கிறிஸ்தவ மண்டலத்தில் காணப்படும் அக்கிரமங்களினிமித்தம் வைராக்கியங்கொண்டு இம்மாதிரி கற்பனை கடிதங்களை பதிக்கிறீர்கள். ஆகிலும் தேவன் சம்பந்தமான விஷயங்களில் நாம் எல்லை மீறிவிடாதபடி மிகவும் ஜாக்கிரதையாயிருப்பது அவசியம். தங்களது பின்வரும் வரியைப் பாருங்கள். //எனவே தங்கள் குமாரனைதற்போது
இங்கே அனுப்பவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்,//
சர்வ வல்ல தேவனையே நீங்கள் எச்சரிப்பதாகக் காணப்படுகிறது. இது கற்பனைதான் என்றாலும், தேவனை ஒன்றும் அறியாதவர்போல் இது காட்டுகிறது. எனவே இம்மாதிரி கற்பனைகளை வடிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்.
ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள் (கொலோசெயர் 3:16) எனும் வேதவாக்கியத்தின் அடிப்படையிலேயே இவ்வாலோசனையை நான் கூறுவதால் நான் சொல்வதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.