kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெட்டியாக சுவிசேஷம் அறிவிக்கும் ஜானிற்கான பதில்!!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வெட்டியாக சுவிசேஷம் அறிவிக்கும் ஜானிற்கான பதில்!!!


ஜான்:

//நரகத்தை குறித்தான பதிவுகளை நாங்கள் இந்த தளத்தில் பதிந்திருக்கிறோமே!! மாம்சமான யாவரும் தேவனின் இரட்சிப்பை காண்பார்கள் என்றால் அதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை!! 400 வருடங்கள் என்ன 4000 முன்னே வாழ்ந்தவர்கள் கூட இன்று பிரபலமாக போதிக்கப்பட்டு மிரட்டப்படும் அந்த "நரகம்" என்கிற கற்பனையான இடத்திற்கு போக முடியாது,//

இது பிசாசின் போதனை தான். இது உண்மை என்றால் பின் லேடனும் , ஹிட்லரும் முடிவிலே ரட்சிக்கபடுவார்கள் நான் எதற்கு வெட்டியாக சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்? பிசாசு இதன் பின்னே இருப்பது தெளிவாய் தெரிகிறது.

பின் லேடனும், ஹிட்லரும் இரட்சிக்கப்படும்பட்யே கிறிஸ்து இரத்தம் சிந்தியிருக்கிறார்!! நீங்கள் வெட்டியாக சுவிசேஷம் சொல்லுகிறீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள்!! நீங்கள் சுவிசேஷம் சொல்லுவதால் அல்ல கிறிஸ்து இரத்தம் சிந்துவதினால் தான் மனிதர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள்!! "நான் சுவிசேஷம் சொல்லுகிறேன்" என்கிற மேட்டிமை உங்களிடத்தில் இருக்கிறது, நீங்கள் ஏற்கனவே பிசாசிற்கு அடிமையாகி விட்டீர்கள் ஜான் அவர்களே!! நிச்சயமாக உங்களின் வெட்டியான சுவிசேஷத்தை கேட்பதால் அல்ல தேவனின் சித்தத்தின்படியே அனைவரும் இரட்சிக்கப்படுகிறார்கள்!!

மாம்சமான யாவரும் என் இரட்சிப்பை காண்பார்கள் (பின் லேடனும் ஹிட்லரும், இடி அமீன்களும் மாம்சமானவர்கள் தான்)!! ஹிட்லரையும் பின்லேடனையும் விடுங்கள், அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார், நீங்கள் உங்கள் தெருவில் இருப்பவர்கள் அனைவருக்கும் சுவிசேஷம் சொல்லிவிட்டீர்களா!! வீம்பிற்காக பதில் தரக்கூடாது, தேவனுக்கு பயந்து பதில் தாருங்கள்!! எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதற்கான நேரடியான வசனங்களை தருகிறேன், கேளுங்கள், நீங்கள் இனிமேலும் "வெட்டியாக சுவிசேஷம்" சொல்லி திரியவேண்டாம்!!

மாற்கு 10:26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள். 27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

முதலில் உங்களிடம் இருக்கும் மேட்டிமையை களைந்து "வெட்டியான சுவிசேஷத்தை" சொல்லுவதை நிறுத்துங்கள், ஏனென்றால் இரட்சிக்கப்படவைப்பது, உங்களுடைய வேளை அல்ல, அது மனுஷரால் (ஜான் போன்றோர்களால்) கூடாதது தான், தேவனால் இது கூடாததல்ல!! இப்ப சொல்லுங்கள் ஜான் யார் பிசாசின் போதனையில் இருக்கிறார்கள்!!

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும்,

நீங்கள் வெட்டியாக சொல்லுகிறீர்களோ இல்லையோ, ஆனால் தேவன் தருகிற இரட்சிப்பில் பின் லேடனும், ஹிட்லரும் இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால் உங்களுக்கு ஏன் முறுமுறுப்பு!! உங்களுக்கு ஏன் போறாமை!! நீங்கள் பாவமே செய்யாத சுத்தமான பரிசுத்தவானோ!! நீங்கள் யார் பின் லேடனையும் ஹிட்லரையும் நிய்யாம் தீர்க்க!! முதலில் உங்களின் பாவங்களை பார்த்துக்கொள்ளுங்கள், பிறகு அடுத்தவர்களை குற்றம் செலுத்தலாம்!! தேவனால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்பது தான் லூசிஃபரின் போதனையே தவிர, நாங்கள் சொல்லுவது வசனத்தின் அடிபடையில் தான்!!

லூக்கா 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

இது அவராலே தான், நீங்கள் வெட்டியாக சுவிசேஷம் சொல்லுவதால் அல்ல திரு ஜான் அவர்களே!! தயவு செய்து நீங்கள் தான் உங்கள் சபையையோ, உங்கள் வீட்டையோ, உங்கள் தெருவையோ, ஏன் உங்கள் பட்டனத்தையோ சுவிசேஷம் சொல்லி இரட்சிக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்!! அது தேவனின் சித்தம், உங்கள் முறுமுறுப்பு எதற்கும் உதவாது!!

இயேசு கிறிஸ்துவின் நாளில் (நியாயத்தீர்ப்பு) பின்லேடனும் சரி ஹிட்லரும் சரி அவர்களை போன்றோரும் சரி, இரட்சிக்கப்படுவார்கள் என்பது தான் பவுலும் சொல்லியிருக்கிறார், அது பிசாசின் போதனையோ!!

I கொரிந்தியர் 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

அவரே (தேவன்) சித்தமாக இருக்கிறார் என்று சொன்ன பவுல் பிசாசின் உபதேசம் சொன்னாரா!! நாங்கள் இந்த வசங்களை மேற்கோள் காட்டுவது உங்களுக்கு பிசாசின் போதனையோ!! தேவனின் சித்தம் நிறைவேறாமல் தடுக்கும் உங்கள் போன்றோரின் போதனைகள் தான் பிசாசின் போதனையாக இருக்க முடியுமே தவிர வேறு என்ன!! தேவ சித்தம் நிறைவேறியே தீரும், நீங்கள் வெட்டியாக சுவிசேஷம் சொல்லுகிறீர்களோ, இல்லையோ!!

தீத்து 2:11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,

முதலில் இரட்சிப்பு என்றால் என்னவென்று தெரிந்துக்கொண்டு பிறகு உங்களின் வெட்டியான சுவிசேஷத்தை தொடரலாம்!! தயவு செய்து பிசாசை போன்று மேன்மை பாராட்டி, தேவனின் சித்தத்தை அற்பமென்று சொல்லி, அதை பிசாசின் போதனை என்று சொல்லாமல் இருங்கள்!! உங்களை போன்றோரின் தேவ தூஷனம் ஏற்கனவே ஒரு தேவனை மூன்று தேவனாகவும், மூன்று பேரை ஒரே தேவனாகவும் என்று இருக்கிறது, இனி அவரின் இரட்சிப்பை குறித்தான சித்தத்தை எழுதினால் அது பிசாசின் போதனை என்று சொல்லுகிறீர்கள்!! யார் பிசாசின் போதனையில் இருக்கிறார்கள் என்று நிதானித்து எழுதுங்கள்!!

தொடரும்.............


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: வெட்டியாக சுவிசேஷம் அறிவிக்கும் ஜானிற்கான பதில்!!!


//இது பிசாசின் போதனை தான். இது உண்மை என்றால் பின் லேடனும் , ஹிட்லரும் முடிவிலே ரட்சிக்கபடுவார்கள் நான் எதற்கு வெட்டியாக சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்? பிசாசு இதன் பின்னே இருப்பது தெளிவாய் தெரிகிறது.

* அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினைஅடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும்போவார்கள் என்றார்.(மத்தேயு 25:46)

* அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் (மத்தேயு 25:41)

* குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார். (யோவான் 3:36)//

நித்திய ஆக்கினை, இடதுப்பக்கம் வலப்பக்கம் நிற்பவர்கள், அக்கினி, எல்லாம் விரிவாக ஏற்கனவே இந்த தளத்தில் விவாதைக்கப்பட்டாகிவிட்டது!! உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாசிக்கலாம், வாசிக்காமலும் இருக்கலாம், ஆனால் இந்த இடத்தில் இதற்கு நான் பதில் எழுத விரும்பவில்லை என்பதை தெரியப்படுத்துகிறேன்!! உங்களுக்கு, மரணம், இரட்சிப்பு என்னவென்று தெரிந்தால் சொல்லலாம், பாரம்பரியமாக சொல்லுவதையே தான் நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், கண்களில் விளக்கென்னை ஊற்றிக்கொண்டு, நித்திய ஆக்கினை, அக்கினி போன்றவற்றை தேடி தேவனின் திட்டமான எல்லாரையும் இரட்சிப்பேன் என்பதிலிருந்து சிதற செய்கிறீர்கள், பிசாசின் தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை!! இரட்சிப்பை குறித்து இத்துனை வசனங்கள் இருக்கும் போது, அடுத்தவர்கள் மரணத்திற்கும் அக்கினிக்கும் செல்ல வேண்டும் என்பதிலிருந்து நீங்கள் எத்தகை ஒரு போதனையில் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது!! நீங்கள் காண்பித்த அனைத்து வசனங்களுக்கு இதோ இந்த ஒரு வசனம் பதிலாக இருக்கிறது, முடிந்தால் புரிந்துக்கொள்ளுங்கள்:

யோவான் 3:17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

//நரகம் இல்லை என்றால் இரண்டாம் மரணம் எதற்கு?

* பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

* மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (வெளி 20:10)

* ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15)//

இரண்டாம் மரணம் எல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது, ஏனென்றால் இரட்சிக்கப்படுவதே நீங்கள் சொல்லும் சுவிசேஷத்தினால் தான் என்பது உங்களின் மேட்டிமை!! நான் பதில் தராதது உங்கள் தலைவரின் அறியாமையை என்னி தானே அன்றி ஏதோ நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மலைத்து போய் உங்களின் வேத ஞானத்திற்கு பயந்து போய் கிடையாது என்பதை உங்கள் மூலமாக உங்கள் தலைவருக்கு தெரியப்படுத்துகிறேன்!! ஒன்று இரண்டு ரவுண்ட் என்ன, இன்னும் எத்துனை முறை சொன்னாலும் உங்களின் வெட்டி சுவிசேஷம் அல்ல மாறாக நாங்கள் நம்பியிருக்கும் தேவ வசனமே ஜெயிக்கும் என்பது என் விசுவாசம்!!

வெளி 21.8 வசனத்தை எழுதும் முன் வெளி. 21:4ஐ வாசித்து பிறகு எழுதுங்கள்!! இனி மரணம் இல்லை என்று சொன்ன பிறகு, இரண்டாம் மரணம் என்று எழுதியிருப்பதை சிந்தித்து பாருங்கள், பிறகு உங்கள் தெளிவை பதியுங்கள் அதன் பின் பதில் எழுதுகிறேன்!!

வெளி 20:10ல்  பிசாசும் மிருகமும் கள்ளத்தீர்கதரிசியும் அக்கினி கடலில் (இது ஆங்கிளத்தில் அக்கினி ஏறி என்று தான் இருக்கிறது) தள்ளப்பட்டதாக தான் தெளிவாக எழுதியிருக்கிறதே, நீங்கள் ஏன் மனிதர்கள் தான் அந்த இடத்திற்கு போவார்கள் என்று உங்களின் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள்!!

வெளி. 20:15. சாத்தான் ஒருவனே அந்த ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாதவனாக காணப்படுகிறான் ஏனென்றால் அவன் ஒருவனே நியாயம் தீர்க்கப்பட்டிருக்கிறான் (யோவான் 16:11), அவன் ஒருவனை தவிர அந்த இரண்டாம் மரணம் என்கிற அழிவிற்குள் யாராவது போகிறார்களென்றால் அது நீங்கள் வைத்திருக்கும் குப்பையான சிந்தைகள் தான்!!

//ஆயிரம் வருட அரசாட்சியில் எல்லாருமா பங்கு பெறுவார்கள்?

* அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:4-6)//

தயவு செய்து இந்த வசனத்தை நிதானமாக வாசியுங்கள்!! மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை என்பது எப்படி முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும்!! உயிரடையவில்லை என்பது உயிர்த்தெழுதல் என்று வசனம் சொல்லியிருக்கிறது!! இது சேர்த்துக்கொள்ளப்பட்ட பகுதி என்று சொன்னால் நான் ரஸ்ஸலை சொல்லுகிறேன் என்று சொல்லுவீர்கள்!! உங்கள் வேதத்தை அல்லது வேறு பல ஆங்கிள வேதங்களை எடுத்து, சிலவற்றில் இந்த வசனமான, "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை" என்பதை அடைப்பு குறிப்புகளுக்குள்ளும் அல்லது சில வேதாகமங்களில் இந்த வசனமே இல்லாததை பாருங்கள்!! வசனத்தை அடிக்கோடிட்டு காண்பிப்பது பெரிய விஷயம் இல்லை ஜான் அவர்களே, வசனம் என்ன சொல்லுகிறது என்பது தான் விஷயம்!! உயிரடையாததை உயிர்த்தெழுதல் என்று உங்களை போன்றோர், அடிக்கோடிட்டு காண்பித்து நம்பினாலும், உயிர்த்தெழுந்தால் தான் உயிர்த்தெழுதல் என்று தேவனின் வசனம் சொல்லும்!! ஆரோக்கியமாக விவாதம் செய்யுங்கள்!!

New International Version, ©2011 (NIV)

4 I saw thrones on which were seated those who had been given authority to judge. And I saw the souls of those who had been beheaded because of their testimony about Jesus and because of the word of God. They[a] had not worshiped the beast or its image and had not received its mark on their foreheads or their hands. They came to life and reigned with Christ a thousand years. 5 (The rest of the dead did not come to life until the thousand years were ended.) This is the first resurrection. 6 Blessed and holy are those who share in the first resurrection. The second death has no power over them, but they will be priests of God and of Christ and will reign with him for a thousand years.

New Living Translation (NLT)

4 Then I saw thrones, and the people sitting on them had been given the authority to judge. And I saw the souls of those who had been beheaded for their testimony about Jesus and for proclaiming the word of God. They had not worshiped the beast or his statue, nor accepted his mark on their forehead or their hands. They all came to life again, and they reigned with Christ for a thousand years. 5 This is the first resurrection. (The rest of the dead did not come back to life until the thousand years had ended.) 6 Blessed and holy are those who share in the first resurrection. For them the second death holds no power, but they will be priests of God and of Christ and will reign with him a thousand years.

வசனங்களை நிதானமாக வாசித்து பழகுங்கள் ஜான் அவர்களே, உயிரடையாமல் இருப்பது என்பது உயிர்த்தெழுதல் ஆகாது!! இப்பொழுது அந்த அடைப்புகுறிக்குள் இருக்கும் வார்த்தைகளை நீக்கி விட்டு வசனங்களை வாசியுங்கள், வசனம் தெளிவாக இருக்கும்!!

அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:4-6)

அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்

இது தமிழ் வேதத்திலிருக்கும் வசனம்: (WBTC India Publication Easy to Read Version in Tamil; பரிசுத்த பைபிள்)

அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷங்கள் அரசாண்டார்கள். 5 (மற்ற இறந்த மக்கள் 1000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும்.

வசனங்களை நிதானித்து வாசியுங்கள் ஜான் அவர்களே!!

ஜானின் ஆவேசம்:

//உன்னை விட வேதத்தை கரைத்து குடித்த பண்டிதர்கள் கிறிஸ்தவத்தில் உண்டு (நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல). எல்லா வசனத்தையும் அவன் இப்படி எழுதினான்,  யோவான் 1:1 ல் தேவனுக்கு முன்பாக "ஒரு" போட வேண்டும் என்று பாரம்பரியத்தை போதிப்பது நிங்கள் தான். ரசலுடைய பாரம்பரியத்தை போதிப்பதும் நீங்கள் தான். வேதத்தை நன்கு அறிந்திருந்த நிகொதேமுவை பார்த்து இயேசு சொன்னார் "நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டாய்" அது உங்களுக்கும் பொருந்தும்.//

நீங்கள் வேத பண்டிதர்களை நம்பியிருங்கள், நானோ வசனத்தை நம்பியிருக்கிறேன்!! நான் ரஸ்ஸலை தான் எழுதுகிறேன் என்று வம்படியாக தினிக்க பார்க்கிறீர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை!! மேலும் ரஸ்ஸல் எந்த பாரம்பரியத்தையும் போதிக்கவில்லை என்பது ரஸ்ஸலை குறித்து இத்துனை ஆறாயந்து எழுதும் உங்கள் குழுவினரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்!! இயேசு கிறிஸ்து ஒருவரை தவிர மறுபடியும் பிறந்தவர் (உயிர்த்தெழுந்தவர்) யாரும் இல்லை!! என்னை நியாயம் தீர்க்கும் அதிகாரம் கிறிஸ்து இயேசுவிடம் விட்டு விட்டேன்!! உங்களுக்கு எல்லாம் கிறிஸ்துக்கள் என்று நினைப்பு, உங்களை குறித்து தான், கள்ள கிறிஸ்துக்கள் பலர் தோன்றி தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பார்கள் என்று எழுதியிருக்கிறதே!! நீங்கள் என்னை நியாயம் தீர்த்து எழுதுகிறீர்கள் என்றால் உங்களை கிறிஸ்து என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். கிறிஸ்து ஒருவர் ஏற்கனவே இருப்பதால் நீங்கள் கள்ள கிறிஸ்து என்று சொல்லலாம்!! தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டாய் என்று கிறிஸ்து நிக்கொதேமுவை பார்த்து உங்கள் கூட்டத்தார் மிரட்டுவது போல் மிரட்டவில்லை, மாறாக நிக்கொதேமுவிற்கு மறுமடியும் பிறப்பதை குறித்து சொல்லி தருகிறார், அவ்வளவே!! நியாம தீர்ப்பது உங்களின் வேளை இல்லை திரு ஜான் அவர்களே!!

தொடரும்........................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//திரும்ப திரும்ப எந்தனை தடவை சொல்லுவது? பிதாவும், குமாரனும் ஆள்தத்துவதில் வெவ்வேறு ஆனால் தேவதுவத்திலும், தன்மையிலும், மகிமையிலும் ஒன்று. மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள ஒரே மத்தியஸ்தர் எப்படி மனிதனாகவும் இருக்கமுடியுமோ அதேபோல தேவனாகவும் இருக்கமுடியும்.//

இப்படி எழுதி இரு தேவர்கள் என்கிற புதிய கோட்பாட்டை நீங்கள் தான் முன்வைக்கிறீர்கள்!! தேவத்துவம் என்று எதை சொல்லுகிறீர்கள்? பிதா இருக்கும் அதே மகிமையில் தான் கிறிஸ்து இயேசு இருக்கிறார் என்றால் அவர் ஏன் குமாரன் என்று அழைக்கப்பட வேண்டும்? தேவனின் சாயலிலும் ரூபத்திலும் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான், வேதத்தில் மனிதர்களை கூட தேவன் என்று கிறிஸ்து இயேசுவே ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்!! ஒரே தன்மை உள்ளவர்கள் என்றால் ஏன் ஒருவரை சாவாமையுள்ளவர் என்று வேதம் சொல்லுகிறது, மற்றொருவர் (கிறிஸ்து இயேசு) மரித்தேன் என்று சொல்ல வேண்டும்!! தன்மையில் இருவரும் ஒன்று தான் என்றால் இருவரும் சாவாமையுள்ளவர்களாக தானே இருந்திருக்க வேண்டும்!! இருவரில் ஒருவர் மரித்து உயிர்த்தெழுச்செய்ப்படுகிறார் என்றாலே இருவரும் ஒரே தன்மையில் எப்படி அய்யா இருக்க முடியும்!! மகிமையும் இருவருக்கும் வேறு தான்!!

யோவான் 17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

உலகம் உண்டாகும் முன்னே பிதாவிடத்திலிருந்து கிறிஸ்துவிற்கு கிடைத்த மகிமையை தாரும் என்று பெற்றுக்கொள்ளும் கிறிஸ்து இயேசு, பிதாவினால் தான் மகிமை படுகிறேன் என்று பல வசனங்கள் சொல்லியும் இருவரும் ஒரே மகிமைக்கொண்டவர்கள் என்று நீங்கள் சொல்லுவது அபத்தமாக இருக்கிறது!! கிறிஸ்து தேவன் தான் என்று நான் ஒரு போதும் மறுக்கவில்லை!! தேவன் என்கிற வார்த்தை வேதத்தில் யாருக்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று உங்கள் வேதத்திலிருந்தே எடுத்து பாருங்கள்!! ஆளத்துவம் மாறுகிறது என்றாலே இருவரும் வேறு தான் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்!! பவுல் அத்துனை தெளிவாக எழுதியிருக்கிறார்,

1 கொரிந்தியர் 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

இப்படி எழுதிய பவுலின் இந்த வசனம் தெளிவாக இருக்கிறது, நாங்கள் புரிந்துக்கொண்டிருக்கிறோம், காலம் வரும் போது நீங்களும் புரிந்துக்கொள்வீர்கள்!! இந்த அறிவு எல்லாரிடத்தில் இன்று இல்லை ஆனால் இந்த அறிவை தருவதற்கே ராஜியம் இருக்கிறது!!

//திரும்பத் திரும்ப பிதாவும், இயேசுவும் ஒரே Persoanilities என்று நாங்கள் சொல்லாததை உளறிக்கொண்டு திரியாதீர்கள்.//

திரும்ப திரும்ப சொன்னாலும் பொய் உண்மையாகிவிடாது ஜான் அவர்களே!! முதலில் தேவன் ஒருவர் மூன்று ஆளத்துவங்களா அல்லது மூவர் ஆனால் ஒருவரே என்பது உங்களின் போதனையா? நீங்கள் போதிப்பது திரித்துவமா, திரியேகத்துவமா என்பது நீங்கள் புரிந்துக்கொள்ளும்படியான கேள்வியாகும்!!  ஒரே  Personalities இல்லை என்றால் அவர்கள் இருவர் தானே!! அதை தானே நான் தொடக்க முதல் சொல்லி வருகிறேன்!! ஒரே Personality இல்லை என்கிறீர்கள் ஆனால் ஒரே தன்மையில் இருப்பவர்கள் என்று சொல்லுகிறீர்கள்!! ஒரே Person இல்லை என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் சரியாக சொல்லுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்!! வெவேறு Personalities என்றாலே வெவ்வேறு தன்மை உள்ளவர்கள் தான் என்பதில் எந்த குழப்பமும் இல்லையே!!

தொடரும்...................


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//"சகலமும்" , "உண்டானதெல்லாம்" என்கிற வார்த்தை இந்த வசனங்களை புரட்டர்கள் புரட்டக்கூடாது என்ற நோக்கில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. "உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்?  நீங்கள் தயவு செய்து யோவான் 1:3 விளக்குமாறு கேட்கிறேன்.  "சகலமும்" , "உண்டானதெல்லாம்" போன்ற வார்த்தைகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?//

இதை கேட்கும் முன் இதையும் வாசித்தீர்களென்றால் நல்லது,

1 கொரிந்தியர் 15:27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

சகலத்தையும் தமக்கு கீழ்ப்படுத்தின தேவனுக்கு கிறிஸ்து இயேசு கீழ்ப்பட்டிருப்பார் என்கிறது வேதம்!! நீங்கள் சொல்லுவதை பார்த்தால் இந்த வசனமும் தவறு தானே!! ஏனென்றால் ஏன் ஒருவர் (கிறிஸ்து இயேசு) சகலத்தையும் தனக்கு (கிறிஸ்து இயேசுவுக்கு) கீழ்ப்படுத்தனவருக்கு (தேவன்) கீழ்ப்பட்டிருக்க வேண்டும்!! அய்யா இருவரும் ஒரே தன்மையுள்ளவர்கள் என்று வாதம் செய்கிறீர்கள், ஆனால் ஒருவர் மற்றொருவருக்கு கீழ்ப்பட்டிருப்பார் என்கிறது வேதம்!!

1 கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது (பிதா எப்படி திட்டம் அல்லது சித்தம் கொண்டாரோ), அவர் மூலமாய் (கிறிஸ்துவைக்கொண்டு, அல்லது கிறிஸ்துவால்) நேர்த்தியாக சகலமும் உண்டானது!! ஒரு வசனம் புரியவில்லை என்றால் அதன் இனை வசனம் கண்டிப்பாக புரிய வைக்கும், புரிந்துக்கொள்ள மனதிருந்தால்!! எல்லாவற்றையும் கிறிஸ்து இயேசு உண்டாக்கினார் ஆனால் பிதா சித்தம் கொண்டபடியே!! ஏனென்றால் அவர் சுயமாக எதையும் செய்யாமல் தன் பிதா என்ன சொல்லுகிறாரோ அதையே செய்கிறார் அதையும் நேர்த்தியாக செய்கிறார்!! பூமியில் மாம்சத்தில் வரும் முன் அவர் தேவனின் படைப்பின் திட்டத்தை நிறைவேற்றினால், மாம்சத்தில் வந்து மாம்சத்தில் வந்து தேவன் கொண்டிருக்கும் இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார்!!

//சரி நீங்கள் ரொம்ப அடம் பிடிப்பதால் ஒரு பேச்சுக்கு இயேசு தொடக்கத்தில் (Arche) உருவாக்கப்பட்டவர் என்று வைத்துக்கொண்டு யோவான் எழுதிய மற்ற வசனங்களை சற்று படிப்போம்.//

வசனத்தை சொல்லுவது உங்களுக்கு அடம் பிடிப்பது போன்று இருப்பது உங்களின் பரிதாப நிலையை தான் வெளிப்படுத்துகிறது!! தொடக்கத்தில் என்கிற கிரேக்க வார்த்தையான Arche (ஆர்க்கே)வின் சரியான அர்த்தம்,

G746  arche  ar-khay'
(properly abstract) a commencement, or (concretely) chief (in various applications of order, time, place, or rank).

ஒரு தொடக்கம், தொடக்கம் என்பது நேரத்திற்கு உட்பட்டது தான்!! ஆகவே தான் ஆதி என்று சொல்லப்பட்டிருக்கிறது!! தேவன் அநாதியாக இருப்பவர்!! இதை குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன், ஆனால் உங்கள் தலைவர் அதற்கு அவரின் நாகரீகமான பதிலை தான் தந்தார், நீங்கள் எப்படி ஆதியும், அநாதியும் ஒன்று தான் என்றால் உங்களுக்கும் அதை விளக்கி பிரயோஜனமாக இருக்காது!!

ஆதியில் வார்த்தை இருந்தது!! ஒரு துவக்கத்தில் (ஆதியில்) தான் வார்த்தை (லோகோஸ்) இருந்தது என்று வேதம் சொல்லுவதிலிருந்து ஏன் மாறுபாடாக நீங்கள் யோசிக்க வேன்டும்!! அந்த வார்த்தை தேவனோடு இருந்தது!! இதில் என்ன தவறு இருக்கிறது!! தேவனோடு இருந்தது என்று இருக்கிறதே தவிர தேவனுக்குள் இருந்தது என்றா இருக்கிறது!! தேவனோடு இருந்தது என்று அல்லது வார்த்தை என்று சொல்லப்பட்டிருக்கும் கிறிஸ்து இயேசு தேவனோடு (With God) இருந்தார் தேவனுக்குள் (Not IN God) இல்லை!!


உங்களோடு இருப்பவர்கள் உங்களுக்குள் இருப்பதில்லை, உங்களோடு வேளை பார்ப்பவர்கள் உங்களுக்குள் இருப்பவர்கள் அல்ல!! உங்களோடு இருக்கிறார்கள் என்றால் ஏறக்குறைய ஒரே விதமாக யோசிப்பவர்களாக இருக்கலாம், ஒரே நிரத்தில் இருக்கலாம், ஒரே சாயலில் இருக்கலாம், ஆனால் ஒருவருக்குள் ஒருவராக இருக்க மாட்டார்கள்!! அப்படி தான் கிறிஸ்து தேவன் தான் ஆனால் அவர் அந்த சர்வவல்லமையுள்ள தேவனுடன் (தேவனுக்குள் என்று இல்லை) இருந்தார் என்பதில் என்ன தவறு இருக்கிறது!!

The Greek word used for WAS is En which is an extension of greek word Eimi which is "the first person singular present indicative;". WAS is used because naturally John was not present when the Word WAS!! Beginning is not Eternity!! and So the usage,

In the beginning WAS the WORD does not mean the WORD WAS From Eternity, which of course the Father was!! and Eternity is not time bound as beginning is!!

//ச‌ரி வார்த்தை தேவனோடு இருந்த‌து, வார்த்தை தேவ‌னாய் இருந்த‌து" என்றால் என்ன‌ அர்த்தம்?//

வார்த்தை தேவனோடு இருந்தது என்பதில் எந்த குழப்பமும் கிடையாது, ஒரு வேளை தேவனுக்குள் இருந்தது என்றால் யோசித்திருக்கலாம்!! வார்த்தை தேவனாய் இருந்தது, என்பதிலும் எந்த வித்தியாசமும் இல்லையே!! வார்த்தை அந்த தேவனாக இருந்தது என்று இருந்தால் குழப்பமாக இருந்திருக்கலாம்!! நீங்களோ எப்படியாவது தேவனும் கிறிஸ்துவும், ஒன்று தான் என்பதை நிரூபிக்க படாதப்பாடு பட்டுக்கொண்டு இருக்கும் வசனங்களை குழைத்து பார்க்கிறீர்கள், ஆனால் என்ன பிரயோஜனம்!!

//இது நல்ல காமடி! யாரந்த அறிஞர்கள்? கோவை பெரையன்சும், தேனீர் பூவுமா?//

உங்கள் சபையில் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் வரும் ஞானத்தை என்னவென்று போதிப்பீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் அந்த ஞானம் என்பது கிறிஸ்துவை குறிக்கும் சொல்லாக இருக்கிறது என்பது என் புரிந்துக்கொள்ளுதல்!! உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் பரவாயில்லை!! உங்கள் போதனைகளை தினிக்க ஏன் தான் இப்படி ஒரு வசனம் இருக்கிறது என்று கூட கேட்பீர்கள் போல்!!

நீதிமொழிகள் 8:22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். 23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

இது எல்லாம் உங்களுக்கு வேண்டுமென்றால் வாடிக்கையான வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இதை எல்லாம் பார்த்ததினால் தான் கிறிஸ்து யார் என்றும் தேவன் யார் என்றும், அபிஷேகம் செய்தவர் யார் என்றும், அபிஷேகம் செய்யப்பட்டவர் யார் என்றும் அறிந்துக்கொண்டேன்!!

ஆனாலும் நீங்கள் திருத்துவத்தில் இரண்டு பேரை நிலைநாட்டவே இத்துனை போராட்டம் போராடுகிறீர்களே, மூன்றாம் "நபரை" குறித்து என்ன சொல்லப்போகிறீர்களோ!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard