/////சகோ. cad sahayam பதிவுகள் தேவையில்லாத குப்பைகள். சுயமாக எழுதாமல் அனைத்தும் வாசித்தவையாகவும் Copy & Paste செய்யப்பட்டவையாகவுமே இருக்கின்றன. இவர் வேகமாக பதிவிடுவால் இவரின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்மஸ் குறித்த இவரின் பதிவுகள் சகோ. தேனீர் பூக்கள் facebook இல் பதித்தவையாகும் . அங்கு இதற்கான விவாதங்கள் டிசம்பரில் நடந்து முடிந்துபோனது இதர பதிவுகள் இயேசு, பரிசுத்த ஆவி குறித்த பதிவுகளும் இணையத்தில் ஏற்கனவே உள்ளவைதான்
ANS:::::
www.biblegreatmystery.com . it is my own website. It is my won writting. more ans pls call;9750114410
colvin bro-க்கு
bible verses தேவையில்லாத குப்பைகளா?
Copy & Paste செய்யப்பட்டவைளா?
see:www.bibleloversassembly.com
நான் CAD SAHAYAM எனக்கும் ஆதாம் அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது , உங்களின் கணிப்பு தற்போது தவறிவிட்டது மன்னிக்கவும் ...........//////////////////
Jhon says
///சகோ சில்சாமிற்கு இவரின் பதிவுகளை தற்காலிகமாக தடுத்தால் என்ன? அத்துடன் ஆதமின் பதிவுகளும் பிரயோஜனமற்றவை. தற்காலிகாக அவரின் பதிவுகளையும் நிறுத்தலாம்//////.
Adam saya
///////ஒரு விருந்தாளிக்கு தங்களின் வரவேற்ப்பு அற்புதம் அண்ணா
என் சந்தேகங்களை தங்களிடம் கேட்டது தவறா?
அல்லது நான் கேட்ட விதம் தவறா?
வேதத்தை பற்றி நான் அறிந்து கொள்ள ௬டதா?
அல்லது தங்களிடம் கேள்விகேட்கும் தகுதி எனக்கு இல்லையா???
மறை பொருளை உணர்த்த வேறு வழி இருக்குதா?
கேள்விஎனாலே ஞானம் பிறக்கும் என்று நான் படித்திருக்கிறேன்
மட்றபடி தங்களின் விருப்பம்//////////
__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11
ஹையோ பாவம் காப்பத்துங்களேன்
-- Edited by Guru on Tuesday 15th of March 2011 07:32:52 AM
அப்போஸ்தலர்களின் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவம் ஒரு புதிய மதமாக மாறியது, அதை தொடங்கி வைத்தவர்கள் கத்தோலிக்கர்கள்!! இந்த கத்தோலிக்கர்கலிடத்திலிருந்து வந்தது தான் இன்று பெந்தகோஸ்தே சபைகளிலிருக்கும் பாஸ்டர் மற்றும் விசுவாசி என்கிற பிரிவு!! அவர்கள் குருக்கள் (Priestly class) என்றும் திருச்சபை விசுவாச மக்கள் (Laity People) என்று இரு பிரிவினர்களாக வைத்து குருக்கள் என்கிற இந்த பிரிவை சார்ந்தவர்கள் மேட்டிமையால் நிறைந்தவர்களாக இருந்தவர்கள் (இப்பொழுது இருக்கும் பெந்தகோஸ்தே பாஸ்டர்கள் போல் தான்)!! அந்த குருக்களுக்கு ஒரு தலைமை இருந்தது (இப்பவும் இருக்கிறது) அவரை போப் என்றும் பாபரசர் என்றும், சொல்லுவாகள், இவர்களின் அதிகாரம் தான் கத்தோலிக்க சபையை நடத்தி வருகிறது, இவர்கள் சொல்லுவது வேதத்தை விட உயர்வானது, இவர்கள் கட்டளை தான் கத்தோலிக்கத்தில் விசுவாசம் என்று சொல்லுமளவிற்கு இருக்கிறது!!
அந்த காலத்தில் ரோம பேரரசுடன் இருந்துக்கொண்டு இவர்கள் செய்த அட்டூழியத்திற்கு அளவே அல்ல!! கொடுங்கோல் ஆட்சி புரிந்த போப் எல்லாம் உண்டு!! இவர்களுக்கு என்று ஒரு விசுவாசம் இருக்கும், அது வேதத்திற்கு புறம்பாக இருந்த விசுவாசமாகும்!! இப்படி இருக்க, இவர்கள் கொண்டிருந்த கள்ள விசுவாசத்திற்கு விரோதமாக யாராவது சத்தியத்தை பேசினால் அவர்கள் சித்தரவை செய்து கொல்லப்படுவார்கள்!! அதாவது போப் என்ன சொல்லுகிறாரோ அது தான் விசுவாசம், அதற்கு விரோதமானது அது வேதத்திலிருக்கும் வார்த்தைகளாக இருந்தால் கூட அதை பேச கூடாது, அதை விளக்க கூடாது, அதை விவாதிக்க கூடாது, மறுத்தால் மரணத்திற்கு உட்படுத்துவார்கள்!! அப்படி ஒரு அராஜகம் கிறிஸ்தவ மண்டலத்தில் இருந்தது!! இதை எல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டி ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருத்தர் எழுந்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள், மார்ட்டீன் லூத்தர் மாத்திரம் விதிவிளக்கு, ஏனென்றால் அவருக்கென்று ஒரு தனி கூட்டம் இருந்தது!! இப்பொழுது போபிற்கு அந்த வலிமை இல்லை, அவருக்கு கத்தோலிக்கர்களின் விசுவாசத்தை எதிர்த்து எழுதுவோர் மேல் எந்த ஒரு உரிமையும் இல்லாமல் போய் விட்டது,
கத்தோலிக்க கிறிஸ்தவம் தவறு என்று வெளியேறின பலர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் அடிப்படை குனாதிசியங்களையும் கோட்பாடுகளையும் (திரித்துவம், ஆத்துமா சாகாது, நரகம் போன்றவை) பிரிந்தப்பின்னும் சேர்த்துக்கொண்டார்கள்!! மார்ட்டீன் லூத்தர் துவக்கிய ப்ரொடஸ்டண்ட் சபைகளாக இருந்தாலும் சரி இன்று புற்றீசலை போல் தெருவிற்கு 20 சபைகளாக பிரிந்திருக்கும் பெந்தகோஸ்தே சபைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் கத்தோலிக்கர்களின் அந்த குரு, விசுவாசி என்கிற பிரிவையும், அவர்களின் அடிப்படை கோட்பாடுகளையும் விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்!!
இதற்கு எடுத்துக்காட்டாக தான் குரு அவர்களே, ஆதாமின் பதிவுகளை குறித்து கொல்வின் அவர்களும், ஜான் அவர்களும் பதிவு செய்தது!! பதிவுகள் இருந்தால் தானே விவாதமே, பதிவுகள் பிரயோஜனமற்றவைகள் (அவர்கள் பார்வையில்) என்று சொல்லிவிட்டால் பிரச்சனையே இல்லையே!! தடை செய்து விட்டால் பிறகு என்ன!! விவாத மேடை என்று ஒன்று இருந்தால் அதில் விவாதம் தான் செய்ய முடியும், ஒரே ராகத்தில் பாட்டு பாட கூடாது, அதற்கு வேறு இடங்கள் இருக்கிறது!!
அதாவது ஆட தெரியாதவரும் பாடத்தெரியாதவரும் பல நொண்டி சாக்குகள் சொல்லுவார்களாம், "மேடை சரியாக போடவில்லை, வெளிச்சம் போதவில்லை, தப்பான தாளம் போடுகிறீர்கள், சரியாக வாசிக்கவில்லை, பாட்டு ஒழுங்காக இல்லை" என்று!! அப்படி தான் கொல்வின் அவர்களும் ஜான் அவர்களும், பதிவுகள் சரியில்லை, பிரயோஜனமற்றவைகள், பதில் கொடுக்க நேரம் இல்லை போன்றவற்றை சொல்லி வருகிறார்கள்!!
நாம் சத்தியத்தை எழுதுவோம், அவர்களுக்கு அது வெளிச்சமாக இருப்பதால் விலகியே இருக்கட்டுமே!!