kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்புள்ள பிதாவுக்கு


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
அன்புள்ள பிதாவுக்கு


அன்புள்ள பிதாவுக்கு ,

வணக்கங்கள் பல ,....

தற்போது பூமியின் நிலைமை மிகவும் மோசமாகிகொண்டிருக்கிறது , எனவே தங்கள் குமாரனைதற்போது

இங்கே அனுப்பவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்,

ஏன் என்றால் 2011 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கொஞ்சமாவது ,

இரக்கம் உள்ளவனாக இருந்தான், ஆனால் தற்போது அவன் அந்த லூசிபரை விட பல மடங்கு

தன்னை பெருமையாக நினைக்க தொடங்கிவிட்டான்,

அந்த காலத்தில் ஒரு லூசிபர் மட்டும் தான், ஆனால் இங்கே சபைக்கு ஒரு லுசிபராவது

இருக்கிரார்கள் எனவே தங்களின் குமாரனை  பத்திரமாக வைத்துக்கொள்ளவும்

அது போக நான் தான் பிதாவின் குமாரன் என்று அவருக்கு பல போட்டிகள்

நீங்கள் வரும்போது உங்களுக்கே குழப்பம் வந்தாலும்  ஆச்சரியப்படுவதிற்கில்லை ,

மேலும் தாங்கள் வரும்போது ஒரு அடையாள அட்டையை( IDENTITY CARD) கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறேன் ,

ஏனென்றால் நாங்கள் எங்கள் பிள்ளைகளையே அடையாள அட்டை வைத்தே அடையாளம்

காண்கிறோம் ,

மற்றவை அடுத்த  கடிதத்தில் நன்றி

குரு



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோ.குரு அவர்களே!

கிறிஸ்தவ மண்டலத்தில் காணப்படும் அக்கிரமங்களினிமித்தம் வைராக்கியங்கொண்டு இம்மாதிரி கற்பனை கடிதங்களை பதிக்கிறீர்கள். ஆகிலும் தேவன் சம்பந்தமான விஷயங்களில் நாம் எல்லை மீறிவிடாதபடி மிகவும் ஜாக்கிரதையாயிருப்பது அவசியம். தங்களது பின்வரும் வரியைப் பாருங்கள்.

//எனவே தங்கள் குமாரனைதற்போது


இங்கே அனுப்பவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்,//

சர்வ வல்ல தேவனையே நீங்கள் எச்சரிப்பதாகக் காணப்படுகிறது. இது கற்பனைதான் என்றாலும், தேவனை ஒன்றும் அறியாதவர்போல் இது காட்டுகிறது. எனவே இம்மாதிரி கற்பனைகளை வடிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்.

ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் (கொலோசெயர் 3:16) எனும் வேதவாக்கியத்தின் அடிப்படையிலேயே இவ்வாலோசனையை நான் கூறுவதால் நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

thanks Bro......................

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard