kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தலர்கள், ஏரியஸ், அத்நாஷியஸ்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அப்போஸ்தலர்கள், ஏரியஸ், அத்நாஷியஸ்


ஜான் எழுதியது:

//இவர்களோடு இதுபோல பேசுவது நேர விரையமே! நான் கூட முதலில் இவர்கள் குழப்பப்பட்டு இருப்பவர்கள் என்று நினைத்தேன் பின்பு புரிந்து கொண்டேன் இவர்கள் தான் குழப்புபவர்கள்.  வேதத்தை எந்த ஒரு புரட்டனின் பாதிப்பும் இல்லாமல் வாசித்து உண்மையிலே இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று யாரும் சொல்லமாட்டர்கள் என்பது என்னுடைய முடிவு.  நாம் கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு வேத வசனத்தை மாற்றி எழுதியும் (தேவனுக்கு முன்பாக 'ஒரு' போடுவது (John 1:1) , சர்வத்திற்கும் மேலான என்பதிற்கு முன்னால் "," போடுவது போல தகிடுதத்தம் செய்வது....) , இரசலையும், மூலபாஷையும் மாத்திரம் உதவிக்கு அழைப்பார்கள். இவர்கள் மூலபாஷை அழைக்கும் வேகத்தைப்பார்த்தால் எதோ தமிழில் வேதம் மொத்தமாக தப்பாய் இருப்பதால் நம் இயேசுவை தொழுவது போலவும் மற்றபடி எல்லா நாடுகளிலும் குறிப்பாக கிரேக்கம் பேசும் கிரிஸ் போன்ற தேசங்களில் எல்லாரும் இயேசுவை தொழுவது இல்லை என்பது போன்ற ஒரு மாயை உண்டாக்குகிறார்கள். மூன்றாம்  நூற்றாண்டின் துவக்கத்திலே, வேறுமொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்படும் முன்பே "Athanasius of Alexandria" இவர்களுடைய தந்தையாகிய "Arius" இன் கள்ளப்போதனையை நாம் என்ன வசனங்களை உபயோகபடுதுகிறோமோ அதே வசனங்களை உபயோகப்படுத்தி மூக்குடைத்ததை பார்க்கிறோம். உண்மையிலே கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இதைக்குறித்து சந்தேகம் இருந்தால் மாத்திரம் இந்த தலைப்பில் தொடர்ந்து எழுதலாம் என்று கருதுகிறேன்.//

ஜானுடன் விவாதிக்க இந்த பதிவை தரவில்லை, மாறாக அப்போஸ்தலர்கள் கொடுத்த விசுவாசப்பிரமானம் என்ன, இவர்களின் போதனையை உருவாக்கிய Athnesius of Alexandria என்கிற வேதபுரட்டன் கொடுத்த விசுவாசப்பிரமானம் என்ன மற்றும் இவர்களால வேதப்புரட்டன் என்று சொல்லப்படுகிற ஏரியஸ் (Arius) என்பவர் கொடுத்த விசுவாசப்பிரமானம் என்ன என்பதை பார்க்கலாம்:

அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமானம்:

I believe in God the Father Almighty,
Maker of heaven and earth:
And in Jesus Christ his only Son our Lord,
Who was conceived by the Holy Ghost,
Born of the Virgin Mary,
Suffered under Pontius Pilate,
Was crucified, dead, and buried:
He descended into hell;
The third day he rose again from the dead;
He ascended into heaven,
And sitteth on the right hand of God the Father Almighty;
From thence he shall come to judge the quick and the dead.
I believe in the Holy Ghost;
The holy Catholick Church;
The Communion of Saints;
The Forgiveness of sins;
The Resurrection of the body,
And the Life everlasting.
Amen.

எந்த விதத்திலும் திரித்துவத்தை வெளிப்படுத்தாத ஒரு விசுவாசம் இந்த பிரமானத்தில் வெளிப்பட்டிருக்கிறது!! பிதா குமாரன் வேறு என்று சொல்லப்படும் ஒரு விசுவாசம் இதில் இருக்கிறது!!

அத்நாஷியஸ் என்பவர் ஏதோ யாரூடைய மூக்கையோ உடைத்தார் என்று எழுதிய ஜான் தெரிந்துக்கொள்ள வேண்டியது, இதோ அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை,

Whosoever will be saved, before all things it is necessary that he hold the Catholic Faith. Which Faith except every one do keep whole and undefiled; without doubt he shall perish everlastingly. And the Catholic Faith is this: That we worship one God in Trinity, and Trinity in Unity; Neither confounding the Persons; nor dividing the Essence. For there is one Person of the Father; another of the Son; and another of the Holy Ghost. But the Godhead of the Father, of the Son, and of the Holy Ghost, is all one; the Glory equal, the Majesty coeternal. Such as the Father is; such is the Son; and such is the Holy Ghost. The Father uncreated; the Son uncreated; and the Holy Ghost uncreated. The Father unlimited; the Son unlimited; and the Holy Ghost unlimited. The Father eternal; the Son eternal; and the Holy Ghost eternal. And yet they are not three eternals; but one eternal. As also there are not three uncreated; nor three infinites, but one uncreated; and one infinite. So likewise the Father is Almighty; the Son Almighty; and the Holy Ghost Almighty. And yet they are not three Almighties; but one Almighty. So the Father is God; the Son is God; and the Holy Ghost is God. And yet they are not three Gods; but one God. So likewise the Father is Lord; the Son Lord; and the Holy Ghost Lord. And yet not three Lords; but one Lord. For like as we are compelled by the Christian verity; to acknowledge every Person by himself to be God and Lord; So are we forbidden by the Catholic Religion; to say, There are three Gods, or three Lords. The Father is made of none; neither created, nor begotten. The Son is of the Father alone; not made, nor created; but begotten. The Holy Ghost is of the Father and of the Son; neither made, nor created, nor begotten; but proceeding. So there is one Father, not three Fathers; one Son, not three Sons; one Holy Ghost, not three Holy Ghosts. And in this Trinity none is before, or after another; none is greater, or less than another. But the whole three Persons are coeternal, and coequal. So that in all things, as aforesaid; the Unity in Trinity, and the Trinity in Unity, is to be worshipped. He therefore that will be saved, let him thus think of the Trinity.
Furthermore it is necessary to everlasting salvation; that he also believe faithfully the Incarnation of our Lord Jesus Christ. For the right Faith is, that we believe and confess; that our Lord Jesus Christ, the Son of God, is God and Man; God, of the Essence of the Father; begotten before the worlds; and Man, of the Essence of his Mother, born in the world. Perfect God; and perfect Man, of a reasonable soul and human flesh subsisting. Equal to the Father, as touching his Godhead; and inferior to the Father as touching his Manhood. Who although he is God and Man; yet he is not two, but one Christ. One; not by conversion of the Godhead into flesh; but by assumption of the Manhood into God. One altogether; not by confusion of Essence; but by unity of Person. For as the reasonable soul and flesh is one man; so God and Man is one Christ; Who suffered for our salvation; descended into hell; rose again the third day from the dead. He ascended into heaven, he sitteth on the right hand of the God the Father Almighty, from whence he will come to judge the quick and the dead. At whose coming all men will rise again with their bodies; And shall give account for their own works. And they that have done good shall go into life everlasting; and they that have done evil, into everlasting fire. This is the Catholic Faith; which except a man believe truly and firmly, he cannot be saved.

இதில் வரும் வார்த்தைகளில் ஏதோ பெயருக்கு ஒரு சிலது வேதத்திலிருந்து எடுத்தாலும் இன்று திரித்துவர்கல் பின்பற்றும் அதே வேத புரட்டலின் தந்தை தான் இந்த அத்நாஷியஸ் என்பவர்!! இவரின் இந்த அறிக்கையை படித்து வேதத்துடன் ஒப்பீட்டு பார்க்கும் யார் ஒருவனும், இந்த குப்பையான விசுவாசத்தை ஏற்றுகொள்ள மாட்டான்!! காண்ஸ்டன்டைனை கையில் போட்டு கொண்டு அத்நாஷியஸ் என்பவர் தன் போக்கில் வேதத்தை புரட்டியது இந்த விசுவாச அறிக்கை காண்பிக்கிறது!!

இதோ ஏரியஸின் விசுவாசம்:

Because most extant written material on Arianism was written by its opponents, the nature of Arian teachings is difficult to define precisely today. The letter of Auxentius,[8] a 4th-century Arian bishop of Milan, regarding the missionary Ulfilas, gives the clearest picture of Arian beliefs on the nature of the Trinity: God the Father ("unbegotten"), always existing, was separate from the lesser Jesus Christ ("only-begotten"), born before time began and creator of the world. The Father, working through the Son, created the Holy Spirit, who was subservient to the Son as the Son was to the Father. The Father was seen as "the only true God". First Corinthians 8:5-8:6 was cited as proof text:
Indeed, even though there may be so-called gods in heaven or on earth — as in fact there are many gods and many lords — yet for us there is one God (Gk. theos - θεος), the Father, from whom are all things and for whom we exist, and one Lord (kyrios - κυριος), Jesus Christ, through whom are all things and through whom we exist.
—NRSV
A letter from Arius to the Arian Eusebius of Nicomedia succinctly states the core beliefs of the Arians:
Some of them say that the Son is an eructation, others that he is a production, others that he is also unbegotten. These are impieties to which we cannot listen, even though the heretics threaten us with a thousand deaths. But we say and believe and have taught, and do teach, that the Son is not unbegotten, nor in any way part of the unbegotten; and that he does not derive his subsistence from any matter; but that by his own will and counsel he has subsisted before time and before ages as perfect God, only begotten and unchangeable, and that before he was begotten, or created, or purposed, or established, he was not. For he was not unbegotten. We are persecuted, because we say that the Son has a beginning, but that God is without beginning.

இது ஏறியஸின் விசுவாசம், வசனத்துடன் அன்றே இவர் விவாதம் செய்திருக்க வேண்டும், திரித்துவ தந்தையர்களில் ஒருவரான அத்நாஷியஸ் தன் அறிக்கையில் எங்காவது வேதத்தையோ, வசனத்தையோ குறிப்பிடுகிறாரா, இல்லை, அதையே தான் இன்று வரை செய்து வருகிறார்கள்!! வேத ஞானம் இல்லாதவர்கள் எப்பவும் ஜெயித்து தான் வருகிறார்கள், கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த கூட்டம் தானே அது!! அதில் வந்த அத்நாஷியஸ் என்கிற ஒரு மனித போதனையை வேதத்துடன் வார்த்தைக்கு வார்த்தை ஒப்பீட்டு ஒரு கட்டுறை தருகிறேன், அதன் பின் யார் யாரின் மூக்கை உடைத்தார்கள் என்று பார்க்கலாம்!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதோ அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கையின் தமிழாக்கம்:

சர்வவல்லமையுள்ள தகப்பனாகிய ஒரே தேவனை விசுவசிக்கிறேன்; வாணத்தையும் பூமியை உருவாக்கினவர் அவரே; நம் கர்த்தரும் அவரின் ஒரே குமாரனாகிய கிறிஸ்துவை விசுவசிக்கிறோம் (1 கொரி 8:5,6); இவர் பரிசுத்த ஆவியினால் உற்பவிக்கப்பட்டு; கன்னி மரியாளுக்கு பிறந்து, (மத்தேயு 1:18;20) பொந்தியு பிலாத்துவின் கீழ் பாடுகள் பட்டார்; சிலுவையில் கொலையுண்டு (மத்தேயு 20:19; மாற்கு 9:31), மரித்து அடக்கம் செய்யப்பட்டார்; அவர் பாதாளத்திற்கு* இறங்கினார்  (யோவான் 19:40); மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து (மத்தேயு 20:19; மாற்கு 9:31); பரலோகத்திற்கு ஏறி சென்றார்; சர்வவல்லமையுள்ள தந்தையாம் தேவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் (அப்போஸ்தலர் 2:33; I பேதுரு 3:22); அங்கு இருந்து இவர் மரித்து உயிர்த்தெழுந்தோரை நியாயம் தீர்க்க வருவார் (யோவான் 5:27); பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன் (பரிசுத்தா ஆவியாகிய தேவன் அல்ல); பரிசுத்த உலகளாவிய (கத்தோலிக்க‌)** திருச்சபையையும்; பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும்; பாவ மண்ணிப்பையும்; சரீரத்தின் உயிர்த்தெழுதலையும்; நித்திய ஜீவன் உண்டென்றும் விசுவாசிக்கிறேன்!! ஆமென்!!

* பாதாளம் என்பது நம்மவர்கள் பிரபலமாக வைத்திருக்கும் கோட்பாடான நரகம் கிடையாது!! பாதாளம் என்பது கல்லறை அல்லது மரித்தோரின் நிலை!!
** இந்த கத்தோலிக்கத்திற்கும் ரோமன் கத்தோலிக்கத்திற்கும் சபந்தம் கிடையாது, ஏனென்றால் கத்தோலிக்கம் என்பது உலகளாவியது என்று அர்த்தம் கொள்ளும்!! ரோமர்களால் துவக்கி உலகம் எங்கும் சென்ற சபையானதால் அதை ரோமன் கத்தோலிக்க சபை என்று சொல்லுகிறோம், இது அப்போஸ்தலர் காலத்தில் இல்லாத சபை!!

இப்படி எல்லாமே வேதத்தின் படி இருந்த ஒரு விசுவாச அறிக்கையை தான் ஏரியஸ் என்பவர் சொல்லி வந்தார்!! ஆனால் மெத்த படிப்பு படித்திருந்த அலெக்சாந்திரியாவின் பிஷப் அத்நாஷியஸ், இந்த வேத வார்த்தைகளை புறகனித்து, அன்று கிரேக்கர்கள் மற்றும் பிற மதத்தினர் பின் பற்றிய திரியேக தேவன் கோட்பாடுகளை கொண்டு ஒரு புதிய விசுவாச அறிக்கை கொண்டு வந்தார்!! இந்த விசுவாச அறிக்கையின் படி வேதத்தில் இல்லாத திரித்துவம் என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டது!! இந்த விசுவாச அறிக்கை மிகவும் சுலபமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஏனென்றால் பொது ஜனங்கள் ஏற்கனவே திரித்துவ தேவன் என்கிற கோட்பாட்டில் இருப்பவர்களுக்கு மார்க்கம் மாற்றிக்கொள்ள கஷ்டமாக தோன்றவில்லை!! ஆக திரித்துவம் என்கிற ஒரு கோட்பாடு உருவாகி அது சபையில் புகுத்தப்பட்டது!!

அத்நாஷியஸிஸ் என்பவர் சுமார் 45 வருடங்கள் பிஷப்பாக ஆட்சி புரிந்தவர், அதிகாரம் படைத்தவர், அவர் பிஷப் ஆகும் முன் ஏரியஸின் விசுவாச கொள்கையுடன் மோதி இருக்கிறார்; ஆனால் தான் அதிகாரத்தில் வந்த பிறகு தான் அத்நாஷியஸ் விசுவாச பிரமானத்தை கொடுத்து, அதன் படி கத்தோலிக்க விசுவாசம், பின் அதை தொடர்ந்த மற்ற சபைகளின் விசுவாசங்களுக்கு ஒரு அஸ்திபார கல்லாக இருந்தார்!! ஆதி 3:4ல் சாத்தான் தேவனின் வார்த்தையை எப்படி புரட்டி "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று சொன்னானோ, அப்படியே அத்நாஷியஸ் என்கிற இந்த மனிதன் ஒன்றான மெய் தேவனை திரியேக தேவனாக உயர்த்தினார்!! இவர் விசுவாச அறிக்கையின் துவக்கத்தை பார்த்தாலே சத்தியத்தை விரும்புவோர் தெரிந்துக்கொள்ளலாம், இவர் எப்படி பட்ட வேத புரட்டர் என்று:

"யாரெல்லாம் இரட்சிக்கப்பட வேண்டுமோ, அவர்கள் அனைவரும் நிச்சயமாக கத்தோலிக்க (ரோமன் கத்தோலிக்கம் தான்) விசுவாசத்தில் இருக்க வேண்டும்; இதை தவிரான வேறு விசுவாசங்கள் இருந்தால் அவன் நிச்சயமாக என்றென்றைக்கும் அழிந்து போவான்; அப்படி பட்ட கத்தோலிக்க விசுவாசம் இதோ:" என்று வேதத்தின் விசுவாசத்தை அல்ல மாறாக கத்தோலிக்கத்தின் விசுவாசத்தையே வெளியிடுகிறார்!! இவர் எழுதிய பிரதான விசுவாசம் வசனம் இல்லாதவைகள், ஆகவே தான் இவரின் விசுவாசத்தை பின் பற்றும் ஜான் போன்றோர், இவரின் இந்த விசுவாசத்தை வைத்து இவர் ஏரியஸின் மூக்கை உடைத்தார் என்று எழுதுகிறார்கள்!!

சகோ அன்பு அவர்கள் அத்நாஷியசின் இந்த விசுவாச அறிக்கையை தமிழாக்கம் செய்தீர்களென்றால் பேரும் உதவியாக இருக்கும்!! ஆனால் ஜான் போன்ற ஆங்கிளம் தெரிந்தோர் இந்த விசுவாச அறிக்கையை வாசித்திருப்பார்கள், அது எந்த அளவிற்கு வேதத்துடன் தொடர்புடையது என்பதையும் புரிந்திருக்கலாம்!! வரட்டு நம்பிக்கை ஒன்றே சில சமயம் வேதத்தை நோக்கி அதன் சரியான விளக்கத்தை தெரிந்துக்கொள்ள மறுக்கசெய்கிறது!! ஒன்றான மெய் தேவனை திரித்துவமாகிய தேவன் என்று அத்நாஷியஸ் தன் அறிக்கையை துவங்கியிருப்பதே, இது எப்பேற்பட்ட வேத புரட்டல் என்பதை அனைவரும் உணரவேண்டும்!!

தொடரும்....................

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

John


//இன்றும் என் வீடு தேடி வரும் காவல் கோபுர புரட்டர்கள் அவர்களுடைய புரட்டப்பட்ட வேதத்தில் இருந்து வாசிக்கத்தான் விரும்புவார்களே தவிர வேறு எந்த ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நீங்களும்  அதேயேதான்  செய்கிறீர்கள்.//

நான் பல முறை இந்த தளத்தின் மூலம் எழுதியிருப்பது உங்கள் பார்வைக்கு படவில்லை போல்!! எனக்கும் காவல் கோபுர புத்தகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதியும் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லுவதில் அர்த்தம் இல்லை!! என் வீட்டிற்கு வந்து பாருங்கள் நான் எத்துனை மொழிப்பெயர்ப்புகளில் வேதாகமங்களை வைத்திருக்கிறேன் என்பது புரியும்!! அது போக இனையத்தளம் மூலம் இன்று கிடைக்காத மொழிப்பெயர்ப்பே இல்லையே!! இதை எல்லாம் உபயோகப்படுத்தி தான் என் பதிவுகளை தருகிறேன் / தந்துக்கொண்டிருக்கிறேன் என்பதை இன்னும்ம நீங்கள் பார்க்கவில்லை!! எத்துனையோ இடங்களில் நான் பல்வேறு மொழிப்பெயர்ப்புகளில் வசனங்களை தந்திருப்பது தாங்கள் கவனிக்கவில்லை போல்!! இப்படி பதிவுகளை பார்க்காமல் "நீங்களும் அதையேதான் செய்கிறீர்கள்" என்பதன் நோக்கம் என்ன!! சொல்ல போனால் உங்கள் தளத்தில் தான் மொழிப்பெயர்க்கப்பட்டு பல தவறுகளை கொண்ட "பரிசுத்த வேதாகம"த்தை தவிற வேறு ஒன்றும் எங்களுக்கு வேண்டாம் என்று பதிவு செய்தவர்கள் உண்டு!! உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்!!

//அப்போஸ்தலர்கள் விசுவாச பிரமாணம் என்று ஒன்றையும் வேதத்தில் எழுதவில்லை. விசுவாச பிரமாணங்களை எழுதியது அதிகிருஸ்தவர்களே! அவதுறு கிறிஸ்தவத்தில் நுழையக்கூடாது என்ற நோக்கத்தில் அவ்வப்போது எழும் அவதுறுகளுக்கு எதிராக விசுவாச பிரமாணங்களை எழுதி சபைகளை எச்சரித்தார்கள். அப்படி எழுதப்பட்டவைதான் அப்போஸ்தலர்கள் விசுவாச பிரமாணமும், நிசியா விசுவாச பிரமாணமும். அப்போஸ்தலர்கள் விசுவாச பிரமாணத்திலேயே அவர்கள் முழு கிறிஸ்தவத்தையும் எழுதிவைக்கவில்லை,//

வேதத்தில் எந்த விசுவாசப்பிரமானம் எழுதப்படவில்லை ஆனால் வேத வசனங்களை கொண்டு தானே எழுதப்பட்டிருக்கிறது!! விசுவாசப்பிரமாணத்தினால் கிறிஸ்தவத்தை அல்ல மாறாக விசுவாசத்தை மாத்திரமே வெளிப்படுத்துகிறோம்!! அவதூறு கிறிஸ்தவத்தில் நுழைக்கூடாது என்கிற நோக்கத்தில் விசுவாசப்பிரமாணம் எழுதப்பட்டது என்று சொல்லி எதற்கு அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கையை மாற்றி அத்நாஷியஸ் உருவாக்கி அதை ஒப்புதல் பெற வைத்து நிசியா விசுவாச பிரமாணத்தின் தேவை வந்தது!! அப்படி என்றால் அப்போஸ்தலர்கள் சொன்ன விசுவாசம் போதாது, உலகத்தில் இருக்கும் பிற மதங்கள் / மார்க்கங்களில் இருப்பது போன்ற திரித்துவ கோட்பாட்டை நம் விசுவாசத்திலும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தானே அத்நாஷியஸின் விசுவாச பிரமாணம் வந்தது!! அதில் உள்ள வரிகளை வாசித்து அவை எல்லாம் வேதத்தில் எந்த பகுதியில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா!?

சத்தியத்தை ஏற்றுக்கொள்வோர் முழு உலகத்தாராக இருக்க முடியாது, சுவிசேஷ காலத்தில் சத்தியத்தை ஏற்றுக்கொள்வோர் மிகவும் சிலரே!! ஆகவே தான் ஏரியஸின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அவருக்கு துனையாக நீங்கள் எழுதிய படி சுமார் 22 பேர் மாத்திரமே நின்றார்கள்!! ஏனென்றால் சத்தியம் என்பது முழு உலகத்திற்கு கிடையாது, முழு உலகமும் எப்படி இருக்கிறது என்பது வசனத்தை கைக்கொள்வோருக்கு தெரியும்!! வானத்திலிருந்து இறங்கி வந்த கிறிஸ்து முழு இஸ்ராயேலில் இருந்து 12 அப்போஸ்தலர்களும் சுமார் 500 விசுவாசிகளை தானே கொண்டிருந்தார்!! 5000 பேருக்கு மேல் அவர் போஷித்திருந்தாலும் அவரை பின்பற்றியவர்கள் எத்துனை பேர்!! அப்படி தான் இதுவும்!! பெரும்பாலுமானோர் சொல்லுவது உலகப்படி சரியாக இருக்கலாம், ஆனால் சத்தியம் அப்படி இல்லை, வெகு சிலரே, அதை தெரிந்துக்கொள்ள முடியும்!!

மத்தேயு 13:10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.

அத்துனை பேர் வந்து கிறிஸ்துவின் பிரசங்கத்தை கேட்டிருந்தாலும் அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே அதை புரியவைத்தார்!? ஏன் என்று அவரே அதற்கு பதிலும் சொல்லுகிறார்!!

தொடரும்.....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான் எழுதியது:

//நண்பர் பெரேயன் வசனத்தை ஒருவர் மேற்கோள்காட்டி சொல்லுவதால் மட்டும் அது சரியான கருத்தாகி விடமுடியாது. மேல்போக்காக வசனத்தை எடுத்துக்காட்டி இயேசு ஒரு சாதாரண மனிதனே! அவர் தேவனுடைய குமாரனில்லை என்று இஸ்லாமியர்கள் இன்றும் நிருபித்து (?) கொண்டுதான் இருக்கிறார்கள். //

தேவனுடைய குமாரனில்லை என்று இஸ்லாமியர்கள் சொல்லுவதை பற்றி எனக்கு அக்கறை இல்லை!! இங்கே வேதத்தை அன்றாடம் வாசித்து கற்றுக்கொண்டிருப்பவர்களுக்குள் தான் விவாதமே!! வசனம் மேற்கோள் காட்டாமல் தானே அத்நாஷியஸின் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது!! அத்நாஷியஸின் கோட்பாடுகளில் வசன ஆதாராம் கொடுத்து பார்க்க முடியுமா!! வேத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது தான் நிசியா சங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அத்நாஷியஸின் கோட்பாடு!! அன்று ஏறியஸ் சொன்ன அதே வசனத்தை தான் நானும் சுட்டி காட்டி வருகிறேன்!! வசனத்தினால் தான் தேவனை புரிந்துக்கொள்ள முடியுமே அன்றி வேறு வழி இல்லையே!!

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

இந்த வசனத்தை நீங்களோ கொல்வினோ ஒரு போதும் விளக்காமல் மாறாக உடனே இது ரஸ்ஸலின் போதனை போன்றே எழுதி தீர்த்தீர்கள்!! ரஸ்ஸல் இதை சொல்லுவதற்கு முன்பு ஏரியஸ் என்பவர் சொல்லியிருக்கிறார்!! ஏதோ ஏரியஸ் தானாக சொல்லாமல் வேத வசனத்தையே சுட்டி காண்பித்து கோட்பாடுகளை தந்தார்!! இன்று வசனத்துக்கு தள்ளி நிற்பவர்கள் போலவே அன்றும் இருந்திருக்கிறார்கள்!! நான் மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி தேவனையும் கிறிஸ்துவையும் தெரிந்துக்கொள்ள முடியவில்லையா!?

ஏரியஸின் கோட்பாடுகள் எடுப்படாமல் போனதற்கு காரணம் மனித போதனைகளே தவிர மற்றபடி வசனங்களை கொண்டு இல்லை என்பது வருத்தமான விஷயமே!! மேலும் கான்ஸ்டண்டைன் என்பவர் எனக்கு எதிரியோ, நான் அவரை பிடிக்காமல் போனவன் என்பதெல்லாம் உங்களின் யூகமே!! கான்ஸ்டண்டைன் எனக்கு நேரடியாக என்ன செய்தார், நான் அவரை வெறுக்கவோ அன்பு செய்யவோ!! மற்றபடி நிசியா முதல் கூட்டம் எல்லாம் முடிந்த பிறகு தான் கான்ஸ்டண்டைன் ஞான்ஸ்நானம் எடுத்திருக்கிறார் என்பதெல்லாம் தெரியும்!! ஆனால் பொய்யை விசுவசித்ததினால் வசனம் சொல்லிய படியே கொடிய வஞ்சகத்தை தேவனே அனுப்பி குழப்பி வசனத்தை ஏற்காமல் பாரம்பரியங்களை ஏற்று நிசியா சங்கம் அத்நாஷியஸ் என்பவரின் கோட்பாடுகளுக்கு பச்சை கொடி காட்டியிருப்பது வசனம் நிறைவேறியது என்பதற்கு சாட்சியாக நான் எடுத்துக்கொள்கிறேன்!!

தொடரலாம்.....!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை:

//Whosoever will be saved, before all things it is necessary that he hold the Catholic Faith. Which Faith except every one do keep whole and undefiled; without doubt he shall perish everlastingly. And the Catholic Faith is this: //

அத்நாஷியஸின் விசுவாச அறிக்கையின் துவக்கம் இப்படியாக இருக்கிறது, அதாவது இரட்சிக்கப்பட எல்லாவற்றுக்கும் முன் ஒருவன் கத்தோலிக்க விசுவாசம் உடையவனாக இருக்க வேண்டுமாம்!! இந்த ஒரு விசுவாசத்தை முழுமையாகவும், பரிசுத்தமாகவும் கடைப்பிடிப்பவனை தவிர, சந்தேகத்திற்கு இடமில்லாமல் மற்றவர்கள் அனைவரும் நித்தியத்திற்கும் அழிந்துபோவார்களாம்!! இந்த விசுவாசத்தை கொண்டு வந்த அத்நாஷியஸின் வார்த்தைகளை இன்று ஆவி சபை என்று சொல்லும் பெந்தகோஸ்தே சபையினர் தாராளமாக பின்பற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை!!

அது என்ன கத்தோலிக்க விசுவாசம்??

Baptism, Confirmation, Confession, Eucharist, Marriage, Holy Orders, Annointing of the Sick, Mass, Sin, Hell, Purgatory, Death, Divorce / Annulments,  Contraception / Abortion, Mary, The Pope

குழந்தை ஞாஸ்நானம், உறுதிப்பூசுதல், சாமியாரிடம் பாவ சங்கீர்த்தனம், நற்கருனை ஆராதனை, திருமன சடங்கு, (ரோமின்) புனித கட்டளைகள், நோயில் பூசுதல் (அவஸ்தை கொடுப்பது என்பார்கள்), திருப்பலி, பாவம், நரகம் (எரி நரகம்), உத்தரிக்கிரஸ்தலம், மரணம், விவாகரத்து, கருத்தடை / கருகலைப்பு, மரியாள் / புனிதர்கள், போப் ஆண்டவர்!!

ஒருவன் இரட்சிக்கப்பட மேலே உள்ள இத்துனை கத்தோலிக்க விசுவாசம் வேண்டும் என்று அத்நாஷியஸ் எழுதியதை இன்றைய பெந்தகோஸ்தே சபைகள் கூட பின்பற்றுகிறார்கள் என்பதை கேட்பதற்கு சற்று வருத்தமாக தான் இருக்கிறது!! எனக்கு இரட்சிப்புக்கு வேதம் சொல்லிக்கொடுப்பது,

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு கிறிஸ்து) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

ஆனால் அத்நாஷியஸின் விசுவாச அறிக்கையின் துவக்கமே அப்போஸ்தலர் 4:12 இல்லை, மாறாக வேதத்தில் இல்லாத விசுவாசம், சம்பிரதாயங்கள், சாக்கிரமெந்துக்கள்!!

தொடரும்.....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:

//எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் உங்களால் புளுக முடிகிறது நண்பரே? இதுதான் உங்கள் கிறிஸ்தவ விசுவாசமா? உண்மையிலே எனக்கு உங்களை நினைக்கும் பொது வெட்கமாக இருக்கிறது. கதோலிக் (Catholic ) என்ற வார்த்தையின் அர்த்தம் பொதுவான என்று உங்களுக்கும் தெரியும், கொஞ்சம் விஷயம் தெரிந்த எல்லாருக்கும் தெரியும் இருந்தும் ஏன் இப்படி ரோமன் கத்தொலிசத்தையும்,  ஆதி சபையின் பொதுவான விசுவாச அறிக்கையையும் குழப்பி வெட்கமில்லாமல் புரட்ட முடிகிறது? பெரேயன் என்று பெயரில் இருந்தால் போதாது நண்பரே, சற்றேனும் பெயருக்கு ஏற்ப நடக்க முயற்சியாவது செய்யுங்கள்! //

அப்படி என்றால் அத்நாஷியஸ் எந்த சபையை சேர்ந்தவர் என்று சொல்ல முடியுமா!! அவர் எந்த சபையில் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர் என்று தெரியுமா!! கத்தோலிக் என்றால் உலகளாவியது (Universal) என்று எனக்கு தெரியும்!! ரோமாபுரியில் இருந்து இந்த விசுவாசம் வந்ததினால் தான் ரோமன் கத்தோலிக்கத்துடன் இதை தொடர்பு படுத்துகிறேன்!! நீங்கள் இத்துனை ஆஙகாரமாக எழுதுவதற்கு அத்நாஷியஸ் ஒன்று பெந்தகோஸ்தே சபையிலிருந்துக்கொண்டு இதை எழுதவில்லை, அவர் கத்தோலிக்க சபையில் இருந்துக்கொண்டு தான் இதை வெளியிட்டிருக்கிறார்!!

சரி இத்துனை ஆங்காரமாக எழுதியிருக்கிறீர்களே, இன்று பெந்தகோஸ்தே சபைகள் தங்களை கத்தோலிக்க விசுவாசமுள்ள சபைகள் என்று சொல்லிக்கொள்ளுமா!!??

அத்நாஷியஸின் விசுவாசத்தை "ஆதி சபையின்" விசுவாச அறிக்கை என்று எழுதி நீங்கள் ஊரை குழப்பாதீர்கள், புரட்டாதீர்கள்!! ஆதி சபையின் விசுவாச அறிக்கை அப்போஸ்தலர்களின் விசுவாசம்!! அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கைக்கும், அத்நாஷியஸ் கான்ஸ்டண்டைன் துவக்கிய சபையின் மூலமாக வெளி வந்த நிசியா விசுவாச அறிக்கைக்கும் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசங்கள் இருக்கிறது!! அதை தோலுறித்து காட்ட தான் இந்த பகுதியை ஆரம்பித்திருக்கிறேன்!! இப்ப தானே முதல் வரியை ஆரம்பித்திருக்கிறேன், அதற்குள் அவசர பட்டு வார்த்தைகளை கொட்ட வேண்டாம்!! இது போன்று மீண்டும் ஆரம்பிப்பீர்கள் என்று தெரிந்ததினால் தான் உங்களுடன் விவாதங்கள் வேண்டாம் என்று என்னுகிறேன்!! கருத்து என்ன இருக்கோ அதை வைத்து எழுதுங்கள், என் பெயர் என்ன என்றும் அதன் அர்த்தம் என்னவென்றும் இங்கு தர்க்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, பிறகு எல்லாருடைய பெயர்களுக்கு அர்த்தம் கண்டுபிடித்து அதன் படியே எல்லாரும் இருக்கிறார்களா என்பதற்கு தனி திரி துவங்க வேண்டியதாகும்!!

//ஆராய்ச்சி செய்து நற் குணசாலிகள் என்று பெயர்பெற்றர்கள். நீங்கள் இப்படி எழுதி அந்த பெயரை அசிங்கப்படுத்தாதீர்கள்!! நீங்கள் மறைத்து விட்ட மற்ற பகுதியையும் வெளியிடுகிறேன்.//

நீங்கள் சேற்றை என் மேல் வீசி விட்டு ஏன் இப்படி அசிங்கமக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல, என் விசுவாசம் என்னவென்பதை நான் பல முறை தெளிவுப்படுத்தியிருக்கிறேன்!! மேலும் நான் எதையும் மறைக்க வில்லை, இப்ப தான் அத்நாஷியஸ் வேதத்தில் இல்லாத ஒன்றை எப்படி பொதுவான விசுவாசம், கிறிஸ்தவ விசுவாசம் என்று எழுதி அது எப்படி தந்திரமாக சபைகளுக்குள் புகுந்தது என்பதை விவரிக்க தொடங்கினேன்!! நீங்கள் அவசரப்பட்டு அந்த விசுவாச அறிக்கையை அப்படியே கொடுத்திருக்கிறீர்கள், நான் அதை முன்னமே செய்துவிட்டு, இப்பொழுது பொறுமையா அது எப்படி எல்லாம் வேதத்திற்கு புறம்பான விசுவாசம் என்று தெளிவுப்படுத்துகிறேன்!! காத்திருங்கள்!! இப்பேற்பட்ட விசுவாச அறிக்கையின் மூலம் ஒன்று நிச்சயமாகிறது, வசனம் நிரூபிக்கப்படுகிறது!!

II தெசலோனிக்கேயர் 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை:

//That we worship one God in Trinity, and Trinity in Unity; Neither confounding the Persons; nor dividing the Essence.//

திரித்துவத்தின் ஒரே தேவனை ஆராதிக்கிறோம், திரித்துவத்தில் ஒன்றான தேவன், ஆளத்துவங்களை வேறுப்படுத்துவதில்லை, தன்மைகளை வேறுபடுத்தாமலும் விசுவாசிக்கிறோம் என்கிறார் அத்நாஷியஸ்!!

வேதத்தில் இல்லாத இப்படி பட்ட ஒரு வாக்கியம் ஒரு விசுவாசம் இவரது சொந்த விசுவாசமாகிறது!! அன்று பிரபலமான திரித்துவ கடவுள்களின் உபதேசங்கள் கோட்பாடுகளிலிருந்து மருவி வந்த உபதேசமாகிறது!! ஒரே தேவன் மூன்று நபராக இருக்கிறார் என்கிறது இவரின் விசுவாசம்!! இது இவரின் சொந்த வியாக்கியானமே தவிர, வேதம் அப்படி ஓர் இடத்திலும் சொல்லுவதில்லை!! மேலும் அந்த மூன்று நபர்களும் ஒருவராக (திரியேகத்துவம்) அல்லது ஒன்றாக (திரித்துவம்) இருக்கிறார்கள் என்பதும் விசுவாசமாம்!! இந்த மூன்று நபர்களையும் இவரின் விசுவாசம் ஒன்று படுத்தியிருக்கிறது!! ஒன்றான மெய் தேவன், அவர் ஒருவரே சாவாமை உள்ளவர் என்று இருக்கும் அனைத்தையும் இவரின் விசுவாசம் மறைத்துவிட்டது!! ஒன்றை மூன்றாக்கி, அதற்கு வேதத்தில் இல்லாத திரித்துவம் என்கிற பெயரை கொடுத்து, ஒன்றான மெய் தேவனை திரியேக தேவனாக்கின அனைத்து விதமான புரட்டலும் இந்த விசுவாச அறிக்கையின் துவக்கம்!!

திரித்துவத்தில் ஒன்றான தேவன் என்பதெல்லாம் வேதத்தின் கருத்து அல்ல, இது அந்த சமயத்தில் பிரபலமான பாபிலோனிய கருத்துக்களின் வளர்ச்சியே!! வேதத்தில் இல்லாத ஒரு வார்த்தையை சொல்லி, கிறிஸ்தவத்திற்குள் ஒரு புதிய கருத்தை கொண்டு வந்தார் அத்நாஷியஸ், தன் நிசியா விசுவாச அறிக்கையின் மூலம்!!

இப்படி பொய்யில் ஆரம்பித்த ஒரு விசுவாச அறிக்கையை வைத்துக்கொண்டு வேதத்தின்படி இருக்கும் எங்கள் விசுவாசம் பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது!!

அத்நாஷியஸ்க்கு தன்னை திரியேக தேவன் என்று வெளிப்படுத்தி அந்த ரகசியத்தை சொல்லிய தேவன், ஏனோ பேதுரு பவுல் போன்றோருக்கு அதை மறைத்து வைத்தாரோ!! இப்படி விசுவாசப்பிரமானங்களிலும் பாடல்களிலும் வளர்ந்த கிறிஸ்தவம் ஒரு மதம், ஆனால் அது கிறிஸ்துவின் மார்க்கம் அல்ல‌!!

இன்னும் வரி வரியாக அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை அலசப்படும்................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

bereans wrote:

அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை:

//That we worship one God in Trinity, and Trinity in Unity; Neither confounding the Persons; nor dividing the Essence.//

திரித்துவத்தின் ஒரே தேவனை ஆராதிக்கிறோம், திரித்துவத்தில் ஒன்றான தேவன், ஆளத்துவங்களை வேறுப்படுத்துவதில்லை, தன்மைகளை வேறுபடுத்தாமலும் விசுவாசிக்கிறோம் என்கிறார் அத்நாஷியஸ்!!

வேதத்தில் இல்லாத இப்படி பட்ட ஒரு வாக்கியம் ஒரு விசுவாசம் இவரது சொந்த விசுவாசமாகிறது!! அன்று பிரபலமான திரித்துவ கடவுள்களின் உபதேசங்கள் கோட்பாடுகளிலிருந்து மருவி வந்த உபதேசமாகிறது!! ஒரே தேவன் மூன்று நபராக இருக்கிறார் என்கிறது இவரின் விசுவாசம்!! இது இவரின் சொந்த வியாக்கியானமே தவிர, வேதம் அப்படி ஓர் இடத்திலும் சொல்லுவதில்லை!! மேலும் அந்த மூன்று நபர்களும் ஒருவராக (திரியேகத்துவம்) அல்லது ஒன்றாக (திரித்துவம்) இருக்கிறார்கள் என்பதும் விசுவாசமாம்!! இந்த மூன்று நபர்களையும் இவரின் விசுவாசம் ஒன்று படுத்தியிருக்கிறது!! ஒன்றான மெய் தேவன், அவர் ஒருவரே சாவாமை உள்ளவர் என்று இருக்கும் அனைத்தையும் இவரின் விசுவாசம் மறைத்துவிட்டது!! ஒன்றை மூன்றாக்கி, அதற்கு வேதத்தில் இல்லாத திரித்துவம் என்கிற பெயரை கொடுத்து, ஒன்றான மெய் தேவனை திரியேக தேவனாக்கின அனைத்து விதமான புரட்டலும் இந்த விசுவாச அறிக்கையின் துவக்கம்!!

திரித்துவத்தில் ஒன்றான தேவன் என்பதெல்லாம் வேதத்தின் கருத்து அல்ல, இது அந்த சமயத்தில் பிரபலமான பாபிலோனிய கருத்துக்களின் வளர்ச்சியே!! வேதத்தில் இல்லாத ஒரு வார்த்தையை சொல்லி, கிறிஸ்தவத்திற்குள் ஒரு புதிய கருத்தை கொண்டு வந்தார் அத்நாஷியஸ், தன் நிசியா விசுவாச அறிக்கையின் மூலம்!!

இப்படி பொய்யில் ஆரம்பித்த ஒரு விசுவாச அறிக்கையை வைத்துக்கொண்டு வேதத்தின்படி இருக்கும் எங்கள் விசுவாசம் பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது!!

அத்நாஷியஸ்க்கு தன்னை திரியேக தேவன் என்று வெளிப்படுத்தி அந்த ரகசியத்தை சொல்லிய தேவன், ஏனோ பேதுரு பவுல் போன்றோருக்கு அதை மறைத்து வைத்தாரோ!! இப்படி விசுவாசப்பிரமானங்களிலும் பாடல்களிலும் வளர்ந்த கிறிஸ்தவம் ஒரு மதம், ஆனால் அது கிறிஸ்துவின் மார்க்கம் அல்ல‌!!

இன்னும் வரி வரியாக அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை அலசப்படும்................


அருமை!! சகோதரர் பெறேயான்ஸ் அவர்களே, தொடர்ந்து ஏரியஸ், அத்நாஷியஸ் போன்ற வரலாற்று உண்மைகளை இவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லுங்கள்!!!  வேதத்தில் இருக்கும் வசனத்துக்கு முக்கியம் கொடுக்காத இவர்களுக்கு இப்படியான விஷயங்களை சொல்லியாவது புரியவைப்போம்!!!  நான் கூட இது தொடர்பாக ஒரு கட்டூரை ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கிறேன். பூர்த்தியாகின உடனே இவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்!!! உங்கள் பதிவுகள் அனைத்தும் இவர்களின் இருதயத்தை துளைக்க யெகோவா நிட்சயம் உதவுவார்!!!  ஜெபத்திலே அனுதினமும் மனமகிழ்ச் கொள்வோம்!!! தேவனுக்கே மகிமை!!!

 



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை:

//For there is one Person of the Father; another of the Son; and another of the Holy Ghost.//

இதுபோன்ற ஒரு வசனமோ கருத்தோ வேதத்தில் இல்லை, மாறாக‌,

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,..........இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு;........

ஒரே தேவனின் பிதா என்கிற ஆளத்துவம், ஒரே தேவனில் குமாரன் என்கிறா ஆளத்துவம், ஒரே தேவனின் பரிசுத்த ஆவி என்கிற ஆளத்துவம் என்பது மீண்டும் வேதத்திற்கு புறமபான கருத்து!! இன்னும்,

1 தீமோத்தேயு 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

இந்த வசனமும் பிதா என்கிற ஒரு தேவனும், கிறிஸ்து என்கிற மத்தியஸ்தருமாகவே சொல்லப்பட்டிருக்கிறது!! வசனங்கள் இப்படி இருக்க அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை என்ன போதிக்கிறது என்றால், ஒரே தேவன் தான், ஆனால் அந்த ஒரே தேவனில் மூன்று ஆளத்துவங்கள் இருக்கிறது, ஏன் இப்படி பட்ட ஒரு குழப்பத்தை உருவாக்கியிருக்கிறார்? மீண்டும் அதே வசனம் தான்:

II தெசலோனிக்கேயர் 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

அத்நாஷியஸ் போன்றோரால் தொடங்கப்பட்ட ஒரு பொய்யான விசுவாசத்தை சபைகள் விசுவாசிக்கதக்க கொடிய வஞ்சகத்தை, இப்பேற்பட்ட ஒரு மாயையான விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளும்படி சபைகளுக்குள் தேவன் தாமே வஞ்சகத்தை அனுமதித்திருக்கிறார்!! இன்று பெரும் திரளான கூட்டம் இதே மாயையில், அதாவது ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போட்டு கூவிக்கொண்டு இருக்கிறார்கள், உபயம் வேதம் அல்ல, அத்நாஷியஸின் விசுவாச அறிக்கையே!!

//But the Godhead of the Father, of the Son, and of the Holy Ghost, is all one; the Glory equal, the Majesty coeternal. Such as the Father is; such is the Son; and such is the Holy Ghost. The Father uncreated; the Son uncreated; and the Holy Ghost uncreated. The Father unlimited; the Son unlimited; and the Holy Ghost unlimited. The Father eternal; the Son eternal; and the Holy Ghost eternal. And yet they are not three eternals; but one eternal.//

குழப்பத்தின் உச்சியில் அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை இருக்கிறது!! வசனத்தை பார்ப்போம்:

I கொரிந்தியர் 11:3 ..............................................கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

அத்நாஷியஸ் சொல்லுகிறார், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி(யானவர்) ஒரே தேவத்துவத்தை உடையவர்களாக இருக்கிறார்களாம் (வசனம் எங்கே??)

மேலும் மூவரின் மகிமையும் ஒன்றே தானாம்!! மூன்றாவது நபரின் (!!) மகிமையை பிறகு பார்ப்போம், முதலில் பிதாவின் மகிமையும், குமாரனின் மகிமையும் ஒன்று தானா என்று பார்ப்போம், வசனத்துடன்!!

யோவான் 8:54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

கிறிஸ்துவிற்கு மகிமையை தருபவர் பிதா என்கிறது வசனம், ஆனால் அத்நாஷியஸின் விசுவாச அறிக்கை, மூவருக்கும் ஒரே மகிமை என்கிறது!!

அப்போஸ்தலர் 3:13 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்,

நம்முடைய (யூதர்களின்) பிதாக்களின் (நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோர்) தேவன் (யெகோவா தேவன்) தம்முடைய (யெகோவாதேவனின்) பிள்ளையாகிய இயேசுவை (குமாரனை) மகிமைப்படுத்தினார், என்கிறது வசனம், அதாவது ஒருவர் மற்றவரால் மகிமைப்படுத்தப்படுகிறார் என்கிறது வேதம், ஆனால் வேதத்திற்கு புறம்பான ஒரு விசுவாசமே, மூவரும் (!!??) ஒரே மகிமையில் இருப்பவர்கள் என்பதாகும்!!

பிதா (யெகோவா தேவன்) படைக்கப்படவில்லை, என்பது சத்தியம்,

சங்கீதம் 90:2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
சங்கீதம் 93:2 உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

இயேசுவான கிறிஸ்து படைக்கப்பட்டிருக்கிறார்;

நீதிமொழிகள் 8:26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
கொலோசெயர் 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:14....................தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

இத்துனை வசனங்களும் கிறிஸ்து படைக்கப்பட்டவர் என்று சொல்லும் போது அத்நாஷியஸின் விசுவாசப்பிரமானம் வேத வசனம் இல்லாமல் மனித கற்பனைகளின் க(கூ)ட்டு கதையாக இருக்கிறது!! மேலும் பரிசுத்த ஆவியான தேவன் என்கிற ஒரு பதமும் வேதத்தில் இல்லாததினால் அதை குறித்து விவாதிப்பத்தும் , படைப்பா அல்லது அநாதியா போன்றவற்றை விவாதிப்பது நேரத்தின் விரயமே!!

இன்னும் வரும்...........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

II தெசலோனிக்கேயர் 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

 

If John is in this catogory we can't do anything friends. He will be deceived....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//The Father eternal; the Son eternal; and the Holy Ghost eternal. And yet they are not three eternals; but one eternal.//

என்ன ஒரு குழப்பான விசுவாச அறிக்கை!! மூன்றாம் ஆனாலும் மூன்று இல்லையாம்!! பிதா ஒருவரே சாவாமையுள்ளவராக அநாதியாக என்றென்றைக்கும் இருக்கிறவராக இருந்தார், அவர் எந்த நிலையிலும் மரிக்க கூடாதவராக இருப்பவர்!! கிறிஸ்துவோ, மாம்சத்தில் வந்து மரணத்தை ஏற்றுக்கொண்டார், அதாவது மரித்தார், ஆனால் உயிர்த்தெழுந்த பின் அவர் சாவாமை அல்லது அழியாமையை தரித்துக்கொண்டவராக எழும்பினார்!! இப்படி இருவரும் வேறு நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் அத்நாஷியஸின் மனித போதனை வேதத்திற்கு மாறாக இருக்கிறது!!

இயேசு கிறிஸ்து பரலோகம் ஏறி சென்று பிதாவுடன் உடகாரவில்லை, மாறாக பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்கிறது வேதம்!! அப்படி இருக்கையில் இருவரும் ஒரே நிலையில் இருப்பவர்கள் என்று அத்நாஷியாஸ் எந்த வசன அடிப்படையில் சொல்லுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்!! எழுதப்பட்ட வேதம் இருக்கிறது, அதன் பின்னும் துனிச்சலாக புதிய கோட்பாடுகளால் விசுவாசத்தை பிரமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அத்நாஷியஸ்!!

இது யெகோவா தேவனை குறித்து,

I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

இது கிறிஸ்து இயேசு தன்னை குறித்து சொன்னது,

வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;

ஆனாலும் இருவரும் ஒரே நிலையாம்!!

One cannot die, and another died and rose from dead and yet both (Athanasius says three) are Co-equal!! One sits on the throne and another on the Right Side and yet both are co-equal!! Height of Faith!!

இதன் தொடக்கத்தில் அத்நாஷியஸ் எழுதுகிறார், இது உலகளாவிய விசுவாசம் என்று (Universal, Catholic, Worldly)!! நாம் என்ன உலகத்தின் விசுவாசத்தையா பெற்றிருக்கிறோம்!!

கொலோசெயர் 3:2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

மேலானவைகள் என்றால் மேலான விசுவாசமும் தான்!! உலகளாவிய விசுவாசம் அல்ல!! ஆனாலும் ஆவி நிறம்பிய சபை என்று சொல்லும் பெந்தகோஸ்தே சபையினரும் இந்த உலகளாவிய விசுவாசத்தில் மாட்டியிருப்பது, பரிதாபமே!!

தொடரும்....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//So likewise the Father is Almighty; the Son Almighty; and the Holy Ghost Almighty. And yet they are not three Almighties; but one Almighty. So the Father is God; the Son is God; and the Holy Ghost is God. And yet they are not three Gods; but one God. So likewise the Father is Lord; the Son Lord; and the Holy Ghost Lord. And yet not three Lords; but one Lord. For like as we are compelled by the Christian verity; to acknowledge every Person by himself to be God and Lord; So are we forbidden by the Catholic Religion; to say, There are three Gods, or three Lords. //

தேவன் ஒருவரே சர்வவல்லமையுள்ளவர் என்கிறது வேதம்!!

ஆதியாகமம் 17:1........................... நான் சர்வவல்லமையுள்ள தேவன்...............

கிறிஸ்துவை குறித்து சொல்லும் போது, கிறிஸ்து சர்வவல்லமையுள்ள தேவன் என்று சொல்லாமல் வல்லமையுள்ள தேவன் என்கிறது வேதம்

ஏசாயா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

சர்வவல்லமையுள்ள தேவன் (எல் ஷடாய்)
வல்லமையுள்ள தேவன் (எல் கிப்போர்)

பரிசுத்த ஆவியை வல்லமையோ சர்வவல்லமையுள்ளதோ என்று எதையும் சொல்லவில்லையே!!

அப்படியே பிதாவை குறித்து வேதம் அவரை தேவன் (ஹோ தியோஸ்) என்கிறது, கிறிஸ்துவை தேவன் (தியோஸ்) என்கிறது!!

பொதுவாக தேவன் என்பதற்கு பல அர்த்தங்கள் இருப்பதை பார்க்கலாம்,

சர்வவல்லமையுள்ள தேவன் தொடங்கி சாத்தான் வரையில் "தேவன்" என்கிற வார்த்தையை பார்க்கிறோம்!! ஆனால் சர்வவல்லமையுள்ள தேவன் ஒருவருக்கே வேதம் கிரேக்க மொழியில் ஹோ தியோஸ் என்று சொல்லுகிறது!! ஒரு இடத்தில் மனிதனையுமே வேதம் தேவன் என்று சொல்லியிருக்கிறதே!!

பரிசுத்த ஆவியான தேவன் என்கிற பதம் வேதத்தில் இல்லை, இல்லவே இல்லை!!

இது அத்நாஷியஸின் அற்புதமான கற்பனையை தான் வெளிப்படுத்துகிறது!!

கிறிஸ்தவர்களானவர்கள் மூவரையும் தேவன் என்றே அதுவும் சர்வவல்லமையுள்ளவர்கள் என்றே அழைக்க வேண்டுமாம், வேதம் சொல்லுகிறது,

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

இந்த அறிவு எல்லாருக்கும் இல்லையாம்!!

திரித்துவத்தின் மூன்றாவது தேவன் யார் என்பதை பவுலிடம் மறைத்து அத்நாஷியஸ் மூலமாக கிறிஸ்தவர்களுக்கு தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார் போல்!! அதிலும் கத்தோலிக்க மதத்தை (!!) சேர்ந்தவர்கள் மூன்று (!!) தேவன் என்று சொல்ல கூடாதாம்!! மூன்று தான் ஆனாலும் ஒன்று தானாம்!!

தொடரும்...............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//The Father is made of none; neither created, nor begotten. The Son is of the Father alone; not made, nor created; but begotten. The Holy Ghost is of the Father and of the Son; neither made, nor created, nor begotten; but proceeding. So there is one Father, not three Fathers; one Son, not three Sons; one Holy Ghost, not three Holy Ghosts. And in this Trinity none is before, or after another; none is greater, or less than another. But the whole three Persons are coeternal, and coequal. So that in all things, as aforesaid; the Unity in Trinity, and the Trinity in Unity, is to be worshipped.//

பிதா உருவாக்கப்படவில்லை, உண்டாக்கப்படவில்லை, ஜெனிப்பிக்கப்படவில்லை!!
குமாரன் பிதாயுடையவர், உண்டாக்கப்படவில்லை, சிருஷ்டிக்கப்படவில்லை ஆனால் ஜெனிப்பிக்கப்பட்டவர்!!
பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் குமாரனுடையவராம், உண்டாக்கப்படவில்லை, சிருஷ்டிக்கப்படவில்லை, ஜெனிப்பிக்கப்படவில்லை ஆனால் பிதாவிலிருந்தும் கிறிஸ்துவிலிருந்தும் புறப்படுகிறவராம்!!

இத்துனை வித்தியாசங்களுக்கு மத்தியிலும் மூவரும் ஒருவராம்!! அத்நாஷியஸ் எப்படி பட்ட ஞானத்தில் இதை எழுதுகிறார் என்றும் அதை ஒரு சபை அங்கிகரித்திருக்கும் ஒரே காரணத்திற்காக இருண்ட காலங்களில் இந்த பிரமானத்தை வைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி கோடா கோடி "கிறிஸ்தவர்கள்" மரித்திருக்கிறார்கள்!!

அடுத்த வரி,

ஒரே பிதா, மூன்று அல்ல‌
ஒரே குமாரன், மூன்று அல்ல‌
ஒரே பரிசுத்த ஆவியானவர், மூன்று ஆல்ல!!

ஆனால் இந்த திரித்துவத்தில் ஒருவர் முந்தியவரும் மற்றொருவர் பிந்தியவருமாக இல்லையாம், ஒருவரும் அடுத்தவரை காட்டிலும் மேலானவர் அல்லது கீழானவர் இல்லையாம், மாறாக மூவரும் ஒரே நித்தியத்தை உடையவர்களாம் (பிதா ஜெனிப்பிக்கபடவில்லை, குமாரன் ஜெனிப்பிக்கப்பட்டவர், பரிசுத்த ஆவி புறப்படுகிறவராம்), மூவரும் சரிசமமானவர்களாம்!!

வேதம் சொல்லுகிறது,

யோவான் 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

இயேசு கிறிஸ்து பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார், பிதாவாக போகிறேன் என்று சொல்லவில்லை, மேலும் கிறிஸ்துவின் பிதா கிறிஸ்துவை விட பெரியவராயிருக்கிறார் என்று கிறிஸ்துவே சாட்சி கொடுக்கிறார்!! யாரை தொழுதுக்கொள்ள வேண்டும் என்கிற ஞானம் இல்லாத கூட்டத்தார், இந்த சாதாரன வரிக்கு கூட பல வேத ஆராய்ச்சியாளரிகளின் வியாக்கியாங்களை தந்து, இயேசு இப்படி சொல்லியிருந்தாலும் அது அப்படி அல்ல என்று பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்!! அப்படி என்றால் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார், என்பதை சொல்லி கிறிஸ்து இயேசு பொய் சொல்லியிருக்கிறாரா!!?? இந்த வசனம் மாத்திரம் இருந்தால் பரவாயில்லை, இன்னும் இருக்கிறதே,

யோவான் 13:16. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.

பிதா அனுப்பினவர், கிறிஸ்து அனுப்பட்டவர்!! புரிந்துக்கொள்ள கூடிய வசனம் தான்!!

வேதத்தை மறைத்து அத்நாஷியஸ் சொன்ன பல பிதற்றல்களை சபைக்குள் பொதுவான விசுவாசம் (கவனிக்கவேண்டியது, இதுபொதுவான விசுவாசம், கிறிஸ்தவ விசுவாசம் அல்ல) என்கிற பெயரில் வஞ்சகம் நடத்தி, அதை எத்தனையோ நூற்றாண்டுகள் கேள்வியே கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு, இது தான் விசுவாசம் என்று வேதத்தில் இல்லாத ஒன்றை சார்ந்து வாழ்ந்து மரித்து போன கிறிஸ்தவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள், இன்று வரை இதையே விசுவாசித்து வருகிறவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள், ஒரே காரணம், அநேகர் விசுவாசிக்கிறார்கள் என்றால் அது தவறாகிவிடுமா என்பது மாத்திரமே, இதற்காக வசனத்தை கூட உதறி தள்ளிவிட கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்!!??

இப்படி இருக்கும் போது ஏகத்துவத்தை திரித்துவம் என்று எண்ணவேண்டுமாம், திரித்துவத்தையே ஏகத்துவம் என்று எண்ணி ஆராதிக்கவேண்டுமாம்!!

ஒன்றான மெய் தேவனை கூறு போட சொல்லிக்கொடுக்கிறார் அத்நாஷியஸ்!! வசனத்தை வைத்து தான் எங்கள் விசுவாசம் என்று சொல்லுபவர்கள், ஒன்றான மெய் தேவன், ஒருவரே சாகாமை உள்ளவர் என்று ஒருவரையே சொல்லும் வசனங்கள் இருக்கிறது, ஆனால் இந்த ஒருவார் தான் திரியேக தேவன் அல்லது மூன்றாக இருக்கிறாஅர்கள் என்பதற்கு நேரடியான ஒரு வசனமும் இல்லை!! நான் கேட்பது அத்நாஷியஸ் என்கிற புரட்டன் சொல்லுவது போல் "திரித்துவத்தில் ஏகத்துவம் அல்லது ஏகத்துவத்தில் திரித்துவம்" போன்ற முட்டாள்த்தனமான கருத்து வேதத்தில் எங்கே இருக்கிறது, ஏதாவது நேரடியான வசனம் இருக்கிறதா என்றால், இல்லையே!!!

வேதம் சொல்லுகிறது, பிதா ஒருவருக்கே ஆராதனை, அவரையே தொழுதுக்கொள்ள வேண்டும் என்று ஆனால் அத்நாஷியஸின் கூற்று இல்லாத திரித்துவத்தை தொழுதுக்கொள்ள, ஆராதிக்க சொல்லி தருகிறது, இது மிகவும் சரி என்று வாதாடுகிறார்கள் பக்தர்கள்!!

லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

பிலிப்பியர் 3:3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;

யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

இப்படி தேவன் ஒருவரையே தொழுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வஞ்சகமாக திரித்துவத்தை வணங்க வேண்டும் என்கிறா புரட்டலை கொண்டு வந்து கோடா கோடி ஜனங்களின் விசுவாசத்தை கெடுத்துவைத்தவர் தான் அத்நாஷியஸ்!!

தொடரும்................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard