? இவர்களின் போதனைகளை எடுத்து கைளாளுகிறோமா? அவர்கள் பாவம் செய்தார்கள் செய்கிறார்கன் என்பதும் உண்மை. இது உலகிற்கே தெரிந்ததுதானே
ஆனால் ரசல் செய்த விபச்சாரம், வியாபார மோசடி, விவாகத்து இதை எதையும் ஏற்காமலும், அவரின் போதனைகளையே களவாடி சொந்தப் பெயரால் வெளியிடும் உங்கள் புத்தியைத்தான் சொல்லுகிறேன்//
நீங்கள் பின்பற்றுவது அதே போதனை தானே!! இப்படி தானே என்னையும் ரஸ்ஸலையும் கோர்த்து விட்டு எழுதுகிறீகள், அறிவீனக்கூட்டமே!! நீர் எழுதும் திரித்துவத்தை, நீர் சொல்லும் நரகத்தை, நீர் சொல்லும் ஆத்துமாவை தானே அந்த ஆட்களும் சொல்லியிருக்கிறார்கள், அப்படி என்றால் உம் அங்கிகாரம் யார் கேட்டது, நீர் போதிப்பதும் அதே போதனை தானே!! அப்ப நீரும் அதில் பங்குள்ளவர் தானே!! கள்ளன் என்று எழுதினால் உம்மை கொலைக்காரன் என்று சொல்லுவேன்!! உம் சபையை சொன்னவுடன் பொத்துக்கிட்டு வருதோ!! அவர்களை கழட்டி விட்டுவிடலாம் என்று நினைக்கிறீரோ!! அவர்கள் உம் மதத்துடன் தொடர்புடையவர்கள் தான்!! அப்படி என்றால் உமக்கு அதே புத்தி தான்!!
மீண்டும் சொல்லுகிறேன் விபச்சாரக்காரனான ரசலின் நூல்கள்தான் உங்களுக்கு வேதப் புத்தகம். //
போப்பு பதவிக்கு ஆசையிருந்திருந்தால் உம்மை போல் குப்பை மேட்டில் இருந்திருப்பேன்!! கோவைபெரேயன்ஸை குறித்து தெரியாமல் எதையும் எழுதாதீர் வெளிநாட்டுக்காரனே!! நீர் சரியான ஆளாக இருந்தால் வாரும் கோவைக்கு, என்னை தெரிந்துக்கொண்டு பிறகு நீர் எழுதும் உம் அருவருப்பக்களை!! புரியுதா!! புத்தகங்களுக்குள் உட்கார்ந்துக்கொண்டு இன்னொருத்தனை பார்த்து பார்த்து எழுதி இன்னோருத்தரின் கருத்தை வெளிப்படுத்தி ஏதோ பெரிய ஞானி என்று என்னிக்கொண்டு இருக்க வேண்டாம்!! உமக்கு விபச்சாரம் என்றால் ரொம்ப பழக்கம் இருக்கிறது போல், ஏனென்றால் நீர் சார்ந்திருக்கும் கூட்டம் அப்படி!! மஞ்சல் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுத்து இருக்கிறது, உமக்கு இன்னும் சொலதை எடுத்து காண்பிக்கிறேன், அப்புறம் யார் விபச்சாரக்காரன் என்று முடிவு பன்னும்!!
//நானும் காவற்கோபுர வெளியீடுகளின் தீவிர அபிமானிதான். உங்களைப் போல் ஒளித்து வாசிப்பவன் கிடையாது. அங்கிருந்து போதனைகளைப் பெற்றிருந்தால் தெளிவாக குறிப்பிடுகிறேன். ஆனால் நீங்கள் எப்போதாவது அப்படி செய்கிறீர்களா?//
அட அறிவீனனே, தமிழில் தான் எழுதுகிறேன்!! நான் படிக்கிறேன் என்றால் படிக்கிறேன் என்று சொல்லுவதில் எனக்கு உம்மிடம் எல்லாம் மறைத்து வைக்க வேண்டும் என்கிற அளவிற்கு உம்மை நீரே பெரிய ஆளாக நினைத்துக்கொள்ள வேண்டாம்!! நான் வாசிக்காதத்தை நான் வாசித்தேன் என்று நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்!!
இந்த குருட்டு கூட்டத்தின் முகத்திறை இன்னும் கிழிக்கப்படும்.............
//யெகோவா தேவன் குத்தப்பட்டிருக்கிறார் என்பதை விட அதிகமான தேவ தூஷனம் ஒன்றும் இருக்க முடியாது!! சாவாமையுள்ள ஒரே தேவனை உங்களின் வார்த்தைகள் கொள்ளுகிறதே!!//
இயேசு மிகாவேல் என்ற புரட்டை விட கேவலமான புரட்டு ஒன்று இருக்கவே முடியாது. இயேசு தொழத்தக்கவர் அல்ல என்று சொல்லிவிட்டு கிருஸ்தவன் என்று சொல்லுபவனை விட பேயை வணங்கும் சூனியக்காரனே வாசி. மொத்தம் 100 க்கும் மேற்ப்பட்ட மொழிபெயர்ப்புகள் வேதத்திற்கு உண்டு (சாத்தான் வேதமான NWT உட்பட) ஆகையால் எங்கே எவனாவது இயேசுவை தொழக்கூடாது என்று சொல்லியிருக்கிறானோ அவன் சொல்லுவதை நான் அப்படியே எடுத்துக்கொள்வேன் என்று சொல்லும் உங்களுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை! நீங்கள் இயேசு தொழத்தக்கவர் இல்லை என்று முடிவு செய்துவிட்டு எங்கெல்லாம் அதற்க்கு எதிர்மறையாக வேதம் சொல்லுகிறதோ அதையெல்லாம் உங்களுக்கு கேட்டை வருவிக்கும் படி வளைக்கிறீர்கள்.//
இவர்கள் வேதத்தில் இருப்பதை சொல்லுவதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்:
1. திரித்துவம் என்கிற வார்த்தை வேதத்தில் இல்லை 1 கொரிந்தியர் 4:6. சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும்........
2. இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்பவனே கிறிஸ்தவன் என்கிற ஒரு வசனமும் வேதத்தில் இல்லை!! யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
இத்துனை வசனங்களிலும் பிதாவை தொழுதுக்கொள்ளுவதை குறித்து நேரடியாக இருந்து ஒரு சில குருடகளுக்கு கிறிஸ்துவை தொழுதுக்கொள்வது தான் கிறிஸ்தவம் என்கிற வசனம் இல்லாத போதனை எப்படி தான் வந்தது!! இனியும் உங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள வேண்டாம், ஏனென்றால் கிறிஸ்தவன் கிறிஸ்துவின் சீஷனாக இருப்பவன், குருடர்களாக இருப்பவர்கள் அல்ல!!
இத்துனை நேரடியான வசனம் காண்பித்திருக்கிறேன், பிதாவை தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்று, அதுவும் கிறிஸ்து இயேசு சொன்னதையே காண்பித்திருக்கிறேன்!! இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்பவன் தான் கிறிஸ்தவன் என்கிறா உபதெசத்தை வேதம் சொல்லவில்லை, உங்கள் கலெக்ஷன் கள்ள போதகன் ஆரம்பித்து வைத்து பிதாவை தூஷிக்கிற ஒரு தர்க்கம் அது!! நாங்கள் கிறிஸ்துவையும் அவரின் பாடுகளையும் அவரின் சிலுவையையும் வேதம் சொல்லுகிறபடியே போதிக்கிறோம்!! இல்லாத ஊருக்கு வழிக்காட்ட நினைக்காதீர்கள்!! வருகிற ராஜியத்தில் எல்லாம் உங்களுக்கும் தெரிந்துவிடும், அப்ப தெரிந்துக்கொள்ளலாம்!!
3. தேவ தூதர்களுக்கு கால் இல்லை என்று அம்புலிமாமா சொல்லுவதை எதிற்கவே இவர்கள் தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்!!
பாதத்திற்கும் காலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் தெர்நிதுக்கொள்ளுங்கள் பிறகு வசனங்களை காண்பிக்கலாம்!! தேவ தூதர்களுக்கு கால் இருக்கிறதா இல்லையா என்பது எல்லாம் என்ன ஒரு பெரிய கேள்வி!! நீங்கள் யாரை தொழுதுக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குழப்பத்தை வைத்திருக்கிறீர்களே!! வேதம் சொல்லுகிறது பிதாவை தொழுதுக்கொள்ள வேண்டும், அவரையே ஆவியிலும் உண்மையிலும் தொழுத்துக்கொள்ள வேண்டும் என்று, ஆனால் குருடர்களின் கூட்டம் வசனமே இல்லாமல், கிறிஸ்து இயேசுவை தொழுதுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவதால் மாத்திரம் அது உண்மையாகி விடாது!! இது என்ன உலக சட்டமா, நீங்கள் பெரிய கூட்டமாக சேர்ந்து சொல்லுவதால் உண்மையாகி விடுவதற்கு!! வேதம் பெரிய கூட்டத்தை தான் வஞ்சிக்கப்பட்டிருக்கும் கூட்டம் என்று சொல்லுகிறது!!
யெகோவா தேவன் அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோர், கிறிஸ்து அவரை பிதா என்று கூப்பிடுகிற சுதந்திரத்தை நமக்கும் தந்திருக்கிறபடியால், பிதாவாகிய தேவன் மரிக்க முடியாது என்று வேதம் சொல்லியும், அவர் குத்தப்பட்டார் என்பது தேவதுஷனம்!! அது எல்லாம் உங்கள் குருட்டு கூட்டத்திற்கு பழகியிருக்கிறது, கிறிஸ்து உங்கள் போன்றோரின் கூத்தை பார்த்து நகைத்துக்கொண்டிருப்பார்!!
விசாலமான பாதையில் நடப்பவர்கள் தான் கேட்டுக்கு செல்கிறார் என்பது குருடர்களுக்கு இப்ப புரியாது!! ஏனென்றால் இவர்களுக்கு அம்புளிமாமா தான் முக்கியம்!! நாங்கள் வேதத்தின் படி "எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்" என்றே போதிக்கிறோம்!! இது தான் கிறிஸ்துவின் சிந்தை!! ஆனால் சாத்தானுக்கு ஒரு சிந்தை இருக்கிறது, எல்லாரையும் அவன் பக்கம் இழுக்க, அதை தான் உங்கள் மூலமாக "நீங்கள் கேட்டுக்கு" போவீர்கள் என்று சொல்லும் அளவிற்கு பேச வைக்கிறது!! ஏனென்றால் கிறிஸ்து சொன்ன எல்லாருக்கும் இரட்சிப்பு உங்கள் இருண்ட கண்களுக்கும், உங்கள் குருட்டு போதகர்களுக்கும் ஒரு போதும் புரியாது!!
//யேகோவா என்ற நாமத்தை வேறு யாராவது உபயோகிக்கலாமா? இல்லை என்றால் கிழே உள்ள வசனத்தில் வருகிற கர்த்தர் (யேகோவா) யார்?
* உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)//
இதில் யெகோவா தேவன் என்கிற வார்த்தை இல்லை!! கருப்பு கண்ணாடியை கழட்டி வாசிக்கவும்!! அதோனி (adonai) என்பதற்கும் யெகோவா என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது!!
ஒரு அடிப்படை உண்மையை உணர வேண்டும்!! பிதா இல்லாவிட்டால் ஒருவன் குமாரனாக இருக்க முடியாது!!
// * அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய (YHWH) ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5)//
யெகோவா தேவனை கண்கள் கண்டவுடன் ஆதமானான் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்!!
மொத்தத்தில் நாங்கள் சொல்லும் சத்தியம் கலெக்ஷன் கள்ள போதகனுக்கு இடையூறாக இருப்பதை மாத்திரம் நன்றாக புரிந்துக்கொள்ள முடிகிறது!! தான் இருந்த பழைய மார்க்கத்தை இன்னும் மனதளவில் விட முடியாமல் அதிலுள்ள விக்கிரக ஆராதனையை இன்னும் மனசுக்குள் வைத்திருப்பதால் தான் கத்தோலிக்கத்தில் நடப்பது விக்கிரக ஆராதனை என்று தெரிந்தும், அவர்களுடன் கூட்டு வைக்க முடிகிறது!! என்று இந்த கலெக்ஷ்ன் தொழில் ஒழியுதோ, அன்று தான் கிறிஸ்தவர்களுக்கு விடுதலை!! இதை வளியுறுத்தவே இந்த தளம்!!
என்னமோ ஊழியர்கள் இருப்பதால் தான் நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று ஜோஸப் என்கிற இன்னோரு திரித்துவ (வேதத்தை திரிப்பவர்கள்) போதகர்:
தேவன் நினையாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவண்டையில் வர முடியாது என்பதை தான் வேதம் சொல்லுகிறதே தவிர நீர் நினைக்கிறபடி அல்ல!! ஆனாலும் பல பெயர்களில் எழுதிக்கொண்டு இருக்கும் நீர் யார் என்றும் கண்டு பிடித்து விட்டேன், அதையும் விரைவில் வெளியிட்டு உங்கள் கூட்டத்தாரின் சாயத்தை வெளுத்து காட்டுகிறேன்!!
இவர்கள் கூட்டனி தலைவன் கலெக்ஷன் கள்ள போதகன் நினைப்பவர்கள் எல்லாம் ஊழியர்கள் கிடையாது, ஆனால் அவர் யாரை எல்லாம் ஊழியர் என்று சொல்லுகிறாரோ அவர்கள் மாத்திரமே ஊழியர்கள் என்று கிறிஸ்தவத்திற்குள் ஒரு ரவுடி சாமராஜ்யத்தை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!! பிற மதங்களை கொச்சைப்படுத்தி மத வெறிக்கு விதையிடுகிறார்கள்!! இது தான் உங்கள் தளத்தின் நோக்கம்!!
கிறிஸ்துவிர்கும் யெகோவா தேவனுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு குருட்டு கூட்டத்தாருடன் விவாதிப்பதே நேர விரியம்!!
என்னமோ நாங்கள் தான் பேடி போன்ற வார்த்தைகளால் இவர்களை ஏசுகிறோம் என்றெல்லாம் எல்லா தளங்களிலும் போய் கூப்பாடு போட்டு புலம்பிய கொல்வினின் பார்வைக்கு கலெக்ஷன் கள்ள போதகனின் வார்த்தைகள்:
"தேள் கொட்டிவிட்டு (இரஸலின்) கழுநீர் பானைக்கடியில் சென்று ஒளிந்துகொள்ளுமாம்..!"
வெத்துவேட்டுகள்...நேரா வந்தானுங்கன்னா...நல்லா ஒரு கை பார்க்கலாம்... பேடிப் பசங்க...வரமாட்டானுங்க...!
இரஸலின் சீடர்களிடம் மீண்டும் ஒரு பணிவான வேண்டுகோள்:
தயவுசெய்து உங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுவதை நிறுத்தினால் உங்களுக்குக் கோடி புண்ணியமாகும்; இயேசுவின் இரத்தத்தையும் அவருடைய சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து மாறுபாடான கொள்கைகளைக் கொண்ட உங்களுக்கு கிறித்தவர்கள் என்ற பெயர் பொருந்தவே பொருந்தாது.
நீங்கள் இரஸலின் யெகோவா சாட்சிகள்;
நாங்கள் கிறிஸ்துவின் சாட்சிகள், சரியா..!//
ஒன்றும் இல்லாமல் சாம்பளாக போகும் பெரிய வெடியும் அதிகமாக சத்தம் போடும் உங்கள் கூட்டனியை போல்!! நாங்கள் கிறிஸ்துவின் சாந்தத்தை தரித்திருக்கவே விரும்புகிறோம்!!
நீங்கள் எல்லாம் கிறிஸ்துவின் சாட்சிகள் இல்லை, கிறிஸ்துவை கூறுபோடும் வியாபாரிகளின் சாட்சிகள்!! உங்கள் கூட்டத்தார் ஒரு தேவனை மூன்றாக கூறு போட்டுக்கொண்டு கூவி சந்தை போட்டு விற்கிறது!! இது ஒன்றே உங்கள் கூட்டத்தார் கிறிஸ்தவத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டிய கள்ள கூட்டம் என்று ஆகிறது!! கலெக்ஷன் நடத்தினோமா, தொழிலை செய்தோமா என்று இருக்க வேண்டியது தானே!!
ஒரு கை இல்லை இரண்டு கையைய்யும் பார்க்கலாம்!! வேலை வெட்டி இல்லாத வெத்து ஆளுங்க கிடையாது நாங்க!! கலெக்ஷனுக்கு போயிட்டு வந்து எதை வேண்டுமென்றாலும் எழுதி பெயர் வாங்கும் கூட்டம் இல்லை எங்களது!! எங்களுக்கு நேரம் இருக்கும் போது தான் எழுதுவோம்!! வேலை வெட்டி இல்லாதவன் எப்ப வேன்டுமென்றாலும் எழுதுவான்!!
யெகோவா சாட்சிகளை யார் ஆரம்பித்தார்கள் என்பதை கூட அறியாத ஒரு மூடன், காவல் கோபுரத்தை அபிமானத்தோடு வாசிக்கும் ஒரு விக்கிரக ஆராதனை சபைக்காரன், இவர்கள் சேர்ந்து கிறிஸ்துவை கூறு போட்டு வியாபாரமாக்கி கொண்டிருப்பது என்ன எங்களுக்கு தெரியாதா!!
//மூன்றாம்நாள் அவர் சரிர பிரகாரமாய் எழுந்தது உண்மைதான் ஆனால் வேதம் அவர் ஆவியிலே உடனடியாக உயிர்த்தெழுந்தார் என்றும் கூறுகிறது.//
கலெக்ஷன் கள்ள போதகனுக்கு தகுந்த தாளம் போடுகிறீர்கள் ஜான் அவர்களே!! மூன்றாம் நாள் சரீர பிரகாரமாய் எழுந்தது உண்மை தான் என்பது சுத்த லூசுத்தனமான ஒரு அறிக்கை!! எந்த வசனம் அவர் சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுகிறது!! இல்லை கள்ள போதகத்தின் தந்தை அத்நாஷியஸ் உங்கள் வீட்டிற்கு நேற்று இரவு வந்து இப்படி சொல்லி விட்டு போனாரோ!! அடுத்த முறை அவர் வரும் போது, அவர் சரீரத்தில் இருந்தாரா அல்லது ஆவியில் இருக்கிறாரா என்றும் கேளுங்கள், உங்கள் தளத்திற்கு கூட்டம் சேரும்!!
கிறிஸ்து ஒரே முறை தான் அதுவும் மூன்றாம் நாள் தான் அதுவும் ஆவியில் தான் எழுந்தார் என்று வசனம் தெளிவாக சொல்லியிருக்க, என்ன துனிச்சலாக அவர் சரீரத்தில் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார் என்கிற தேவ தூஷனம்!! என்ன ஒருவருக்கு இரு உயிர்த்தெழுதலோ!! மடத்தனத்னமான போதனைகளுக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது!!
சரீர பிரகரமாய் இருக்கும் ஒருவர் சாத்திய கதவுகளின் வழியாக ஒரு வீட்டிற்குள் நுழைய முடியும் என்று தான் போதிக்கிறீர்களோ!!
அடுத்த காமெடி: //அவரோடு கூட அனேக பரிசுத்தவான்களும் எழுந்தார்கள் ஆனால் அவருடைய சரிர பிரகாரமான உயிர்தெழுதல் நடந்தபின்பே பரிசுத்தவான்களும் Visible ஆக காணப்பட்டார்கள்.//
அட பாவிங்களா, வசனத்தை ஒழுங்காக படித்து எழுதவும்!! பரிசுத்தவானகளாக உயிர்த்தெழல்ப்பட்டர்கள் என்றா இருக்கிறது!! அதுவும் கிறிஸ்து மரித்த போது நடந்த ஒரு சம்பவத்தை அவரின் உயிர்த்தெழுதலுடன் கோர்த்து விடுகிறீர்களே!! கிறிஸ்து ஒருவரே உயிர்த்தெழுந்திருக்கிறார் என்றும் மற்றவர்கள் அவரின் வருகையின் போது தான் உயிர்த்தெழுவார்கள் என்றும் வேதம் சொல்லுவது எல்லாம் நம்பாமல், அத்னாஷியஸ் என்கிற ஒரு கள்ள போதகனின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து போக வேண்டாம்!!
உயிர்த்தெழுதல் நடந்தேரிவிட்டது என்று உங்கள் கூட்டத்தாரை குறித்தே பவுல் இப்படி சொல்லுகிறார்:
II தீமோத்தேயு 2:18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
மேலும் கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பது புரட்டர்களின் தந்தையான அத்நாஷியஸின் புரட்டல், வேதம் சொல்லுவதோ,
பிந்திய ஆதாமான கிறிஸ்து இயேசு சரீரத்துடன் அல்ல, ஆவியாகவே இருக்கிறார் என்பதற்கும், மாம்சமும் இரத்தமும் பரலோகம் போக முடியாது என்பதும் வேதத்தில் உள்ளவை, அத்நாஷியஸ் சொல்லிக்கொடுத்ததை படித்தால் இதையும் சொல்லுவீர்கள், இன்னமும் சொல்லுவீர்கள்!!
மடத்தனமாக கிறிஸ்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்று எழுதி கிறிஸ்தவத்தின் மானத்தை வாங்க வேண்டாம்!! இதற்கெல்லாம் ரஸ்ஸல் தேவையில்லை, வேத புத்தகமே போதும்!! உமக்கு ரஸ்ஸலை குறித்து ஒன்றும் தெரியாது, உமக்கு தெரிந்ததெல்லாம் மஞ்சல் பத்தரிக்கை நடத்தும் கலெக்ஷன் கள்ள போதகனும் அவனின் உபதேசங்களுமே!! அடுத்தவர்களின் அந்தரங்கத்தை விமர்சிப்பவனை மஞ்சல் பத்திரிக்கை நடத்துபவன் என்று எழுதுவதில் ஒரு தவறும் இல்லை!!
ஜான் எழுதிய தேவ தூஷனத்திற்கு பதில் இன்னும் இருக்கிறது....................
எத்துனை முறை தான் எழுதியதை புரட்டிக்கொண்டே இருப்பீர்கள்!! தேவன் குத்தப்பட்டாரா இல்லையா என்கிறீர்கள், தேவன் குத்தப்படவில்லை என்கிறீர்!! என்ன குழப்பம்!! தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று வழக்கமான தமிழ் வேதத்தை வைத்து மீண்டும் ஒரு பிதற்றல் தொடங்கியது!!
இதே வசனத்தை (1 திமோ 3:16) மிகவும் சரியாக மொழிப்பெயர்க்கப்பட்ட பிற மொழிப்பெயர்ப்பையும் வாசியுங்கள்:
Weymouth New Testament And, beyond controversy, great is the mystery of our religion-- that Christ appeared in human form, and His claims justified by the Spirit,
தியோஸ் என்கிற வார்த்தையே இல்லாமல் அதை தேவன் என்று மொழிப்பெயர்த்து பல மொழிப்பெயர்ப்புகள் சாதனை தான் செய்து இருக்கின்றன!!
கிறிஸ்து தான் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதற்கு இனை வசனங்கள் உண்டு, ஆனால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதற்கு இனை/ துனை வசனங்களே கிடையாது!!
யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
தேவன் வராமல் கிறிஸ்துவை தான் அனுப்பினார் என்பதற்கு யோவான் எழுதிய இந்த வசனத்தையும் ஒப்பீட்டு பார்க்க வேண்டும்!!
ஆனாலும் கிறிஸ்துவை தொழுத்துக்கொண்டு பழைய ஏற்பாடு பலிகளிலும் அதே வைராக்கியத்தில் இருப்பது எப்படி என்கிற விஷயம் தான் புரியவில்லை!!