kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்


சாத்தானால் மறைக்கப்பட்டது யாவே பெயர்

யாவே (Yahweh) அல்லது யெகோவா (Jehovah) என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே, யெகோவா என்பது இறைநாமம்/திருநாமம்[1].இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (The Being) அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும்[2]. (கடவுள் மோசேயைநோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ இஸ்ரவேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)எபிரேய மொழியில் "எஹ்யே அஷெர் எஹ்யே" என்றால் "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" / "முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகின்றவர்" / முக்காலமும் கடந்தவர் என்று பொருள்படும்..தமிழ்க்கிறிஸ்தவ விவிலியங்கள் இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் יְהֹוָה என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் "YHWH" எனக் குறிக்கப்படுகிறது.எபிரேய மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு அடோனை (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக "ஹஷெம்" (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் "ஏலோஹிம்" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது "யெஹோவி".யெருசலேம் தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் பூசாரிகளும், கோயில் தலைமைப் பூசாரியும் (யோம் கிப்பூர் அல்லது கழுவாய் திருநாளின்போது) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.பைபிள்: ஒரே தேவனை/கடவுளைப் (யாவே) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது. யாவே பெயர், பைபிளில் 6000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87
யாவே கடவுளின் பரிசுத்த நாமத்தில் இயேசுகிறிஸ்துவின் வழியாக உங்களுக்கு வாழ்த்துதலும் கிருபையும் சமாதனமும் உண்டாவதாக.ஆதிகால முதல் தேவன் தமக்குள்ளாக வைத்திருக்க இரகசியங்களை பங்குபங்காகவும் வகைவகையாகவும் வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். மனித இரட்சிப்புக்காக தேவன் வெளிப்படுத்திய இந்த இரகசியங்களை, மனிதன் அறியக்கூடாதபடிக்கு இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசானவன் அநேக உபாய தந்திரங்களினால் மறைத்து அநேகருடைய மனக்கண்களை குருடாக்கியிருக்கிறான்.வேதத்தை அறிய வாஞ்சையுள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும். தேவ சமாதானம் உண்டாவதாக ஆமென்.

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///யாவே (Yahweh) அல்லது யெகோவா (Jehovah) என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேயப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே, யெகோவா என்பது இறைநாமம்/திருநாமம்[1]///

சரியாக சொன்னிங்க சகோதரரே ,,,, சில்சாம் தளத்தில் உள்ளவர்களுக்கு இவற்றை விளக்கி சொன்னால் புரியவா போகின்றது. வீன்புக்கு வீண் தர்க்கம் பண்ணும் படம் தான் ஒட்டுவானுவல் பாருங்க ::::  தொடருங்கள் ...  (வேதத்தை வைத்து)  இனி வரும் புதிய சந்ததிகள் இது போன்ற கள்ளப் போதகரால் வஞ்சிக்கப்படாது இருக்க இந்த சாத்தானுக்கு எதிராக போராடுவது தான் தேவன் நமக்கு கொடுத்த சிறிய ஊழியம்:. தொடருங்கள் ...



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

Thanks for your support

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard