kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொள்வினுக்கான வேதப்பதிவுகளின் விளக்கம்


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
கொள்வினுக்கான வேதப்பதிவுகளின் விளக்கம்


////பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.ரோமர் 9 :5   ////

கிறிஸ்து ''எல்லாவற்றிற்க்கும் மேலானவர்'' என்றும் ஆகையால் அவர் கடவுள் எனவும் இந்த வசனம் சொல்கிறதா?? அல்லது அது கடவுளையும் கிறிஸ்துவையும் வெவ்வேறு தனி ஆட்களாகக் குறிப்பிட்டு கடவுள் ''எல்லாவற்றிற்கும் மேலானவர்'' என்று சொல்கிறதா? ரோமர் 9 :5  இன் எந்த மொழிபெயர்ப்பு ரோமர் 15 :5 ,6  உடன் ஒத்திருக்கிறது? இது கடவுளைக் கிறிஸ்து இயேசுவில் இருந்து முதல் தனிப்படுதுகிறது பின்பு ''நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தும்படி'', வாசகரை ஊக்குவிக்கித்து. ( 2  கொரிந்தியர் 1 :3  - ய்யும்  எபேசியர் 1 :3  ய்யும் பாருங்கள்)  ரோமர் 9  ஆம் அதிகாரத்தில் பின் தொடர்ந்து வருவதைக் கவனியுங்கள். வசனங்கள் 6 -13  -ல் கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றம் மாம்சத்தின் படியான பரம்பரை சுதந்தரிப்பின் பேரில் 
அல்ல, கடவுளுடைய சித்தத்தின் பேரிலேயே சார்ந்து இருக்கிறது என்று காட்டுகிறது. வசனங்கள் 14 -18 -ல் கடவுளே எல்லாருக்கும் மேலானவர் என்ற உண்மையே விளக்கமாக தெரியச் செய்யும்படி, யாத்திராகமம் 9 :16 -ல் பதிவு செய்து உள்ளபடி, பார்வோனுக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. வசனங்கள் 9 -24  -ல் கடவுள்ளுடைய உன்னதத்துவம், ஒரு குயவனையும் அவன் உண்டாக்கும் மண்பாண்டங்களையும் பற்றிய உவமையால் மேலும் விளக்கிக் 
காட்டப்படுகிறது. அப்படியானால் 5 -ல் வசனத்தில் ''கடவுள், எல்லாவற்றிற்கும் மேலானவர்'' என்றென்றும் துதிக்கப்படுவாராக. ஆமென்.''  என்ற கூற்று எவ்வளவு பொருத்தமாக இருக்கு!!!!!
 
புதிய ஏற்பாட்டு இறைமையளுகுரிய புதிய சர்வதேச அகராதி என்பதில் பின்வருமாறு 
சொல்லிருக்கிறது.:- ''ரோமர் 9 :5  விவாதிக்கப்படுகிறது .... இந்தக் கூற்றைக் கிறிஸ்துவுக்கு குறிப்பிடுவது எளிதாயும், மொழிநடை முறைப்படி முற்றிலும் சாத்தியமாகவும் இருக்கும். அப்பொழுது இந்த வசனம், ''எல்லாவற்றிற்கும் மேல் கடவுளாய் இருக்கிற கிறிஸ்து, என்றென்றும் துதிக்கப்படுவாராக. ஆமென்.'' என வாசிக்கப் படும்:. அவ்வாறு இருந்தாலும் கூட, கிறிஸ்து கடவுளுடன் முழுமையாகச் சரிநிகராக்கப் படுவதில்லை, தெய்வீகப் பண்புடைய ஓர் ஆளென மாத்திரமே விவரிக்கப்படுவார்.  ஏனெனில் தியாஸ் என்ற இந்தச் சொல் சுட்டிடைச் சொல்லைக் கொண்டில்லை .....  அந்தக் கூற்று கடவுளை நோக்கிக் கூறப்படும் புகழ்கூற்று என்பதே அதிக உண்மையாய் இருக்கக் கூடிய விளக்கம் ஆகும்.'' --  ( கிராண்ட் ராப் பித்மிச்  1976 ) ஜெர்மன் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது. புத்தகம் 2 , பக்கம் 80 .    


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

கொல்வினின் வேதப்பதிவுகளுக்கான விளக்கங்கள் இதோ .........

//இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று சொல்லுபவர்கள் கள்ள உபதேசக்குழுக்கள்.தாம். இந்த வசனங்கள் எதனைக் எடுத்துக் காட்டுகின்றது//

//ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்(அப் 20:28)//

கொல்வினின் கூற்றுப்படி பைபளில் உள்ள ஒரு சில வசனங்கள் கிறிஸ்து தான் , தொழத்தக்க தெய்வம் என்று ஒருதளப்பட்சமாக்வும், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்காமலும் ஒரு தீர்மானத்துக்கு வருவது முறையாகாது. காரணம் KJ  என்ற மொழிபெயர்ப்பில் இருக்கும் வேதவசனங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வருவதற்கு பிரிதான வேதத்தில் இருக்கும் மொழிபெயர்பையும் ஒப்பிட்டு பார்ப்பது மிக முக்கியம். அந்த வகையில் ஒரு வசனத்தின் வேதப்பதிவுகள் அது சொன்ன காலம், சந்தர்ப்பம், சுழலுக்கு ஏற்றாற்போல வேத வசனம் இருக்கென்றும் பார்க்கவேண்டும். அப்படி என்றால் அப் 20 :28 வசனத்தின் விளக்கத்தை வேறு பைபல் மொழிபெயர்ப்புடன் மற்றும்  KJ மொழிபெயர்ப்பின் அதே அதிகாரத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை அதன் மையப் பொருள் என்னவென்று பார்க்கவேண்டும். 

த்தோலிக்க லத்தீன் மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கின்றது:- ''உங்கள் மட்டிலும் சர்வேசுரன் தம்முடைய இரத்ததினால் தமக்குச் சொந்தமாக்கின தமது திருச்சபையே ஆளுவதற்கு இஸ்பிரித்துசாந்துவானவர்  உங்களை மேற்றிராணி மார்களாக இஸ்தாபித்து சர்வ மந்தையின்  மட்டிலும் எச்சரிக்கையாய் இருங்கள்'' ( UN ,KJ ,Dy , NAB இதைப் போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் ) எனினும், NW - ல் முன்பகுதி பின்வருமாறு வாசிக்கிறது:- '' தம்முடைய சொந்தமானவரின் (குமாரனின் ) இரத்தம்:''' (TEV -ல் இதைபோன்று இருக்கிறது. 1953 -ல்  அச்சடித்த RS -ல் ''தம்முடைய சொந்த இரத்தத்தால்.''' என்று இருக்கிற போதிலும், அதன் 1971 -இன் பதிப்பில் '''தம்முடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தால்,'' என்றிருக்கிறது. RO மற்றும் DA -ல் வெறுமென '''தம்முடைய சொந்த இரத்தம்,'' என வாசிக்கப்படுகிறது)

எந்த மொழிபெயர்ப்புகள்  1 யோவான்  1 :7 ''
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்''.
ஆகிய  வேதப்பதிவுடன் ஒத்திருக்கிறது ? இங்கே  சொல்லி இருப்பதாவது :- ''அவருடைய (கடவுளுடைய) குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்'.'' ( வெளிப்படுதல் 1 :4 -6 ய்யும் பாருங்கள்)  யோவான் 3:16 ல் கூறப்பட்டுள்ள படி, நாம் ஜிவனடையும் படிக்கு, கடவுள் தம்முடைய ஒரே-பேரான குமாரனை அனுப்பினாரா , அல்லது அவர்தாமே மனிதனாக வந்தாரா ? கடவுளுடயதல்ல, அவருடைய குமாரனின் இரத்தமே ஊற்றப்பட்டது.   அடுத்த வேதப்பதிவு தொடரும் ...


KOLVIN WROTE
////உங்கள் அறிவு அவ்வளவுதான். யெகோவா சாட்சிகள் மற்றும் வேதப்புரட்டர்களும் வேதாகங்களை தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மொழிபெயர்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிடும்ம்முடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தால் என்பது நல்லதொரு கிரேக்கமொழிபெயர்பு பிரதியை மொழி தெரிந்தவர்களுடன் உதவியுடன் பாரும். நீங்கள் சொல்லுவது உண்மையா பொய்யா என்று தெரியும். ////
 
நண்பர் கொல்வின் அவர்களே; தங்களின் கேள்விக்கு இதுவே என் பதில். இதை விட எமது தளத்தில் இதுபோன்ற கேள்விக்கு பல தடவை விவாதம் செய்து அதற்கு பதிலும் கிடைத்து விட்டது. தங்களுக்கு என் பதிலில் திருப்தி இல்லாவிட்டால் மூல மொழியில் இருந்து உதாரணம் கொடுக்கிறேன். கொஞ்சம் பொருத்து இருங்கள். எப்பவோ படித்த புத்தகங்கள் எங்கு இருக்கோ தெரியவில்லை. தேடி எடுத்து பதிவை ஏற்றாற்போல  உங்களுக்கான கேள்விக்கு வேறு விதத்தில் பதில் தருகிறேன்.
எப்படி பதில் கொடுத்தாலும் இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்று தான் சொல்லப்போறிங்க!!!!  இதுக்கு இத்தனை முயற்சி தேவைதானா என்று தான் யோசிக்கிறேன். தொடரும் ::::::::::::




__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

இதோ கொல்வின் கேட்ட தீத்து 2 :13  இக்கான விளக்கம் 
 
/// '' நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது''.////
 
இங்கே எந்த மொழிபெயர்ப்பு  தீத்து 1 :2  இன் வசனத்துடன் ஒத்துப் போகின்றது? 
'' பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும்''  எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வேத எழுத்துக்கள் கடவுளையும் இரட்சகராக குறிப்பிடப்படுகிற போதிலும், இந்த வசனம் அவரையும், கடவுள் யார்மூலம் இரட்சிப்பை ஏற்பாடு செய்கிறாரோ அவரான கிறிஸ்து இயேசுயையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
 
கிறிஸ்து கடவுளும் இரட்சகருமேன்று தீத்து 2 :13  குறிப்பிடுகிறது என்று சிலர் விவாதிக்கின்றனர். கவனத்தைக் கவரும் வகையில், RS, NE, TEV, JB  ஆகியவற்றில் இந்தக் கருத்தை அனுமதிப்பது போல் தோன்றும் முறையில் தீத்து 2 :13  - ஐ மொழிபெயர்த்து இருகின்றனர், ஆனால் 2  தெசலோனிகேயர் 1 :12  - ஐ அவர்கள் மொழிபெயர்த்ததில் இதே விதியை அவர்கள் பின்பற்றி இல்லை. தி கிரீக் டேச்டமென்ட் என்பதில் ஹென்றி அல்பார்ட் பின்வருமாறு கூறுகிறார்.  ''தீத்து 2 :13  - ல், கடவுளையும் கிறிஸ்துவையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் ஒரு மொழிபெயர்ப்பு ) அந்த வாக்கியத்தின் எல்லா இலக்கண தேவைகளையும் திருப்தி செய்கிறதென நான் ஒப்புக் கொள்வேன்::: அமைப்பு முறையிலும் சூழ்நிலைப் பொருத்தத்தின் படியும் அது அதிக சரியாய் இருக்கக் கூடிய, அப்ப்போஸ்தலரின் எழுத்து நடை பாங்குக்கும் அதிகம் ஒத்து இருக்கிறது.''  ( பாஸ்டன்; 1877  ), புத்தகம் lll , பக்கம் 421 .


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

குருவும், டினோவும் அருமையாக, அதிலும் கொல்வின் பிரியப்பட்டபடியே Reference and Citation கொடுத்து எழுதி வருகிறீர்கள்!! இவர்களுக்கு புரியுதோ இல்லையோ, சத்தியத்தை வாஞ்சிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக இது போன்ற பதிவுகளால் பிரயோஜனப்படுவார்கள்!!

தொடர்ந்து தங்களின் நேரத்தில் சிறிது நேரம் இந்த தளத்திற்கென்று செலவிடுவதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்!!

குரு அவர்களும் தங்களின் பதிவுகளில் வெளிப்படுத்தும் வேத ஞானத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!!

இப்படி எல்லாம் சத்தியத்தில் இருப்பவர்கள் இனைவது தேவனுக்கு சித்தமானதே!!

இலவசமாக பெற்றோம், இலவசமாக பகிர்ந்துக்கொள்கிறோம்!! இது வரையில் தனியாக போராடின எனக்கு துனையாக உங்களை போன்றோரை தேவனே தந்திருக்கிறார் என்பதற்கு இங்கே பதியப்படும் பதிவுகள் சாட்சி!!

சகோ டினோ அவர்களே, இன்னும் ஆழமான விஷயங்களை புதிய புதிய தலைப்புகளில் தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது பதியலாமே!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

சில்சாம் என்ற கள்ளப் போதகர் சொல்கிறார்,
//// எனவே ஒரு கட்டத்துக்கு மேல் இதுபோன்ற மாற்று நம்பிக்கையாளர்களிடம் வாதிடும் போது மனச்சோர்வு எனும் நோய்க்கு ஆளாகும் ஆபத்து உண்டு; அவர்களும் கூட இதேபோன்ற ஏதோ ஒரு மனநோயினால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்;சில மனநோயாளிகளுடன் வாதிடும் போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களைப் போலவே மாறிவிடும் ஆபத்தும் உண்டு; நாம் இந்த எல்லையை தாண்டும் போது நமக்குள் வாசஞ்செய்யும் பரிசுத்தாவியானவராகிய சர்வ வல்ல தேவனாகிய கர்த்தருடைய ஆவியானவர் துக்கத்துடன் நம்மை எச்சரிப்பார்;நாம் உடனே இந்த அன்பின் சத்தம் கேட்டு அவரிடமாகத் திரும்பிவிட்டால் உடனடியாக எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களையும் நிரப்பும் என்பது நிச்சயம்.///

நல்லா இருக்கிறது தங்களின் கொமடி, இதுவெல்லாம் உமது தளத்தில் இருக்கும் அங்கத்தவருக்கு சொல்லவேண்டிய விஷயம். உமது தளத்தில் இருக்கும் கொள்வினுக்கு மனச்சோர்வு என்றால் நீர் விசுவாசிகளிடம், காணிக்கை என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை கொள்வினுக்கு கொடுத்து எங்கயாவது  விடுமுறை கழிக்க அனுப்பி விடலாம் தானே.  அது சரி உங்கள் விசுவாசமே மனநோயாளர் ஆராதிப்பது போன்று தானே உங்கள் பொய் தேவனையும் ஆராதிக்கிரிங்கள்.   அப்படி என்றால் மனநோய் எமக்கா அல்லது தங்களுக்கா.  நீங்கள் எல்லாம் இயேசுவை கடவுளாக வணங்கச் சொல்லி வணங்கும் முறை கூட சாத்தானின் தூண்டுதலின் அடிப்படையிலே வணங்குகிரிர்கள் என்பது தானே உண்மை.  இதில் வேற பரிசுத்த ஆவியானவர் தங்களை எச்சரிப்பாரா?   சில்சாம் என்ற கள்ளன் சமயத்துக்கு ஏற்றார்போல பிளேடை  மாற்றி மாற்றி பேசுகிறான்.  ஆடு நனையிது என்று ஓநாய் கவலைப்பட்ட மாதிரி இருக்கு ::::  கொள்வினுக்காக இவர் நடாத்தும் நாடகம்.


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதை தான் மழுப்பல் வித்தை என்பார்கள்!! biggrin

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

நன்றி நண்பர் ஜோன் அவர்களே,  நீங்கள் ஒட்டு மொத்தமாக திருத்துவதை   இதே பாணியில் தான் விளக்கம் கொடுக்கிறிர்கள்.  வேதப்பதிவு பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தே இயேசு தேவனின் முதல் படைப்பு என்று தான்  நமக்கு போதிக்கின்றது.  இதை நான் காமாலைக் கண்களால் பார்த்தா என்ன?  குருட்டுக் கண்களால் பார்த்தா என்ன?  வேதம் எதை சொல்கிறதோ அதே சத்திய வாக்கு!!!.  உங்கள் நம்பிக்கை பாரம்பரியத்தை சார்ந்தது.  எமது நம்பிக்கை வேத அடிப்படையே சார்ந்தது. 
 
///அதனால தான் தேவன் ஒன்றாய் இருந்தாலும் அவர் மூன்று ஆள்தத்துவத்தில் இருக்கிறார் என்று சொல்லுகிறோம். உங்களை போல இயேசு ஒரு தேவன் ஆனால் அவர் ஒரே தேவனில்லை என்று மனித போதனை போதிப்பது இல்லை. யோவான் 1:1 முதல் யோவான் 1:3 வரை உள்ள வசனங்களை மனித போதனையை வாசிக்காமல், இயேசு ஒரு துதன் என்கிற காமாலை கண்களை கழட்டிவைத்து விட்டு பார்த்தால் அவர் தேவன் என்றும் உருவாகப்படதவர் என்றும் தெரியும்.

உங்களை போல புரட்டர்களின் புத்தி தெரிந்துதான் ஆவியானவர் யோவானின் மூலம் கிழே கண்டவாறு வசனத்தை எழுதி இருக்கிறார்.////

அப்படி என்றால் கிழே வரும் வசனம் 14 - க்கை வாசித்து பாருங்கள் ... 

''அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது''.       

இதை எமது எளிய தமிழ் நடையில் சொல்வது என்றால் அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம்  மத்தியில் குடிருந்தார். அவருடைய மகிமையேக் கண்டேன்,அந்த மகிமை தகப்பனிடத்தில் இருந்த ஒரே மகனுக்கு அதாவது, கடவுளால் நேரடியாக உண்டாக்கப்பட்ட ஒரே மகனுக்கு கிடைக்கும் மகிமையாகவே இருந்தது. அவர் அளவற்ற கருணையும் சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்

அடுத்து 18  ஆம் வசனத்தில்     ''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்'' 

என்று யோவான் பின்வருமாறு எழுதினார்.  ***  என் கேள்வி குமாரனான  இயேசு கிறிஸ்துவை  எந்த மனிதனாவது கண்டானா ? நிட்சயமாகவே கண்டான் !!!  அப்படியானால்,  இயேசு கடவுள் என்று யோவான் சொன்னானா ?  இல்லை என்று தெளிவாகிறது !!!!    யோவானின் தன் சுவிசேஷத்தின் முடிவுப் பகுதியில், யோவான்  20 : 31  இல்  காரியங்கைக் சுருக்கமாகக் தொகுத்து,  பின்வருமாறு கூறினார்:-  

 ''இயேசு (தேவன் என்றல்ல ஆனால் )  தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது'' .   என்று தான் எழுதி இருக்காரே தவிர யோவான் 1:1 என்ற வசனத்தின் படி அந்த வார்த்தை ஒரே சர்வவல்லமை உள்ள தேவன் என்று அல்ல .::::::




__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

உண்மையில், அவர் யார்?

இயேசுவின் முதல் நூற்றாண்டு கூட்டாளிகள் அந்தக்  கேள்வியே தீர எண்ணிப் பார்த்தனர். இயேசு பலத்த காற்றால் கொந்தளித்த கடலை அதட்டி, அற்புதகரமாக அமைதிப்படுத்தியதை பார்த்தபோது, அவர்கள் வியப்பால் அதிசயப்பட்டனர்:- ''இவர் யார்?'' பின்னர், மற்றொரு சமயத்தில் இயேசு தன் அப்போஸ்தலர்களை கேட்டார்:- ''நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறிர்கள்?'' - மாற்கு 4 :41  / மத்தேயு 16 :15  
 
அந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பிர்கள்? இயேசு உண்மையில் கடவுளாக இருந்தாரா? அநேகர் இன்று அவர் அவ்வாறாக இருந்ததாக சொல்கின்றனர். என்றபோதிலும், அவருடைய கூட்டாளிகள் அவர் கடவுள் என்பதாக ஒரு போதும் நம்பவில்லை? இயேசுவின் கேள்விக்கு அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரதிபலிப்பு :- ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய   குமாரனாகிய கிறிஸ்து'' என்றிருந்தது. மத்தேயு 16 :16 
 
இயேசு தம்மை கடவுளாக ஒரு போதும் உரிமை பாராட்டவில்லை. ஆனால் அவர் தன்னை வாக்குபண்ணப்பட்ட மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக ஒப்புக்கொண்டார். அவர் தம்மை கடவுளாக அல்ல. ''தேவனுடைய குமாரன்'' என்பதாகவும் சொன்னார். ( யோவான் 4 : 25 ,26  10 :36  ) என்ற போதிலும் பைபல் இயேசுவை மற்ற மனிதர்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதாக சொல்லுகிறதில்லை. அவர் மிகவும் ஒரு விஷசேசித்த நபராக இருக்கிறார். ஏனென்றால் மற்ற எல்லா காரியங்களுக்கும் முன்பாக கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார். (கொலோ 1 :15  ) எண்ணற்ற கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சடப்பொருளான பிரபஞ்சம் சிருஷ்டிக்கப் படுவதற்கு முன்பே, இயேசு ஓர் ஆவி ஆளாக பரலோகத்தில் வாழ்ந்தார்.
மேலும் மகத்தான சிருஷ்டிகராகிய தம் தகப்பன் யெகோவா தேவனோடு நெருக்கமான கூட்டுறவை அனுபவித்தார். - நீதி 8 .22 ,27 -31 .
 
பின்பு ஏறக்குறைய இரண்டாய்ரம் வருடங்களுக்கு முன்பு, கடவுள் தம் குமாரனின் ஜீவனை ஒரு பெண்ணின் கருப்பைக்கு மாற்றினார், இயேசு கடவுளின் ஒரு மானிட குமாரனாக ஆகினார். ஒரு பெண்ணின் மூலமாக இயல்பான முறையில் பிறந்தார். (கலாத்தியர் 4 :4  ) இயேசு கருப்பையில் உருவாகும் போதும், ஒரு பையனாக வளரும் போதும், தம்முடைய பூமிக்குரிய பெற்றோர்களாக கடவுள் தேர்ந்தேடுதவர்களின் பேரில் சார்ந்திருந்தார். இறுதியில் இயேசு முழு வளர்ச்சி பருவம் அடைந்தார். பரலோகத்தில் கடவுளோடு தமக்கு முன்பிருந்த கூட்டுறவின் முழு நினைவாற்றல் அவருக்கு அளிக்கப்பட்டது. - யோவான் 8 : 23  17 : 5 




__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ள சகோதரரே,

கிறிஸ்து என்றால் அபிஷேகம் செய்ப்பப்பட்டவர் என்று தானே அர்த்தம்!!

நீதிமொழிகள் 8:23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

அப்படி என்றால் இவரை அபிஷேகம் செய்தவர் யார், இவரே இவருக்கு அபிஷேகம் செய்துக்கொண்டாரா அல்லது இவரை அபிஷேகம் செய்தவர் இவரை விட பெரியவரா?

வசனங்கள் எல்லாம் தெளிவாக தான் இருக்கிறது, புரிந்துக்கொள்ள மனமில்லாமல் இருந்தால் என்ன செய்வது!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

////  இவர்களது தளங்களுக்கு இனி நான் செல்லப்போவதில்லை, அதனால் சில்சாம், உங்கள் தளத்திலேயே இவர்களுக்கு பதில் அளித்துவிடுகிறேன், எப்படியும் நிச்சயம் பார்ப்பார்கள். இயேசு தெய்வீகமானவர் என சொல்லும் இவர்கள் தொழத்தக்கவர் அல்ல என்கிறார்கள் என்ன முரணான எண்ணம், தெய்வீகமான ஒன்றை தொழுவது மனித இயல்பு, இயற்கை. எந்த தொழுகைக்கும் பாத்திரமில்லாத ஒன்று தெய்வீகமாக இருக்க வேண்டுவதில்லை.ஐயா தினா, உங்கள் கரிசனைக்கு நன்றி, எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ////

நண்பர் josephsneha  அவர்களே, நீங்கள் எமது தளத்துக்கு  வந்தீங்க,
கேள்வி கேட்டீங்க நாங்களும் தங்களின் கேள்விக்கு பதில் கொடுக்க சில்சாம் என்ற தளத்தில் கேழ்க்கண்டவாறு கருத்து எழுதி இருக்கீங்க.  நல்லது நீங்கள் இயேசுவை தேவன் என்று  நினைத்தால் நினைத்துக்கொண்டு இருங்கள்.  அது எமது கவலை இல்லை. நாங்கள் இயன்ற அளவு தங்களுக்கு இயேசு தொழத்தக்க தெய்வம் அல்லவே அல்ல, என்று பல முறை விளக்கிவிட்டோம்.  தீர்மானிப்பது தங்களின் சொந்த விருப்பம்.

இதை தான் யோவான் இவ்வாறு எழுதுகிறான்.--- 

15 . ன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
20. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

இப்படி தான் இயேசுவை விசுவாசிக்கவேண்டுமே தவிர,  இவரே தேவன் என்று விசுவாசிக்க சொல்லவில்லை.



-- Edited by Dino on Saturday 12th of March 2011 01:32:40 PM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

நண்பர் கொல்வின், மற்றும் ஜோன் அவர்களின் கேள்விக்கு (3) ''யௌவன ஜனம்''துக்கான பதில்  என்ற திரில் பதில் கொடுத்துவிட்டேன். அதற்கு உங்கள் பக்கத்தில் இருந்து எமக்கு பதில் வரவில்லை. 
பதில் வராது இருக்க காரணமும் தெரியவில்லை!!!!!


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ டினோ அவர்களே,

யெளவன ஜனம் தளத்தில் பதிவோர் கிறிஸ்தவர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் கிறித்தவர்கள் என்கிற புதிய மார்க்கத்தை சேர்ந்தவர்கள்!! அவர்களுக்கு கேள்வி கேட்டு அடாவடித்தனம் பண்ண தெரியும், பதில் எழுத தெரியாது!! உடனே ரஸ்ஸலின் பரமபரையை சபிக்க ஆரம்பிப்பார்கள்!! நான் கேட்ட முக்கியமான இரு கேள்விகளுக்கு இன்னும் அவர்களிடத்தில் குறிப்பாக ஜானிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, மாறாக கிண்டலும் நையாண்டியும் செய்து, தற்போது ராணுவத்தையும் கொச்சை படுத்தி விவாத மேடையின் ஒழுக்கை கெடுத்து வரும் ஒரு கூட்டம் அவர்கள்!! 1 கொரி 8:6,7; 15:27,28 போன்ற வசனங்கள் கேட்டு சலித்து போகி விட்டது, இவர்கள் உட்கார்ந்து தினிசு தினிசாக யோசித்து கேள்விகள் கேட்டு கொண்டு இருப்பார்கள், நாம் பதில் கொடுத்தால் அந்த பதிவுகளை பார்க்காமல் அந்த பதிவுகளை திரித்து ஒன்று ரஸ்ஸலை அல்லது யெகோவா சாட்சிகளை இழுப்பார்கள் (வசனம் தெரியவில்லை என்றால் எப்படி எல்லாம் தப்பிக்கிறார்கள் பாருங்கள்!!)!!

இன்று வரை இவர்களின் திரித்துவ கோட்பாட்ட தெளிவாக சொல்லவில்லை!! இவர்கள் திரித்துவ கூட்டத்தாரா அல்லது திரியேகத்துவ கூட்டத்தாரா என்றே தெரியாமல் பல வித சாயங்கலின் தங்களை வெளிப்படுத்துகிறார்கள்!! இவர்களின் சாயம் எல்லாம் தேவனின் ராஜியத்தைல் வெளியேறும், அங்கே இவர்கள் யாரை குறை சொல்லி திரிவார்களோ!!

டினோ அவர்களே, நீங்கள் மெய்யான சத்தித்தை தொடர்ந்து பதிவுகளாக தந்து வாருங்கள், அது அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும், இவர்களுடன் விவாதிப்பதை காட்டிலும் நம் நேரத்தை நாம் காத்துக் கொள்வோமென்றால் அது சத்திய விரும்பிகளுக்கு பிரயோஜனமாக இருக்கும்!! ஆனாலும் தங்களின் விருப்பபடியே பதிவுகளை தாருங்கள்!!

நன்றி!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

நன்றி சகோதரர் பெறேயான்ஸ் அவர்களே, நீங்கள் எழுதிய பதிவுகள் அனைத்தும் உண்மையே. சில்சாம் என்ற கள்ளப் போதகனின்  செயல்கள் அனைத்துக்கும் வருங்காலத்தில் கணக்குக் கொடுத்தே ஆவார் என்பது முழு நிட்சயம். நான் முன்பு போல இவரின் தெளிவில்லாத பதிவுகள் குறித்து அலட்டிக்கொள்வது இல்லை. இவரின் பதிவுகளுக்கு நாம் முக்கியம் கொடுப்பது சாத்தானை நாமலே வளர்த்துவிடுவதட்கு சமம். நாம் இவர் எழுதும் பதிவுகளுக்கு எதிர் வாதம் செய்வதால் சாதானானவன் எங்கள் நேரத்தையும், எம் விசுவாசத்தையும்  சேர்த்து அல்லவா வஞ்சிக்கிறான்: மற்றும்

I கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

I கொரிந்தியர்
15 : 27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

வேதப்பதிவு, மிகத் தெளிவாக சொல்லப் பட்டு இருக்கும் விஷத்தை நன்பாது தன் சுயநலத்துக்கு ஏற்றாத் போல  நேரத்துக்கு ஒரு கதை பேசும் சில்சாம் என்பவருடன் வாதாடுவது வீண் வேலை.  அவரை சாத்தான் நன்றாக பயன்படுத்துகிறார் என்பதை நாம் அறிந்து கொண்டு, அவரை விட்டு விலகுவது தான் தேவ ஞானம்.

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///

ஆத்துமா சாகுமா சகாதா ?


தசம பாகம் கொடுத்தே தீர வேண்டுமா ? எஸ் என்றால் யாருக்கு ?

ஒரு சர்ச் ல் 10000 சம்பளம் வாங்கும் 10 பேரும்,

50000 சம்பளம் வாங்கும் 20 பேரும் மீதி கொஞ்சம் பேரும் இருந்தால் 

அந்த சர்ச் ன் மாத வருமானம் 110000 

வருடத்தில் 1320000

வித் அவுட் இன்கம் டாக்ஸ் டேடக்சன்
ஒரு முதல்வரின் மத வருமானம் இது 

வியர்வை சிந்தாமல் சம்பாதிக்கும் முறையாக இது எனக்கு தோன்றுகிறது 

ஞாநஸ்தானம் அவசியமா ??///
 
திரு, கண்ணா அவர்கள் :.....  இறைவன் தளத்தில் அருமையான கேள்வியே கேட்டு அந்த தளத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் சில்சாம் என்ற போதகருக்கும் பொருந்தும் வண்ணம் நல்ல கேள்வியோடு ஒரு சிக்கலான விவாதத்தை முன் வைத்துள்ளார் .
 
