kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய நோக்கத்தை அறிவது எவ்வாறு?


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
தேவனுடைய நோக்கத்தை அறிவது எவ்வாறு?


தேவனுடைய சித்தத்தை அறியமுடிமா? ஆம். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 1:10ல் தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எனக்கு அறிவித்தார் என்று சொல்கிறார். மேலும் எபிரெயர் 13:21ல் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக என்று எழுதுகின்றார்.

 தேவனுடைய நோக்கத்தை அறிவது எவ்வாறு?
ரோமர் 12:1, 2 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (Do not conform any longer to the pattern of this world, but be transformed by the renewing of your mind. Then you will be able to test and approve what God's will is - his good, pleasing and perfect will.)


[1] இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரிக்கக்கூடாது. உதாரணமாக விலாங்குமீன் நீரிலுள்ள மீன்களிடம் தன் வாலைக்காட்டி தான் ஒரு மீன் என்றும், பாம்பிடம் தன் தலையைக்காட்டி தான் ஒரு பாம்பு என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. இந்தக் கதை உண்மையோ இல்லையோ, நாம் ஞாயிற்றுக்கிழமையன்று தேவனுடைய பிள்ளைபோலவும், மற்றநாட்களில் உலகமனுஷர்கள் போலவும் வாழக்கூடாது என்பதை இந்தக் கதையின் மூலம் சொல்ல விரும்புகிறேன். அது என்ன உலக வேஷம்? உதாரணமாக நீங்கள் சினிமா பாடல்களில் விருப்பமுள்ளவர்களாயின் அது இந்த உலகத்தின் வேஷம் அல்லது பிசாசின் திசைதிருப்பும் தந்திரங்களில் ஒன்று. எனவேதான் நாம் வேறுபாட்டின் ஜீவியம் (Life of Separation) செய்பவராக காணப்படவேண்டும். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை; நான் இந்த உலகத்தான் அல்லாதது போல நீங்களும் இந்த உலகத்தாரல்ல என்று இயேசு சொன்னார். எனவே நாம் இந்த உலகத்தில் அன்புகூரக்கூடாது.

தேவனுடைய சித்தம் அறிந்துகொள்ள வேறுபாட்டின் ஜீவியம் அவசியமாகும். தேவன் பழைய ஏற்பாட்டில் விரிகுளம்புள்ளதும் அசைபோடுவதுமாகிய மிருகத்தைப் புசிக்கலாம் என்றார். இங்கே விரிகுளம்புள்ளது என்றால் "வேறுபாட்டின் ஜீவியம்" என்று ஆவிக்குரிய அர்த்தமாகவும்,
அசைபோடுவது என்றால் "தேவனுடைய வசனத்தை தியானிப்பது" என்று அர்த்தமாகவும் சொல்லலாம். (சங்கீதம் 1:1,2 இரவும் பகலும் அவருடைய வேதத்தின்மேல் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்.)

[2] Be transformed by the renewing of your mind உங்களுடைய மனதை புதிதாக்கி மறுரூபமாகுங்கள். இங்கே நம்முடைய சுபாவங்கள்/குணங்கள் தேவனுக்கு உகந்தவைகளாக மாற்றப்படவேண்டும்.


[3] நம்முடைய சரீரத்தினை பரிசுத்தமாக பாவத்தினின்று விலக்கி காத்துக்கொள்ளவேண்டும். I தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து என்று வாசிக்கிறோம். சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

[4] ஜெபிக்கவேண்டும். இயேசுவே பிதாவை நோக்கி ஜெபித்தார். நாமும் தினமும் குறைந்தது இரண்டு வேளையாவது ஜெபிக்கவேண்டும். தானியேல் ஒருநாளைக்கு மூன்றுமுறை ஜெபித்தான். ஜெபத்தின்மூலம் தேவனிடத்திலிருந்து பதில்களைப் பெற்றான். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று வாசிக்கிறோம்.கொலோசெயர் 4:12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான் என்று வாசிக்கிறோம். ஒரு ஏழைவிதவை & அநீதியான நியாதிபதி என்னும் உவமையிலிருந்து இயேசு எப்படி சோர்ந்து போகாமல் ஜெபிப்பது என்று கூறுகிறார். இயேசுவும் பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கடவது என்று ஜெபிக்கிறார். எனவே ஜெபம் செய்வது மிகவும் அவசியம்.

[5] [முறுமுறுக்காமல்] எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (1 தெச 5:18)

[6] I பேதுரு 2:15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நன்மை செய்யுங்கள், தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்.

[7] பிரசங்கி 12:13ல்
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

ஜெபித்து தேவனிடத்தில் கேட்டால் உங்களைக்குறித்த தம்முடைய சித்தத்தை உங்களுக்கு வசனத்தின்மூலமாகவோ, சொப்பனத்திலோ, தீர்க்கதரிசனத்தின் மூலமாகவோ, வேறு ஏதோ ஒருவரைக்கொண்டு ஆலோசனைக் கொடுத்தோ அல்லது வெறொரு வழியிலோ வெளிப்படுத்துவார். நீங்கள் யாரிடமும் போய் கேட்காமலே இவைகள் உங்களுக்கு நேரிடவேண்டும். ஆனால் அவருடைய சித்தம் நாம் செய்யாமல் நம்முடைய சுய சித்தத்தின்படி செய்யவும் நம்மால் முடியும். தேவன் அதை தடைசெய்வதும் இல்லை. தேவனுடைய சித்தமெல்லாம் வேதவசனத்துடன் ஒத்துப்போகும் என்பதை மறக்கக்கூடாது.

தாவீது தேவனிடத்தில் விசாரிக்கும்போது தேவன் அவனுக்கு ஏபோத்தின் மூலமாக பதில் அளிக்கிறார்.
சாமுவேலுடன் பேசினார். ஆனால் ஏலி தன்னுடைய பிள்ளைகள்குறித்த காரியத்தில் தேவனுக்கு பிரியமாய் நடக்காமல் போனதால் அவனுடன் பேசவில்லை.
சவுல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவனுடன் பேசவில்லை.
சிம்சோன் பொருத்தனையை உடைத்தபின்பும் கடைசியாக தேவனிடம் கேட்டதை பெற்றுக்கொள்ளுகிறான்.
கிதியோன் போருக்கு செல்லும் முன்பு அடையாளம் கேட்டு பெற்றுக்கொள்கிறான்.
ஏசாயா, எரேமியா, யோனா என்று எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பேன் என்று வாசிக்கிறோமே!



-- Edited by Dino on Friday 25th of March 2011 12:13:19 AM



-- Edited by Dino on Friday 25th of March 2011 12:25:33 AM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard