தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வான மண்டலத்துக்குரிய தேவதூதர்களை, ஆவியின் சரீரத்தில் சிருஷ்டித்தார். கொலோ 1:15-17. சங் 104:4; எபி 1:7. 1கொரி. 15:40. தேவதூதரிலும் சிலர் கேரூப் என்றும் சிலர் சேராபீன்கள் என்றும், தேவதூதர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். சங் 80:1; ஆதி 3:24; எசே. 10:1-10 ஏசா 6:2.
இவர்களின் தொகை ஆயிர ஆயிரமும், பதினாயிரங்களாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சங் 68:17. தானி7:10. மத் 16:27. வெளி 5:11.
தேவதூதர்கள் தேவகட்டளையின்படி, பரிசுத்த மனிதர்களுக்குச் சகாயம் செய்ய அனுப்பப்படுகிறார்கள். ஆதி 16:7. யாத் 3:2. 1இரா 19:5. தானி 6:22. மத்18:10. எபி 1:13-14. தேவ விரோதிகளை அழித்துப்போடவும் தேவதூதர்கள் அனுப்பப்பட்டார்கள். ஏசா 37:36. அப் 12:23.
இஸ்ரயேலரின் பிரயாணத்தில் அவர்களோடு உதவிக்காக சென்ற தூதனானவரே, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவென்று பவுல் கூறுகிறார். யாத் 23: 20-23. 1கொரி. 10: 1-4. ஜனத்தின் (இஸ்ரயேல்) புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய “மிகாயேல்” என்றும், இயேசு கிறிஸ்து அழைக்கப்பட்டிருக்கிறார். தானி 12:1-3.
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )
பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய சக்தி, அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி
கிறிஸ்து, குமாரன், இயேசு, மனுஷகுமாரன், தேவகுமாரன் - எல்லாம் இயேசுவையே குறிக்கின்றது.
"II கொரி 3:17 கர்த்தருடைய ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையுண்டு."- இங்கே சொல்லப்பட்ட "கர்த்தருடைய ஆவியானவர்" பரிசுத்த ஆவியாகிய தேவன் அதாவது காணமுடியாத உருவத்தில் இருக்கிறார். யெகோவாவின் சக்தி எங்கே இருக்கோ அங்கே சுதந்திரமும் உண்டு என்பதே இதன் பொருள். . இயேசு சொன்ன தேற்றரவாளனும் அவரே. ("Spirit of the Lord", "Spirit of God", "The Comforter" and "Holy Spirit" are the same.)
"ரோமர் 8:9. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."
- இங்கே சொல்லப்பட்ட "தேவனுடைய ஆவி"யும் பரிசுத்த ஆவியாகிய யெகோவாவின் சக்தி. - ஆவியும், மனதும்(சிந்தனையும்) ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டவை. - "கிறிஸ்துவின் ஆவி" என்று இங்கே சொல்லப்பட்ட வார்த்தையானது, கிறிஸ்து இயேசு கொண்டிருந்த ஆவி அதாவது மனது அல்லது சிந்தை என்று பொருள். கிறிஸ்துவின் சிந்தையானது தாழ்மை (பிலி 2:5-7), அவர் அடிமையின் ரூபம் எடுத்து கழுமரத்தின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். நமக்கு கிறிஸ்துவின் சிந்தையில்லாவிட்டால் நாம் அவருடையவர்கள் அல்ல. கிறிஸ்துவின் ஆவி என்று வேதத்தில் இங்கே மட்டும்தான் வருகின்றது. (spirit of Christ means the spirit that Christ had, or the mind of Christ, which is humility) - நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது "கிறிஸ்துவின் மனதைப் பெறுகிறோம். அங்கே மனதிலிருக்கும் பாவச்சுமை நீக்கப்பட்டு ஒரு சமாதானம் வருகின்றது. - நாம் பரிசுத்த ஆவியினைப் பெறும்போது "தேவனுடைய ஆவி" அதாவது பரிசுத்த ஆவியாகிய தேவன் நம்மில் வாசம் செய்கிறார்.
-- Edited by Dino on Friday 25th of March 2011 06:42:29 PM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )