நண்பர் தினோ (Dino) அவர்களை நம் பிதாவாகிய யெகோவா தேவன் மற்றும் அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களுடன் இத்தளத்திற்கு வரவேற்கிறேன்!! இந்த தளத்தை எல்லா பிறிவனர்களுக்கும் அனுமதி உண்டு என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்!! வேத சத்தியத்தை தேடி, நம் எஜ்மானான் கிறிஸ்து இயேசுவிடம் போகும் மட்டும், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பங்கை சிறப்பாக நிறைவேற்ற, தேவனின் ஆவி தாமே நம்மிலிருந்து நம்மை நடத்தட்டும்!!
தங்களின் பையோடாட்டாவில் தங்களின் முழு விவரங்களையும் தந்தீர்களானால் நன்றாக இருக்கும்!! தாங்கள் வேத மாணவர் சபையை சேர்ந்தவர் என்பதால் தங்களின் விசுவாசம் என்னவென்று நான் கேட்டு அறிந்துக்கொள்ள வேண்டியதில்லை!!
தொடர்ந்து சத்தியத்தை நேசிப்போருக்கும் சத்தியத்தின் வசனங்களை கொண்டு பதிவுகளை தர மீண்டும் வாழ்த்தி வரவேற்கிறேன்!!
சகோதரர்களுக்கு வாழ்த்துகள்! தளத்தில் பதிய விழைந்திருக்கும் புதிய அன்பர்களை உற்சாகப்படுத்துகிறோம். வேலைப்பழு நிமித்தம் இடையில் சற்றே இடைவெளி. மிக்க மகிழ்ச்சி. நன்றி!
வணக்கம் தள நிர்வாகி அவர்களே, நான் இந்த தளத்துக்கு புதிதாக இருந்தாலும்,எனது நண்பர் தேநீர் பூக்கள், மற்றும் எனது உடன் பிறப்பு சகோதரர் டினோ முலமாக பல மாதங்களுக்கு முதலே நன்கு அறிந்த தளம் இது. நான் வேத மாணாக்கர் விசுவாச பிரிவை சேர்ந்தவள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி