//எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை; எனக்கு எது நடந்தாலும் கேட்க யாருமில்லை; ஆனால் இதோ எழுதிவைக்கிறேனே, இதுவே எனது மரண வாக்குமூலமாக இருக்கும்.//
சில்சாமின் அடுத்த நாடகம் துவங்கியது!! நான் சொன்னதை அல்லது சொல்ல வந்ததை கேட்காமல் தேஞ்சு போன கிராமஃபோன் போல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி என்னத்தை சொல்லுகிறோம், எதற்கு சொல்லுகிறோம் என்பதை கூட தெரியாமல் பிதற்றிக்கொண்டு இருந்தார்!! அவர் சொல்லுவது, இயேசு கிறிஸ்துவை தேவனாக தொழாவிட்டால் நான் அப்படி தான் எழுதுவேன் என்பதாகும்!! அதாவது முழு பூசனிக்காயை சோத்தில் (இவர் சேற்றில்) மறைக்கும் தந்திரம் இது!! இவரின் எழுத்துக்களை பார்க்கிற யாரும் இவர் என்ன நிலையில் இருக்கிறார் என்றும், இவரின் எழுத்துக்கள் யாரையும் எப்படி தூண்டும் என்பது வாசகர்கள் அறிவார்கள்!! நான் பேசியதை மிகைப்படுத்தி பேசியிருக்கிறார், ஆனால் இவரின் எழுத்து இவர் சுபாவத்திற்கு ஆதாரமாக இருக்கிறது!! நீர் என்ன தனியாளாக நின்றா என்னை தாக்கி எழுதுகிறீர், உமக்கு தான் ஒரு பெரிய படை இருக்கிறதே!! மானங்கெட்டவனே, இப்படி எழுதி யாரிடம் அனுதாபம் சம்பாதித்துக்கொள்ள பார்க்கிறீர்!!
//நான் இயன்ற மட்டும் மரியாதையாகவே பேசினேன்;அவர் ஏதோ இரத்தகொதிப்பு (BP) நோயாளியைப் போல படபடப்பாக ஒருமையில் பேசினதால், எனக்கே பரிதாபமாக இருந்தது;//
இவர் தரும் மரியாதை இவரின் எழுத்தில் தெரியும்!! நீர் என் மேல் பரிதாபப்படும் நிலையில் நான் உம்மை நினைக்கவில்லை!!
//வீட்டிலிருந்த எனது மனைவியும் எனது தம்பியும் மிகவும் பயந்துவிட்டார்கள்//
இவர் வீட்டிலிருக்கும் இவரின் துனைவியாரும் இவரின் தம்பியும் இருப்பது போல் தான் எல்லார் வீட்டிலும் அவர் அவருக்கு சொந்தங்களும் பந்தங்களும் இருக்கிறது!! கொச்சைத்தனத்தின் உச்சிக்கு சென்று இவர் எழுதியது இவருக்கு மறந்திருக்கலாம், ஆனால் சில்சாம் அவர் தளத்திலிருந்து அவர் பதிந்ததை நீக்காது மட்டும் அவர் எழுதியது சாட்சியாகவே நிற்கும்!!
//அவர் கொலை மிரட்டல் விட்டதைக் குறித்து நாம் கவலைப்படவில்லை//
இப்படி எழுதியிருப்பது இவரின் வழக்கமான சாத்துரியமும், நரித்தனமும் தான் வெளிப்படுகிறது!! கடித்துக்கொண்டிருக்கும் ஒரு கொசுவை கூட விரட்டிவிடுவது என் சுபாவம், கொலை மிரட்டல் விட்டதாக இவர் எழுதுவது இவர் எழுதியிருப்பது எத்துனை மட்டமானதாக இருக்கிறது, இதற்கு யாரும் இந்த நிலைக்கு போகலாம் என்கிற பயமே காரணம் அன்றி, வேறு ஒன்றும் இல்லை!! தேவன் சாட்சியாக இருக்கிறார், நான் கொலை மிரட்டல் விட்டதாக இவர் சொல்லுவது உண்மை என்றால் தேவன் பார்த்துக்கொள்வார்!! இவருக்கும் தேவனுக்கும் சம்பந்தமே கிடையாது, ஏனென்றால் இவர் ஒரு "கிறித்தவர்" இவர் தொழுதுக்கொள்வது இயேசுசாமியை!! கிறிஸ்து என்கிற ரட்சகரின் நாமத்தை உச்சரிக்கவே வராத இவரது நாக்கு எப்படுப்பட்டவைகளையும் திரித்து பேசும்!!
//நான் யாரையும் வேசியின் மகன் என்று எழுதவில்லை; அன்பு எனும் குதர்க்கவாதியே நான் எழுதியவற்றுக்கு இடம் சுட்டி பொருள் விளக்கு என்பது போல பொழிப்புரை எழுதியவன்; நான் அவனிடமே தெளிவாகச் சொல்லிவிட்டேன், நான் இந்த அர்த்தத்திலோ இந்த குறிப்பிட்ட நோக்கத்திலோ எழுதவில்லை என்று;அதற்கு மேலும் ஒரு மனுஷன் விவஸ்தை கெட்டத்தனமாக வந்து கிறுக்கனைப்போல மிரட்டி நீ என்னை வேசியின் மகன் எழுதிவிட்டாய் இனி அப்படி எழுதினால் உன்னை கொலை பண்ணிடுவேன் என்றால் நான் என்ன சொல்லமுடியும்? நான் எழுதினேன் என்று சொல்லுகிறாயே, அதற்கு என்ன செய்வாய்,அது முடிந்துவிட்டது, இனி எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன,என்றேன்.//
இவர் மிகவும் பண்புள்ளவராக எழுதுவதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகிறேன்!! அன்பு அவர்களின் வயதை அறிந்திருந்தும் இந்த சில்சாம் அவரை ஒருமையில் எழுதியிருப்பதே, வாசகர்கள் இவரின் கீழ்த்தரமான புத்தியை கனக்கிடலாம்!! நீர் எந்த அர்த்தத்தில் இப்படி கேட்டாய் என்று வாசகர்கள் அறிவார்கள், நீர் நிய்யம் சொல்லும் தகுதி இல்லாதவனாக நிற்கிறீர்!! இதோ சில்சாம் கொச்சயாக எழுதியது!!
//அடே முக்காலுக்கும் மூணு வீசைக்கும் நடுவுல பொறந்த பன்னாடைகளே உங்கள திட்றதுக்கு இதுக்கு மேல வார்த்தைய உருவாக்கி தான் போடணும் போல;// இப்படி எழுதுகிறவர் அப்பாவியாம்!! இவரை நடுவீட்டில் வைத்து இப்படு பேசுவதற்கு ஆராத்தி எடுக்கனுமாம்!!
//இது பாமரனுக்கும் புரியும்வண்ணமாக அடியேன் யோசித்து எழுதிய உள்நோக்கமில்லாத கருத்தாகும்;இதை எதிர்த்து கேள்வி கேட்பவன், (மேசியாவின்) எதிரி ஆவான்;அவனைக் குறித்தே நான் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டேன், "நீ பெற்ற தாயையே (ஏன் பெற்றாய்,எவனுக்கு பெற்றாய் என்றும் ) கேள்வி கேட்கக்கூடியவன்" என்று..// இவர் இப்படி எழுதுவது ரொம்ப நாகரீகமாக இருக்கிறது என்று இவர் நினைக்கிறாராம்!! ஏன் இவரின் வீட்டாரிடம் நான் இப்படி தான் பதிவுகளை தருகிறேன், ஆகவே தான் என்னை தொலைப்பேசியில் கூப்பிட்டு தீட்டுகிறார்கள் என்று தைரியமாக தான் அடுத்தவர்களை குறித்து பதிந்ததை காண்பிக்க வேண்டும் அல்லவா!! ஒரு தாயிடம் போய் நீ எவனுக்கு என்னை பெற்றாய் என்று இவர் கேட்டிருப்பது இவருக்கு ஒரு வேளை சகஜமாக இருக்கலாம், ஆனால் நல்ல குடும்பத்தில் இருப்பவர்களுக்கு (கொல்வின், ஜான் போன்றவர்கள், இவர் இப்படி எழுதுவதற்கு தேவனுக்கு நன்றி சொல்லுகிறார்கள் என்றால் எந்த அளவிற்கு அவர்களும் மதியீனர்களாக இருக்கிறார்கள்) இது போன்று கேட்டோ பேசியோ பழக்கம் இல்லை!! புரியிதா அறிவீனனான சில்சாம்!! நீர் எழுதியதும் இல்லாமல் அதற்கு நியாயம் கற்பிக்கும் முயற்சியில் இறங்குவது அதைவிட கேவலமாக இருக்கிறது!! பாதாள சாக்கடைக்குள் இருந்துக்கொண்டு அதையே துப்பிக்கொண்டு இருப்பது போன்று தான் இருக்கிறது உம் எழுத்துக்கள்!!
//இந்த நியாயத்துக்கு நான் யாரிடம் செல்லமுடியும்? நான் யாருக்காக இந்த களத்தில் இருக்கிறேன்? இதனால் எனக்கும் என் குடும்பத்துக்கும் என்ன பலன்? //
இந்த நியாயத்தை வாசகர்களே பார்த்துக்கொள்வார்கள்!! நீலிக்கண்ணீர் விட்டு பிசாசின் தந்திரங்களில் இறங்காதீர்!! எழுதியதை நான் அந்த அர்த்தத்தில் எழுதவில்லை, இதை கொண்டு எழுதவில்லை, நான் என்ன உங்கள் பெயரை குறிப்பிட்டா எழுதினேன் என்றெல்லாம் கேட்கிறார் என்றால் இவர் எழுதமாலா கேட்பார்!! நான் தளத்தை ஆரம்பித்தது, சத்தியத்தை பதியவே அன்றி உம்மை போன்ற சாத்தானின் தூதனுடன் போராட அல்ல!! ஆனால் நீர் இத்துனை மட்டமான மனிதன் என்று உம் எழுத்துக்கள் நிரூபித்து விட்டது, அதைவிட கேவலம் எழுதியதற்கு சம்பந்தமில்லாத விளக்கங்கள் தருவது!! என் குடும்பத்தின் பலத்திற்காக நான் இந்த தளம் நடத்தவில்லை, உம்மை போல்!! எதில் பலனை எதிர்ப்பார்த்தே இருப்பதால் தான் கேவலம் எழுதியும் அதையே எதிர்ப்பார்க்கிறீர்!! எல்லா அருவருப்பையும் முத்யலில் உம்முடைய குடும்பத்தாரிடம் காண்பித்து பார், நீர் பிறரிடம் நியாயம் கேட்கும் தகுதியுடையவராக கூட இல்லை என்று அவர்களே சொல்லுவார்கள்!!
//அவரும் தம்மை வணங்கச் சொல்லி எங்குமே சொல்லவில்லை என்று மூர்க்கத்தனமாக மறுக்கிறார்;//
சொல்லத ஒன்றையும், எழுதாத ஒன்றையும், ஏன் இல்லாத ஒன்றையுக், மிகைப்படுத்தி எழுதுவது உம்மை போன்றோருக்கு பொழுதுப்போக்கு!! இருப்பதை இருப்பதாக சொல்லுவது எந்த விதத்திலும் மூர்க்கத்தனமானதாக இல்லை!!
//அதுபோலவே தற்போது கிறித்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லும் நீங்களும் கிறித்துவைத் தொழுவதில் என்ன தடை என்று கேட்டேன்;அதற்கு அவரால் சரியான மாறுத்தரம் சொல்லமுடியவில்லை//
இவருக்கு மாறுத்தரம் தர யாராலும் முடியாது, ஏனென்றால் வேதத்தை குறித்து கேட்டால், வேதம் எனக்கு தெரியாது என்கிறார், வரலாற்றை குறித்து கேட்டால் வரலாறு எனக்கு தேவையில்லை என்கிறார்!! என் விசுவாச அறிக்கையை படித்தவர்கள் நான் இயேசு கிறிஸ்துவிற்கு வைத்திருக்கும் ஸ்தானம் வேதத்தில் உள்ளப்படியா இல்லையா என்பதை வாசிப்போர் அறிந்துக்கொள்ளலாம்!!
//அவருடைய ஒரே பேறான குமாரனும், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம். (யோவா. 3:16).
இவர் அதரிசமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர், தேவன் இவரைக் கொண்டும், இவருக்கென்றும், உலகங்களை எல்லாம் உண்டாக்கி, இவரையே சர்வத்துக்கும் சுதந்தரவாளியாகவும் நியமித்தார், எல்லாம் இவருக்குள் நிலை நிற்கிறதென்றும் விசுவாசிக்கிறோம். (கொலோ. 1:15; எபி. 1:2)
இது எங்கள் விசுவாசம் என்கிற தலைப்பின் நான் ஏற்கனவே கொடுத்தது தான்!! இவர் சொல்லுவது போல் என்னமோ புதிதாக நான் இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவதாக எழுதுவதில் அர்த்தமில்லை!! இயேசு கிறிஸ்துவை தொழுவதில் என்ன தடை என்றால், அவர் அதை சொல்லவில்லை, அப்போஸ்தலர்கள் அதை சொல்லவில்லை, மாறாக இயேசு கிறிஸ்துவை பின்பற்றி சீஷராக இருப்பதை தான் வேதம் சொல்லுகிறது!! நான் வேதத்தில் உள்ளதை தான் எழுதுவேன், கண்டவன் சொல்லுகிற வெத்து விசுவாசத்தை அல்ல!!