இந்தக் கேள்விக்கு இறைவன் தளத்து அங்கத்தவர்கள் மற்றும் சில்சாம் தளத்து அங்கத்தவர்களுக்கும் என்ன பதிலைக் கொடுக்கப் போறார்கள். பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

ஜான் எழுதுகிறார்!!!!!!

///"சகலமும்" , "உண்டானதெல்லாம்" என்கிற வார்த்தை இந்த வசனங்களை புரட்டர்கள் புரட்டக்கூடாது என்ற நோக்கில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது. "உண்டானது எல்லாம்" அந்த இயேசு கிறிஸ்துவை கொண்டே உண்டாக்கப்பட்டு இருந்தால் அவர் எப்படி உண்டானவரை இருக்க முடியும்?  நீங்கள் தயவு செய்து யோவான் 1:3 விளக்குமாறு கேட்கிறேன்.  "சகலமும்" , "உண்டானதெல்லாம்" போன்ற வார்த்தைகளுக்கு உங்கள் விளக்கம் என்ன?


குறிப்பு: நான் கேட்டபது யோவான் 1:3 க்கு விளக்கம் திரும்பவும் நிதிமொழிகளுக்கு போகாதீர்கள். ஆதியிலே இயேசு உருவாக்கப்பட்டவர் என்றால் ஆதியிலே வார்த்தை "இருந்தது" என்று Past Tense ல்  சொல்லுவது தவறு///

பதில்: 
இயேசு கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதால்,  காலத்திலும், வல்லமையிலும், அறிவிலும் இரண்டாந்தர நிலையிலே  இருக்கிறார்!!!!  இதை அடிப்படையில் கொண்டு  ஜோனின் கேள்வியாகிய "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை"  என்ற பதிவுக்கும் விடை.  அடுத்து இயேசு பூமியில் இருந்தபோது, இயேசு மனிதனாய் இருந்தார். எனினும் கடவுளே இயேசுவின் உயிர் - சக்தியே மரியாளின் கர்ப்பத்துக்கு மாற்றி இருந்ததால் பரிபூரணராய் இருந்தார். ஆனால் அவர் தொடக்கம் அவ்வாறில்லை. தாம் "பரலோகத்திலிருந்திறங்கின" ரென அவர் தாமே  அறிவித்தார். (யோவான்  3 :13 ) ஆகவே, தம்மைப் பின்பற்றினோரிடம்: "மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?" என்று பின்னால் அவர் சொன்னது இயல்பானதே!!! (யோவான் 6 :62 )

இவ்வாறு,  இயேசு பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார். ஆனால் சர்வவல்ல, நித்திய திருத்துவ கடவுளடங்கிய ஆட்களில் ஒருவராகவா?  இல்லை, ஏனெனில், தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், இயேசு, தூதர்கள்  கடவுள் சிருஷ்டித்த ஆவி ஆட்களாய் இருந்தது போல், சிருஷ்டிக்கப்பட்ட ஆவி ஆளாய் இருந்தாரென  பைபிள் தெளிவாய் கூறுகிறது. தூதர்களோ இயேசுவோ தாங்கள் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னாள் இருக்கவில்லை.

இயேசு, தம் மனிதவாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், "சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறு" ஆக இருந்தார். (கொலேசயர் 1 :15 )  அவர் "கடவுளுடைய சிருஷ்டிப்பின் தொடக்கம்" (வெளிப் 3:14 ).  "தொடக்கம்" (கிரேக்கில், (அரக்கே) ) என்பதை இயேசு கடவுளுடைய சிருஷ்டிப்பைப்  'தொடங்கினவர்'  என்று பொருள் கொள்ளும்படி விளக்குவது சரியல்ல. யோவான், தன் பைபிள் எழுத்துக்களில்
அரக்கே என்ற கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு  மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான். இவை எப்பொழுதும் "தொடக்கம்" என்ற இந்தப் பொதுவான பொருளையே கொண்டு இருகின்றன.  ஆம், இயேசு கடவுளுடைய காணக்கூடாத சிருஷ்டிகளின்  தொடக்கமாகக்
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார்.

பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில், உருவகமான "ஞானம்" கூறும் சொற்களோடு இயேசுவின் தொடக்கத்தைக் குறிப்பிடும் இந்தக் மேற்கோள் குறிப்புகள் எவ்வளவு நெருங்க ஒன்றுக்கொன்று இணைகிறது என்பதைக் கவனியுங்கள்:

12. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.


கடவுள் சிருஷ்டித்தவரை உருவகம் செய்ய "ஞானம்" என்ற பதம் பயன்படுத்தி இருக்கையில், அது உண்மையில் தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னால் ஆவி சிருஷ்டியாக இருந்த இயேசுவுக்குச் சொல்லணியென அறிஞர் பெரும்பான்மையர் ஒப்புக்கொள்கின்றனர்.

அடுத்து இந்த பதிவுகளுக்கான மேலதிக தகவலைப் பெற என் நண்பர் தேநீர் பூக்கள் எழுதிய பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? என்ற திரியில் மிக அழகாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தம்முடைய மனித வாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கையில் "ஞானம்" என்பவராக இயேசு, தாம் "அவருடைய பக்கத்தில், கைதேர்ந்த தொளிலாளனாக" இருந்தார் என நீதிமொழிகள் 8:30 தொடர்ந்து கூறுகிறது. கைதேர்ந்த தொளிலாளனாக அவர் வகித்த இந்தப் பாகத்துக்கு ஒத்திசைய, கொலேசெயர் 1:16 - ல் இயேசுவைக் குறித்து
"அவர்மூலம் கடவுள் வானத்திலும் பூமிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்" என சொல்லப்படுகிறது. இதுவே ஜோன் அவர்கள் கேட்ட கேள்வியாகிய  "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை".  க்கும் பதில்

ஆகவே, தமக்குக் கீழ்ப் பணியாற்றுபவர் என்பதுபோல், இந்தக் கைதேர்ந்த வேலயாலனைக் கொண்டு சர்வவல்லமை உள்ள கடவுள் மற்ற எல்லாவற்றையும்  சிருஷ்டித்தார். பைபல் இந்தக் காரியத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறுகிறது: "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரிந்தியர் 8 :6 )

இந்தக் கைதேர்ந்த தொளிலானடிடமே கடவுள்: "நமது சாயலாக ...  மனுஷனை உண்டாக்குவோமாக", என்று சொன்னதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 1 :16 )  இந்தக் கூற்றில் "நமது" "உண்டாக்குவோம்" என்ற சொற்கள் திருத்துவதைக் சுட்டிக் காட்டுகின்றன வென சிலர் விவாதிக்கின்றனர். ஆனால், 'நமக்காக ஏதாயினும் ஒன்றைக் செய்வோம்' என்று நீங்கள் சொன்னால், இது பல ஆட்கள் ஒருங்கிணைந்து உங்கள் உட்புறத்தில் ஒருவராக இருப்பதைக் குறிப்பாய் உணர்த்துகிறதென ஒருவரும் பொதுவாய் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். வெறுமெனே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்கள் ஏதோவொன்றில் ஒன்றாய்ச் சேர்த்து உழைப்பார்கள் என்றே நீங்கள் பொருள் கொள்கிறீர்கள். அவ்வாறே, கடவுள் "நமது"  "உன்காகுவோம்" என்பவற்றைப் பயன்படுதினபோது, அவர் வெறுமென மற்றொரு ஆளை, தம்முடைய முதல் ஆவி சிருஷ்டியே, அந்தக் கைதேர்ந்த தொளிலாலனை, மனிதனாவதட்கு முன்னாளில் இருந்த இயேசுவை, நோக்கிப் பேசினார்.


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

சகோதரர் cad sahayam   அருமையான பதிவுகளை கட்டூரை வடிவில் முன்வைக்கிறார்.  இவ்வளவு நாளும் கேள்விகள் கேட்டு  வம்புக்கு இழுத்து பழகியவர்களின் , நிலைமை போய்  கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஓடி ஒளியும் நிலை கள்ளப் போதகன் சில்சாமுகும் மற்றும் வசந்தகுமார் சிஷ்யர்களுக்கும் ,  என் நட்புத் தளமாகிய  இறைவன் தளத்துக்கும் உருவாகி இருப்பது வேக்கக்கேடான விஷயம். ஐயா சில்சாம் என்ற கள்ளப் போதகரே,  வழமை போல ரசலையும், யெகோவாவின் சாட்சிக் காரங்களையும் இழுக்காமல், மழுப்பாமல் சகாயம் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்ல முயற்சிக்கவும்.



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

கொல்வின் எழுதுகிறார்..........

///சகோ. தினா அவர்களே. சகோ. சகாயத்திடம் நான் கேட்ட பரிசுத்த ஆவியானர் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கண்டபடி Copy & Paste திருவிளையாடல் நடத்திக் கொண்டிருக்கிறார். வசன அடிப்படையில்தானே கேட்டேன். வசனம் இருந்தால் சரியாக தர வேண்டும் அல்லவா முதலில் மழுப்பாமல் பதில் அளிக்க சொல்லுங்கள். பின்னர் மற்றவற்றைப் பேசலாம் ////

நண்பர் கொல்வின் அவர்களே, உங்கள் கருத்துக்களிலும் ஞாயம் உண்டு, இருப்பினும் உங்களுக்கும் சில்சாமுகும்   இருப்பதைப் போன்று நேரம் கிடைப்பது தான் இல்லை. பொதுவாக அவர் முழுநேர ஊழியர், நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் எழுத நேரம் இல்லாத படியாலே ஏற்கனவே அவரின் சொந்த தளத்தில் பதிந்த கருத்துகளை தங்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இதை தேநீர் பூக்கள் என்னிடம் நேற்று தான் சொன்னார். அவர் கட்டூரை வடிவில் உங்கள் கேள்விக்கு பதில் கொடுத்தாலும் தங்களின் கேள்விக்கு அதற்குள் பதில் உண்டு.

எனக்கு கூட கொல்வின் அவர்களே, இந்த தளத்தில் பல பதிவுகளை கொடுக்கவும், விவாதம் செய்யவும் ஆசையாக  இருந்தாலும்; அதற்கு நேரம் தான் கிடைக்க முடியாது இருக்கு. காரணம் என் வேலை. அந்த விடயத்தில் உங்கள் தளத்தில் இருக்கும் அனைவரும் கொடுத்து வச்சவர்கள். நன்றி



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///ஹலோ இதற்குதான் அப்போதிருந்தே சொல்லுகிறேன். ஆதாரம் இல்லாமல் எழுதாதீர்கள் என்று உங்களுக்கு மூலபாஷை தெரியுமா? அரக்கே என்பதற்கு என்ன Dictionary யை பாவித்து பொருள் எடுத்தீர்கள். எப்படி கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு  மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான் சொல்லுகிறீர்கள். எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் இந்த தகவல்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது எங்ஙனம் என்று கூறுவீர்களாயின் நான் நன்றி உடையவனாக இருப்பேன். வேறு யாரின் குறிப்புகளிலிருந்தும் இதனை பயன்டுத்தியிருக்க கூடாது. ஏனென்றால் Citation & Reference இற்கு உங்கள் தள நிர்வாக எதிரியாச்சே! நானாவது இன்னார் சொன்னார் என பெயர், பக்க இலக்கம்  தருகிறேன். இவற்றின் விபரத்தை அறியத் தர முடியுமா? நான் பதித்த சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறானவர் என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள். இதுவும் யெகோவா சாட்சிகளின் பதிவுகளிலிருந்து திருடியதுதான்.////

நண்பர் கொல்வின் அவர்களே, நான் ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்கம் சமயத்தை சேர்ந்தவன்.  உங்களுக்கு இருக்கும் அதே கேள்வியும், சந்தேகங்களும் எனக்கும் இருந்தது. பல தடவை விவாதத்திலும் இறங்கி இருக்கிறேன். அத்துடன் மூல பாஷை பற்றி சொல்லி இருந்திர்ர்கள். நான் மூல பாஷை கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஐரோப்பா நாடுகளில் ஜெர்மனி மொழியில் இதற்கான  Dictionary  ஏராளம் உண்டு. அதை உதாரணமாக கொண்டு தான் ///எப்படி கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு  மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான் சொல்லுகிறீர்கள். ///  என்று எனது பதிவை இட்டேன். அடுத்து உங்கள் தொடுப்பில் யெகோவாவின் சாட்சி தொடர்பான போதனைகளை  Citation & Reference முறையில் கொடுத்துள்ளிர்கள். அது நல்லது தான் பாராட்டுக் குரியது. இருப்பினும் யெகோவாவின் சாட்சி போதனைகள் குறித்தோ அதன் பதிவுகள் குறித்தோ நான் அவ்வளவாக அழட்டிக்கொள்வது இல்லை. காரணம் இதற்கு நான் அப்பாற்பட்டவன்.  உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த உலகம் முழுவதும் 700  டினாமினேசன் இருக்கிறது.  அத்தனை விசுவாசம் கொண்ட அமைப்புக்களும் யெகோவாவின் சாட்சியாகிய திருத்துவம், நகரம், ஆத்துமா இன்னும் சில போதனைகளை மற்ற அமைப்புக்கள் போல கொண்டுயருகிரார்கள். அப்படி என்றால் இந்த விசுவாசம் கொண்ட அணைத்து போதகர்களும் அறிவாளிகளும் இந்த மூல பாஷை அர்த்தத்தை சரியாக தெரிந்து கொள்ளாமலா  செயல்படுகிறார்கள்: அடுத்து இந்த உலகம் முழுவதிலும் உள்ள பல மில்லியன் மக்கள் இந்த போதனைகள் கொண்டு இருப்பவர்களின் நிலை தான் என்ன ? அப்படி Citation & Reference மற்றும் மூல பாஷை படித்து தான் ஒன்றை விசுவாசிக வேண்டும் என்றால் அது எப்படி ?  அதற்கு தான் வேதம் இவ்வாறு சொல்கிறது::::::

I கொரிந்தியர் 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நானாவது இன்னார் சொன்னார் என பெயர், பக்க இலக்கம்  தருகிறேன். //

அந்த இன்னார் சொன்னார் என்பதை மாத்திரம் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமோ!! நீங்கள் கொடுப்பது "இன்னார்"இன் கருத்து, எனக்கு தேவை உங்களின் கருத்து!! இது போல் நிறைய இன்னார்கள் இந்த பூமியெங்கும் இருந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்!! வேதத்திலிருந்து நாம் என்ன தெரிந்திருக்கிறோம் என்பது தான் காரியம்!! ஆகவே தான் நான் இன்னார் சொன்னார் என்று சொல்லாமல் அதிகமாக வேதம் சொல்லுவதையும் என் கருத்துக்களை மாத்திரமே வெளியிடுகிறேன்!! ஏனென்றால் வேதத்தில் உள்ள கருத்துக்கள் அல்லது பதிவுகள் அல்லது வசனங்கள், தேவனுடைய மனிதர்களை கொண்டு எழுதப்பட்டது என்பதை நான் நம்புகிறேன்!! மற்றபடி இன்னார் சொன்னர், அவர் பெயர் அந்த பக்க எண், இவைகளில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் கிடையாது!! இன்னொருவரின் கருத்தாக இருந்தாலும், அது எனக்கு வேதத்திலிருந்து உடனப்பட்டிருந்தால் நான் நிச்சயமாகவே எடுத்துக்கொள்வேன்!! மற்றபடி இல்லை!!

I கொரிந்தியர் 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

கொல்வின் எழுதுகிறார்!!!! 

///நண்பரே உங்களுக்கு பல தடவை சொல்லி விட்டேன். அடுத்தவரின் தனிப்பட்ட விடயங்களில் தலையிட வேண்டாம் என்று. நீங்களா அவருக்கு பணம் அனுப்புகிறீர்கள்? உங்கள் தயவிலா அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவர் மற்றவர்களின் காணிக்கையில்தான் வாழ்கிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?தயவு செய்து வார்த்தை நாகரீகத்தை கடைபிடியுங்கள். நானும் சிலவேளைகளில் தவறியிருக்கிறேன் என்பதை ஏறறுக் கொள்கிறேன்.///

மத்தேயு 7:4
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?


மேலே கூறிய வேதப்பதிவு அடிப்படையில்,  நாகரீகம் என்பதை முதலில் சில்சாம் என்பவருக்கு சொல்லிவிட்டு பின்பு அடுத்தவர்களுக்கு நாகரீகம், அநாகரீகம் என்றால் என்னவென்று சொல்லவாரும்!!!  நான் மேழ்க்கண்டவாறு எழுதுவதற்கு முதல் காரணமே சில்சாம் தான்!!!    அடுத்தவரை வன்புக்கு இழுப்பதும், அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பாவிப்பதும் சில்சாம் என்பவருக்கு கைவந்த கலை. இவை யாவும் தாங்கள் அறிந்து இருந்தும் அதை சில்சாமிடம் கேட்காமல் என்னிடம் வினாவுவது தான் ஏனோ ??  எனக்கு உங்கள் விவாதங்கள் மீது எந்த ஈடுபாடும் இல்லை என்பதாலும், சகோதரர் பெறேயான்ஸ் என்னை விவாதத்துக்கு ஈடுபடவேண்டாம் என்பதினாலும் ஒவ்வொருவரின் கருத்துக்களை வாசித்தபடியே அமைதியாக இருக்கிறேன். சில்சாம் கள்ளப்போதகன் என்றும் அடுத்தவனின் பணத்தில் தான் வாழ்கிறான் என்று நான் மட்டுமா சொல்கிறேன். அடுத்து சில்சாம் என்ன என்ன திருட்டு வேலைகளை செய்கிறார் என்று அவரின் நெருங்கிய நண்பன் மூலமாகவே அவரின் முழுவிவரமும் அறிந்துகொண்டேன். வேதவாகியத்தை போதிப்பதை விட்டுவிட்டு அனாவசியமான விஷயங்களில் ஈடுபடுவது இவரின் ஒரு வித நோய்!!!  இத்துடன் நான் உங்கள் தளத்தில் எழுதும் எந்த கருத்துக்களுக்குமோ, விவாதத்துக்கோ பதில் எழுதப்போவது இல்லை. இது எனக்கு அனாவசியமான ஒன்று!!!!!! நன்றி



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard