kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!


அயர்லாந்து, டப்ளின் நகரை சேர்ந்த, பாதிரியார் ஜேம்ஸ் மக்னமி யை சுற்றி எப்போதும் சிறுவர்கள் கூட்டம் காணப்படும். ஆனால் "திருத்தந்தை," தனது அந்தரங்க நீச்சல் தடாகத்தில் அம்மணமான சிறுவர்களுடன் நிர்வாணமாக குளிப்பதில் நாட்டம் கொண்டவர். நிர்வாணப் பாதரின் சில்மிஷங்களுக்கு அஞ்சி பல சிறுவர்கள் அவர் பக்கம் போவதில்லை.


அந்தப் பகுதி மக்களுக்கு ஜேம்ஸ் பாதரின் லீலைகள் பற்றி தெரியும். ஆனால் தேவாலய நிர்வாகம் எந்த முறைப்பாட்டையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஆதரவற்ற மன நலம் குன்றிய குழந்தைகளின் காப்பகத்தை நடத்திய "பாதர்" எட்மொன்தாஸ் கைகளில் பல இளம் மொட்டுகள் கருகியுள்ளன. 8- 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளை விதம் விதமாக படம் பிடிப்பது அவரது பொழுதுபோக்கு. அந்தப் புகைப்படச் சுருள்களை இங்கிலாந்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றிற்கு அனுப்பி கழுவி எடுப்பார்.

புகைப்படங்களை நகல் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்த ஸ்டூடியோ ஒரு முறை விழிப்படைந்தது. சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட தலைமை பிஷப்புக்கு அறிவித்தது. ஆனாலும் என்ன?

எந்த வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க தேவாலயம் தயாராக இல்லை. முப்பது ஆண்டுகளாக, பாதர் எட்மொண்டுசின் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது.

கத்தோலிக்க திருச்சபை அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இறுதியில் வணக்கத்திற்கு உரிய பாதிரியார் வேஷத்தில் நடமாடும் பாவிகள், விசாரணைக் குழுவால் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

தேவ ஊழியம் செய்த பகுதி மக்களால் மரியாதைக்குரியவர்களாக கருதப்பட்டவர்கள். அண்மையில் வெளியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை அறிக்கைகள் அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

அரசாங்கத்தின் தலையீடு, திருச்சபையின் குறுக்கீடு, "காணாமல்போன" ஆவணங்கள் ஆகிய தடைகளைக் கடந்து அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கென ஆயிரக்கணக்கான சாட்சியங்களை விசாரணைக் குழு பதிவு செய்திருந்தது. அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்த பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்தனர். அறிக்கையில் காணப்படும் உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன.


அயர்லாந்து அரசும், கத்தோலிக்க அதிகார மையமும், ஏன் வத்திக்கான் கூட இவற்றை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தன. கத்தோலிக்க மத நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்பதற்காக, வெண்ணிற ஆடைக்குள் ஒளிந்திருந்த காமப் பிசாசுகளை பாதுகாத்து வந்துள்ளன.

பல தசாப்தங்களாக மூடி மறைக்கப்பட்ட வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் வாய்மூடி மௌனிகளாக சகித்துக் கொண்டார்கள். உண்மை அறியும் அறிக்கை கூட 1950 தொடக்கம் 2004 வரையிலான முறைப்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.


மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் விதிவிலக்குகள் அல்ல. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஆயிரக்கணக்கான துஷ்பிரயோகங்களில் ஒன்று..

கன்னியாஸ்திரிகள் நடத்திய பாடசாலைகளில் கூட சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லை. .

மாணவர்களை அடித்து துன்புறுத்தியதால் பல சிறுவர்கள் பாடசாலை செல்லவே அஞ்சி நடுங்கினார்கள். இதிலே கொடுமை என்னவென்றால், துஷ்பிரயோகத்திற்கும், துன்புறுத்தலுக்கும் ஆளான சிறுவர்கள் ஒன்றில் அனாதைகளாக இருப்பர். அல்லது ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்திருப்பர்.

அயர்லாந்தில் கத்தோலிக்க மத நிறுவனம் ஒரு மூடுமந்திரம். .

உள்ளே என்ன நடக்கின்றது என்பது வெளி உலகத்திற்கு தெரியாது. தெரிந்தவர்கள் வெளியே சொல்வதில்லை. .

சொன்னாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. .

ஏனென்றால் அதிகாரம் எளியவர் கையில் இல்லை. அண்மைக்காலம் வரையில் அயர்லாந்து மக்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். தமது பிள்ளைகளை படிப்பிக்க வசதியற்றவர்கள். அரசாங்கமும் எதுவும் செய்வதில்லை. சமூகத்தில் தோன்றிய வெற்றிடத்தை கத்தோலிக்க மதம் நிரப்பியது. அயர்லாந்தில் ஆனாதை ஆச்சிரமங்கள், இலவச பாடசாலைகள் எல்லாம் கத்தோலிக்க மத நிறுவனங்களாலேயே நடத்தப்பட்டன. ஓரளவு வசதியான பெற்றோரும், கத்தோலிக்க பாடசாலையில் தமது பிள்ளை படிப்பதை பெருமையாக கருதினார்கள்

ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் நிலைமை மாறியது. .

அயர்லாந்துக் குடியரசின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டிப் போட்டது. முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்கள் அயர்லாந்தின் பொருளாதாரத்தை புலிப் பாய்ச்சலில் முன்னேற வைத்தது. ஐரோப்பாவின் ஏழை நாடுகளில் ஒன்றான அயர்லாந்து செல்வந்த நாடாகியது. இதனால் மக்களின் வாழ்க்கை வசதிகளும் உயர்ந்தன.

இரண்டாவதாக தேவாலயத்திற்கு செல்வோர் தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி. இதற்கும் பொருளாதார முன்னேற்றமே முக்கிய காரணம். வசதி,வாய்ப்பு கைவரப் பெற்ற மக்களுக்கு கடவுள் தேவைப்படவில்லை. .

மூன்றாவதாக சட்டத்தின் ஆட்சி. ஐரோப்பிய ஒன்றியம் தனது சட்டங்களை கறாராக நடைமுறைப் படுத்த வேண்டி நின்றது. சமூக விழிப்புணர்வை தூண்டும் தன்னார்வ நிறுவனங்களுக்கு தடை போட முடியவில்லை. ஊடகங்களின் கழுகுக் கண்களுக்கு தேவாலயமும் தப்பவில்லை. இவை எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கபலத்துடன் நடந்தன.

அயர்லாந்தில் விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் இருந்து, கத்தோலிக்க மதத்தின் அரசியல் செல்வாக்கு அதிகம். பிரிட்டனை சேர்ந்த ஆங்கிலேய - புரட்டஸ்தாந்து ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக கத்தோலிக்க மத நிறுவனங்களும் போராடின. அயர்லாந்து குடியரசு உருவான பிற்பாடு, கத்தோலிக்க மதம் அரச அங்கீகாரம் பெற்றது. இதனால் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதன் அதிகாரம் கோலோச்சுகின்றது..

அரசாங்கம், அரசு அதிகாரிகள், மதகுருக்கள் இவர்களுக்கிடையிலான நல்லிணக்கம் முறைகேடுகளில் ஈடுபட்ட பாதிரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்தது.

ஆளும் வர்க்கத்திற்கு மத நிறுவனத்தின் ஆதரவு தேவைப்பட்டது. மத நிறுவனத்தை வழி நடத்திய பிஷப்புகளுக்கோ கத்தோலிக்க திருச்சபையின் பெயர் கெடக் கூடாது என்பதைப் பற்றி மட்டுமே அக்கறை. அவர்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டவில்லை. அப்பாவிகள் தண்டிக்கபட்டனர். குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டனர். எல்லாம் கர்த்தரின் பெயரால் நடந்தது. வத்திக்கானில் இருக்கும் பாபரசருக்கும் முறைகேடுகள் பற்றி நன்கு தெரியும்..

ஆனால் அவருக்கும் கத்தோலிக்க மதத்தை பற்றி யாரும் குறை கூறக் கூடாது என்பது மட்டுமே கவலை..

அயர்லாந்தில் வெண்ணிற ஆடைக்குள் மறைந்திருந்த பாதிரிகள் என்ற குற்றவாளிகளை இனங்காட்டிய போது மண்டபத்தில் குழுமி இருந்த மக்கள் சீற்றமுற்றனர்.

இவ்வளவும் நடந்தும் வாளாவிருந்த கத்தோலிக்க மத தலைமைப்பீடத்தின் செருக்கையும், அரசின் கையாலாகாத் தனத்தையும் கண்டனம் செய்தனர். தற்போது இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்காத படி அமுக்குவதற்கே கத்தோலிக்க நிறுவனம் முயற்சிக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கி அவர்களின் வாயை அடைக்க முயற்சிக்கின்றது.

மத நிறுவனங்களின் பாலியல் துஷ்பிரயோகம் அயர்லாந்திற்கே பிரத்தியேகமான ஒன்றல்ல. அமெரிக்காவிலும், வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்தவை.

மத்திய கால ஐரோப்பா கத்தோலிக்க மதத்தின் ஆட்சியின் கீழ் இருந்த காலம் ஒன்றுண்டு. அப்போது ஒவ்வொரு நகரிலும் உள்ள விபச்சார விடுதிகளை கத்தோலிக்க தேவாலயமே நடத்திக் கொண்டிருந்தது. விபச்சார வியாபாரத்தால் அதிக வருமானம் வருகிறதென்றால், அதையும் விட்டு வைப்பார்களா? இவை எல்லாம் ஐரோப்பிய சரித்திரத்தில் காணப்படும் சான்றுகள்.

THANKS TO:
http://kalaiy.blogspot.com/2010/03/blog-post_17.html


விசாரணைக்குழுவின் முன்பு சாட்சியமளித்த பாதர் எட்மாண்டுஸ் "தான் ஆண் சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததால், பெண்களின் உடல் உறுப்புகளை பற்றிய ஆர்வ மேலீட்டினால் அப்படி நடந்து கொண்டதாக..." காரணம் கூறினார். அயர்லாந்தை சேர்ந்த கத்தோலிக்க ஜேம்ஸ், எட்மொன்தாஸ் ஆகியோர் அந்த வட்டாரத்திலேயே மிகப் பிரபலமானவர்கள்.

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard