நண்பர் கொல்வினின் பிரியமான வார்த்தைகள் இவை!! ஒரு மனிதன் எழுதியதை வார்த்தை மாற்றாமல் அப்படியே தருவதற்கே இந்த '' தேவைப்படுகிறது!! அப்படி என்றால் நாம் எழுதுகிற எழுத்து எல்லாம் யாராவது ஒருவர் கண்டுபிடித்தவராக இருக்கலாம், நாம் பேசும் கருத்துக்கள் எல்லாம் நமக்கு முன்பு யாராவது பேசியிருக்கலாம், எழுதியும் இருக்கலாம்!! அதற்காக கருத்து ஒற்றுமை இருக்கிறதே என்கிற காரணத்திற்காக Citation and Reference கொடுக்க முடியுமா, அல்லது கொடுப்பது தான் அவசியமா!!
எடுத்துக்காட்டாக, வேதத்தில் நாம் சில வசனங்களை Citation and Referenceஆக எடுத்து எழுதுகிறோம், இதில் நியாயம் இருக்கிறது, ஏனென்றால் இது நம்மிடமோ, நமக்கு தோன்றிய விஷயமோ கிடையாது, ஆக மற்ற அனைவரும் தெரிந்துக்கொள்ளும்படியாக நாம் அதை எழுதுகிறோம்!!
ஆனால் ரஸ்ஸல் அல்லது வஸந்தகுமார் போன்றோர் எழுதுவதின் கருத்தை ஒருவர் ஏற்றுக்கொண்ட பிறகு அந்த கருத்து நமக்கு சொந்தமாகி விட்ட பிறகு அது இனி நம் கருத்தாக தான் இருக்கிறதே தவிர, இனியும் அதற்கு ரஸ்ஸல் அல்லது வஸந்தகுமார் சொந்தக்காரர்கள் என்று சொல்ல அவசியம் இல்லை!! அப்படி நீங்கள் Citation and Reference காண்பிக்கும் பட்சத்தில் அந்த கருத்து இன்னும் உங்களது அல்ல, அது இன்னும் வஸந்தகுமாரின் கருத்து அல்லது ரஸ்ஸலின் கருத்து என்கிறா என்னம் மாத்திரமே இருக்கும்!! ஏனென்றால் நாளை ஒருவர் அதே கருத்தை மாற்றிக்கொண்டால், நீங்களும் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும், அப்படி என்றால் உங்களுக்கு கருத்துக்களை காட்டிலும் அதை எழுதிய மனிதர் மேல் தான் அதிக நம்பிக்கை இருக்கிறது என்று நிரூபனமாகிவிடும்!!
எடுத்துக்காட்டாக, ஒரு கம்யூனிஸ தோழர் பேசும் போதெல்லாம் இது கார்ல் மார்க்ஸ் சொன்னது அல்லது இது லெனின் சொன்னது என்று தன் எல்லா கருத்திற்கும் Citation and Reference கொடுத்துக்கொண்டு இருந்தால், அந்த தோழரின் கருத்து என்ன!? ஒரு சில விசேஷமான வார்த்தைகள் குறிப்பிட்ட ஒரு மனிதர் மாத்திரமே உபயோகித்திருந்தால் அதை சுட்டி காட்டி இன்னார் இப்படியாக சொன்னார், நானும் அதே கருத்துடையவன் தான் என்று சொல்லலாம்!! எடுத்துக்காட்டாக, அஹிம்சையை குறித்து சொல்லும் போது நாம் அனைத்திலும் காந்தி சொன்னதாக என்று எழுதலாம், ஏனென்றால் அஹிம்சை போன்ற ஒரு கருத்தை நாம் (உங்களை அல்ல) ஏற்றிரிக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து அதன் பின் எழுதலாம்!! இப்படி ஒருவரின் கருத்தை உள்வாங்கி, அந்த கருத்தில் தாங்களும் நிலைத்திருந்தால், அதன் பின் "" என்பதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் அது இனி உங்களது கருத்தாகிவிடுகிறது!!
ஏரியஸ் சொன்னதை ரஸ்ஸல் சொல்லுகிறார், அப்படிப்பட்ட ஒரு கருத்தை நான் சொல்லுவதால் நான் ஏரியஸையோ, ரஸ்ஸலையோ """ஆக காண்பிக்கும் அவசியம் இல்லை, ஏனென்றால் நான் அந்த கருத்தை உள்வாங்கி, அதை பின்பற்றுபவனாக இருக்கிறேன், அது இனி என் சொந்த கருத்தாக இருக்கிறது!! இது தான் தாங்கள் Citation and Reference காண்பிப்பதற்கும் நான் காண்பிக்காமல் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்!! விவாத மேடைகள் நம் சொந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பேடைகள், ஒரு கருத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால் அது இனி உங்கள் கருத்து தானே, வேறு ஒருவரின் பெயரை ""ஆக போட்டுக்கொள்வதினால் அதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்!! அந்த ஒரு குறிப்பிட்ட மனிதர் பேசியதை நீங்கள் எழுதுகிறீர்களா அல்லது இது உங்கள் கருத்தா!! ஏனென்றால் நீங்கள் Citation and Referenceஆக காட்டிய மனிதர் நாளை தன் கருத்துக்களில் மாற்றம் கொண்டு வந்தால், நீங்களும் கருத்து மாற வேண்டியதாக ஆகி விடுமே
சில சம்பவங்களை சொல்லும் போது நீங்கள் கேட்கும் Citation and Reference தேவையாக இருக்கிறது, அதை கொடுக்க தான் செய்கிறோம், அதை விட்டு விட்டு நான் சொந்தமாக்கி கருத்துக்களுக்கு இன்னொருத்தரை ஏன் ஆக்கியோனாக காட்ட வேண்டும்!!
//சிறுபிள்ளைக்குச் சொல்வதுபோல் அழகாகச் சொல்லியுள்ளீர்கள், சகோ.பெரியன்ஸ் அவர்களே! ஆனால் சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு இது புரியுமா என்பதுதான் கேள்வி.//
அவர்களுக்கு, விசேஷமாக கொல்வின் அவர்கள் இதை புரிந்துக்கொள்ள மறுக்கிறார்!! இதோ அவர் எழுதியது:
Citation and Reference!!
பதிவு தொடர்பாக
நான் சொல்லவராத கருத்துக்களை தயவு செய்து சொல்ல வேண்டாம். இது தொடர்பாக இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். இதன் முக்கியத்துவத்தை பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரித்தறிந்து கொள்ளுங்கள். உங்கள் புரிந்துணர்வு மிக தபபானது. சரியான விளக்கம் அதுவல்ல.
கொல்வின் அவர்களே, நான் பல்களைக்கழக மாணவர்கள் போல் ஒன்றும் இங்கே எழுதவில்லை என்பதையும் தாங்கள் கவணிக்க வேண்டியதாகும்!! மேலும் நாம் ஒரு கருத்தை சுதந்தரித்து விட்ட பிறகு நாமே அந்த கருத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறோம், அதன் பின் அந்த கருத்தை நம் வார்த்தைகளில் எழுதுகிறோம், இதற்கு நீங்கள் கூறும் Citation and Reference தேவையில்லையே!! கல்லூரி மாணவர்கள் இப்படி Citation and Reference கொடுத்து எழுதுவதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது, அதையும் இதையும் சம்பந்தப்படுத்த வேண்டாமே!! இங்கே தளங்களில் பதிவு செய்வது நாம் எதை புரிந்துக்கொண்டோமோ, அதை தானே அன்றி, ரஸ்ஸலோ வசந்தகுமாரோ எதை புரிந்துக்கொண்டிருக்கிறார்களோ அதை அல்ல!! ஏனென்றால் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது, அவர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை புத்தகங்களாக ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள்!! இனி நீங்கள் அவர்களின் கருத்துக்களை பின் பற்றினாலும், அந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பிறகு அது உங்களின் தனிப்பட்ட கருத்தாகி விடுகிறது, வேண்டிய Citation and Reference வேத புதகத்திலிருந்து வசனங்களை சுட்டி காண்பித்தாலே போதும்!! நீங்கள் Citation and Reference கொடுத்துக்கொண்டே இருந்தீர்களென்றால், அது உங்களின் கருத்து இல்லை, வசந்தகுமாரின் கருத்து என்றோ ரஸ்ஸலின் கருத்து என்றோ தான் இருக்க முடியும்!! மேலும் நீங்கள் சரியான விளக்கம் என்று எதை சொல்லுகிறீர்கள் என்பதையும் எழுதவில்லை!!