இவர் தன் தொலைப்பேசி எண்ணை தந்திருக்கிறார் என்று பேசினால், முதலாவது இவர் கொடுத்திருக்கும் விலாசத்தின்படி கோவையில் இவர் இல்லாமல் பெங்களூரில் இருந்தார்!! சரி பேசலாம், என்னை வரவழைத்து எனக்கு ஏதோ பரிசு எல்லாம் தர போவதாக பதிந்து இருக்கிறாரே, என்னவென்று கேட்டால், பிறகு கூப்பிடுகிறேன் என்று சொன்னவர் தான், இந்த பதிவு முடிக்கும் வரை கூப்பிடவே இல்லை!!
என்ன பரிசு வைத்திருக்கிறீர்கள்!! வாரும் என்று என்னை கோவையில் வரவேற்று பெங்களூருக்கு சென்று விடீர்களே!! நான் ஃபோன் செய்யமாட்டேன் என்று நினைத்தீர்களோ!! சரி என்ன பரிசு என்று பதிவை தாருங்களேன், அதையாவது பார்ப்போம்!!
இரண்டு நாட்கள் ஆன பிறகும் பதில் இல்லையே!! பிறகு எதற்கைய்யா அலைப்பேசி எண் எல்லாம் கொடுத்திருக்கிறீர்கள்!! குடித்து விட்டு யார் கலாட்ட செய்தால் என்ன, அதற்கு என்று சட்டம் இருக்கிறது அது பார்த்துக்கொள்ளும், குடிக்கும் பார்கள் இருக்கும் வரை குடிப்பவர்கள் இருக்க தான் செய்வார்கள்!! ஆனாலும் நல்ல விஷயங்களை விட்டு விட்டு இப்படி கீழான விஷயங்களின் மேல் மாத்திரம் தங்களின் கண்களை தொடர்ந்து பதிய வைத்திருங்கள், நல்ல பலன் கிடைக்கும்!!
சும்மா வீராப்பாக எழுதி விட்டு, பிறகு அமர்ந்து யோசிப்பதை காட்டிலும், யோசித்து விட்டு பின்பு வீராப்பாக செயல்படலாமே!!