//சகோ. சில்சாம் அவர்களே சகோ. கோவைபெரியன் அவர்களின் இராணுவசேவையை தூஷிக்க வேண்டாம். இராணுவ சேவை என்பது நாட்டுக்கான சேவைதான். அவர் 20 வருடங்கள் பணியாற்றியிருப்பதால் அது நிச்சியமாகவே பாராட்டக்குரியதாகும். அதனை கிண்டல் செய்து அவமதிக்க வேண்டாமே!
சகோ. கோவைபெரியன்ஸ் அவர்களே எனது வார்த்தைகளினால் உங்களை புண்படுத்திவிட்டேன். உண்மையில் நான் அப்படி எழுதுவது கிடையாது. பல பதிவுகளை வாசித்த பாதிப்பினால்தான் அப்படி எழுதினேன். உண்மையாவே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி தங்களின் தளத்திற்கு வரமாட்டேன். இனி உங்களுடன் எந்த சம்பந்தமும் எனக்கு கிடையாது.//
உங்களது நேர்மையை பாராட்டுகிறேன் நண்பரே!! உண்மையிலேயே நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர் தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்!! நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, புரிந்துக்கொள்ளுதலே சிறந்த மருந்தாகும்!! உங்களை குறித்து எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது, நான் தாக்கியது உங்களை தனிப்பட்ட முறையில் இல்லை என்பது என் மனம் அறியும், ஏனென்றால் தனிப்பட்ட மனிதனை தாக்கி என்ன பயன் இருக்கிறது!! மற்றோரு தேசத்தில் இருந்தாலும் ராணுவத்தின் மதிப்பையும் அவர்களின் தியாகங்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், நன்றி!! நான் உங்களை எந்த பதிவாகிலும் ராணுவத்தை சேர்ந்தவர் என்கிற தொனியில் மிரட்டியது உண்டா என்பதை மாத்திரம் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்!! என் மோதல் கருத்தின்படி மாத்திரமே!! நீங்கள் என் பழைய பதிவுகளை எல்லாம் பார்த்திருக்கலாம், எனக்கு தனிப்பட்ட மனித தக்குதலில் நம்பிக்கை கிடையாது, சில்சாம் இந்த தளத்தில் புகும் மட்டும்!! சில்சாமின் பதிவுகளின் பாதிப்பு அதன் பின் இந்த தளத்திலும் வெளிப்பட துவங்கியது!!
ஆனாலும் ராணுவ வீரர்களை சாராய வியாபாரி என்று எழுதிய சில்சாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்!! இவர் ஏதோ எப்படியோ எல்லாம் சொல்லி தான் சொன்னது அது கிடையாது என்று எத்துனை தான் கலர் கலராக எழுதினாலும் செல்லாது!! எபி, கோல்டா போன்றோர் எல்லாம் சில்சாமின் மறு அவதாரங்களே!! கொல்வின் அவர்கள் விவாதத்தை விட்டு ஒதுங்கியிருக்க விரும்புகிறார் என்பதை தடுக்கும் வேகம் எபி யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது!! அது மாத்திரம் இல்லை, என்பதை மாத்திரம் இப்பொழுது சொல்லிக்கொள்கிறேன், என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது, எபியும் சில்சாமும் ஒரே ஆள் என்பதற்கு!!
கொல்வின் அவர்கள் இந்த தளத்திற்கு வாருங்கள் என்றும் சொல்ல மாட்டேன், வர கூடாது என்றும் சொல்ல மாட்டேன்!! ஆனாலும் அவரின் பன்பிற்காகவும், அவரின் புரிந்துக்கொள்ளுதலுக்காகவும், மீண்டும் ஒரு முறை சொல்ல விரும்புகிறேன், இது கொல்வின் அவர்களுக்கு மாத்திரமே!!
கொல்வின் அவர்களே, ரஸ்ஸலின் கருத்துக்களை சொல்லுவதினால் ஒருவன் ரஸ்ஸலின் சீஷனாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை!! மேலும் தற்போது வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் வாட்ச் டவர் பத்திரிக்கை "யெகோவா சாட்சிகள்" வெளியீடு!! இதற்கும் வேத மாணாக்களுக்கும் சம்பந்தமே கிடையாது!! இப்பவும் சொல்லுகிறேன், நான் யெகோவா சாட்சிகளும் கிடையாது, ரஸ்ஸலின் சீஷனோ, அல்லது வேத மாணவனோ கிடையாது!! நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் மேல் விட்டு விடுகிறேன்!!